Monday, September 21, 2009

ஆனந்தத் தோழமை.

ஏனோ இந்த வாரம் எனக்கு நட்பின் வாரமாக மனதில் ஒரு சங்கடம்.நட்பின் நினைவுகளும் நட்பின் வலிகளும் அடிக்கடி.அதனால் எல்லோரும் நட்பு பற்றிச் சொல்லியிருந்தாலும் என் மனதின் பதிவாக இந்தப் பதிவு.

நட்பு - தோழமை காதலை விடக் கொடியது.தோள் சாய்ந்து சுகம் கேட்டு எப்பவும் எதையோ தேடியபடிதான்.மித மிஞ்சிய எதிர்ப்பார்புக்களுடனும்.ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ளும்வரை தேடல் இருந்து கொண்டேயிருக்கும்.ஏற்றத் தாழ்வுகள்,சாதி,மதம், பணம்,தூரம்,தொலைவு எதுவுமே உண்மையான நட்பை எதுவும் செய்துவிடலாகாது. நட்பை இலக்கியங்களில்கூட பேசியிருக்கின்றன.என் நலனுக்காகவோ தன் நலனுக்காவோ ஒதுங்குவதும் நட்பாயில்லை.சுயநலத்திற்க்காக மட்டுமே உறவாடிப் பின் பிரிந்து நிற்பதும் நட்பல்ல.சூழ்நிலை தாண்டி சுடுசொற்கள் ஏந்தி அகலுக்குள் அடங்கிய தீபமாய் ஒளிர்வதே நட்பு.முதலில் நட்பின் மனதைப் படித்து உணர்ந்து உலகிற்கு நட்புப் பூக்களைத் தூவலாம்.

உயிருக்குச் சமனாக
என்னிடம் ஒன்று இருக்கிறது.
யாருக்கும் கொடுக்கச் சம்மதமில்லை.
பணத்திற்கும் விற்கமாட்டேன்.
உயிருக்கு உயிர் தருவேன்.

வாங்கிச் சிரித்தது ஒரு நட்பு.
என்னைப் புரியாமலே
உயிர் பிரித்துப் போனது.
வா ....
உன்னிடம் நான்
எதுவும் பேசப்போவது இல்லை.
இன்னும் காத்திருக்கிறேன்.
நட்பின் பூவோடு !!!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

பிரியமுடன்...வசந்த் said...

ஹேண்ட் சேக் ப்ளீஸ்...

ஜெரி ஈசானந்தா. said...

ஆனந்த சங்கமம்.

- இரவீ - said...

ஹேமா - வலியோடு வரிகள்...

//சங்கடம்// த்துக்கு பதில் 'சந்தோசம்'
//கொடியது// க்கு பதில் 'இனியது'
போட்டு பாருங்க ரொம்ப அருமையா இருக்கு...

//வாங்கிச் சிரித்தது ஒரு நட்பு.
என்னைப் புரியாமலே
உயிர் பிரித்துப் போனது.//

உண்மையான நட்புக்கு இறப்பு கூட உண்டா என்ன???

சினேகிதி said...

nalla iruku Hema

யோ வாய்ஸ் (யோகா) said...

அருமையாக இருக்கிறது நட்புக்கவிதை

இறக்குவானை நிர்ஷன் said...

உணர்வுகளோடு பேசுகிறது உங்கள் கவிதை!

ஜெகநாதன் said...

நட்பு பற்றி நல்லா புட்டு புட்டு வச்சிருக்கீங்க! உண்மையில் சில சமயம் நட்பின் துயரம் ​கொடியது - எதையும் விட!

யூ நோ? நான் நண்பர்களைத் ​தேடியடைவதில்லை. நண்பன் தானாக வருவான்.. எளிமையாக உங்கள் பக்கத்து இருக்கையில் ​மென்மையாக வந்தமர்ந்த பள்ளி நண்பன் போல!

//உயிருக்கு உயிர் தருவேன்//
ப்ப்ப்புரியலியே!!??

ஹேமா said...

நன்றி வசந்த் நட்போடு.

********************************

நன்றி தோழரே ஜெரி.

**********************************

//-இரவீ - ...
ஹேமா - வலியோடு வரிகள்...

//சங்கடம்// த்துக்கு பதில் 'சந்தோசம்'
//கொடியது// க்கு பதில் 'இனியது'
போட்டு பாருங்க ரொம்ப அருமையா இருக்கு...

ரவி நீங்க சொன்னபடி மாத்தினால் சந்தோஷமாக இருக்குமே தவிர என் மனதின் வலி போயிடுமா ?

//வாங்கிச் சிரித்தது ஒரு நட்பு.
என்னைப் புரியாமலே
உயிர் பிரித்துப் போனது.//

உண்மையான நட்புக்கு இறப்பு கூட உண்டா என்ன???//

நட்பை மறந்து தூரமாய்ப் போனாலும் அது மனதிற்குள் இறப்பதில்லை.
மறக்க என்பதும் தப்பு.ஏதோ இன்னும் சரியாகப் புரியாமையே காரணமாகவும் இருக்கலாம்.

ஹேமா said...

நன்றி தோழி சிநேகிதி.

**********************************

யோகா நீங்கள் எங்கள் ஊரவரா ?சந்தோஷம் நட்போடு இணைந்துகொண்டமைக்கு.
குழந்தைநிலாவுக்கும் வாங்கோ.

**********************************

வாங்கோ...வாங்கோ நிர்ஷன்.என்ன கனகாலமா உங்களை நான் தேடிக்கொண்டு இருக்கிறன்.
சுகம்தானே?நட்பை மறக்கவில்லை என்பதுக்கு நீங்களே சாட்சி.அடிக்கடி வரலாமே !

*********************************

//ஜெகநாதன் ...
நட்பு பற்றி நல்லா புட்டு புட்டு வச்சிருக்கீங்க! உண்மையில் சில சமயம் நட்பின் துயரம் ​கொடியது - எதையும் விட!

ஓ...எதையும் விட என்று சொல்றீங்களா ?உண்மையும்தான்.

யூ நோ? நான் நண்பர்களைத் ​தேடியடைவதில்லை. நண்பன் தானாக வருவான்.. எளிமையாக உங்கள் பக்கத்து இருக்கையில் ​மென்மையாக வந்தமர்ந்த பள்ளி நண்பன் போல!

//உயிருக்கு உயிர் தருவேன்//
ப்ப்ப்புரியலியே!!??//

ஏன் புரியல.நட்புக்காக உயிரையும் கொடுக்கலாமே !

தமிழ்ப்பறவை said...

நல்ல பதிவு...
நட்புக்கவிதை அருமை...

இறக்குவானை நிர்ஷன் said...

எப்படி மறக்க முடியும் ஹேமா?

சில பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மீண்டு(ம்) வந்திருக்கிறேன்.

இனி கலாய்க்கலாம்.

சுதர்ஷன் said...

நல்ல இருக்கு. மூழ்காத ஷிப்பே friend ஷிப் தான் எண்டொரு பாடல் வரி இருக்கு. நட்பை பத்திப் பேசினால் பேசிக்க கொண்டே போகலம். வரையறை செய்ய முடியாத ஒரு காரணியாகவே நட்பை பார்க்கின்றேன். உங்கள் வலியின் ஆழத்தை உணரமுடிகிறது

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP