Thursday, November 05, 2009

ஆரம்பிக்கப்படாத வாழ்வு.

சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான்.அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள்.துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள்.வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.

குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள்.அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது.முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது.தேநீர் குடிக்க மனம் உந்தியது.ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.

மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை.இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான்.எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது.பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன.பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது.தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.

தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.

கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.

கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம்.சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது.அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.

ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை.குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம்.ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.

ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது.யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.

இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள்.அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும்.
உடல் அது உடல் அல்ல.வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய்.கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல.சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.

இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள்.இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.

இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.

கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள்.
அவஸ்தையான வாழ்வு,தனிமை,சிறுவர்களின் பசிக் குரல்கள்,பிடிக்காத செய்திகள்.தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள்.சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம்,மண்திண்ணை,ஒற்றைப்பனை.மயங்கிவிட்டாள்.மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள்.எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!

உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழ்ந்தன.

ஏன் என்ன நடந்தது ? !!!

பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு.நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே.அவளை இப்போதைக்குக் காணாவில்லை நான்.என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம்.படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.

அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது.ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது.அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது.தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.

அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும்.இப்போ நாற்றம் இல்லை.அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது.குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள்.வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம்.நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது.அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யூத்புல் விகடனில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேமா(சுவிஸ்)

23 comments:

ஸ்ரீராம். said...

முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில சங்கடங்கள். நீங்கள் எழுதியதும் நான் புரிந்து கொண்டதும் ஒன்றுதானா என்று...ஆனாலும் ...ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புரிந்து கொண்டு அதுதான் என்றால் இந்த மனப் பான்மையை எதிர்க்கிறேன். தோற்று விட்டோம் என்ற எண்ணமோ, இதற்கு வேறு வழி இல்லை என்ற எதிர்மறை சிந்தனையோ வரக் கூடாது என்று புரிய வைக்க இடப் பட்ட பதிவுதானே இது?

மணிஜி said...

ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்கு பொருத்தமாக கவிதையும் எழுதுங்கள்

S.A. நவாஸுதீன் said...

ஆஃபிஸ் நேரம் முடிந்துவிட்டபடியால் சனிக்கிழமை வந்து படிக்கிறேன்

கவி அழகன் said...

நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்

வால்பையன் said...

//புளுக்களும்//

புழுக்களும்!

தப்பா நினைச்சுகாதிங்க, வந்தேன்னு தெரியனுமுல்ல!

வால்பையன் said...

இன்னோரு இடத்திலும் வருது!

நல்ல வர்ணனை!

வேந்தன் said...

நல்லாயிருக்கு..:)
தொடர்ந்து எழுதுங்கோ...

துபாய் ராஜா said...

வித்தியாசமான பார்வையில்
எழுந்த எண்ணங்களில்
விளைந்த எழுத்துக்களில்
தனிமைக் கொடுமையின்
வேதனை வலியில்
அனலிட்ட புழுபோல்
துடித்த ஆன்மாவின்
ஆசைகளை படிப்பவர்
இதயம் வலிக்கத்
வடித்து தந்துள்ளீர்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான புனைவு.....எழுத்தில் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது.

வாழ்த்துக்கள் ஹேமா

நசரேயன் said...

//ஏன் எல்லாம் அன் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை//

ம்ம்.. இடைவிடாம இடுகை எழுதினா அந்த சத்தாம் எல்லாம் எப்படி கேட்கும்

ஹேமா said...

//ஸ்ரீராம்....
முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில சங்கடங்கள். நீங்கள் எழுதியதும் நான் புரிந்து கொண்டதும் ஒன்றுதானா என்று...ஆனாலும் ...ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புரிந்து கொண்டு அதுதான் என்றால் இந்த மனப் பான்மையை எதிர்க்கிறேன்.தோற்று விட்டோம் என்ற எண்ணமோ, இதற்கு வேறு வழி இல்லை என்ற எதிர்மறை சிந்தனையோ வரக் கூடாது என்று புரிய வைக்க இடப் பட்ட பதிவுதானே இது?//

நன்றி ஸ்ரீராம்.ஒரு சங்கடமும் இல்லை.மனதில் பட்டதைச் சொல்லுங்கள்.எனக்கு அது பிடிக்கும்.நல்லது.உண்மையில் தனிமையும் தாய்நாட்டின் வேதனையும் பொறுக்கமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில்தான் எழுதினேன்.
அதற்கு நீங்கள் சொல்லும் கோணமும் சரி.தப்புத்தான்.
தோல்விகளையும் வேதனைகளையும் எதிர்க்கும் மனநிலை வேணும்.

2- 3 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.
ஒரு தொடர் சிறுகதை பதிவில் உள்ளது.இன்னும் 2 பதிவில் இல்லாமல் வைத்திருக்கிறேன்.
அவைகளை விட அழகாக ஒரு சிறுகதை என்கிறமாதிரி இக்கதை எழுத முயற்சித்தேன்.எனக்குப் பிடித்திருக்கிறது.நீங்கள் கதையின் கருவைக் கண்டு பிடித்து விமர்சித்திருக்கிறீர்கள்.நன்றி.கதை எழுதின முறை எப்படி என்று இன்னும் சொல்லியிருக்கலாம் நீங்கள்.

ஹேமா said...

//தண்டோரா ...
ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்கு பொருத்தமாக கவிதையும் எழுதுங்கள்.//

நன்றி தண்டோரா.இந்தப் படங்களுக்குக் கவிதையா !எப்பவுமே எல்லாரும் என்னைத் திட்டித் தீர்க்கிறாங்க சோகமாக் கவிதை எழுதறேனாம்.இன்னும் உதை வாங்க கம்பு எடுத்துத் தாறீங்க.

:::::::::::::::::::::::::::::::::

நன்றி யாதவன்.எப்பிடி இருக்கிறீங்க.சுகம்தானே !

ஹேமா said...

வாலு வந்திருக்கீங்க.சரி சரி.இந்தப் "புழு" எப்பவுமே தப்புத் தப்பாத்தான் வருது.முந்தி ஒரு கவிதையிலயும் சொல்லித் திருத்தினதா ஞாபகம்.கதை பிடிச்சிருக்குத்தானே !

::::::::::::::::::::::::::::::::::

நன்றி வேந்தன் உங்கள் வருகைக்கும் ஊக்கக் கருத்துக்கும்.

:::::::::::::::::::::::::::::::::

//துபாய் ராஜா ...
வித்தியாசமான பார்வையில்
எழுந்த எண்ணங்களில்
விளைந்த எழுத்துக்களில்
தனிமைக் கொடுமையின்
வேதனை வலியில்
அனலிட்ட புழுபோல்
துடித்த ஆன்மாவின்
ஆசைகளை படிப்பவர்
இதயம் வலிக்கத்
வடித்து தந்துள்ளீர்கள்...//

நன்றி ராஜா.அசத்தலா கவிதையாவே கருத்தும் சொல்லிட்டீங்க.

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை ஹேமா. இன்னமும் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லையா? பழசை நினைக்காதீர்கள். நான் முன்னம் கூறியது போல இதையாவது ஆண்டவன் கொடுத்தானே என்று நன்றி கூறுங்கள். நல்ல நாட்டில் ஒரு வாழ்க்கை, ஆயிரக் கணக்கில் பதிவுலக சொந்தங்கள் என மகிழ்வான வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நாங்கள் இருக்கின்றேம் ஹேமாவை மறக்காமல், பின் என்ன தனிமை. நன்றி.

நானும் ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன் படிக்கவும். நன்றி.

மேவி... said...

மெயில் பண்ணுகிறேன்

(கொஞ்சம் குழப்பமாக இருக்கு.... இரண்டு மூன்னு வட்டி படிச்சு பார்க்கிறேன்)

"உழவன்" "Uzhavan" said...

என்ன சொல்வது. எழுத்தின் நடை வெகு சிறப்பு ஹேமாஜி.

Kala said...

ஹேமாவுக்கு இவ்வளவு நன்றாக கதைகூட
எழுத வருமா?ஹேமாவா?கொக்கா? என்ன!!

ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக
கதை அமைப்பு.
மூன்று நாட்களாய் கிழிக்கப்படாத கலண்டர்----
இறந்து மூன்று நாட்கள் ஆகின்றன என்பதையும்......
இருப்பு ஒட்டிக் கிடக்கிறது எழும்ப இயலாமல்--------

உயிர்இல்லா உடல் தரையில் கிடப்பதையும்......

எழுதி வைத்த கடிதமும்-------------------

அறையை உடைத்து முன்னேறப் பார்கிறார்கள்--------
துர்நாற்றத்தால் காவல் அதிகாரிகள் அறைக்கதவை
உடைத்து அறிய முற்படுவதையும்..........

தலைதடவவோ,கைகளை இறுகப்பற்றவோ---------
தாய்,தந்தையோ உடன்பிறப்புகளோ,
காதலனோ,கணவணோ இல்லாத
ஒரு தனிமையையும்.......

உதிர உறவுகளை செய்தி வெளியேற்ற-----
{இப் பெண்ணும் இலங்கையைச் சார்ந்தவர்}
அதனால் அங்கு நடப்பவைகளை செய்திகளில்
கேட்ட வுடன் ஏற்பட்ட மனநிலமையையும்.......

வாய் அவிழ்ந்து புழுவாய் பொய்த்துக் கொண்டிருக்கிறது--------
பலபேர் பலவிதமாய் வாய்க்கு வந்தபடி
பேசிக் கொண்டிருப்பதையும்.........

தன்னைத் தானே சூறையாடிய மயக்க மருந்துகள்------------
தற்கொலைக்காய அருந்திய விஷத்தையும்.........

எவ்வளவு அழகான{சொல்} நயத்துடன் வெளிக் கொண்டு
வந்திருகின்றீர்கள்.இவ்வளவும் அல்ல கதை முழுமையும்
ஒரு புதுக் கையாளல்.
2,3தடவைகள் படித்தேன் தொட்டுவிட்டது மனதை ஹேமா.

கதையிலோ,கவியிலோ,வாழ்க்கையிலோ சோகப் போர்வை
தேவையில்லை ஹேமாசோகங்களை மறந்து
எதிர் நீச்சல் போடுவோம் கரை ஒன்று தென்படாமலா
போகும்!
அடிக்கடி இதை மனனம் செய்யுங்கள்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால்.....................
அழகாக பிசைந்து உருவாக்கிய ஹேமாவுக்கு ஓரு ச{வ}ரன்.......!!!!..???

ஆ.ஞானசேகரன் said...

வர்ணனைகளை அருமை.. நல்ல முயற்சி ஹேமா... தொடருங்கள்

ஹேமா said...

//ஆரூரன் விசுவநாதன் ...
அருமையான புனைவு.....எழுத்தில் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஹேமா//

நன்றி ஆரூரன்.உங்களைப் போன்றவர்கள்தான் ஊக்கம் தரவேணும்.

:::::::::::::::::::::::::::::::::

//நசரேயன் ...
//ஏன் எல்லாம் அன் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.
தொலைபேசி அலறவில்லை.
தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை//
ம்ம்.. இடைவிடாம இடுகை எழுதினா அந்த சத்தாம் எல்லாம் எப்படி கேட்கும்//

நசர்....உங்களை !

::::::::::::::::::::::::::::::::

//பித்தனின் வாக்கு...
நல்ல கதை ஹேமா. இன்னமும் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லையா? பழசை நினைக்காதீர்கள். நான் முன்னம் கூறியது போல இதையாவது ஆண்டவன் கொடுத்தானே என்று நன்றி கூறுங்கள். நல்ல நாட்டில் ஒரு வாழ்க்கை, ஆயிரக் கணக்கில் பதிவுலக சொந்தங்கள் என மகிழ்வான வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நாங்கள் இருக்கின்றேம் ஹேமாவை மறக்காமல், பின் என்ன தனிமை. நன்றி.

நானும் ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன் படிக்கவும். நன்றி.//

நன்றி வருகைக்கும் அடிக்கடி உங்கள் ஆறுதல் வார்த்தைகும்.சில அழுத்தங்கள் மனதோடேயே பதியப்பட்டுவிட்டன.எதை எழுத எடுத்தாலும் முன்னுக்கு அவைகள்தான் நின்று கண் கசக்கியபடி !

ஹேமா said...

மேவீ..ஒரு குழப்பமும் இல்ல.கொஞ்சம் ஆறுதலாப் படியுங்க.புரியும்.

::::::::::::::::::::::::::::::::

வாங்க உழவன்.அதென்ன ஹேமாஜி.அப்பிடீன்னா !
நான் சும்மா.சந்தோஷம்.

:::::::::::::::::::::::::::::::::::

கலா அருமையான தோழி.என்னை ரசிக்கும் என் சகோதரி.நான் எழுதியதை என்னையே திருப்பிப் படிக்க வைத்த உங்களுக்கு என் நன்றி.கவிதை என்ன கதை என்ன ஆழமாக உங்களுக்குள் எடுத்து அதன் தன்மையை சரியோ தப்போ வெளிப்படுத்துகிறீர்கள்.இன்னும் என்னைத் திருத்திக்கொள்ளவும் திருப்திப்பட்டுக்கொள்ளவும் முடிகிறது தோழி.உங்கள் அன்புக்குள் அசந்து கிடக்கிறேன்.

:::::::::::::::::::::::::::::::

நன்றி ஞானம்.என்ன வேலைப்பளுவா.அடிக்கடி காணமுடிவதில்லையே !

S.A. நவாஸுதீன் said...

//உண்மையில் தனிமையும் தாய்நாட்டின் வேதனையும் பொறுக்கமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில்தான் எழுதினேன்.
அதற்கு நீங்கள் சொல்லும் கோணமும் சரி.தப்புத்தான்.
தோல்விகளையும் வேதனைகளையும் எதிர்க்கும் மனநிலை வேணும்.//

ஹேமா, உங்களின் பார்வை புரிந்ததும் முழுமையாக உள்வாங்க முடிந்தது

Nathanjagk said...

இருக்கும்​போது தனி​மை​யை விரட்ட து​ணை கி​டைப்பதில்​லை.. விட்டு விடுத​லையாகி, காற்றாய் ​வெளியேறும்​போது தான் துக்க முகமூடிகளுடன் எத்தனை ​பேர்கள் உடலைச் சுற்றி?

அரு​மை!

Anonymous said...

அருமையா இருக்கு

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP