ஆங்கிலேயர் ஆண்ட காலங்களில் தமிழ் மொழிக்கு எந்த ஒரு ஆபத்தும் இருந்ததில்லை.ஆனால் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெயேறிய பின்னர் தான் ஆபத்து வந்திருக்கிறது.எப்படியென்றால் இப்போது தான் தழிழ்ப் படங்கள் ஆங்கிலப்பெயர் கொண்டு வருகின்றன.மேலும் பாடல்கள் கூட ஆங்கில வார்த்தைகள் கலந்து வருகின்றன.கேட்டால் காலத்தின் தேவை என்று சொல்லப்படுகிறது.அது என்ன அப்படியொரு தேவை?தமிழன் தமிழ் தானே பேச வேண்டும் அது என்ன மற்ற மொழிகளில் கலப்பது?
எங்கள் ஊரில் (இலங்கையின் கிழக்குக்கரையில் உள்ள மட்டகளப்பில்)ஏறத்தாள 500 வருடங்களுக்கு முன் வந்து குடியேறிய போர்த்துக்கீச இனத்து மக்கள் வாழ்கிறார்கள்.இன்றும் அவர்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் மக்களோடும் பேசும் போது தங்களது மொழியிலேயே பேசுகிறார்கள்.அதாவது எறத்தாழ 500 ஆண்டுகள் தமிழர் மத்தியில் வாழ்ந்தும் ஒரு சமூகம் இன்னமும் தனது மொழியை இழக்கவில்லை.
ஆனால் நாம்"ஒருவர் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வருகிறார்.அவரிடம் அவரது நண்பர் ஹீரோ யார்?பைட் எல்லாம் எப்படி?சோங்ஸ் எப்படி?என்று தான் கேட்கிறார்.காதல் என்கிற அழகு வார்தையை கூட லவ் என்று தான் சொல்கிறார்கள்.
தமிழுக்குள் ஆங்கிலம் கலப்பதாலோ என்னவோ தமிழின் பழைய சொற்கள் எத்தனயோ மருவி வருகிறது.என்னைத் தமிழ் மருவும் ஆரோக்யமான தொடர் விளையாட்டுக்கு அழைத்தவர் என் தோழி திகழ்.(இனி என் யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கலக்கிறேன்.)எனக்கு இங்க சரியான குளிர்(கூதல்).அதால உடம்பு சரில்ல.கொஞ்சம் இல்ல...இல்ல நிறைய பிந்தியே பதிவு போடுறன்.நன்றி தோழி திகழ்மிளிர்.
தமிழா! நீ பேசுவது தமிழா...?
தமிழா!நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
(திரு.காசிஆனந்தனின் கவிவரிகள்)
கடுக நட ,விரசாய் நட-விரைவாய் வேகமாய்
குசலம் - நலம் விசாரித்தல்
வட்டில் - மரத்தால் செய்யப்பட்ட சாப்பிடும் தட்டு.
மிச்ச சொச்சம் - பொருளோ உணவோ கொஞ்சம் மிச்சம் இருப்பது
எப்பன் - இல்லிப்போல என்றும் யாழ் தமிழில் சொல்வார்கள்.
கவளம் - அம்மா சோறு உருட்டித் தருவது
சிட்டை - சிறு குறிப்புகளோடு எழுதி எடுத்துக்கொள்ளும் காகிதம்
அட்டாளை - பரணைப் போலவே
உறி - உறி என்றால் ஊரில் கிராமங்களில் குசினியில் முகட்டிலே கயிற்றில் கட்டி சாப்பாட்டுச் சாமான்களை இரவில் தொங்க வைத்திருப்பார்கள் பூனை,எலி,கரப்பான் பூச்சிகளிடம் இருந்து சாப்பாட்டுச் சாமான்,தயிர் போன்றவற்றைப் பாதுகாக்க.
அல்லங்காடி - மாலை வேளைகளில் திறக்கும் கடை
திருக்கை - விஷேச காலங்களில் கொடுக்கும் கோவில் பிரசாதம்
சுண்டக்கறி - முந்தைநாள் வைத்த குழம்பை சுண்டக்
காய்ச்சி வறுவலாக்கி எடுத்த கறி.
கூராந்து - (மழை கூராந்து இருக்கு)மழை வரும் நேரத்தில் வானம்
மேகமூட்டமா கறுப்பா இருக்கும்.
பிறத்தி - பின்பக்கம் சொந்தம் அல்லாதது.(அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்திதான்.)
பீத்தல் - ஓட்டை ,கிழிந்த
பிராது - முறையிடுதல்
அக்காள் - அக்கா
அத்தான் - அக்காவின் கணவன்.அன்றைய காலங்களின் தன் கணவனை அத்தான் என்று அழைப்பது வழக்கம்.இப்போ அது இல்லை.
அழகான விடயம் இது.
கடகம் - பனை ஓலையால் செய்யப்பட்ட சின்னதாய் பெரிதாய் பெட்டிகள்.
குஞ்சி - சின்னது(குஞ்சி அக்கா)
செட்டை - பறவைகளின் இறக்கை
வெட்டை - வெறுமையான வெளி
செத்தை - மரம் செடிகளின் குப்பை
பெட்டகம் - மரத்தாலான பெரிய பெட்டி
இறங்குப் பெட்டி - தகரத்தாலான சிறிய பெட்டி
மூக்குப்பேணி - தேநீர் குடிக்கப் பாவிக்கப்பட்டது.
குவளையில் கூராக இருக்கும்.
அரிவரி - முதன்முதல் பாடசாலை வகுப்பு.(முதலாம் வகுப்பிற்கு முன்)
சப்பை ,சப்பட்டை - தட்டையான
சுரும்பு - வண்டு (சுரும்பு குத்திட்டுது)
சும்மாடு - சுமக்கும் போது தலையில் சுத்தி வைத்துக் கொள்ளும் துணி.
கோணிப் பை - சாக்கு
பொட்டு(வேலி) - வேலியில் போகவர ஒரு சிறு புகு வழி.
கதியால் - வேலியை நெருக்கமாகப் போட முளைக்க வைக்கும் பூவரசு, கிளுவை போன்ற மரத்தடிகள்.
முட்டி - நீரைத் தேக்கி வைக்கும் மண்ணாலான பாத்திரம்.
சக்கப் பணிய - சப்பாணி போட்டு தரையில் வசதியாக அமர்ந்திருத்தல்.
விசகேளம் - ஒருவர் இன்னொருவரிடம் மூன்றாம் நபருக்கான செய்தி ஒன்றைச்சொல்லி விடுதல்.
பிளா - கள்ளுக்குடிக்க பனை ஓலையால் பின்னப்பட்டிருக்கும்.
இத்தனை சொற்களும் நான் என் அம்மா,அப்பா,அம்மம்மா,தாத்தா,பாட்டி என் முன்னோர்கள் கதைக்கக் கேட்டது.இப்போ அப்பாவிடமும் கேட்டு அறிந்துகொண்டது.
எனக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.சிலசமயம்
இங்கே எங்கள் வழக்கத் தமிழும் கலந்தே இருக்கிறது என்றே நினைக்கிறேன்.குறை நிறை சொல்லுங்கள்.திருத்திக்கொள்கிறேன்.
என் அம்மம்மா(அம்மாவின் அம்மா)மாதத்தில் ஒரு முறை ஒடியல் கூழ் காய்ச்சி வளவின் பிறத்தில பெரிய மரங்கள் இருக்கு.பிலா,மா,தென்னை,
நாவல்,கொய்யா எண்டு.அங்க எல்லாரும் சுத்தியிருந்து பிலா இலையை மடிச்சுக் கூராக்கி கூழ் குடிப்பம்.இனி அந்தக் காலங்களின் நினைவுகள் மட்டுமே!
ஹேமா(சுவிஸ்)
37 comments:
\\திருக்கை - விஷேச காலங்களில் கொடுக்கும் கோவில் பிரசாதம்\\
நாமா மீனுன்னுதான் நினைச்சுட்டு இருக்கம் இப்டி ஒரு வழக்கு இருக்கா..?????
\\கடுக நட ,விரசாய் நட-விரைவாய் வேகமாய்\\
'சுருக்கா' வான்னும் சொல்லிப்பம்
\\அட்டாளை - பரணைப் போலவே\\
நம்ம ஊரிலை ஆடு மாடுகளை கட்டிகிற தொழுவத்தையும் அட்டாளை எண்டுதான் சொல்லிப்பம் அப்பவும் 'புளக்கத்திலை' இருக்கு
'புளக்கத்திலை'- பயன்பாட்டிலை
\\உறி - உறி என்றால் ஊரில் கிராமங்களில் குசினியில் முகட்டிலே கயிற்றில் கட்டி சாப்பாட்டுச் சாமான்களை இரவில் தொங்க வைத்திருப்பார்கள் பூனை,எலி,கரப்பான் பூச்சிகளிடம் இருந்து சாப்பாட்டுச் சாமான்,தயிர் போன்றவற்றைப் பாதுகாக்க.
\\
குசினியில் இப்ப தமிழ்லை இந்த வார்தையய்ம் சாத்துட்டாங்களா... சொல்லவே இல்லை ஹேமா
\\சுரும்பு - வண்டு (சுரும்பு குத்திட்டுது)\\
நாம கேள்விபடவே இல்லைங்க...
\\முட்டி - நீரைத் தேக்கி வைக்கும் மண்ணாலான பாத்திரம்.\\
தென்னம் மரத்திலை 'கள்' எடுக்க பயன்படுத்துவாங்க... அதுதானே... எப்டி பிடிசன் பாத்திங்களா????
\\பிளா - கள்ளுக்குடிக்க பனை ஓலையால் பின்னப்பட்டிருக்கும்.\\
அது ஒரு அலாதியான அனுபவமும்க்க... கள்ளு குடிக்கிறதை சொல்லலைங்க....பிளாவிலை பதநீர் குடிக்கிறதை சொன்னானுங்க
Most of the words u have mentioned are still in existence hema.I'll put up a detailed comment shortly.
எப்பன் - இல்லிப்போல
அல்லங்காடி
திருக்கை
கூராந்து
செட்டை
மூக்குப்பேணி
அரிவரி
கதியால்
முட்டி
சக்கப் பணிய
விசகேளம்
பிளா
இத்தனையும் புதியவை.
அருமை ஹேமா.
arumai....
Kasiananthanin varihal unmai.Jamal has listed the words not in existence.Other words are still used Hema..
கமல் said...
கெதியா வாங்கோ, ஏன் புசத்தாமல் இருங்கோ, இப்பிடி நிறையப் பழைய சொற்களைத் தொகுக்கலாம் ஹேமா... நல்ல தொகுப்பு.. தொடருங்கோ...
சக்(ங்)கடத்தார் said...
பிள்ளை உந்தக் குஞ்சியப்பு. சீனியப்பு, சீனியம்மா, செல்லாத்தை. மற்றம்மா. ஆசையம்மா எண்டு உறவு முறையளும் முசுப்பாத்தி, பேந்து, மூக்குப் போணி, சுண்டு, ஒண்டுக்கிருந்திட்டு வாறன், வீட்டுக்குத் தொலைவிலை, அலட்டாமல் இருமன் , உப்பிடி நிறையச் சொற்களும் எங்கடை ஆக்கள் பயன்படுத்துறவை. இப்ப இல்லை. பேந்து எப்ப? அது முந்தி.
February 10, 2009 11:14 PM
கமல் said...
ஹேமா உப்புமடச் சந்தியின் பின்னூட்ட முறை எனது கணினிக்குக் கரைச்சல் தருகிறது. உங்களால் முடிந்தால் மாற்றி விடுங்கோ. நல்ல தொகுப்பு. புசத்தாமல் இருங்கோ, கரைச்சல் குடுக்க வேண்டாம், உண்ணாணைக் கேட்டால் சொல்லுவியளே? அந்திக்கு வருவியளே?? இப்பிடிப் பல சொற்களும் மொழி வழக்கிலிருந்து மருவி வருகின்றன.
கவின் said...
\\கடுக நட ,விரசாய் நட-விரைவாய் வேகமாய்\\
'சுருக்கா' வான்னும் சொல்லிப்பம்//
கவின் ''சும்மா அரைஞ்சு கொண்டு நிக்காமல் கெதியா வாங்கோ என்றும் சொல்லுவோம்???
கபீஷ் said...
நல்ல தொகுப்பு, ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழ்ர்களை விட தமிழை அழிந்து விடாமல் காப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். :-)
February 11, 2009 4:40 AM
திகழ்மிளிர் said...
பதிவுக்கு நன்றிங்க
பல அரிய சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்தது வாழ்த்துகள்.
February 11, 2009 5:11 AM
திகழ்மிளிர் said...
/அதால உடம்பு சரில்ல.கொஞ்சம் இல்ல...இல்ல நிறைய பிந்தியே பதிவு போடுறன். /
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். சிட்டை,திருக்கை,கடகம்,செட்டை,சுரம்பு இது எல்லாம் நான் அறியாத சொற்கள்
February 11, 2009 5:21 AM
கவின் said...
\\கவின் ''சும்மா அரைஞ்சு கொண்டு நிக்காமல் கெதியா வாங்கோ என்றும் சொல்லுவோம்???\\
ஆமா இல்லே.. மறந்திருச்சு
February 11, 2009 1:39 PM
கவின் said...
\\சக்(ங்)கடத்தார் said...
பிள்ளை உந்தக் குஞ்சியப்பு. சீனியப்பு, சீனியம்மா, செல்லாத்தை. மற்றம்மா. ஆசையம்மா எண்டு உறவு முறையளும் முசுப்பாத்தி, பேந்து, மூக்குப் போணி, சுண்டு, ஒண்டுக்கிருந்திட்டு வாறன், வீட்டுக்குத் தொலைவிலை, அலட்டாமல் இருமன் , உப்பிடி நிறையச் சொற்களும் எங்கடை ஆக்கள் பயன்படுத்துறவை. இப்ப இல்லை. பேந்து எப்ப? அது முந்தி
\\
சக்(ங்)கடத்தார் said...
பிள்ளை உந்தக் குஞ்சியப்பு. சீனியப்பு, சீனியம்மா, செல்லாத்தை. மற்றம்மா. ஆசையம்மா எண்டு உறவு முறையளும்
****************************
ஓமனை குஞ்சியப்பு மறந்து போன்னனை
***************************** முசுப்பாத்தி,- நல்ல முசுப்பாத்தியா தான் கதைகிறாயனை
**************************
பேந்து,???????????
மூக்குப்
***********************
போணி, சுண்டு,- அடுப்படிக்கை தான் சுத்துறாயனை
***************************
ஒண்டுக்கிருந்திட்டு வாறன்,- அப்பு எண்டதை அடிக்கடி ஞபகபடுத்துறாய்
*******************************
வீட்டுக்குத் தொலைவிலை
*******************************,
அலட்டாமல் இருமன்- ஹேமாவை சொல்லலை தானே?????
******************************** உப்பிடி?????????
கத்திபுடி கேள்வி பட்டனானனை இது என்ன உப்புடி?????????/
ஹிஹிஹிஹி
**********************
February 11, 2009 1:47 PM
கவின் said...
\\சிட்டை,திருக்கை,கடகம்,செட்டை,
சுரும்பு\\
இது யாழ்பான டமில் ஆக்கும்
February 11, 2009 1:48 PM
கவின் எங்கட தமிழ் வெளுத்துக் கட்டுறிங்கள்.உண்மையா சந்தோஷமா இருக்கு உங்கட ஆர்வத்துக்கு.
//கவின் said...
\\சுரும்பு - வண்டு (சுரும்பு குத்திட்டுது)\\
நாம கேள்விபடவே இல்லைங்க...//
எங்கட தாத்தா சொல்லுவார் முந்தி.நான் கேட்டிருக்கிறன் கவின்.என் தாத்தா ஒரு
தமிழ்நாட்டுத் தமிழர்.
ஓ...கவின் குசினி தமிழ் இல்லை என்ன!
//அது ஒரு அலாதியான அனுபவமும்க்க... கள்ளு குடிக்கிறதை சொல்லலைங்க....பிளாவிலை பதநீர் குடிக்கிறதை சொன்னானுங்க.//
கவின்,முட்டி.பிளா,பதநீர் எவ்வளவு சந்தோஷமானbஅனுபவங்கள்.
ம்ம்ம்ம்....களவும் கற்று மற.புரிஞ்சுகொண்டா சரி தம்பி.
ஜமால்,சிலசமயங்களில் சில சொற்கள் எம் வழக்கச் சொற்களாக மட்டும் இருக்கும்.ஆனாலும் அவைகளும் இப்போ பாவிப்பில் அரிதாகி வருகிறது நன்றி ஜமால்.
நன்றி மேவி,என் உப்புமடச்சந்திக்கு வந்ததுக்கு.
வாங்க முனியப்பன்.கொஞ்சம் தமிழ் படிப்போம்.மறந்தவற்றை மீட்டு எடுப்போம்.
கமல், எனக்குக் குழப்பமாய்கிடக்கு.
என்ன சொல்லுங்கோ பாப்பம்.எங்கட தமிழிலயும் நிறைய சொல்லுகள் மறைஞ்சுதான் போச்சு.அப்போ நான் கலந்து கட்டியெல்லோ போடுறன்.அது சரியோ!
//சக்(ங்)கடத்தார் said...
பிள்ளை உந்தக் குஞ்சியப்பு. சீனியப்பு, சீனியம்மா, செல்லாத்தை. மற்றம்மா. ஆசையம்மா எண்டு உறவு முறையளும் முசுப்பாத்தி, பேந்து, மூக்குப் போணி, சுண்டு, ஒண்டுக்கிருந்திட்டு வாறன், வீட்டுக்குத் தொலைவிலை, அலட்டாமல் இருமன் , உப்பிடி நிறையச் சொற்களும் எங்கடை ஆக்கள் பயன்படுத்துறவை. இப்ப இல்லை. பேந்து எப்ப? அது முந்தி.//
அப்பு வரவர உங்கட அலுப்புக் கூடிப்போச்சணை.இந்தச் சொல்லுகளெல்லாம் நல்லாத்தான் இருக்கணை.ஆனா எல்லாம் யாழ்ப்பாணத்துத் தமிழெல்லோ.அப்ப அப்பு என்ன செய்றது.எங்கட கூட்டாளிகளுக்கும் விளங்கவெல்லோ வேணுமணை.எங்கட சனக்கள் இப்ப்வவும் இந்தச் சொல்லுகள் பாவிக்கினம்தானே!
கமல் உப்புமடச் சந்தி திருத்தவேலை நடக்குது.அதுதான்.இப்போ சரி என்று நினைக்கிறேன்
http://santhyilnaam.blogspot.com/
கபீஷ்,சுகமா?கனகாலமாக் காணேல்ல இந்தப்பக்கம்.ஏன் குழந்தைநிலாப் பக்கமும் இல்லை.வேலை கூடவோ?நன்றி திடீரென்று வந்து கருத்துத் தந்ததுக்கு.
திகழ் உங்களுக்குத்தான் என் நன்றி.
அடியெடுத்துக் கொடுத்தீர்களே.
சந்தோஷமாயிருக்கு.
திகழ் நீங்க சுகம்தானே.எனக்கு மாதமும் ஒன்றாகிறது.நெஞ்சில் சளி பிடிச்சு இன்னும் சரியாகாதாம்.
தொண்டை நோ.சிலசமயம் இரத்தமும் வருது.உடம்பு எப்பவும் சோர்வாயும் இருக்கு.
பார்க்கலாம்.நன்றி திகழ்.
ஓமனை குஞ்சியப்பு மறந்து போன்னனை
***************************** முசுப்பாத்தி,- நல்ல முசுப்பாத்தியா தான் கதைகிறாயனை
**************************
பேந்து,???????????
மூக்குப்
***********************
போணி, சுண்டு,- அடுப்படிக்கை தான் சுத்துறாயனை
***************************
ஒண்டுக்கிருந்திட்டு வாறன்,- அப்பு எண்டதை அடிக்கடி ஞபகபடுத்துறாய்
*******************************
வீட்டுக்குத் தொலைவிலை
*******************************,
//அலட்டாமல் இருமன்- ஹேமாவை சொல்லலை தானே?????
******************************** உப்பிடி?????????
கத்திபுடி கேள்வி பட்டனானனை இது என்ன உப்புடி?????????/
ஹிஹிஹிஹி
**********************//
கவின் நீங்களும் கமலும் சங்கடத்தாரும் அலசோ.....அலசெண்டுதான் அலசியிருக்கிறியள்.அதென்னது நடுவில ஹேமா...அலட்டுது எண்டு.பொறுங்கோடா பொடியள் வாறன்.இந்த அப்புக்கிழவனுக்கு
மெல்லோ கொழுப்புக் கூடிப்போச்சு.வாறன் வாறன்.
//கவின் said...
\\சிட்டை,திருக்கை,கடகம்,செட்டை,
சுரும்பு\\
இது யாழ்பான டமில் ஆக்கும்//
ஓ...மடா பெடியா நான் சொன்னான்தானே.எங்கட யாழ் தமிழும் கலந்து கிடக்கெண்டு.
உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு சிறிய வருத்தம் நீங்கள் யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லையே என்று, இதனால் மூலம் பல பகுதியில் வழங்கும் சொற்களை அறிந்துக் கொள்ள முடிந்திற்கு வாய்ப்பு அற்று போய் விட்டதால்
மறந்து போன அல்லது மறைக்கப் பட்ட பல தமிழ் வார்த்தைகளைக் கொடுத்துள்ளீர்கள். நன்று...சொல்லில் மறக்கப் படாத, ஆனால் செயலில் மறக்கப் பட்ட இந்த வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
“தமிழ்”
திகழ்,நன்றி மீண்டும் உங்கள் அக்கறைக்கு.திகழ் நீங்கள் சொன்னதை நானும் தவறவிட்டதாக யோசித்தேன்.எனக்கு யாரைத் தெரிவு செய்வதென்று தெரியவில்லை.
அநேகமாக எல்லோரும் எழுதிவிட்டார்கள் என நினைக்கிறேன்.என்றாலும் கவனிக்கிறேன்.
என்ன அதிசயம் தமிழ்ப்பறவை அண்ணா.சந்தோஷம்.இன்றுகூட உங்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நினைத்தேன்.உங்களையும் உங்கள் பதிவுகளையும்,உங்கள் பின்னூட்டங்
களையும் நிறையவே தவற விடுகிறேன்.கவலைதான்.என்ன செய்ய!சரி இப்படி எப்போவாவது வந்து போகிறீர்களே.சந்தோஷம்
//சொல்லில் மறக்கப் படாத, ஆனால் செயலில் மறக்கப் பட்ட இந்த வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...“தமிழ்”//
சரியாகச் சொன்னீர்கள் அண்ணா,
"தமிழ்"என்கிற வார்த்தையோ தமிழோ என்றும் அழியப்போவதில்லை.இதை நம்புங்கள்.நிச்சயம்.
தமிழரின் செயற்பாடுகள்...!
Post a Comment