Tuesday, June 15, 2010

அப்பா அடிப்பார்.

ஒரு குழப்படிப் பெடியனின்ர அப்பா ஒருத்தர் இருந்தார்.நல்ல அப்பாதான்.கேக்கிறதெலலம் வாங்கிக் குடுப்பார்.சட் புட் எண்டு....நல்லாக் கோவம் வரும் அவருக்கு.எல்லாத்துக்கும் டமார் டுமீல்... எண்டு அடிதான்.கையில கால்ல அடிபட்டு அழுதுகொண்டு வந்தாலும்"ஏண்டா பாத்துக் கீத்து நடக்கிறேல்லையே"எண்டு அதுக்கும் அடிதான்.அதுக்குப்பிறகுதான் மருந்து டொக்டர் எல்லாம்.

இப்பிடி இருக்கேக்க ஒரு நாள் அந்தப் பெடியனுக்கு நல்லாக் கடுமையாக் காய்ச்சல் வந்திட்டுது.பார்த்தா...பெடியனின்ர மேல் தொடையில பெரிய புண் ஒன்று.பெடியனைச் சோதிச்ச டொக்டர் "நாய் கடிச்சதோ தம்பிக்கு"எண்டு கேக்க....."இல்லை"எண்டு சொன்னான்.திரும்பத் திரும்ப அவர் அவனைக் கேக்க அவம்"ஓம்....ஒரு நாள் பள்ளிக்கூடத்தால வரேக்க நாய் கடிச்சிட்டுது "எண்டு உண்மை சொல்லிட்டான்.

"ஏன் வீட்ல சொல்லேல்ல நீ"எண்டு கேட்டதுக்கு "ஐயோ...நான் சொல்லேல்ல.இப்பவும் நீங்க சொல்லாதேங்கோ டாக்டர்.இப்பகூட அப்பா அடிப்பார்"எண்டான் அழுதுகொண்டே.

இதை டாக்டர் சொல்லி அறிந்த அப்பா "கடவுளே என்ர பிள்ளையைக் காப்பாத்துங்கோ"எண்டு குழறி அழுதிட்டார் அந்த அப்பா.

ஆனால் டாக்டரோ...."நாய் கடிச்ச அண்டைக்கே ஊசி போட்டிருக்கவேணும்.இப்ப ஒண்டுமே செய்ய ஏலாது பாருங்கோ"எண்டு கையை விரிச்சிட்டார்.

பெடியனைத் தூக்கிக்கொண்டு கனக்க கனக்க டொக்டரைத் தேடிக் காசையும் செலவழிச்சுக் கொண்டு திரிஞ்சார் அந்த அப்பா.ஆனால் அந்தப் பெடியன் தப்பேல்ல.செத்துப்போனான்.

இங்க நான் சொல்ல வாறதென்னெண்டா அப்பாக்களே அம்மாக்களே கோபப்படுங்கோ.உங்கட பிள்ளைகள்.உங்களுக்கு உரிமை இருக்கு.ஆனால்..பாருங்கோ அளவோட.பிள்ளைகளோட அன்பாயிருங்கோ.பிள்ளைகளோட கனக்கக் கோபப்படாதேங்கோ.சிநேகமாயிருங்கோ.எப்பவும் கைக்குள்ள அணைச்சு வச்சிருங்கோ.பிள்ளைகள் உங்களிட்ட ஒண்டும் ஒளிக்கமாட்டினம்.
சின்ன விஷயம்தான்.அப்பாக்களே அம்மாக்களே....யோசிச்சு நடவுங்கோ.

ஹேமா(சுவிஸ்)

62 comments:

நசரேயன் said...

//யோசிச்சு நடவுங்கோ.//

நடந்துகிட்டே யோசிக்கனுமா .. இல்லை யோசித்துகிட்டே நடக்கணுமா ?

நசரேயன் said...

வர வர பாட்டி மாதிரியே சொல்லுறீங்களே?

VELU.G said...

தங்கள் பதிவிற்கும் அறிவுரைக்கும் நன்றி. நான் அப்படியில்லை. என்னுடைய பெண்(4th Std) என்னை அடிப்பதேயில்லை

தமிழ் அமுதன் said...

நல்ல நடை ...!
நல்ல கதை ..!
நல்ல கருத்து ..!
நன்றி..!

பொடியனை சாகடிச்சு இருக்க வேணாம்..!

LK said...

//நடந்துகிட்டே யோசிக்கனுமா .. இல்லை யோசித்துகிட்டே நடக்கணுமா/

+1

/வர வர பாட்டி மாதிரியே சொல்லுறீங்களே//

paati paati mathirthana pesuvaanga

அம்பிகா said...

வலி தரும் பதிவு.
முன் கோப பெற்றோர் யோசிக்க வேண்டும்.

க.பாலாசி said...

பாவங்க அந்த பையன்... பெற்றோர்கள் யோசிக்கவேண்டும்...

பிரசன்னா said...

இப்படி நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க.. என்ன பண்றது அவங்கள?

தமிழ் உதயம் said...

உங்கள் தமிழுக்காக சில முறை வாசித்தேன். கதை நன்றாக இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
வர வர பாட்டி மாதிரியே சொல்லுறீங்களே?//

Repeateyy

ராஜ நடராஜன் said...

//பிள்ளைகளோட அன்பாயிருங்கோ.பிள்ளைகளோட கனக்கக் கோபப்படாதேங்கோ.சிநேகமாயிருங்கோ.எப்பவும் கைக்குள்ள அணைச்சு வச்சிருங்கோ.//

நேத்து கால்பந்தாட்டம் பார்க்க விடாம மூஞ்சில விடாம தண்ணீர் ஸ்பிரே செஞ்சு ஓட்டம் காட்டி குறும்பு செஞ்ச பிள்ளைய ஒண்ணு போட்டதுக்கப்புறம்தான் வழிக்கு வந்ததாக்கும்.ஒரு நிமிசம் அழுதுகிட்டு அஞ்சாவது நிமிசம் ஹலோ சொன்னா பல்லைத்தான் காட்டுது:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சரிங்கம்மா!! :)

Subankan said...

நல்ல கதை அக்கா :)

ஆடுமாடு said...

//அப்பாக்களே அம்மாக்களே....யோசிச்சு நடவுங்கோ//

சரி ஹேமா.

கலா said...

என்ன நடக்கின்றது?பதிலை
இதுவரைக் காணோம்????

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//யோசிச்சு நடவுங்கோ.//

சரியா சொன்னீங்க..

ஹேமா said...

நசர்....இருக்கு உங்களுக்கு.நீங்களும் பதிவு போடுவீங்கதானே.
பாத்துக்கிறேன்.நீங்க சொன்னதை வச்சே எல்லாரும் கலாய்க்கிறாங்க.
ஷங்கர்....தொடக்கம் ராதாகிஷ்ணன் ஐயா வரைக்கும்.

நீங்க சொறி பிடிச்ச பிச்சைக்காரிக்குக் காதல் பாட்டுப் பாடினதெல்லாம் சொல்லிக் குடுக்கிறன் பாருங்கோ !

ராஜவம்சம் said...

கருத்தாழமிக்கப்பதிவு
நன்றி பகிர்வுக்கு

ஸ்ரீராம். said...

குழந்தைகளுக்கு பெற்றோர் மேல் பயம் இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை மறைக்கக் கூடாது, அல்லது கீழே விழுந்து அடி பட்டு வரும்போதாவது குழந்தைகள் மேல் கோபப் படாமல் இருக்க வேண்டும் பெற்றோர்...நல்ல பதிவு ஹேமா...நாய்க் கடியால் ரேபிஸ் வந்து இறக்கும் கொடுமை உலகில் யாருக்கும் வரவே கூடாது...அதை நேரில் பார்க்க நெஞ்சம் தாங்காது...

- இரவீ - said...

யேன் இத்தனை ஒரு போட்டு குழப்படி????
//ஒரு ஒரு குழப்படிப் பெடியனின்ர அப்பா ஒருத்தர் இருந்தார்.//

- இரவீ - said...

//சட் புட் ...டமார் டுமீல்... கையில கால்ல ...பாத்துக் கீத்து ....//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ண கட்டுதே....

- இரவீ - said...

டொக்டர் சரியா ??? டாக்டர் சரியா ??? 2ம் இருக்கு ... எப்ப்ப்ப்ப்புடி நாங்கலும் கண்டுபிடிப்போம்ல ?????

- இரவீ - said...

//பெடியனைத் தூக்கிக்கொண்டு கனக்க கனக்க டொக்டரைத் தேடிக் காசையும் செலவழிச்சுக் கொண்டு திரிஞ்சார்//

உங்க ஊர் டொக்டர் அவ்லோ கனமா?

- இரவீ - said...

//ஆனால் அந்தப் பெடியன் தப்பேல்ல//
அப்புரம் அந்த அப்பா டொக்டர தப்பலயா??? நாங்க அதான் செய்வோம்...

- இரவீ - said...

//இங்க நான் சொல்ல வாறதென்னெண்டா//
இத முதல்ல சொல்லி இருந்தா எவ்லோ பேர் தப்பியிருப்போம்.

- இரவீ - said...

//எப்பவும் கைக்குள்ள அணைச்சு வச்சிருங்கோ//
பசங்க என்ன பஞ்சு மிட்டாயா????

- இரவீ - said...

//பிள்ளைகள் உங்களிட்ட ஒண்டும் ஒளிக்கமாட்டினம்.//
பிள்ளைகள் இப்பல்லாம் ஒளிச்சாலும் மாட்டாது.

- இரவீ - said...

//சின்ன விஷயம்தான்.அப்பாக்களே அம்மாக்களே....யோசிச்சு நடவுங்கோ.//
நடவு சின்ன விஷயமா? பிச்சு புடுவோம் பிச்சு... சின்ன புல்ல தனமா இருக்கு...

- இரவீ - said...

//வர வர பாட்டி மாதிரியே சொல்லுறீங்களே? //
இதை நான் வன்மயா கண்டிக்கறேன்... அது எப்டி "மாதிரி" னு சொல்லலாம்????

ஜெயா said...

இப்படியான அப்பாக்கள் ஊரில் நிறைய இருந்தார்கள்.ஏதோ அவர் தான் கண்டிப்பான அப்பா என்கிற நினைப்பில கண்ட பாட்டுக்கு பெடியன்களை போட்டு அடிப்பார்கள்.இவர்களின் மூடத்தனமான செயல்களினால் பிள்ளைகள் தான் பாவம்.

ஆனால் இங்கேயெல்லாம் இந்த அடிக்கிற வேலை நடக்காது தானே ஹேமா. அப்பாக்கள் எல்லாம் ரொம்பவே அடக்கம்.....

அப்பா அம்மாக்களுக்கு ஏற்ற நல்ல பதிவு தோழி.......படமும் பொருத்தம்.

நேசமித்ரன் said...

நன்றி பகிர்வுக்கு

ஜெரி ஈசானந்தன். said...

உங்கட ஈழத்தமிழ் பிடிச்சிருக்கு..

D.R.Ashok said...

நல்லா இருக்குங்க..

ManA said...

அருமையான பதிவு ,, நல்ல அறிவுரை..

நிலாமதி said...

நாம் ஊர் தமிழ் வழக்கு சில நண்பர்களுக்கு புரியாதம்மா..
...(சரியான் தமிழ் போடணும்).....
....இருப்பினும் அர்த்தம் .....படிப்பினை .....உள்ள கதை.

ஹேமா said...

வேலு...என்னுடைய பெண்(4th Std) என்னை அடிப்பதேயில்லை.
இது நல்லயிருக்கே !
எங்கே கவிதைப் பக்கம் காணோம்?


அமுதன்(ஜீவன்)....கதை எழுத்து விளங்கிச்சா.உங்களுக்காகத்தான் எங்க நடையில எழுதினேன்.ஏன்னா எப்பவும் யாழ் நடை சிலருக்குப் புரியவும் இல்லை.சிலசமயம் பிடிக்கவுமில்லையோ தெரியாது.


(LK)கார்த்திக்....முதன் முதலா வந்திட்டு என்னைக் கிண்டல் பண்றீங்களா....இருங்க இருங்க.
நான் பாட்டியா !


அம்பிகா....பாருங்க என்ன நல்லதொரு விஷயம் சொல்லியிருக்கேன்.எல்லாரும் கிண்டல் பண்றாங்க.


பாலாஜி...உங்களுக்குத்தான் தெரியும் சின்னப்பிள்ளைங்களோட அருமை !


பிரசன்னா....நீங்கதான் பாவம் பிரசன்னா.ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கீங்க
என்னைப் போல !


தமிழ்....அடிக்கடி என் வழக்குத் தமிழில் எழுதுகிறேன்.ஏதாவது விளங்காமல் இருந்தால் சொல்லிடுங்க.


T.V.ராதாகிஷ்ணன்...
ஐயா நீங்களுமா !


நடா...எங்க கவிதைப் பக்கம் காணோம்.உங்க பதிவுக்கு வந்தேன்.
பின்னூட்டம் போட முடியல.என்ன டெம்லேட் வச்சிருக்கீங்க.மாத்துங்க.
உண்மைதான் சிலசமயங்களில் குழந்தைகளின் குறும்புகள் தாங்கமுடிவதில்லைத்தான்.என்றாலும் அவர்களுடனான அணுகுமுறை நிச்சயம் மென்மையாக இருந்தால்தான் நல்லது.


ஷங்கர்....தாத்தா நீங்க இப்பிடிச் சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை !

ஜெய்லானி said...

இது கதையா இல்லை உண்மை நிகழ்வா ?..!! எதுவா இருந்தாலும் சோகம் தாங்கல அந்த பையனின் மன நிலையில் இருந்து பார்த்தால்...!!

ஹேமா said...

சுபா...நன்றி தம்பி.உங்கட வீட்லயும் இப்பிடியோ.அப்பா அம்மாவுக்குப் பயம் இருக்கத்தான் வேணும்.
அதுக்காக எல்லாத்துக்கும் இல்ல.சரியோ !


ஆடுமாடு....ரொம்ப நாளாக் காணோம்.சின்னப்பிள்ளைக் கதைக்குக் கருத்துச் சொல்லியிருக்கீங்க.
அதுவும் சந்தோஷம்.


கலா...என்ன எதிர்பார்த்துக் கேக்கிறீங்கன்னு தெரில.ரவி உங்களுக்க்த் தெளிவா பதில் சொல்லியிருக்கிறார்.
அது உள்நாட்டு- வெளிநாட்டுச் சதியாம்.இது எப்பிடியிருக்கு !


ஸ்டார்ஜன்...அன்புக்கும் வருகைக்கும் நன்றி.


ராஜவம்சம்....நன்றி நன்றி.


ஸ்ரீராம்...உங்களுக்குச் சரியாகவே பதிவு புரிந்திருக்கிறது.அதாவது என் தமிழ்.அதுவே சந்தோஷம்.உங்கள் பதிவுகள் இப்போ நிறைய யோசிக்க வைக்கிறது.நல்ல விஷயங்களாகவே பதிவுகள் தருகிறீர்கள்.எனக்கு நிறைய யோசிக்கவோ,படம் வரைந்து பார்க்கவோ நேரம் இல்லாமலே இருக்கிறது.நிறைய நேரங்கள் தேவைப்படுகிறது உங்கள் பதிவுகளுக்கு.என்றாலும்
தொடருங்கள்.எப்போதும் வருகிறேன்.
கவனிக்கிறேன்.


இரவீ...ஏன்பா இப்பிடி ஒரு கொலை வெறி.ஒவ்வொரு பதிவிலயும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள்.போன பதிவுக்குப் பதில் சொல்லி இன்னும் அந்தக் களைப்புப் போகேல்ல்ல.
பாத்தீங்களே ரவி....கிழவா...
முன்னைப் பின்னை பாக்காம எல்லிப்போலகூட யோசிக்காம இப்பிடி "மாதிரி"
சொல்லிப்போட்டியளே !


ஜெயா....நீங்கள் சொன்னது உண்மைதான்.இப்போ குழந்தைகள் பெற்றவர்களையே வெருட்டுகிறார்கள் !எனக்கு இப்பவும் அப்பா அம்மா என்றால் பயம்தான்.அவர்கள் சொல்வது பிழையென்று தெரிந்தால்கூட திருப்பிக் கதைக்கப் பயம்.பேசாமல் என்பாட்டில் புறுபுறுத்துக்கொள்வேன்.


நேசன்....நன்றி நன்றி.கவிதை தவிர்த்த பதிவுகளில் காணும்போது இன்னும் சந்தோஷம்.


ஜெரி....உங்கட தமிழும் எனக்கும் பிடிக்கும்.திரைப்படங்கள் பார்க்கிறதால விளங்கிக் கொள்றதிலயும் பிரச்சனையில்லைப் பாருங்கோ !


அஷோக்...ஏன் விளங்கலியா பதிவு?சுருக்கமா நல்லாயிருக்கு சொல்லிட்டீங்க.லோக்கிக் குட்டியோட உங்களுக்குக் கஸ்டமிருக்காதுன்னு நினைக்கிறேன்.


அண்ணாமலையான்....என்ன பேர் மாத்தி ,போட்டோ மாத்தி ஆளே மாறிப்போய்ட்டீங்க ?இனிப் பதிவுகள் தொடருமா ?


நிலா...நீங்கள் சொலவதும் சரிதான்.
ஓரளவு கவனிக்கிறேன் எழுதும்போது.
உண்மையில் இந்தப் பதிவு சாதாரணத் தமிழில்தான் தொடங்கினேன்.அமுதன்(ஜீவன்)கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறார் உங்கள் தமிழில்தான் பதிவு வேணும் என்று.அதனாலேயே ...என்றாலும் பின்னூட்டங்கள் பார்க்கும்போது பதிவு புரிந்திருக்கிறதென்றே நினைக்கிறேன்.என்னைப் பாட்டியாக்கியே விட்டார்கள் !


ஜெய்...எனக்கும் தெரியவில்லை.
ஆனால் எப்போவோ ஒருவர் சொன்ன விஷயம்தான்.உண்மையா இல்லை குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்களுக்காகச் சொன்னாரா தெரியவில்லை.என்ன்றாலும் பெறோர்க்கு நல்லதொரு பாடம்தானே !

ஜெயா said...

எங்கள் ஊர் தமிழ் புரிந்து கொள்வதில் என்ன கடினம் இருக்கிறது ஹேமா? எல்லோரும் புரிந்து கொண்டு தானே பின்னூட்டம் இடுகின்றார்கள்.

பிடிக்காதவர்களுக்கும் படிக்கப் படிக்கப் பிடிக்கும் .......

Sangkavi said...

கதை நன்றாக இருந்தது.....

கலாநேசன் said...

good

கலா said...

நான் கூட இரசிகர்ல ஒரு ஆள் ...
ஹேமா...{ எங்க} கோவம் பாத்தது இல்ல
நீங்க... {கொட்டினா} தாங்க மாட்டீங்க...
ஒழுங்கா சொல்லுங்க. நீங்க அக்காவ
திட்டனும்னா கூட நேரா திட்டளாம்...
இப்டி ஏன் ????\\\\\\
அப்பப்பா...என்ன நடிப்பு என்ன நடிப்பு
நடிகர் திலகம் இருந்திருந்தால்..
பிச்சை கேட்டுப் பெறனும் உங்கள்
நடிப்பை இரவீ
கட்சி சேர்ந்து எனக்குப் பெயர் சூட்டியது
நீங்கள் நான் ஏன் ஹேமாவைக் கேட்கணும்?
இப்போ என் கட்சிமாறி {எங்க}போட்டு
நல்ல பிள்ளையாய் நழுவப் பார்த்தால்
எப்படி? யார் சதி இது?
அதென்ன கொட்டினாத் தாங்கமாட்டீங்க?????
நான் என்ன தேள்ளா?இல்லை நீங்களா?
இந்த நழுவலேல்லாம் வேண்டாம்
என்ன பெயரென்று சொன்னால் போதும்

15

Madumitha said...

நான் உங்களை வழிமொழிகிறேன் ஹேமா.

சி. கருணாகரசு said...

உங்களட ஈழ தமிழ் எண்ட மணம் கனக்க மகிழ்ந்தது.....

சரியாத்தான் சொல்லி இருக்கேனா?

நட்புடன் ஜமால் said...

பிள்ளைகளை பொய் சொல்ல பழக்குவதே பெற்றோரின் அர்த்தமற்ற கோபம் தான்

சுந்தர்ஜி said...

என்ன தமிழ் கையில் ஒட்டிக்கொள்ளுமோ என்பதுபோல்.செல்லத் தட்டு அப்பப்ப குடுத்தாத்தான் இங்க சரிப்பட்டு வருது.நீங்க சொன்னாப்ல ஒரு வரையறைக்குள்ள இருந்தா சரிதான் ஹேமா.

- இரவீ - said...

யக்கா!!!
நானும் ரசிகன்கிற காரணத்தாலும்,
என்னை புகழ்ந்து பேசினதாளும்,
நீங்க இரண்டு பேரும் தேளும் கொடுக்கும் மாதிரி (நன்பர்கள்) என்பதாலும்,
சதி பன்னின ஆளையோ, சதிகாரியையோ நான் காட்டி கொடுப்பதில்லை என்பதாலும்,
என்னால் சொல்லமுடியவில்லை கலா அக்கா (அக்கானா... உங்க அக்காவுக்கு இல்லை.. உங்களுக்கு தான் அக்கா).

- இரவீ - said...

//சி. கருணாகரசு சைட்...

உங்களட ஈழ தமிழ் எண்ட மணம் கனக்க மகிழ்ந்தது.....

சரியாத்தான் சொல்லி இருக்கேனா? //

நான் அப்டியே பயந்துட்டேன்....

எங்கோ (வீசிய) மணம் சம்மந்தமா பேச வறீங்கலோனு.

அய்யய்யோ... நானும் சரியா சொல்லி இருக்கேனா?

கலா said...

யக்கா!!!
நானும் ரசிகன்கிற காரணத்தாலும்,
என்னை புகழ்ந்து பேசினதாளும்,
நீங்க இரண்டு பேரும் தேளும்
கொடுக்கும் மாதிரி (நன்பர்கள்)
என்பதாலும்,
சதி பன்னின ஆளையோ, சதிகாரியையோ
நான் காட்டி கொடுப்பதில்லை என்பதாலும்,
என்னால் சொல்லமுடியவில்லை கலா அக்கா
(அக்கானா... உங்க அக்காவுக்கு இல்லை..
உங்களுக்கு தான் அக்கா).\\\\\\\\\\
பேசினதாளும்:பேசினதாலும்
{நன்பர்கள்}:நண்பர்கள் {சிநேகிதிகள்}
பன்னின:பண்ணின
{ஏதோ விலங்கைச் சொல்லித் திட்டுறாப்போல...}
காட்டி:காட்டிக்
தமிழ் எழுத்துக்களைக் கொல்லாமல் ....
உயிர் கொடுங்கள் .
அதுசரி நான் அக்காவென்று யார்
சொன்னது?பெரியப்பா!
ஹேமா சித்தி சொன்னர்களா?

ஹேமா said...

சரி.....சரி விடுங்கோ.ரவியும் கலாவும் கை குடுங்கோ.இனிச் சண்டை பிடிக்கிறேல்ல.
சொல்லிப்போட்டன் ஓம்.

கலா நான் ரகசியமாச் சொல்றன் ரவி உங்களுக்கு என்ன பேர் வச்சிருக்கிறார் எண்டு.சரியோ !

- இரவீ - said...

யக்கா!!!
இத அந்த டமிழ் ட்ரான்சலேட்டருக்கு சொல்லுங்க... அப்பியாச்சும் நான் யாருகைலயும் திட்டு வாங்காம கீரனானு பாக்குறேன்.

அத உட்டுதல்லுக்கா... யருக்கா அது நம்ம பெரிப்பா????
ஹேமாக்கு சித்தி இருக்காங்களா??? இது அவங்க அம்மாக்கு தெரியுமா?

- இரவீ - said...

//சரி.....சரி விடுங்கோ.//
இது கலாக்காக்கா...எனக்கா????

//இனிச் சண்டை பிடிக்கிறேல்ல.
சொல்லிப்போட்டன் ஓம்.
கலா நான் ரகசியமாச் சொல்றன் ரவி உங்களுக்கு என்ன பேர் வச்சிருக்கிறார் எண்டு.சரியோ !//

முதல் வரியில நோ சண்டை சொல்லிட்டு ... அடுத்த லைன்ல பொய்யா பத்தி வைக்கிறீங்க... யாரு என்ன சொன்னாலும் வாய் மையே வெல்லும்...

- இரவீ - said...

ஆ ஆ ஆ... (சிரிக்கரேன் அப்டி பாக்காதீங்க..)

ஏன்னா???

//பாத்தீங்களே ரவி....கிழவா...//
நான் கிழவன்னா என்னோட பாட்டிக்கு வயசு என்னனு யோசிச்சு பாத்தேன்... சிப்பு வந்துடுச்சு சிப்பு.

//எல்லிப்போலகூட யோசிக்காம//
அப்டீனா என்னா? நெசங்கா எனக்கு தெரியல.

ஜெயா said...

எல்லிப்போல கூட யோசிக்காம எண்டா” ஒரு சிறுதுளி அளவு கூட யோசிக்காமல் என்று அர்த்தம்.....

- இரவீ - said...

நன்றி நன்றி!!! :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்தத் தமிழ் நல்லா இருக்கு...

தமிழ் மதுரம் said...

வணக்கம் ஹேமா பாட்டி! ஆஹா.. ஆலோசனைகளும், அறிவுரைகளும் என்று கலந்து கலக்குறியள். நல்ல கதை ஆச்சி. தொடர்ந்தும் நிறையத் தாங்கோ.

விக்னேஷ்வரி said...

இந்தத் தமிழ் ரொம்ப நல்லாருக்கு. அதுல இருக்குற கருத்தும்.

ஹேமா said...

ஜெயா...வாங்கோ.ஒரு பயம்தான் புரியாதோ எண்டு.இல்லை ஜெயா நாங்கள் திரைப்படங்கள் பார்த்து தமிழ்நாட்டுத் தமிழ் விளங்கிக் கொள்ற அளவுக்கு யாழ் தமிழ் விளங்காமல்தான் இருக்கிறார்கள்.
எங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க தானாய் வந்துவிடும்.எல்லிப்போல எனக்கு உதவியும் செய்றீங்கள்.
சந்தோஷம் ஜெயா.


சங்கவி....நிறைய நாளாச்சு
நீங்க வந்து.அப்பாவாயிட்டீங்க.
வேலைப்பளுவோ.சுகம்தானே.


நன்றி கலாநேசன்.


மது...நான் சொன்னது சரிதானே.தெரிஞ்சதைச்
சொன்னால் பாட்டி என்கிறார்களே !


//அரசு...உங்களட ஈழ தமிழ் எண்ட மணம் கனக்க மகிழ்ந்தது..//

உங்கட ஈழத் தமிழ் கேக்க என்ர
மனம் சரியாய்ச் சந்தோஷப் படுது(பாருங்கோ)!

அதென்ன ....விளங்கேல்லையெண்டா என்னட்டக் கேக்காம சத்ரியன்,
கலாட்டக் கேக்கிறது.இனி என்னட்டையே கேட்டுக்கொள்ளுங்கோ.
சரியோ.குழந்தை நிலாவுக்கு வரவும் பயமாக் கிடக்கு எண்டு சொன்னீங்களாம் !


//நட்புடன் ஜமால் ...
பிள்ளைகளை பொய் சொல்ல பழக்குவதே பெற்றோரின் அர்த்தமற்ற கோபம் தான்//

சரியாய்ச் சொன்னீங்க ஜமால்.
பெரியவர்களிடம் அணுகுவதற்கும் குழந்தைகளிடம் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
கண்ணாடி போலப் பக்குவம் தேவை.


சுந்தர்ஜி...எனக்கா குழந்தைக்கா இல்லை தமிழுக்கா செல்லத் தட்டு.மூவருக்குமே பொருந்தும்.


கலா....பதிவுக்குக் கருத்து போடக்கூட நேரமில்லை.அவ்ளோ ரவியோட சண்டை சுவாரஸ்யம்.இப்ப சமாதானமாயிட்டீங்களா.சண்டை போட ரவிக் கிழவரின்ர உஷாரைப் பார்க்கவேணுமே !

ரவிக்குத் தமிழ் அப்பிடி இப்பிடித்தான்.
கொஞ்சம் வேணுமெண்டும் எழுதுறார் பிழை பிழையா !என்ன பேர் எண்டு சொல்லிட்டாரோ.இல்ல கண்டு பிடிச்சீங்களோ !


பிரகாஷ்...யாழ் தமிழ் பிடிச்சிருக்கா.
நன்றி.கோவமா வந்தமாதிரி இருக்கு குழந்தைநிலாவுக்குள்ள.சரி ...சரி.
சிலநேரங்கள் இப்பிடித்தான்.
சிலருக்குப் பிடிச்சிருக்கெல்லோ !

கமல்...புத்தி சொல்லப்போனா பாட்டியோ நான்.இருக்கட்டும் இருக்கட்டும்.ப்ரியாப் பாட்டிக்கும் சுகம் சொல்லுங்கோ.


விக்கினேஸ்..நிறைய
நாளுக்குப் பிறகு பதிவுகளோடு.
சுகம்தானே தோழி.

LK said...

//முதன் முதலா வந்திட்டு என்னைக் கிண்டல் பண்றீங்களா....இருங்க இருங்க.//
கிண்டல் என் கூடவே பிறந்தது. ஒன்னும் பண்ண முடியாது. எப்பவந்தாலும் கிண்டல் பண்ணுவேன் . ஆனா நல்ல பதிவு இது. அப்பாவிடம் மரியாதை இருக்க வேண்டும் பயம் இருக்க கூடாது

கமலேஷ் said...

நல்லா கருத்து தோழி...

யோசிக்கவேண்டும்...

reena said...

Nalla karuthu... Oru sirukathai. Maraintha anumma ezuthiyathu. Senbaga pookal thiruda pogum siruvan thannai naai kadithu vida veetil sollamale iranthu povaan. Senpaga marathin urimaiyaalar athai enni vaazKAI muzuka varunthuvar. Nalla kathai athu.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP