Monday, September 14, 2009

பொழுது ஒன்று படைத்தவனோடு.

நான் : அடக் கடவுளே கடவுளே

கடவுள் : ஏய் பொண்ணு ஏன் எப்பவும் என்னைக் கூப்பிடுற.என்னைத் திட்டிக்கிட்டே இருக்கே நீ.ஏன் என்னாச்சு.நான் தான் கடவுள்.ரொம்ப காலம் உன் புலம்பல் எல்லாம் பாத்திட்டுத்தான் இப்போ வந்திருக்கேன்.சொல்லு உனக்கு என்ன வேணும்.எல்லாம் நான் தருவேன்.என்னால முடியாதது இந்த உலகத்தில ஒண்ணுமே இல்ல.

நான் : கடவுளா நீங்களா !அப்பிடின்னு ஒருதர் இருக்காரா.உங்களையாவது அதுவும் நான் கூப்பிடுறாதவது.அதுவும் இவ்ளோ திமிரோட.உங்களுக்கே இவ்ளோ திமிர்ன்னா பிறகு எப்பிடி நீங்க படைச்ச மனுஷன் மட்டும் சாதாரணமா இருப்பான்.என்னமோ எல்லாரும் கஸ்டம் வந்தா கடவுளேன்னு சொல்லுவாங்க அதான் நானும் சொல்லிட்டேன்.சத்தியமா இனிமேல் நான் அப்பிடி ஒரு வார்த்தையைச் சொல்லவே மாட்டேன்.தயவு செய்து போய்டுங்க.

கடவுள் : ஏம்மா இவ்ளோ கோவமா இருக்கே நீ.உன் பதிவெல்லாம் பாத்திட்டுத்தான் இருகேன்.எரிச்சல் கோவம்ன்னு வந்தவன் போனவன் ஒருத்தனையும் மிச்சம் விட்டு வைக்காம திட்டிட்டே இருக்க.அப்பிடி என்னதான் உன் மனசில எரிச்சல்.சொல்லு.கூப்பிட்ட குரலுக்கு வரணும்ங்கிறது என் பழக்கம்.கோவம் இல்லாமக் கொஞ்சம் பேசு பறவாயில்ல.மனசுக்கும ஆறுதலா இருக்கும்.உனக்கு ஏதாச்சும் குழப்பமிருந்தாலும் பகிர்ந்துக்கலாம்.வா...இங்க பக்கதில வா.

நான் : அடக் கடவுளே.எனக்கு உங்க கூடப் பேச எதுவுமில்ல.அதோட பிடிக்கல.எனக்கு நேரமும் இல்ல.மனசு அமைதி வேணும்ன்னா நிறையப் பாட்டுக் கேப்பேன்.எனக்கு மனசில படுறதை எல்லாம் எழுதுவேன்.இல்லாட்டி கண்ணை மூடிக்கிட்டு பேசாம படுத்திருப்பேன்.இப்போ நான் நிறைய அலுவலா இருகேன்.நின்மதியாவும் இருக்கேன்.உங்க கூடப் பேசினாத்தான் குழம்பிடுவேன்.எனக்கு நீங்க வேணாம் போயிடுங்க.

கடவுள் : சரி...சரி.நீ சொல்றதெல்லாம் நல்ல விஷயம்தான்.மனசை அமைதியா வச்சிருக்க நிறைய வழிகள் வச்சிருக்க.ஆனாலும் அலுவல் அலுவல்ன்னு சொல்ற.அப்பிடீனா...? அது என்ன உங்க ஊர் பாஷையா?

நான் : என்ன லொள்ளா?அது எங்கட யாப்பாணத் தமிழ்.உங்களுகுத் தெரியாட்டிப் போங்கோ.நானே வாழ்க்கை வெறுத்து சரி உயிர் இருக்கேன்னு வழ்க்கையோடயே சண்டை பிடிச்சு பிடிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.நீங்கவேற வந்து உயிரை எடுக்கிறீங்க.மனசில என்னமோ ஒரு அவதி.எல்லாம் இருந்தாலும் நின்மதி இல்லாம இருக்கேன்.எனக்கு முடியல கடவுளே.

கடவுள் : சரி ஹேமா யோசிக்காதீங்க.அழவேணாம்.என் கையை இறுக்கிப் பிடிச்சுக்கோங்க.தண்ணி கொஞ்சம் குடிங்க.நான் இருக்கேன்.சரியா.நீங்க சொல்லுங்க.சரி நான் கடவுள் இல்ல.உங்க சிநேகிதன்.உங்க கஸ்டத்தில நானும் பங்கு போட்டுக்கிறேன் சொல்லுங்க.முடிஞ்சா உதவியும் பண்றேன்.இப்பிடி வாங்க பக்கதில.

நான் : சரி நான் பக்கதில எல்லாம் வரல.என்னவோ உதவி பண்றதா சொல்றீங்க.காசு பணம் எதுவும் கேக்கமாட்டீங்கதானே.சரி... அப்படின்னா முதல்லே இதுக்குப் பதில் சொல்லுங்க .... இப்பெல்லாம் வாழ்க்கை ஏன் ஒரு பெரிய சிக்கலா இருக்கு? ஒவ்வொரு படியும் கஸ்டப்படுத்தான் ஏறவேண்டியிருக்கு.போராட்டமா இருக்கு.

கடவுள் : வாழ்க்கையைச் சும்மா அப்படியே விளையாட்டா வாழ்ந்து பாருங்க.ரொம்ப யோசிக்காமா அதைப் பத்தியே நினைச்சு குழப்பமாகாம அலசி ஆராயம விட்டுப் பாருங்க.வாழ்க்கை சுலபமா இருக்கும்.எந்த விஷயத்தையும் பெரிசா ஆக்கவேணாம்.எந்தக் கேள்விக்கும் பதில இருக்கிற மாதிரி வாழ்க்கைக்கும் வழி இருக்கு.

நான் : ஏன் தொடர்ந்த துன்பம் தொடர்ந்த பிரச்சனைகள்ன்னு சந்தோஷங்களைத் தொலைச்சிட்டு அவதிப்படுறோம்?

கடவுள் : இது முக்கியமான ஒண்ணு.வாழ்க்கையை பாத்துப் பயந்து பயந்து அதையே அலசி ஆராய்ஞ்சு கவலைப்படுறதே உங்க வாழ்க்கையா போகுது.அப்போ எப்பிடி சந்தோஷம் உங்க பக்கதில வரும்.முதல்ல சந்தோஷத்தை உங்க பக்கதில வர வழி விடுங்க.

நான் : ம்ம்ம்....நீங்க வேற.அடுத்த நிமிஷம் - அடுத்த வேளை என்ன நடக்கும்ன்னு எப்பிடி ஆகும்ன்னு உலகத்தில என்னென்னவோ எல்லாம் நடந்துகிட்டிருக்கு.எப்பிடி சந்தோஷமா எதையாவது பண்றது.நினைக்கவே பயமாயிருக்கு.

கடவுள் : பாருங்க ஹேமா ,ஒண்ணு ஆவுறதும் அழியறதும்ங்கிறது வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒண்ணு.அரசியலில இதெல்லாம் சகஜம்ன்னு சொல்றாப்போல இதுக்கெல்லாம் கவலைப்பட்டா...உங்களுக்குக் கிடைச்சிருக்கிற வாழ்க்கையைச் சரியாக்கிகிட்டு உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்துகிட்டு போய்கிட்டே இருங்க.

நான் : அட! என்ன கடவுளாரே மனசுக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கு.உலகம் இடிஞ்சு போகுதுன்னு சொல்றாங்க.இப்போ எல்லாம் ஏரோப்பிளேன் எல்லாம் கண்ட பாட்டுக்கு விழுந்து தொலையுது.எது எப்பிடின்னு எங்க என்ன நடக்குதுன்னு கவலையா இருக்குது.என்ன நீங்க ?

கடவுள் : வேதனை கவலை கஸ்டம் எல்லாம் இருக்கும்தான்.அது அப்ப வந்து அப்பவே போயிடணும்.உங்க மனசில நிலைச்சு நிக்ககிறதுதான் கூடாது.ஆனாலும் அது உங்க விருப்பம்.

நான் : அட என்னைய்யா நீங்க.கஸ்டம் கவலை எல்லாம் நம்ம நம்ம விருப்பம்ன்னா ஏன் நல்லவங்க ஒண்ணும் தெரியாத அப்பாவிங்க எல்லாம் கஸ்டப்படுறாங்க?சந்தோஷமும் எங்க விருப்பம்தானே?

கடவுள் : பாருங்க ஹேமா தங்கத்தைச் சுட்டாத்தான் அழகான நகைகளா ஆகுது.மண்ணைப் பிசைஞ்சு எடுத்து குயவன் சுத்தணும்.அப்பத்தான் அழகா குடம் ஆகும்.அப்பிடித்தா நல்லவங்களுக்கு நிறைய சோதனைகள் வரும்.ஆனா சுலபமா போய்டும்.கசப்பு மருந்து போலத்தான் அவங்க கஸ்டம்.குடிச்சா நோய் மாறிடும்.

நான் : அப்பிடின்ன கஸ்டங்கள் வேணுமா வாழ்க்கையில.அது ஒரு படிப்பினையாவும் இருக்கும்ன்னும் சொல்றீங்க.

கடவுள் : சரியாப் புரிஞ்சுகிட்டீங்க.வாழ்க்கையில பட்டுத் தெளியுறது இருக்கே அது போல ஒரு வாத்தியார் உங்களுக்குக் கிடைக்காது.முதல்ல சோதனையெல்லாம் வச்சு அப்புறம் அழகா பாடம் சொல்லித் தந்து உங்க குழப்பங்களைத் தெளிய வைப்பார் அந்த ஆசான்.

நான் : எல்லாம் சரிதான் ஏன் நாங்க அந்த பிரச்சனைகளுக்குள்ள எல்லாம் அகப்படாம இருக்க முடியாதா கடவுளே?

கடவுள் : பிரச்சினைகள்தான் உங்களுக்குப் பயன் தரும் பாடத்தைச் சொல்லித்தர வேணுங்கறதுக்காக உண்டாக்கப்பட்டத் தடைக் கற்கள்.அதனாலே உங்க மனவலிமை அதிகமாகும்.போராடவும் பொறுத்துக் கொள்ளவும் தெரிஞ்சா உங்க உள் மனசோட பலம் அதிகமாகும். பிரச்சினை இல்லாம இருந்தா இது நடக்காது. உங்களைப் பார்த்து உங்க பின்னாடி வளரும் இளம் சந்ததிகளும் பாடம் படிச்சுக்கும்.சரிதானே.

நான் : என்னவோ சொல்றீங்க.இவ்ளோ ஓடிட்டு இருக்கு உலகத்தில நான் எங்கே போறேன்னே தெரியாம ஓடிட்டு இருக்கேன்.பயமும் பைத்தியமும் பிடிச்சிருச்சுரும் போல இருக்கு எனக்கு.

கடவுள் : நீங்க வெளிப்படையாப் பாத்தீங்கன்னா எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் மனசை ஒரு நிலைப்படுத்தி நினைச்சுப்பாருங்க! எங்கே போறோம்ன்னு தெரியும்.வெளிப் பார்வைக்கு அது ஒரு கனவு போலத்தான் இருக்கும்! விழிப்பாயிருங்க! கண்ணாலே பார்க்கத்தான் முடியும். இதயத்தாலே மட்டும்தான் உள்ளுணர்வு என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்!!

நான் : சில சமயம் சீக்கிரமா முன்னேற முடியல நினைச்சது நடக்கலங்கிறது சரியான வழிலே போலேங்கறத விட அதிகமா வலிக்குதே! என்ன செய்யறது?மத்தவங்க செய்ற தப்புக்கெல்லாம் கோவம் வருதே...ஏன்?

கடவுள் : முன்னேற்றம்ங்கிறது மத்தவங்க உங்க செயலோட பலன்களை எடை போடறது! திருப்தியா இருக்குதா இல்லயான்னு பாக்கிறது.நீங்க தீர்மானிக்கற விஷயம் என்னன்னா... எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கறது இன்னும் போய்க்கிட்டே இருக்கோமேங்கிறது சந்தோஷம் தர விஷயம் இல்லையா?மத்தவங்க எப்பிடியும் உங்களைக் கணக்குப் போடட்டும்.நீங்க உங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க.திரும்பிப் பாத்தீங்கன்னா உங்களை நிறுத்திப் பேசிக்கிட்டே இருப்பாங்க.

ம்ம்ம்...மத்தவங்களை ஏன் நீங்க பாக்கிறீங்க.அதுவும் நீங்களே தேடிக்கிற ஒரு கஸ்டம்தான்.அதோட அதன் பலனை அவனே அனுபவிப்பான்.

நான் : அட என்னப்பா நீங்க! ரொம்பக் கஷ்டத்திலே இருக்கறப்போ எப்படி ஊக்கமா வேலை செய்ய முடியும்?எப்பிடி களைக்காம நடக்க முடியும்?அடுத்தவன் செய்ற அசிங்கங்கள் எங்களையும்தானே தாக்குது.எப்பிடி சும்மா இருக்கிறது.தப்புன்னாவது சொல்ல வேண்டாமா?

கடவுள் : எப்பவுமே எவ்வளவு தூரம் போயிருக்கோம் என்ன பண்ணியிருக்கோம்ன்னு பாக்காதீங்க. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னும் பாக்காதீங்க!உங்களுக்குக் கிடைச்ச பலனைப் பாருங்க!உங்க கைவிட்டுப் போனதைப் பாக்காதீங்க!

அடுத்தவன் விஷயம் நீங்க சொல்றது சரிதான்.நீங்க கொஞ்சம் நின்மதியா இருக்கணும்ன்னா கண்ணைக் கொஞ்சம் மூடித்தான் ஆகணும்.

நான் : கடவுளே உங்களுக்கு மனுஷங்களைப் பார்த்தா ஆச்சரியமா அதிசயமா இருக்கா என்ன?

கடவுள் : ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க சுகப்படற போது இது எப்பிடி எனக்குக் கிடைச்சதுன்னு " கேட்கறதேயில்ல.ஒரு நன்றி கூட இல்லையே.இது எனக்குப் புரியலே!எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!

நான் : அட சில சமயம் நான் கூடத்தான் “நான் யாரு?” “ஏன் பொறந்தேன்?” இப்படின்னு கேட்கறேன்! இது வரைக்கும் பதிலே கிடைக்கல.

கடவுள் : நீங்க யாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.ஆனா நீங்க யாரா இருக்கணும்னு தீர்மானிங்க.இங்கே ஏன் பொறந்தேன்னு கண்டுபிடிக்கறத விடுங்க! பொறந்ததுக்கான காரணத்தை ஆராய்ச்சி பண்றத நிறுத்துங்க!காரணத்தை நீங்களே உருவாக்குங்க.வாழ்க்கை காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறது இல்லே! புதுசா உருவாக்கறதுதான்! புரிஞ்சுக்கோங்க!

நான் : இவ்வளவெல்லாம் சொல்றீங்களே வாழ்க்கையைச் சிறப்பா வைச்சுக்கறது எப்படி?

கடவுள் : மறந்திடாம உங்களோட இறந்த காலத்தை வருத்தமில்லாம நினைச்சுப் பாருங்க.நிகழ்காலத்தைப் பொறுப்பா தன்னம்பிக்கையோட நடத்துங்க.எதிர்காலத்தை அச்சமில்லாம எதிர்கொள்ளுங்க¡ உங்க ஒவ்வொரு அடியும் சந்தோஷமா இருக்கும்.

நான் : கடைசியா ஒரு கேள்வி! சில சமயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லைன்னு நினைக்கிறேன்? சரிதானா?

கடவுள் : இங்கே [வாழ்க்கையில] பதில் அளிக்கப்படாத கேள்விகளே இல்லை! சில கேள்விகளுக்குப் பதிலே இல்லைங்கறதுதான் உண்மை!!

நான் : நிறைய நன்றி கடவுளே !நிறையப் பிரயோசனமா இருந்தது.நான் இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்! ஒருவிதமான புத்துணர்ச்சியோட என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்! ஆமா நான் இத்தனை நேரம் உங்ககிட்ட சரியாப் பேசினேனா! விளங்கிச்சா! நான் ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கே!

கடவுள் : இது தெரிஞ்ச விஷயம்தானே! தப்பு செய்யறதும் உடனே வருந்துறதும் மனுஷங்களுக்கு இயல்பான ஒண்ணுதானே!உங்களை எல்லாம் குழந்தைகள் அப்படின்னு சொன்னாதான் நான் கடவுளா இருப்பேன்.
குழந்தைகள் செய்யற தப்பெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கறது இல்ல!

“ உங்களில உங்க வாழ்க்கையில நம்பிக்கை வையுங்க! நல்லதே நடக்கும்!
அச்சத்தை விடுங்க! ஆக்கம் தானே வரும்!

உங்க சந்தேகத்தை எல்லாம் நம்பாதீங்க! உங்க நம்பிக்கை பேர்லே சந்தேகப்படாதீங்க!வாழ்க்கை ஒரு புதிர்தான்! விடுவிக்கலாம்! பிரச்சினையே இல்ல. தீர்ந்திடும்!

என் பேர்ல நம்பிக்கை வையுங்க!எப்பவும் நண்பனாய் கூடவே இருப்பேன்!!
எப்படி வாழணும்னு தெரிஞ்சா உங்க வாழ்க்கை ரொமப அற்புதமானது! தெரிஞ்சுக்கறதுக்கு முயலுங்க!

பெரிய சாதனை எல்லாம் வலிமையால சாதிக்கல! விடாமுயற்சியாலதான் சாதிச்சிருக்காங்க! நீங்களும் சாதியுங்க! சந்தோஷமா இருங்க! ”

இப்போதைக்கு அவ்வளவுதான்; மறுபடியும் கூப்பிடுங்க.அப்ப நான் வருவேன்.போய்ட்டு வரவா !

ஹேமா(சுவிஸ்) [வாசித்ததும் பகிர்ந்துகொண்டதும்.]

31 comments:

நையாண்டி நைனா said...

பதிவு பெருசா இருக்கே... இருந்தாலும் படிச்சிட்டேன்.

Anonymous said...

அருமையான பேட்டி கடவுளுடன். மன போராட்டங்கள் பதில்களாக வரிகிறது. பதிவு இல்ல... உணர்வுகள்.ம்...ம்... எல்லோருக்கும் கவலைகள் இருக்கும்... கவலை இல்லாத மனிதன் யாரும் இல்ல. புராணங்களை படித்தால் கடவுளில் கஷ்டமும் தெரியும்...


கடவுள் இருக்கிறரா? இல்லை? என்பது பிரச்சின இல்ல... இருக்காரு... அல்லது இல்லாமல் போகட்டும். அது ஒவ்வொருவருத்தரின் நம்பிக்கையை பொறுத்தது.


இழப்புகள் அதிகமாக இருக்கும் போது, கஷ்டங்களை மட்டும் அனுபவிக்கும் போது எல்லா மனிதனுக்கும் ஏற்படும் உணர்வு கடவுள் இருக்காரார?படைத்தது யார்? உருவாக்கியது யார்? இதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாக இருக்கட்டும். இன்றைய வாழ்க்கை மட்டும் நம் கையில்...

நாளை என்பது தெரியாத ஒன்று...இருக்கிறவரை நம்மையும் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி வாழ்வது பேரின்பம். இதில கடவுள் எங்கே? நமக்கு உதவுகிறவர்களை கடவுள் என்று எடுத்துக்கொள்ளலாம். யாருடைய நம்பிக்கையையும் யாரும் இழிவுபடுத்த கூடாது.நீங்களே உங்கள் பதிவில் அழகாக எழுதியிருக்கீங்களே... கேள்வி பதிலாய்...புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் நம்பிக்கையை விட உயர்ந்தது தன்னம்பிக்கை. அது தான் நாளை என்ற நாளுக்கு எடுத்து செல்ல முடியும். தற்காத்துக்கொள்ள உதவும.

Anonymous said...

அடக் கடவுளே.எனக்கு உங்க கூடப் பேச எதுவுமில்ல.அதோட பிடிக்கல.எனக்கு நேரமும் இல்ல.மனசு அமைதி வேணும்ன்னா நிறையப் பாட்டுக் கேப்பேன்.எனக்கு மனசில படுறதை எல்லாம் எழுதுவேன்.இல்லாட்டி கண்ணை மூடிக்கிட்டு பேசாம படுத்திருப்பேன்.இப்போ நான் நிறைய அலுவலா இருகேன்.நின்மதியாவும் இருக்கேன்.உங்க கூடப் பேசினாத்தான் குழம்பிடுவேன்.எனக்கு நீங்க வேணாம் போயிடுங்க.
//


நியாயமான உணர்வு. பலரின் கேள்விகளுக்கு நல்ல பதில்.

கடவுளை யாரும் பார்க்கவில்லை. அதனால் அவறை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்ல. கடவுள் இல்லை ... இல்லை என்று சொல்கிறவர்களும்..... உண்டு....உண்டு என்று சொல்கிறவர்களையும் விட்டு விட்டு நம்முடைய மனம் அதை ஏற்கிறதோ அதன் விருப்படி பணிகளை செய்தால் எந்த குழப்பமும் வராது இல்லீயா?

Anonymous said...

கடவுள் : வாழ்க்கையைச் சும்மா அப்படியே விளையாட்டா வாழ்ந்து பாருங்க.ரொம்ப யோசிக்காமா அதைப் பத்தியே நினைச்சு குழப்பமாகாம அலசி ஆராயம விட்டுப் பாருங்க.வாழ்க்கை சுலபமா இருக்கும்.எந்த விஷயத்தையும் பெரிசா ஆக்கவேணாம்.எந்தக் கேள்விக்கும் பதில இருக்கிற மாதிரி வாழ்க்கைக்கும் வழி இருக்கு.
//


கடவுளே நேரில் வந்தால் கூட இவ்வுளவு அருமையான விளக்கம் கொடுக்க முடியாது.

Anonymous said...

அட! என்ன கடவுளாரே மனசுக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கு.உலகம் இடிஞ்சு போகுதுன்னு சொல்றாங்க.இப்போ எல்லாம் ஏரோப்பிளேன் எல்லாம் கண்ட பாட்டுக்கு விழுந்து தொலையுது.எது எப்பிடின்னு எங்க என்ன நடக்குதுன்னு கவலையா இருக்குது.என்ன நீங்க ?
//

கோவிலில் நின்று கடவுளிடம் வேண்டுகிற சராசரி மனிதன் முதலில் தன் குடும்பத்துக்காக வேண்டுவான்... அப்புறம் சொந்தங்கள். நட்பு வட்டாரம் என்று விரியும்.... உங்கள மாதிரி உலக நடப்புகளை பற்றி விரிவாக கேட்பானான்னு எனக்கு தெரியாது. கடவுள் என்று மிகைப்படுத்தப்பட்டாலும் வேண்டுதல் என்பது குறுகிய வட்டத்தில் தான் இருக்கும்.

Anonymous said...

கடவுள் : ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க சுகப்படற போது இது எப்பிடி எனக்குக் கிடைச்சதுன்னு " கேட்கறதேயில்ல.ஒரு நன்றி கூட இல்லையே.இது எனக்குப் புரியலே!எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!
//


உண்மையான கூற்று. கஷ்டங்கள் தீர்ந்த பிறகு மனிதர்களின் நடவடிக்கை அப்படி தான் இருக்கும். என்ன செய்யலாம்...

Anonymous said...

ரொம்ப அருமையான பதிவு. ரொம்ப யோசித்து பக்தனாகவும். கடவுளாகவும் இருந்து கேள்விகளை எதிர் கொண்டு இருக்கீங்க... நல்லாயிருக்கு.

ஹேமா said...

நன்றி நைனா.நான் கூப்பிட்ட குரலுக்கு முதன் முதலா ரொம்ப நேரத்துக்கு அப்புறமான்னாலும் வந்திருக்கேன்னு சொன்னதுக்கு.
நன்றி.பாருங்க எவ்ளோ அக்கறையா அருமையா ஒரு பதிவு போட்டிருக்கேன்.யாரும் எட்டிப் பாக்க மாட்டேங்கிறாங்க நைனா....!

Anonymous said...

நிறைய கமாண்ட் போட்டுட்டேன் போல...

ஆரூரன் விசுவநாதன் said...

கடவுளே...கடவுளே ன்னு கூப்பிட்டுவுட்டு அந்தாள் வந்த பின்ன இப்படியா தாளிக்கிறது.

"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்-அவன்
ஹேமாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டும்"

ன்னு பாடத்தோனுது.

ஹி....ஹி....


//சரி நான் பக்கதில எல்லாம் வரல.//-

எவ்வளவு நம்பிக்கை கடவுள் மேல....?


மனித வாழ்வு பற்றிய தேடலும் அதன்பின் கிடைத்த தத்துவ விசாரங்களும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்க வேண்டும்.


எல்லாம் சரி, நீங்க(உங்க கடவுள்) சொன்ன மாதிரியெல்லாம் இருக்க முடியாதே. மீறி இருக்கனும்னா, எங்கியாவது குகைக்குள்ளயோ, காட்டுக்குள்ளயோ,போய்த்தான் இருக்கனும்.

வருத்தங்களும் வேதனைகளும் வலிகளும் இயல்பு, மறுக்கவும், மறைக்கவும் முடியாது.


வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

சினேகிதி said...

:)நல்லா இருக்குது உரையாடல். எனக்காகவே எழுதினதுபோல.

விமானவிபத்துகள் பற்றிய பயம் நிறைய இருக்கு.

ஹேமா said...

ஆனந்த்,ரொம்ப நன்றி.உங்க ஆன்மீக பற்று உங்களை நிறைவான பின்னூட்டத்தத்தைத் தந்திருக்கு.

ரொம்ப நாளா ஆசை.கடவுளைப் பிடிச்சு வச்சு இப்பிடியெல்லாம் கேக்கணும்னு.ஆனந்த்,எனக்கு கடவுள் கூடக் கோவமில்ல.நம்பிக்கைகள் எப்பவுமே சாஸ்வதம்.ஆனா கடவுள் பேர்ல செய்ற அநியாயமும்தான் கோவம் எனக்கு.கடவுளுக்கே லஞ்சம் குடுத்து வரம் கேக்கிறாங்க.அதனால உலகத்தில நடக்கிற நடப்பு மக்கள் சுயநலம் எல்லாமே வெறுப்பா இருக்கு.கடவுள் கூட பாருங்க எங்ககூட ஓடி வந்து இங்க அகதிப்பதிவு கேட்டுக்கிட்டு இருக்கார்.அங்க எங்க மக்கள் முள்வேலிக்குள்ள அடைபட்டுக் கிடக்கிறாங்க.யாருமே காப்பாத்த இல்லாம.

ஹேமா said...

//ஆரூரன் விசுவநாதன் ...
கடவுளே...கடவுளே ன்னு கூப்பிட்டுவுட்டு அந்தாள் வந்த பின்ன இப்படியா தாளிக்கிறது.

"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்-அவன்
ஹேமாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டும்"ன்னு பாடத்தோனுது.

ஹி....ஹி....//


அந்த ஆளை நான் கூப்பிட்டேனா.
நான் சும்மா கடவுளேன்னு புலம்ப அந்த ஆள் வந்திட்டார்.சரி...ரொம்ப நாளாக் கேக்க நினைசது எல்லம் கேட்டிட்டேன்.இன்னும் இருக்கு.
கேட்டா இந்த ஆனந்த் மாதிரி சாமி நம்பிக்கை உள்ளவங்க எல்லாரும் சேர்ந்து என்னைத் தாளிச்சிடுவாங்க.
அதான் பயம்.


//சரி நான் பக்கதில எல்லாம் வரல.//-

எவ்வளவு நம்பிக்கை கடவுள் மேல....?


மனித வாழ்வு பற்றிய தேடலும் அதன்பின் கிடைத்த தத்துவ விசாரங்களும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்க வேண்டும்.


எல்லாம் சரி, நீங்க(உங்க கடவுள்) சொன்ன மாதிரியெல்லாம் இருக்க முடியாதே. மீறி இருக்கனும்னா, எங்கியாவது குகைக்குள்ளயோ, காட்டுக்குள்ளயோ,போய்த்தான் இருக்கனும்.//

அட அந்த ஆள் அப்பிடியா சொல்லியிருக்கார்.இனி வந்தா சரியா கேட்டு பாக்கிறேன்.

//வருத்தங்களும் வேதனைகளும் வலிகளும் இயல்பு, மறுக்கவும், மறைக்கவும் முடியாது.//

அதுக்கு அவர் சரியாச் சொல்லியிருக்காரே!வருத்தஙகளும் துன்பங்களும் மனிதன் தன்னைப் பக்குவப்படுத்தத் தேவையான ஒண்ணுன்னு.


வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

அக்கறையான உங்கள் கருத்துக்கு நன்றி ஆரூரன்.

ஹேமா said...

//சினேகிதி ...
:)நல்லா இருக்குது உரையாடல். எனக்காகவே எழுதினதுபோல.

விமானவிபத்துகள் பற்றிய பயம் நிறைய இருக்கு.//

வாங்க சிநேகிதி.உங்க பதிவு பாத்த அப்புறம்தான் இந்த வேகம்.விமானம் நினைச்சாலே பயமாத்தான் இருக்கு.இதில எங்க உங்களுக்கு எழுதியிருக்கிறன்.

Anonymous said...

அந்த ஆளை நான் கூப்பிட்டேனா.
நான் சும்மா கடவுளேன்னு புலம்ப அந்த ஆள் வந்திட்டார்.சரி...ரொம்ப நாளாக் கேக்க நினைசது எல்லம் கேட்டிட்டேன்.இன்னும் இருக்கு.
கேட்டா இந்த ஆனந்த் மாதிரி சாமி நம்பிக்கை உள்ளவங்க எல்லாரும் சேர்ந்து என்னைத் தாளிச்சிடுவாங்க.
அதான் பயம்.
//

நீங்க கேளுங்க ஹேமா. நான் சண்டைக்கு வர மாட்டேன். என் கருத்தை சொன்னேன் அவ்வுளவு தான். எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கை செல்லும். இதில நான் என்ன சொல்ல... பொதுவாக எந்த பதிவுக்குமே நான் விரிவா சொல்ல மாட்டேன். இதில சொல்லன்னு தொனிச்சுது அவ்வுளதான்.


ஒருத்தர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்துவார்...இன்னொருவர் தன்னம்பிக்கையுடன் தெய்வ நம்பிக்கையும் சேர்ந்து வாழ்க்கை நகர்த்துவார். எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கம் உண்டு. நாணையம் மாதிரி. யார் எந்த பக்கம் இருந்தாலும் மனித மான்புடன் வாழ வேண்டும். அது தான் தேவை இப்போது.

கவிக்கிழவன் said...

நம்பிக்கை வைத்து கலையும் பார்த்தே தெய்வத்தின் கட்சியமா அது உண்மைக்கு சட்சியமா

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

தமிழ்ப்பறவை said...

//
"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்-அவன்
ஹேமாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டும்"
//
:-))
அந்தாளு பாவம்.. ஆஃபீஸ் அப்ரைசல்ல கேள்வி கேட்கிறது மாதிரி பின்னியாச்சு.
ஜோக்ஸ் அபார்ட்..
நல்ல சுவாரஸ்யத்தோட விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க...
கவிதைன்னு ஒதுங்கிடாம அப்பப்போ இப்படியும் பதிவிடவும்.
//ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க சுகப்படற போது இது எப்பிடி எனக்குக் கிடைச்சதுன்னு " கேட்கறதேயில்ல.ஒரு நன்றி கூட இல்லையே.//
கடவுள் கூட எதிர்பார்க்கிறாரே... அப்போ அவர் கடவுள் இல்லையா...??!!!

பிரியமுடன்...வசந்த் said...

ஹேமா

வசந்தோட தாக்கமா?

கடவுளையே கலாய்ச்சிட்டீங்களே!!

ஹேமா said...

//கடையம் ஆனந்த்...ஒருத்தர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்துவார்...இன்னொருவர் தன்னம்பிக்கையுடன் தெய்வ நம்பிக்கையும் சேர்ந்து வாழ்க்கை நகர்த்துவார். எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கம் உண்டு. நாணையம் மாதிரி. யார் எந்த பக்கம் இருந்தாலும் மனித மான்புடன் வாழ வேண்டும். அது தான் தேவை இப்போது.//

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும்,நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும்.தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்.என்வே எங்கள் மனச்சாட்சியும் நம்பிக்கைகளுமே கடவுள் என்றாகும்.அதன் வழிநடத்தல் நிச்சயம் எங்களுக்குத் தேவையே.

ஹேமா said...

//கவிக்கிழவன் ... நம்பிக்கை வைத்து கலையும் பார்த்தே தெய்வத்தின் கட்சியமா அது உண்மைக்கு சட்சியமா//

உண்மைதான் யாதவன்.எங்கள் மனம் எதை எப்படி நம்புகிறதோ அதன்படியே கண் காட்டும்.கடவுளும் அப்படியேதான்.

ஹேமா said...

//தமிழ்ப்பறவை...அந்தாளு பாவம்.. ஆஃபீஸ் அப்ரைசல்ல கேள்வி கேட்கிறது மாதிரி பின்னியாச்சு.
ஜோக்ஸ் அபார்ட்..நல்ல சுவாரஸ்யத்தோட விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க...
கவிதைன்னு ஒதுங்கிடாம அப்பப்போ இப்படியும் பதிவிடவும்.//

நன்றி அண்ணா.சில விஷயங்கள் மனதில் உழன்றாலும் எழுதிப் பகிர்ந்துகொள்ளப் பயம்.ஏனென்றால் அதன் விளக்கம் முழுதாய் இல்லை.
அப்புறம் என்னாகும் என் கதி !

ஹேமா said...

//பிரியமுடன்...வசந்த்...
ஹேமா வசந்தோட தாக்கமா?கடவுளையே கலாய்ச்சிட்டீங்களே!!//

இருக்கலாம் வசந்த்.உங்கள் பதிவுகள் தந்த தைரியம்தான்.நன்றி.

Muniappan Pakkangal said...

Nice interaction Hema.

ஜெஸ்வந்தி said...

ஹேமா, இப்போ தெளிவாய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.கடவுள் சொன்ன ''எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!''
இந்த வரிகள் மனதில் நிற்கிறது. வசந்த் ஏதாவது ஐடியா கொடுத்தானா? தேவதைக்குப் பின்னால் கடவுளே வந்திட்டார்.

சந்ரு said...

நல்ல சிந்தனைகள் வாழ்த்துக்கள்

வேல் கண்ணன் said...

//நல்ல சிந்தனைகள் வாழ்த்துக்கள்//
வழிமொழிகிறேன். உங்களின் தொடர் பதிவர்
அழைப்பிற்கு... நன்றி நிறைவேற்றி விட்டேன்
வேல் கண்ணன்

சுதர்ஷன் said...

நீங்கள் என்ன ஆத்திகனா? இல்லை நாத்திகனா? இல்லை இரண்டும் கெட்டானா

சுதர்ஷன் said...

நீங்கள் இப்பிடி பேட்டி எடுக்க போரியல் எண்டால் முதல்லையே சொல்லியிருக்கலாமே. விடைதெரியா பல வினாக்கள் என்னுள்ளே இருக்கின்றன. சொல்லியிருப்பனே. நீங்கள் அதையும் கேட்டிருக்கலாம்.

ஹேமா said...

என்ன சுதர்ஷன் இண்டைக்குத்தான் பாக்கிறீங்க போல.நான் சாமி கும்பிடுவேன்.ஆனால் லஞ்சம் குடுக்காமல்.அப்போ நான் யார் ?
சரி பரவாயில்ல.அடுத்த தரமும் கடவுளைக் கூப்பிட்டாப் போச்சு உங்களுக்காக.சரியா !

சரி அப்பிடியே குழந்தைநிலாவுக்கும் வரலாமே !

சுதர்ஷன் said...

இல்லை ஹேமா அக்கா, நான் நெடுக வாசிக்கிறனான். உங்கட 'கொலை ஒண்டு செய்ய போறன்" தான் முதல்ல பாத்தது. அதில இருந்து வாசிகிறனான். இண்டைக்கு தான் இதை வாசிச்சனான். குழந்தை நிலவையும் பாத்தால் போச்சு. உண்மையா நீங்கள் அடுத்த முறை கடவுளை கூப்பிட முன்னம் எனக்கு சொல்லுங்கோ. உங்களை யார் எண்டு என்னால கண்டுபிடிக்க முடியல. நீங்கள் யாரை சாமி எண்டு நெனைச்சு கும்பிடுறனியள் எண்டு சொன்னால் கண்டுபிடிப்பன். சந்திப்பம்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP