Wednesday, October 21, 2009

மிருகங்களுக்கும் சர்க்கரை நோய்.

மிருகங்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.நாய்களுக்கு வரும் சர்க்கரை வியாதி மனிதார்களிடமிருந்து வேறுபட்டது.மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும்.மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தால் இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் இந்த நோய் தோன்றுகிறது.இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம்.தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும்.சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம்.ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை சரியான நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம்.சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேக்ண்டும்.விசேட உணவு வழங்க வேண்டும்.

நாய் பூனைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தைக் கேட்டறிவது நல்லது.நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்துப் பராமரிக்க வேண்டும். 'பிஸி 'யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.

இன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும்.உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரத்தை அடைவர்கள் என்பது உண்மை.

தெரிந்த பெண் ஒருவர் இந்த நோயினால் பீடிக்கப்பட்ட நாயொன்றைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார்.இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும்.அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும்.நோய் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு.இது சோகம்தான்.ஆனால் தவிர்க்க முடியாதது.

நீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் இந்த நோய் நாய் பூனைகளை மட்டும் அல்ல மனிதர்களைப் படுத்தும் பாடு.

ஒரு சுவாரஸ்யமான கதையும் ஒன்று இதனோடு.

ஒரு அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார்.நாற்பது வயதில் வந்த இந்தநோய் - சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது.அவரது மகன் இன்சுலின் ஏற்றும் பழக்கத்தைத் தொடக்கிவிட்டிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள் அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் - அம்மாவைப் பிரியாதிருந்தது இந்த நோய்.அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது.கணவரது குத்தல் நக்கல் மொழிகளையும் அவர் பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

அவர் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது.

வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவார்கள்.ஆயுர்வேதம் சித்தவைத்தியம் யுனானி எனக் கூறிக்கொண்டு இலை குழை தண்டு வேர் பூ - என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுக் கொள்வார்.அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கேயில்லை.

உலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் பிறசமயத் தெய்வங்கள் என மத நல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்.நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு தெய்வதரிசனத்துக்குச் சென்றதால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர நீரிழிவு வற்றவில்லை.

பூசாரிகள் மந்திரவாதிகள் சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள்.கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகார் ஒருவர் வந்து அம்மாவிடம் 'உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகச் சொல்லி உறவுக்குள் பகை நெருப்பை மூட்டிச் சென்றார்.இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.

முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது சைவமுறைப்படி பக்டாரியாவுக்குள் இன்சுலின் ஜீனைச் செலுத்தி பிராமணர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறதாம்.

[ஒரு அனுபவஸ்தர் சொல்ல நான் கேட்டுக்கொண்டது.]
ஹேமா(சுவிஸ்)

14 comments:

துளசி கோபால் said...

அதென்ன ஹேமா.....

மிருகங்களுக்கும்????? நமக்கு இருக்கும் எல்லாமும் அவுங்களுக்கு உண்டு ஹார்ட் அட்டாக் உள்பட.

எங்க கோபாலகிருஷ்ணன்(கோகி என்ற ஜிகே) டயபீடிக்தான்(-:

நம்ம பூனை ஒன்னு (சிவா) ஹெச் ஐ வி பாஸிடிவ் இருந்து போயிருச்சு(-:

எங்க கப்பு லிவர் என்லார்ஜ் ஆகி இறந்துட்டான்(-:

என்னத்தைச் சொல்றது போங்க(-:

ஹேமா said...

வணக்கம் துளசி கோபால்.எனக்கு புதுசா இருந்திச்சு....!அதான்.

உண்மைதான் எங்க வீட்ல "தம்பி"ன்னு ஒரு நாய் தன் குழந்தைப்பருவம் முதல் வயதாகும்வரை வாழ்ந்து இறந்தபோது என் அப்பா அழுத அழுகைக்கு அளவேயில்லை.

நன்றி உங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும்.

S.A. நவாஸுதீன் said...

இதுபற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இன்று உருதிப்படுத்திவிட்டீர்கள் ஹேமா.

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது தந்தைக்கும் ஒரு முறை இரத்தத்தில் சக்கரை கூடியிருந்தது. பின்னர் பாகற்காய் குடித்து இப்போ ஒரு 4 வருடமாக இந்த பிரச்சினை இல்லை..

ஹேமா said...

உண்மை நவாஸ் எனக்கும் அதிசயமா இருந்திச்சு.ஆனால் இங்கே பாத்திருக்கேன் கர்ப்பத்தடை செய்திருப்பார்கள் வீட்டில் வளர்க்கும் பூனை நாய்களுக்கு !

ஹேமா said...

யோகன்,எங்கள் அப்பாவுக்கும் நீரிழிவு நோய் இருக்கு.ஆனால் மருந்தோடு அளவுக்கதிகமாய் புகை பிடிப்பார்.
சொல்லி அலுத்துப்போய் விட்டிட்டு இருக்கிறோம் இப்போ.

வால்பையன் said...

விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்பிடுவதில்லையே பின்ன எப்படி சுகர்!?

ஹேமா said...

//வால்பையன் ...
விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்பிடுவதில்லையே பின்ன எப்படி சுகர்!?//

உண்மைதான் வாலு.எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்குன்னாலும் அவர்களின் உணவில் இருக்கலாமே !ஏன் சோறு சாப்பிட்டா அதிலும் இருக்கும்தானே !

துளசி கோபால் said...

ஸ்வீட் சாப்பிடுவதால் சக்கரை நோய் வராது. உடம்பில் இன்ஸுலின் சுரப்பதில் குறைபாடு இருந்தால்தான் சக்கரை நோய் வரும்.

இப்படித்தான் எனக்கு விவரம். தவறாக இருந்தால் யாராவது சொல்லுங்கள்.

Muruganandan M.K. said...

நாய் பூனைகளின் நீரிழிவு பற்றிய தகவல்களுக்கு நன்றி.

சுவார்ஸமான கதையை ரசித்தேன்.

venkat said...

சர்க்கரை கசக்கிறது.

ஸ்ரீராம். said...

தமிழகத்திலும் நீரிழிவு என்ற சொல் பயன்பாடு உண்டு. பொது சொல்தான் அது.
நீரிழிவு வர இன்சுலின் சுரப்பிக் குறைபாடு காரணம். அப்பா அம்மா இருவருக்கும் இருந்தால் குழந்தைகளுக்கு தொண்ணூறு சதவிகிதம் வர வாய்ப்புண்டு. யாராவது ஒருவருக்கு மட்டும் இருந்தால் ஐம்பது சதவிகித வாய்ப்பு.மாத்திரைகள், இன்சுலின் ஊசி தவிர இப்போது இன்சுலின் இன்ஹேலர் போல வந்து விட்டது. திடீரென சர்க்கரை அளவு ஒரேயடியாகக் குறைந்து மயக்கம் வரும்போது சட்'டென வாயில் போட்டுக் கொள்ள ஒரு சாக்லேட் பையில் எப்போதும் வைத்திருப்பது நலம். நார் சத்து மிகுந்த உணவு மிக நல்லது. பாகற்காய், நாவற்பழக் கொட்டை போன்றவை நல்லது. சர்க்கரை வியாதி வந்தவர்கள் கண், கிட்னி, போன்றவற்றை ஆறு மாதத்திற்கொருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். காலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லேசில் ஆறாது. மன்னிக்கவும், உங்களுக்குத் தெரியாததல்ல...நானும் சொல்லிட்டேன்...

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு தோழி..

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு ஹேமா.... நன்றியும் கூட

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP