அட்டகாசம் பண்ணியது : அட்டகாசம் பண்ண்னினதே இல்லையாம்.அம்மா அடிக்கடி சொல்லுவா.
அன்புக்குரியவர்கள் : அநேகமாக என்னோடு பழகுபவர்கள் எல்லோருமே.
ஆள் மாறாட்டம் : சின்ன வயசில இரத்தினபுரி(டேனாக்கந்த)யில இருக்கேக்க ஒரு நத்தார் கொண்டாடத்தின்போது மாறுவேஷம் போட்டது.முருகனாய்.
ஆசைக்குரியவர் : அப்பா
இன்பமான செய்தி : நீ காதலிக்கலாம் தப்பே இல்லை.என்று வீட்டில சொன்னபோது.ஆனா...எண்டு பிறகு இழுத்துச் சொன்னதெல்லாம் இங்கே வேண்டாம்.
இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்
ஈயென பல்லிளித்து : ஏதாவது தேவைக்கு அப்பா அம்மாவிடம் மட்டும்தான்.இப்போ அதுவும் இல்லை.நானே எனக்கு எஜமானி.
ஈதலில் சிறந்தது : கல்வி கொடுப்பது.
உணர்வுகள் அழுதது : ம்ம்ம்....எத்தனையோ தடவைகள்.சொல்லி அளவில்லை.
முந்தைநாள் இங்கு என் ஊரில் பக்கத்து வீட்டு உறவொன்று மன அழுத்தம் தாங்காமல் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது.(31.08.2009)
உலகத்தில் பயப்படுவது : வதந்திக்கு.
ஊனமாய் நின்றது : அப்பா அம்மாவை விட்டு அகதியாய் வெளிநாடு வந்தபோது.போகமாட்டேன் என்று நினைத்தாலும் முடியாமல் வந்தது.
ஊமை கண்ட கனவு : சொல்ல முயற்சிப்பதே வாழ்வின் வெற்றி.
என்ன கற்பனை : கற்பனைகளை அழித்துவிட்டே அதன்மேலேயே வாழ்வு போய்க்கொண்டிருக்கு.
எப்போதும் உடனிருப்பது : எனக்குள் நான் மாறாமல்.
ஏழைகள் பற்றி : அவர்களைக்கூட இப்போ நம்பமுடியவில்லை.உண்மை இல்லை.சிலரிடம் சோம்பேறித்தனம் அதிகம்.முயற்சி இல்லை.முயற்சி இருந்தால் உதவி செய்வேன்.செய்தும் இருக்கிறேன்.
ஏன் இந்தப் பதிவு : அபூவின் அன்புக்கும் பெருமாளின் அன்புக்கும் கட்டுப்பட்டு.
ஐக்கியம் : பாசமும் அக்கறையும் அது நாடாக இருக்கலாம் வீடாக இருக்கலாம்.இறுக்கமாகவும் உண்மையாகவும் இருக்கவேணும்.
ஐஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை.
ஒதுங்கி நின்றது : எதிலுமே எப்பவுமே ஒதுங்கியே இருப்பேன்.பாசம் காட்டுபவர் மனதில் ஒதுங்க ஆசை.
ஒரு ரகசியம் : ஆசை தோசை...சொல்லவே மாட்டேன்.
ஓலையின் கீற்றுக்கள் : எங்கள் வறுமைக் காலத்தில் கூரையாய் இருந்து நிழல் தந்த தோழி.
ஓசையில் பிடித்தது : இரவில் வீணை இசை.
ஒளடதம் : அப்பா
ஔவை மொழி ஒன்று : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஃ : சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது.
எனக்கென்ன என்றாலும் கடிந்துகொள்வேன்.
(அ)ஃறிணையில் பிடித்தது : நன்றியுள்ள பாசமான மிருகங்கள் எல்லாமே.
தொடரைத் தொடர.....
அண்ணாதுரை - அழுத்தத்தின் அதிர்வுகள்.
சத்ரியன் - மனவிழி.
முனியப்பன் - முனியப்பன் பக்கங்கள்.
தமிழ்ப்பறவை - வானம் வசப்படும்.
கடையம் ஆனந்த் - மனம்.
ராஜாராம் - கருவேல நிழல்.
வேல்கண்ணன் - வேல் கண்ணன்.
ஜெரி ஈசானந்தா - ஒருமை
ஹேமா(சுவிஸ்)
29 comments:
Thodar pathivukku naanaa ? I.ll try Hema with tamil.
//ஐஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை.//
ஐஸ்வர்யாராய் ரொம்ப பொறுமைன்னு சொன்னதுக்கு நன்றி. அவங்க அழகுன்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.
//அட்டகாசம் பண்ண்னினதே இல்லையாம்.அம்மா அடிக்கடி சொல்லுவா.//
உங்க அம்மாவுக்கு பொய் சொல்ல தெரியாதுன்னு முன்பு சொல்லி இருக்கீங்க.. அப்பறம் எப்படி ???
//நத்தார் கொண்டாடத்தின்போது மாறுவேஷம் போட்டது.முருகனாய்//
நீங்கதான் அந்த நத்தார் முருகனா???
//ஒளடதம்// அப்டீனா ஔவையாரோட நண்பரா?
//சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது//
வேறு வார்த்தை சொல்லி கொல்வதை விட இப்படி சொல்லிக்கொள்வது தவறா?
அழைப்பிற்கு நன்றி ஹேமா, வருகிறேன். இ-மெயிலில் உடனே தொடர்பு கொள்ளவும்.உங்கள் முகவரி தெரியவில்லை.
புதுமை, அதன் பெயர் தான் ஹேமாவோ.
.
ஒரு ரகசியம் : ஆசை தோசை...சொல்லவே மாட்டேன்]]
அதான் சொல்லிட்டீங்களேஏஏஏஏஏ
//Muniappan Pakkangal said...
Thodar pathivukku naanaa ? I.ll try Hema with tamil.//
டாக்டர் ஒண்ணும் கஸ்டம் இல்ல.பதிவு சீக்கிரம் போடுங்க.
எல்லாப் பதில்களும் அருமை என்றாலும்,
எனக்குப் பிடித்த ஒரு பதில்
//ஒதுங்கி நின்றது : எதிலுமே எப்பவுமே ஒதுங்கியே இருப்பேன்.பாசம் காட்டுபவர் மனதில் ஒதுங்க ஆசை.//
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா...ஆனால் தற்போது தொடரவியலாத சூழல்.. ஆனால் கண்டிப்பாய்ப் பதிவிடுவேன்...
ரசனையான பதில்கள் ஹேமா.....
ஃபாலாவர் விட்ஜெட் ஆட் பண்ணுங்களேன் எப்போ போஸ்டிங் போடுறீங்கன்னு தெரிய மாட்டேன்னுது/
// - இரவீ -...
//ஐஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை.//
ஐஸ்வர்யாராய் ரொம்ப பொறுமைன்னு சொன்னதுக்கு நன்றி. அவங்க அழகுன்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.
இதுக்கு என்ன சொல்ல நான்.தப்பா வாசிக்கிறீங்க.கண்ணாடி வாங்கி(இரவலானாலும்)போட்டுப் பாருங்க.
//அட்டகாசம் பண்ண்னினதே இல்லையாம்.அம்மா அடிக்கடி சொல்லுவா.//
உங்க அம்மாவுக்கு பொய் சொல்ல தெரியாதுன்னு முன்பு சொல்லி இருக்கீங்க.. அப்பறம் எப்படி ???
//நத்தார் கொண்டாடத்தின்போது மாறுவேஷம் போட்டது.முருகனாய்//
நீங்கதான் அந்த நத்தார் முருகனா???
//ஒளடதம்// அப்டீனா ஔவையாரோட நண்பரா?
//சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது//
வேறு வார்த்தை சொல்லி கொல்வதை விட இப்படி சொல்லிக்கொள்வது தவறா?//
ரவி உங்களுக்கு ஞாபக சக்தி குறைவா...கூடவா !எப்பவும் ஏடாகூடமா இருக்கு உங்க கேள்விகள்.
பதில் தரப் பயமா இருக்கு.எல்லாமே கேள்விகளா இருக்கு.அப்பாடி...?
நன்றி ஜெரி,தொடருங்கள் தொடரை அழகாக.
******************************
நன்றி கும்மாச்சி.
ஏன் புதுமை = ஹேமா என்றீர்கள்?
****************************
ஜமால் உங்க வரவு இப்போ எல்லாம் குறைவா ஆறுதலா இருக்கு.ஏன் ?ஜமால் ரகசியம்னாலே ரகசியம்தானே !
**********************************
தமிழ்ப்பறவை அண்ணா உங்க வசதி பாத்துப் பதிவு போடுங்க.வருகைக்கு நன்றி அண்ணா.
*********************************
நன்றி வசந்த்,நான் ஃபாலாவர் விட்ஜெட் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
எனக்கும் விருப்பம்தான்.ஆனா கொஞ்ச நாளுக்குமுன் டெம்லேட் பிரச்சனை தந்திச்சு அது.அதை நிறுத்தின அப்புறம் சரியா போச்சு.யோசிச்சு செய்றேன்.
எல்லாம் சிறப்பு
எனக்கு பிடித்தமும் என்னை பற்றி
மாதிரியாகவும் இருந்தது.
//எப்போதும் உடனிருப்பது : எனக்குள் நான் மாறாமல்//
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா
//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//
வித்தியாசமான சிந்தனைகள்... வாழ்த்துகள் ஹேமா
ஊனமாய் நின்றது : அப்பா அம்மாவை விட்டு அகதியாய் வெளிநாடு வந்தபோது.போகமாட்டேன் என்று நினைத்தாலும் முடியாமல் வந்தது.////
கனமானவரிகள்.
உங்க ஆசை தோசைங்கிறது ஒரு ...ரகசியமா??????????
அழகான பதில்கள். உங்கள் மனதை படம் பிடித்து காட்டுகிறது. உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட இயல்பான வார்த்தைகள்.
தொடர்பதிவுக்கு வர வர என்னை இழுத்து போட்டுகிறீங்க... அட போங்க... கொஞ்ச நாள் கழித்து எழுதலாம்.
ஆனாலும் உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு....ஹி....ஹி...ஹி..
ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமதான் வேலை பளுடா அண்ணனுக்கு.அதான் தாமதமாயிருச்சு இங்கு வர.சித்தப்பாவையும் என்னையும் இதில் சேர அழைத்ததுக்கு நன்றியும் அன்பும் கண்ணம்மா.கலக்கிருவோம் விடு!என்ன கொஞ்சம் தாமதமாகும் பொறுத்துக்கோ.ஹேமாவின் முகம்தான் தெரியலை(ஆத்மாவுக்கு முகம் அவசியமா என்ன?..)மற்றபடி ஹேமாவை இதில் வாசிக்க இயலும்.நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் ஹேமா!
//ஃ : சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது...//
ஹேமா,
சிலர் சொல்வதிருக்கட்டும். நீங்க?
நானும் கூட இவ்வளவு நாளா ஏதோ மரியாதைக்குதான் அப்படி சொல்றாங்கன்னு நெனைச்சிருந்தேன். உண்மையப் போட்டு உடைச்சிட்டீங்க.
தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா. (ஆனா ஒரு சிலர்தான் என்ன 'உர்ர்ர்ர்ர்ர்ருன்னு' பாக்கிறாங்க.)ஏற்கனவே நண்பர் ஜமால் அழைத்திருந்தார். பிறகு எழுதறேன்னேன்.இப்ப நீங்களும்...!
இந்தா வந்துட்டேன்.
அன்பு மகளே,
உன் அழைப்பை..தாமதப்படுத்த நேரம்
விரும்பினாலும்...மனது...மறுக்கிறது.உன் வார்த்தையிலே
ஆரம்பிக்கிறேன்:
அடம் பிடித்தது--- அம்மா சொன்னார்கள்
அடம் பிடித்தேனாம்!
ம்மாவை..விட்டு
ருவதற்கு
எனக்கு பிறப்பாம்
அம்மாவுக்கு
மறு பிறப்பாம்!
சுற்றி இருப்பவர்களும்
மனதும் சொல்வது:
அறுபது வயதிலும்
அடம் பிடிக்கிரேனாம்!
அனுதினமும் பிரியாத
அண்ணனைப்
பிரிந்ததற்கும் ...மறப்பதற்கும்!
மீதியையும் விரைவில் முடித்து விடுவேன்.
வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் அனைத்தும் அருமை.
நல்லாயிருக்கு!
அன்புக்கு கட்டுப்பட்டமைக்கு நன்றி. உங்கள் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.கதம்ப சாம்பார் சாப்பிட்ட உணர்வு.பாசம்,கண்ணீர் என எல்லாம் இருந்தது.
'அட்டகாசம் பண்ணாத' சமத்துப் பொண்ணா?
மாறாமல் இருப்பது மகிழ்ச்சி...
கலக்கலாக இருக்கு சில வலியையும் உணர முடிகிறது.
அக்கா.. உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.
//ஆ.ஞானசேகரன்...
//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//
வித்தியாசமான சிந்தனைகள்... வாழ்த்துகள் ஹேமா//
வாங்க ஞானம்.உண்மைதானே சொன்னேன் எங்களைப் பொறுத்தமட்டில்.
*******************************
//கருணாகரசு...கனமானவரிகள்.
உங்க ஆசை தோசைங்கிறது ஒரு ...ரகசியமா????//
அதுவும் ரகசியம்.சொல்லக்கூடாது.
********************************
//கடையம் ஆனந்த்...
தொடர்பதிவுக்கு வர வர என்னை இழுத்து போட்டுகிறீங்க... அட போங்க... கொஞ்ச நாள் கழித்து எழுதலாம்.//
அட... என்ன ஆனந்த் சீக்கிரம் போடுங்க.பெரிய கேள்விகள்ன்னு ஒண்ணும் இல்ல.
//பா.ராஜாராம் ...
ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமதான் வேலை பளுடா அண்ணனுக்கு.அதான் தாமதமாயிருச்சு இங்கு வர.சித்தப்பாவையும் என்னையும் இதில் சேர அழைத்ததுக்கு நன்றியும் அன்பும் கண்ணம்மா.கலக்கிருவோம் விடு!என்ன கொஞ்சம் தாமதமாகும் பொறுத்துக்கோ.ஹேமாவின் முகம்தான் தெரியலை(ஆத்மாவுக்கு முகம் அவசியமா என்ன?..)மற்றபடி ஹேமாவை இதில் வாசிக்க இயலும்.நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் ஹேமா!//
அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி.சித்தப்பாவும் என்னைத் தன் மகள் என்றே சொல்லிவிட்டார்.சந்தோஷம்.ஓ...ரமழான் நேரங்களில் வேலை கூடவாய் இருக்குமா?சரி வசதி பார்த்துப் போடுங்க பதிவை.
என் முகம் என் எழுத்துக்களில் அண்ணா.அங்கு ஒளிவு மறைவு எதுவுமே இல்லை.அப்படியே என் மனம்தான்.
*********************************
//சத்ரியன்... (ஆனா ஒரு சிலர்தான் என்ன 'உர்ர்ர்ர்ர்ர்ருன்னு' பாக்கிறாங்க.)//
ஏன் சத்ரியன்.நீங்க போட்டோல நல்லாத்தானே இருக்கிங்க!
//அண்ணாதுரை சிவசாமி ...
அன்பு மகளே,
உன் அழைப்பை..தாமதப்படுத்த நேரம்
விரும்பினாலும்...மனது...மறுக்கிறது.உன் வார்த்தையிலே
ஆரம்பிக்கிறேன்:
அடம் பிடித்தது--- அம்மா சொன்னார்கள்
அடம் பிடித்தேனாம்!
ம்மாவை..விட்டு
ருவதற்கு
எனக்கு பிறப்பாம்
அம்மாவுக்கு
மறு பிறப்பாம்!
சுற்றி இருப்பவர்களும்
மனதும் சொல்வது:
அறுபது வயதிலும்
அடம் பிடிக்கிரேனாம்!
அனுதினமும் பிரியாத
அண்ணனைப்
பிரிந்ததற்கும் ...மறப்பதற்கும்!
மீதியையும் விரைவில் முடித்து விடுவேன்.//
சித்தப்பா கவிதை வரிகள் மனசைப் பிழிஞ்செடுக்கிற மாதிரி உங்க அம்மா அண்ணா நினைவோட.வாழ்வின் ரகசியம் தெரிஞ்சு அனுபவப்பட்ட நீங்களே கலங்கினா எங்களுக்கு யார் ஆறுதல்?
சீக்கிரமா பதிவு போடுங்க.பாத்திட்டு இருக்கோம்.
//துபாய் ராஜா...
வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் அனைத்தும் அருமை.//
நன்றி ராஜா.ஒண்ணும் வித்தியாசம்ன்னு இல்ல.சாதாரணமாத்தான்.
********************************
//வால்பையன் ... நல்லாயிருக்கு,//
ஏன் எனக்கு மட்டும் வார்த்தைகளில் இவ்வளவு கஞ்சத்தனம்?
***********************************
//அரங்கப்பெருமாள்...
அன்புக்கு கட்டுப்பட்டமைக்கு நன்றி.உங்கள் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.கதம்ப சாம்பார் சாப்பிட்ட உணர்வு.பாசம்,கண்ணீர் என எல்லாம் இருந்தது.
'அட்டகாசம் பண்ணாத' சமத்துப் பொண்ணா?
மாறாமல் இருப்பது மகிழ்ச்சி...
கலக்கலாக இருக்கு சில வலியையும் உணர முடிகிறது.//
நான் எப்பவுமே இப்பிடித்தான்.
மாறமுயற்சிப்பது இல்லை.மாறவும் மாட்டேன்.நன்றி என் மனசைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்தமைக்கு.
*********************************
நைனா நான் தான் பதிவு போட்டாச்சே.ஏன் என் பதிவுகளுக்கு குழந்தைநிலாவுக்கும் கூட ரொம்ப நாளாக் காணோம்?
அக்கா... நான் ஆங்கில வார்த்தைகளுக்கு எதிர் பார்கிறேன். (தவறெனில், பிழைபொறுத்து அருள்க)
//நையாண்டி நைனா...
அக்கா... நான் ஆங்கில வார்த்தைகளுக்கு எதிர் பார்கிறேன். (தவறெனில், பிழைபொறுத்து அருள்க)//
நைனா,ஓ....அப்பிடியா சரி.இதில் என்ன குறை-பிழையிருக்கு.
இன்னொரு தடவை போடணுமா?ன்னு இருக்கு அவ்ளோதான்.நான் ஆங்கிலத்தைத் தவிர்த்தேன்.தமிழோடு கலக்க வேணம் எனபதற்காக.
http://thamizhparavai.blogspot.com/2009/12/blog-post_03.html
தொடர் பதிவிட்டு விட்டேன்... தாமதத்தைப் பொறுத்தருளவும்...
Post a Comment