புகைப்பட நன்றி-google images
ஐயோ சத்தியமா இந்தப் பதிவை நான் போடவே இல்லை.உப்புமடச் சந்திக்குள் இப்போ எல்லாம் எலி உலாவுது.நானே யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.இந்தப்படத்துக்குக் கவிதை!
எலி வந்து பதில் பின்னூட்டம் போடும்.பாருங்களேன்!
ஹேமா(சுவிஸ்)
கமல்
********
பாவம் அவன்!
ஒட்டிய வயிறு
உலர்ந்த ஆடை
ஓரமாய் ஒரு பேப்பருடன்
அகதியாயோ அல்லது
அநாதையாயோ யாருமறியோம்!
நாளைய வாழ்வை நினைத்தபடி
வாழ்வின் வசந்தத்தைத்
தொலைத்து விட்டு
வாழ்வின் நிதர்சனம் நோக்கி
அவன் மட்டும் ஓரமாய்!
நகரம் இருண்டு கிடக்கிறது!
அவன் மட்டும் என்னைப்
போலவே விழித்திருக்கிறான்!
ஹேமா
*********
கூழ் குடித்தாலும்
குடிசைக்குள் வாழ்ந்தாலும்
கூடிக் கிடந்தோம்.
உறவுகள் தொலைத்து
ஊரையும் இழந்து
தெருவோரம்.
நிழல் தரும் மரங்களில்
கிளைகள் இல்லை.
கோவிலுக்குள் கடவுளும் இல்லை
உணவை மறந்த வயிறும் வற்றி.
கிழிந்த பேப்பரில் அரசியல்.
இலாபமற்ற பதிவுகள்.
ஒரு நாள் இலாபம் எனக்கு.
ஒரு நேரமாவது மானம் மறைக்க!!!
இப்னு ஹம்துன்
******************
1)சொத்து சுகமிழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
'ஸ்லம் டாக் மில்லியனர்'
2)அடடா!
கிழிந்திருக்கிறதே.........
சுவாரசியமான படைப்பொன்று
SUREஷ்
*********
படிக்கும் வெறி தீரும்மட்டும்
படித்துக் கொண்டே இருப்போம்,
எத்தனை கிளிந்திருந்தாலும்
எங்கே கிளிந்திருந்தாலும்
எதை எழுதியிருந்தாலும்
எப்படி எழுதியிருந்தாலும்.....
கடையம் ஆனந்த்
********************
தன்னிலை மறந்து
ஏதையே தேடி இவனது பயணம்!
கிழிந்து போனது இந்த காகிதம் மட்டுமல்ல
இவன் வாழ்க்கையும் தான்!
உலகம் புரிய வைக்கும் பேப்பருக்கு
இவன் வாழ்வு மறந்து போனது ஏனோ?
உன்னிப்புடன்
நோக்குகிறhன்
நல்ல மனிதர்களை தேடி!
விடுகதையாய்...
இவன் பயணம்!
முனியப்பன்
**************
A man in a different world,A man in a different costume,
Reading news abt another world,The world he has detached from,
Let him remain peacefully in his world,
Since the world in paper is highly cruel.
அமுதா
*********
என்று ஒழியும்
இக்கொடுமைகள்
என்ற கேள்விக்கு கூட
சக்தி இன்றி
கொடுமைகளைக் கூறும்
தாளை மட்டுமே
கிழிக்க முடிந்தது.
சக்தி
*******
பார்வை சரி இல்லை
பயணம் முடியவில்லை
பக்கம் கிழிந்து இருப்பினும்
பார்த்து கொள்கிறேன்
பாரதத்தின் நிலையினை.
ஆதவா
*********
யாசகனின் தாகம்
உணவில் மட்டுமல்ல.
அறிவு கொட்டிக் கிடக்கும்
காகிதத்திலும்...
அ.மு.செய்யது
*******************
பிச்சை போடப்பட்ட
சாம்பார் சாத பார்சல் பேப்பரில்
"காதல் இனிக்கும்;
குபேரனாவாய்"
ராசிபலன் படிக்கும்
பார்வை மங்கிய தாத்தா.
தேவா
*********
படத்துக்குக் கவிதை
என்றவுடன்
படத்தைப்
பார்த்தேன்!!
படித்துக் கிழித்த
நாளிதழ்!
உடுத்திக்கிழித்த
உடை!
படமே ஒரு கவிதை!
பதிவிட்டவர் பெருங்கவிதை!!
‘அகோரி’
***********
1)இன்று எங்காவது
உணவு பொட்டலம் போடுவார்களா
உணவின்றி உணர்விழந்து
பார்க்கிறார் தாளை
செய்தி இருக்குமா என்று.
2)படி
மடி
குடி
டி (நோ கடி)-நட்புடன் ஜமால்
திகழ்மிளிர்
*************
வசிப்பதோ தெருவிலெனிலும்
பசிக்கோ உணவு இல்லையெனிலும்
நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை
வாசிக்காமல் எங்களால்
சுவாசிக்க முடியாது.
அபுஅஃப்ஸர்
**************
"நேற்றைய தன்
வசந்த கால வாழ்க்கையை
குப்பைத்தொட்டியில் கிடந்த
நாழிதளில்
படித்து மகிழும்
வெற்றிப்பட தயாரிப்பாளர்.
ஷீ-நிசி
**********
நானும் இந்த தாளும்
ஒன்றுதான்...
இருவருமே கிழிந்தநிலையில்....
நானும் நீங்களும் ஒன்றுதான்!!
நான் கிழிந்த தாளைக்கொண்டு,
செய்தி படிக்கிறேன்!
நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு
கவிதை படைக்கிறீர்கள்!
நானும் நீங்களும் ஒன்றுதான்
65 comments:
பாவம் அவன்!
ஒட்டிய வயிறு
உலர்ந்த ஆடை
ஓரமாய் ஒரு பேப்பருடன்
அகதியாயோ அல்லது
அநாதையாயோ யாருமறியோம்!
நாளைய வாழ்வை நினைத்தபடி
வாழ்வின் வசந்தத்தைத்
தொலைத்து விட்டு
வாழ்வின் நிதர்சனம் நோக்கி
அவன் மட்டும் ஓரமாய்!
நகரம் இருண்டு கிடக்கிறது!
அவன் மட்டும் என்னைப்
போலவே விழித்திருக்கிறான்!
படத்திற்கு கவிதையா ?
:)))))))))))))))
/கமல் said...
பாவம் அவன்!
ஒட்டிய வயிறு
உலர்ந்த ஆடை
ஓரமாய் ஒரு பேப்பருடன்
அகதியாயோ அல்லது
அநாதையாயோ யாருமறியோம்!
நாளைய வாழ்வை நினைத்தபடி
வாழ்வின் வசந்தத்தைத்
தொலைத்து விட்டு
வாழ்வின் நிதர்சனம் நோக்கி
அவன் மட்டும் ஓரமாய்!
நகரம் இருண்டு கிடக்கிறது!
அவன் மட்டும் என்னைப்
போலவே விழித்திருக்கிறான்!/
அருமையாக
இருக்கிறது
கற்பனைக்கு நல்ல தீனி..
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் ஹேமா..
சொத்து சுகமிழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
'ஸ்லம் டாக் மில்லியனர்'
உங்கள்
அறிவுரைக்கு
இணங்க
நானும்
கவிதையெழுதி
விட்டேன்
ஆனால் எனது வலையில்...
அடடா!
கிழிந்திருக்கிறதே.........
சுவாரசியமான படைப்பொன்று!
/இப்னு ஹம்துன் said...
சொத்து சுகமிழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
'ஸ்லம் டாக் மில்லியனர்'
/
கலக்கல்
வலைப்பதிவின் வடிவமைப்பு நன்றாக
இருக்கிறது
அதிலும் வி(மர்)சனங்கள் நன்றாக இருக்கிறது தோழி
/ஐயோ சத்தியமா இந்தப் பதிவை நான் போடவே இல்லை.உப்புமடச் சந்திக்குள் இப்போ எல்லாம் எலி உலாவுது.நானே யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.இந்தப்படத்துக்குக் கவிதை!எலி வந்து பதில் பின்னூட்டம் போடும்.
பாருங்களேன்!/
எலி யாரு தோழி
:)))))))))))
திகழ்,எலி லண்டன் ல இருக்கு.
அதுதான் தள அமைப்பு-வடிவம் எல்லாம்.சிலசமயம் தானும் புகுந்து விளையாடுது.
/ஹேமா said...
திகழ்,எலி லண்டன் ல இருக்கு.
அதுதான் தள அமைப்பு-வடிவம் எல்லாம்.சிலசமயம் தானும் புகுந்து விளையாடுது./
ஒ அப்படியா சேதி
தன்னிலை மறந்து
ஏதையே தேடி இவனது பயணம்!
கிழிந்து போனது இந்த காகிதம் மட்டுமல்ல
இவன் வாழ்க்கையும் தான்!
உலகம் புரிய வைக்கும் பேப்பருக்கு
இவன் வாழ்வு மறந்து போனது ஏனோ?
உன்னிப்புடன்
நோக்குகிறhன்
நல்ல மனிதர்களை தேடி!
விடுகதையாய்...
இவன் பயணம்!
--கடையம் ஆனந்த்
/கடையம் ஆனந்த் said...
தன்னிலை மறந்து
ஏதையே தேடி இவனது பயணம்!
கிழிந்து போனது இந்த காகிதம் மட்டுமல்ல
இவன் வாழ்க்கையும் தான்!
உலகம் புரிய வைக்கும் பேப்பருக்கு
இவன் வாழ்வு மறந்து போனது ஏனோ?
உன்னிப்புடன்
நோக்குகிறhன்
நல்ல மனிதர்களை தேடி!
விடுகதையாய்...
இவன் பயணம்!
--கடையம் ஆனந்த்
/
அருமை
பாராட்டுக்களுக்கு நன்றி திகழ்மிளிர்.
திகழ்மிளிர்,
பாராட்டுக்கு நன்றி.
அப்பப்ப நம்ம வீட்டுக்கும் வந்து நலம் விசாரிக்கலாமே!
நம்மால முடியாது...
கவிதையா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
A man in a different world,A man in a different costume,Reading news abt another world,The world he has detached from,Let him remain peacefully in his world,Since the world in paper is highly cruel. Nandri Hema for giving me the chance to express myself abt the photo.
திகழ்,கவிதைகளைக் கவனித்து வாழ்த்துக்கள் சொன்னீர்கள்.உங்கள் இரண்டு வரிகள் தரவில்லையே!
செய்யது எங்கே கவிதையையும் உங்களையும் காணோம்.SUREஷ்,என் பெயரில் புதுப் பதிவே போட்டாச்சு.
சந்தோஷமாயிருக்கு.
தமிழன்,அடம் பிடிக்காதேங்கோ
கவின்,எழுதத் தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லவேணும்.அதென்ன அவ்வ்வ்வ்வ்.....கொஞ்சம் பொறுங்கோ நல்ல இடமாப் பாத்து மாட்டி விடஎண்டுதானே பாத்துக் கொண்டிருக்கிறன்.
எனக்கு சரியா தமிழே எழுத தெரியாது, நீங்க வேற கவிதை ன்னு பயமுறுத்துறீங்க
/இப்னு ஹம்துன் said...
திகழ்மிளிர்,
பாராட்டுக்கு நன்றி.
அப்பப்ப நம்ம வீட்டுக்கும் வந்து நலம் விசாரிக்கலாமே!
/
காசா பணமா வந்துவிட்டால் போதும்
நண்பரே
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தான்
கோபம் கொள்ள வேண்டாம்
;)))))))))))))))))))))
/கடையம் ஆனந்த் said...
பாராட்டுக்களுக்கு நன்றி திகழ்மிளிர்.
இப்னு ஹம்துன் said...
திகழ்மிளிர்,
பாராட்டுக்கு நன்றி./
பிடித்தவற்றை பாராட்டுவது
என்னுடைய இயல்பு
பின்னோட்டம் இடுவதில் கணக்கு வழக்கு பார்ப்பதில்லை
அதிலும் கவிதை என்றால் ஒரு அலாதி
வாழ்த்துகள்
/ஹேமா said...
திகழ்,கவிதைகளைக் கவனித்து வாழ்த்துக்கள் சொன்னீர்கள்.உங்கள் இரண்டு வரிகள் தரவில்லையே!/
எதையும் கிறுக்க கூடாது என்று இருந்தாலும்
வீட்டில் காகிதத்தில் கிறுக்கி, கிறுக்கி வைக்கின்றேன். பதிவு இடாமல்
இப்பொழுதைக்கு கவிதை வேண்டாமே
எப்படியே உங்களைப் போன்றவர்களால்
பல நல்ல கவிதைகளை வாசிக்க முடிக்கிறது என்பதை விட சுவாசிக்க முடிகிறது
வாழ்த்துகள்
என்று ஒழியும்
இக்கொடுமைகள்
என்ற கேள்விக்கு கூட
சக்தி இன்றி
கொடுமைகளைக் கூறும்
தாளை மட்டுமே
கிழிக்க முடிந்தது
/என்று ஒழியும்
இக்கொடுமைகள்
என்ற கேள்விக்கு கூட
சக்தி இன்றி
கொடுமைகளைக் கூறும்
தாளை மட்டுமே
கிழிக்க முடிந்தது/
நல்ல இருக்கிறது
ஐயோ சத்தியமா இந்தப் பதிவை நான் போடவே இல்லை.உப்புமடச் சந்திக்குள் இப்போ எல்லாம் எலி உலாவுது.நானே யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.இந்தப்படத்துக்குக் கவிதை!எலி வந்து பதில் பின்னூட்டம் போடும்.
பாருங்களேன்!
ஹேமா(சுவிஸ்)//
பிள்ளை கையைக் குடும்?? கட்டின கணவனை நல்லாத்தான் புரிஞ்சு வைச்சிருக்கிறீர்???
நசரேயன்,பயமுறுத்துறது
நீங்களா-நானா?கவிதைன்னு இல்லையே.உரைநடை,கதையும் எழுதலாம்தானே!
திகழ்,எதுக்கோ பிடிவாதமா இருக்கீங்கபோல.இப்போதைக்கு கவிதை எழுதுறதில்லன்னு.
சரி.அப்புறமா எழுதுங்க.
வாழ்த்துக்கு நன்றி.
கவிதைகள் பதிந்த கமல்,
ஹேமா,இப்னு ஹம்துன்,
SUREஷ்,கடையம் ஆனந்த்,அமுதா அத்தனை பேருக்கும் எலியின் சார்பின் நன்றியும் வாழ்த்துக்களும்.
முனியப்பன் உங்களும் என் மனம் நிறைந்த நன்றி.எல்லோருமே வித்தியாசமான சிந்தனையில் இந்தப் படத்தை ரசித்திருக்கிறோம்.படம் அழகும் பாவமாகவும் இருக்கு.
ஆனாலும் ஒரு அதிசயம்.வாசிக்கத் தெரிந்திருக்கிறது அந்த மனிதனுக்கு.
பார்வை சரி இல்லை
பயணம் முடியவில்லை
பக்கம் கிழிந்து இருப்பினும்
பார்த்து கொள்கிறேன்
பாரதத்தின் நிலையினை
அப்பு,சின்னஞ் சிறுசுகள் ஏதாச்சும் பகிடி விளையாடினா....சும்மா இருக்க மாட்டியள்.குழந்தை இல்லா வீட்டில கிழவன் துள்ளி விளையாடுதாம்.சரி...சரி கோவிக்காதேங்கோ அப்பு.
உங்களையே புரியுது கொஞ்சம்.பின்ன அவரைப் புரியாமல் இருப்பனோ.
பாருங்கோ இப்ப எலியோ வந்து பின்னூட்டம் போடுது.அது பேசாமச் சிரிச்சுக்கொண்டு இருக்குது.ஏன் எனக்குச் சொல்லாம பதிவு போட்டிருக்கு எண்டு கேட்டா போட்டோ நல்லாயிருக்கெண்டு போட்டதாம்.
என்ன சொல்ல நான்!தலை விதியெண்டு அனுபவிக்கிறன்.
அப்புவுக்கு இதில வேற ஒரு பகிடி.
அடடே!!!! இது உங்களின் இன்னொரு தளமா!!!! (சொல்லவேயில்லை???)
ஒகே!!! நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்...
யாசகனின் தாகம்
உணவில் மட்டுமல்ல.
அறிவு கொட்டிக் கிடக்கும்
காகிதத்திலும்..
ரொம்ப நேரம் ட்ரை பண்ணி இதுதான் சிக்கிச்சி!!!!
/ஆதவா said...
யாசகனின் தாகம்
உணவில் மட்டுமல்ல.
அறிவு கொட்டிக் கிடக்கும்
காகிதத்திலும்../
நல்ல இருக்கிறது
/ sakthi said...
பார்வை சரி இல்லை
பயணம் முடியவில்லை
பக்கம் கிழிந்து இருப்பினும்
பார்த்து கொள்கிறேன்
பாரதத்தின் நிலையினை/
சொல்லடுக்கு மட்டுமல்ல்
சுவையாக உள்ளது
வாழ்த்துகள்
அன்புடன் திகழ்
ஆதவா,உங்கள் முதல் வருகை சந்தோஷமாயிருக்கு.இனி இங்கும் சந்திக்கலாம்.(என்ன...பதிவுகள் போடத்தான் நேரம் குறைவு.)ஆனாலும் போடுவேன்.
யாரின் கவிதை வரிகள் அழகாயிருக்கு சொல்லலாமே.
திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.நீங்களாவது சொல்லலாமே.
பிச்சை போடப்பட்ட
சாம்பார் சாத பார்சல் பேப்பரில்
"காதல் இனிக்கும்
குபேரனாவாய்"
ராசிபலன் படிக்கும்
பார்வை மங்கிய தாத்தா.
ஏங்க!
உங்க
பதிவுல
எழுத்தெல்லாம்
ஓடுதே!!!
ரகளைங்க!!
தேவா..
படத்துக்குக் கவிதை
என்றவுடன்
படட்த்தைப்
பார்த்தேன்!!
படித்துக்கிழித்த
நாளிதழ்!
உடுத்திக்கிழித்த
உடை!
படமே ஒரு கவிதை!
பதிவிட்டவர் பெருங்கவிதை!!
/அ.மு.செய்யது said...
பிச்சை போடப்பட்ட
சாம்பார் சாத பார்சல் பேப்பரில்
"காதல் இனிக்கும்
குபேரனாவாய்"
ராசிபலன் படிக்கும்
பார்வை மங்கிய தாத்தா.
/
நல்ல இருக்கிறதே
வாழ்த்துகள்
இன்று எங்காவது
உணவு பொட்டலம் போடுவார்களா
உணவின்றி உணர்விழந்து
பார்க்கிறார் தாலை செய்தி
இருக்குமா என்று
/ thevanmayam said...
படத்துக்குக் கவிதை
என்றவுடன்
படட்த்தைப்
பார்த்தேன்!!
படித்துக்கிழித்த
நாளிதழ்!
உடுத்திக்கிழித்த
உடை!
படமே ஒரு கவிதை!
பதிவிட்டவர் பெருங்கவிதை!!/
எப்படி நண்பரே
இப்படி எல்லாம்
இந்த கவிதைக்கு ஒரு தலைப்பு
‘அகோரி’
/ஹேமா said...
திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.நீங்களாவது சொல்லலாமே./
இனமே அழிந்தாலும், தலைவன் அறிக்கை விடுத்து அறைக்குள் முடங்கி விட்டாலும் வாழ்க என்னும்
முழக்கம் போடும் கட்சித்தெண்டனும், மருத்துவ மனையில் மல்லாந்துப் படுத்துக் கொண்டு மனம் உருகும் தறுதலை வார்த்தைகள் வேதமாய் எடுத்துக் கொள்ளும் மக்களும் சிந்திக்காத வரை
வாழ்க்கை பாலைவனமாகவும், தேசம் சேரியாகவும் , ஈழ மக்களின் மனங்களில் மகிழ்ச்சி என்பதை காண இயலாது என்பதை இந்தப் படம் நமக்கு பாடமாக சொல்லுவது நினைக்கிறேன்
அதுவே என்னுடைய கிறுக்கலாக
.............................
வசிப்பதோ தெருவிலெனிலும்
பசிக்கோ உணவு இல்லையெனிலும்
நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை
வாசிக்காமல் எங்களால்
சுவாசிக்க முடியாது.
---------------------------
/ நட்புடன் ஜமால் said...
இன்று எங்காவது
உணவு பொட்டலம் போடுவார்களா
உணவின்றி உணர்விழந்து
பார்க்கிறார் தாலை செய்தி
இருக்குமா என்று/
கலக்கல்
என் கவிதய கூட மதித்து பதிவிட்டதற்கு நன்றி ஹேமா..
பிச்சை போடப்பட்ட
சாம்பார் சாத பார்சல் பேப்பரில்
"காதல் இனிக்கும்;
குபேரனாவாய்"
ராசிபலன் படிக்கும் //
மேலுள்ள மாதிரி, காதல் இனிக்கும், குபேரனாவாய் இடையில் ஒரு காற்புள்ளி ;
வைத்து கொள்ளுங்கள்..இரண்டும் தனித்தனி.
"நேற்றைய தன்
வசந்த கால வாழ்க்கையை
குப்பைத்தொட்டியில் கிடந்த
நாழிதளில்
படித்து மகிழும்
வெற்றிப்பட தயாரிப்பாளர்"
படி
மடி
குடி
டி
(நோ கடி)
வாவ்....உண்மையில் நான் எதிர்பார்க்கவே இல்லை.அருமையான கவிதைகள் குவிகின்றன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிந்தனை-உணர்வு.எனக்கு சொல்லாமல பதிவு போட்டதுக்குப் பேசினேன்.இப்போது எலிக்கு ஒரு நன்றி சொல்றேன் எல்லோர் சார்பிலும்.
நானும் இந்த தாளும்
ஒன்றுதான்...
இருவருமே கிழிந்தநிலையில்....
நானும் நீங்களும் ஒன்றுதான்!!
நான் கிழிந்த தாளைக்கொண்டு,
செய்தி படிக்கிறேன்!
நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு
கவிதை படைக்கிறீர்கள்!
நானும் நீங்களும் ஒன்றுதான்!
/1)இனமே அழிந்தாலும்,
தலைவன் அறிக்கை விடுத்து
அறைக்குள் முடங்கி விட்டாலும்,
வாழ்க என்னும்
முழக்கம் போடும் கட்சித் தொண்டனும்,
மருத்துவ மனையில்
மல்லாந்துப் படுத்துக் கொண்டு
மனம் உருகும் தறுதலை வார்த்தைகள்,
வேதமாய் எடுத்துக் கொள்ளும்
மக்களும் சிந்திக்காத வரை
வாழ்க்கை பாலைவனமாகவும்,
தேசம் சேரியாகவும் ,
ஈழ மக்களின் மனங்களில்
மகிழ்ச்சி என்பதை காண இயலாது./
இது கிறுக்கலுக்கான விளக்கம் தான்
இதை தங்களின் பட்டியலிருந்து நீக்கி விடவும்
.............................
வசிப்பதோ தெருவிலெனிலும்
பசிக்கோ உணவு இல்லையெனிலும்
நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை
வாசிக்காமல் எங்களால்
சுவாசிக்க முடியாது.
---------------------------
இந்த ஒன்றை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்
/ ஷீ-நிசி said...
நானும் இந்த தாளும்
ஒன்றுதான்...
இருவருமே கிழிந்தநிலையில்....
நானும் நீங்களும் ஒன்றுதான்!!
நான் கிழிந்த தாளைக்கொண்டு,
செய்தி படிக்கிறேன்!
நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு
கவிதை படைக்கிறீர்கள்!
நானும் நீங்களும் ஒன்றுதான்!/
அருமை
ஒருவ்கையா வகைப்படுத்தறேன்... இப்ப வேலை இருக்குங்க... அதனால நாளைக்கு இல்லாட்டி, ஞாயிறு!!!
மன்னிக்கவும்...
"பார்வை மங்கிய தாத்தா" இந்த கடைசி வரியை விட்டுடீங்களே !!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
( சுமமா..என்னோட ஆத்ம திருப்திக்காக தான் )
WOW!!!
:}}}}}}}}}}}}}}}}}}55}}
since its being late....
am just putting my attendance....
present madam.......
will comment from the next post
உண்மையில் அழகான் அர்த்தமுள்ள கவிதைகள்.அத்தனையும் முத்துக்கள்.தந்த அனைத்து என் நண்பர்களுக்கும் நன்றி.சும்மா வந்து பின்னூட்டம் தந்த தூயா,மேவி,பெர்னாண்டோ அவர்களுக்கும் என் நன்றி.
Post a Comment