Monday, June 21, 2010

இந்த நாய் உண்மையில் என்னதான்....நினைக்கிறது !

ம்ம்...இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல இருக்கே.எனக்கு எவ்ளோ வேலை இருக்கு !


டேய்....கொஞ்சம் மெதுவா நடடா லூசுப் பயலே.உன் பின் பக்கத்தை பாக்க சகிக்கல எனக்கு !


இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு.ஏன் தான் இப்பிடி வாலாட்டிக்கிட்டு திரியறியோ !


ஐயோ...ய்....யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கியேடா !


டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு.உங்கூட சேர்ந்ததாலயோ என்னமோ என்கிட்டயும் ஒரு நாத்தம் !


நீ சைலண்ட்டா நில்லு...நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் !


ஒழுங்க கட்டுடா எருமை.இப்பிடி நின்னா எனக்கு உச்சா போகணும்போல இருக்கு !


ஏம்மா இப்பிடி விழுந்து எழும்புற.இந்தா மருந்து கொண்டு வந்திருக்கேன்.நீ நினைக்கிற மாதிரி இல்ல அவன்.கண்ட பொண்ணுங்க பின்னாலயும் நாயா அலையிறான் !


இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.இதையெல்லாம் அவன்கிட்டயே வச்சுக்கோ !


என்னதான் தேடித் தொலைக்கிற.சீக்கிரமா....சீக்கிரமா.
தண்ணி அடிக்கணும்ல !


இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடுவீங்க....ப்ளீஸ் ப்ளீஸ்!எனக்கு மின்னஞ்சலில் வந்த தமிங்கிலீஷ் மடல்.

59 comments:

LK said...

/
இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.இதையெல்லாம் அவன்கிட்டயே வச்சுக்கோ !///

இது இதுதான் அருமை

Jeyamaran said...

Nice....

நிலாமதி said...

வித்தியாசமான் நகைச்சுவை . சுவாரசியமாய் இருக்கு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான படங்களும் கமாண்ட்டும் ஒரு கதையை சொன்னதுபோல உள்ளது. நல்லாருக்கு ஹேமா..

தமிழ் உதயம் said...

எல்லா விளம்பரத்தையும் இந்த மாதிரி COMMENTS கொடுக்கலாம் போல் இருக்கு.

அக்பர் said...

கமெண்டுகள் அனைத்தும் சூப்பர் ஹேமா.

சௌந்தர் said...

நல்ல இருக்கு

அம்பிகா said...

\\ஒழுங்க கட்டுடா எருமை.இப்பிடி நின்னா எனக்கு உச்சா போகணும்போல இருக்கு !\\
சூப்பர்:-))

ஜெயா said...

நீ சைலண்டா நில்லு நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்...இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப நினைக்கும் நாய்க் குட்டி....

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு ஹேமா....

தமிழ் மதுரம் said...

ஆஹா.. தலைப்பை பார்த்து வந்தேன்.. சிரிப்புத் தாங்க முடியேல்லை. நல்லாத் தான் யோசிக்கிறாங்கல் நம்மாளுங்கள். பகிர்வுக்கு நன்றி பாட்டி.

டம்பி மேவீ said...

payam vodafone kaaran ...total damage

அமைதிச்சாரல் said...

//ம்ம்...இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல இருக்கே.எனக்கு எவ்ளோ வேலை இருக்கு !//

சூப்பர் :-))))

வால்பையன் said...

:)

ராஜவம்சம் said...

ம்.........ம்.....

.

நசரேயன் said...

ம்ம்ம்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்களும் அதற்கு தகுந்த வர்ணனைகளும் மிகவும் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் said...

ம்ம் ரைட்டு !

கே.ஆர்.பி.செந்தில் said...

வித்தியாசமான் நகைச்சுவை

பா.ராஜாராம் said...

தலைப்பு பார்த்து பயந்து போய் வந்தேன். அடிதடியோன்னு..

ஏண்டா கவிதை மாதிரி படங்களுக்கு இவ்வளவு பயமுறுத்தும் தலைப்பு? நீ கவிதை எழுதுகிற ஆள்தானே..

போ..போ.. இதுக்காகவே ஓட்டுப் போடாம போறேன்.:-(

Sangkavi said...

அனைவரின் மனதை கவர்ந்த அற்புதமான விளம்பரம்....

இதை யோசித்த Creative Head ikku என் வாழ்த்துக்கள்..

LK said...

"பாரு உன்னால, நம்மள போட்டோ பிடிச்சு அதுக்கு கமென்ட் போட்டு. எல்லாம் என் நேரம் "

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான, வித்யாசமான கற்பனை..! கவர்ந்த விளம்பரங்களில் அதுவும் ஒன்று.

Jawahar said...

தலைப்பைப் பார்த்துட்டு ஏதோ வில்லங்கமான இடுகைன்னு நினைச்சேன். நல்ல படங்கள்... ரசனையான காமெண்ட்டுகள்....

http://kgjawarlal.wordpress.com

ராமலக்ஷ்மி said...

நல்லா இருக்கு ஹேமா:)))!

Robin said...

:)

வெளிச்சத்தில் said...

ஹேமா வோடபோனின் விளம்பரத்தில் பையனைத் தொடரும் நாய்க்குட்டியாய் அவர்களின் சர்வீஸ் இருக்கிறது என்று சொல்கின்றார்கள் அல்லவா? ஆனால் அது உண்மை இல்லை. நாய்க்குட்டியின் வடிவில் கஸ்டமர்களும், பையனின் வடிவில் வோடபோன் நிர்வாகமும் என்று தலைப்பிட்டால் அது தான் உண்மையானது.

ஜெய்லானி said...

//ஒழுங்க கட்டுடா எருமை.இப்பிடி நின்னா எனக்கு உச்சா போகணும்போல இருக்கு !//

ஹி..ஹி...

தலைப்பை பாத்துட்டு பயந்துகிட்டே வந்தேன். வந்தா ஒரே சிரிப்பா இருக்கு..க்கி..க்கி..

ponsiva said...

மிகவும் நல்ல கற்பனை ..

படங்களின் கீழ் அதற்குண்டான வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம் .

வாழ்த்துக்கள் ஹேமா ..

அன்புடன்

பொன்.sivaa

சி. கருணாகரசு said...

ரொம்ப நல்லாயிருக்குங்க ஹேமா.

கலா said...

நாய்,நாயென்று யாரையோ சாடியிருக்கிறமாதிரித்
தோணுது....யாரம்மா அந்த நன்றியுள்ள ஜீவன்?ஏம்மா இப்பிடி விழுந்து எழும்புற.இந்தா
மருந்து கொண்டு வந்திருக்கேன்
.நீ நினைக்கிற மாதிரி இல்ல அவன்.
கண்ட பொண்ணுங்க பின்னாலயும்
நாயா அலையிறான்

எங்கிட்டச் சொல்லுப்பா நான்
சமரசம் பண்ணி பிரித்து வந்து
உங்கிட்ட ஒப்படைக்கின்றேன்

நாய் ,பேயென்று திட்டத பாவம்
அவக......

ராஜ நடராஜன் said...

வட பன்!voda Fun

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹா...

அருமை அருமை

Karthick Chidambaram said...

super. Nice :-).
Padam paarththu nallaa kathai sollreenga.

Nice :-)

D.R.Ashok said...

hello என்னங்க இது மெயில்ல வந்ததெல்லாம்.. பதிவா போட்டுகிட்டு...

Anyway நல்லாதான்யிருக்கு... ஆனா பையன doggu ஜாஸ்தியாதான் கலாய்க்குது

ஆறுமுகம் முருகேசன் said...

ha..haaaaaaaaaaaaaaaaaaa

Madumitha said...

ரொம்ப நல்லாருக்கு ஹேமா.

ஜோதிஜி said...

ரொம்பவே ரசிக்க வச்சிங்க. இரவுத் தூக்கம் இனிமையாக வரும். நன்றியம்மா.............

ஹேமா said...

கார்த்திக் நன்றி நன்றி.திமிழிஸ் ல இணைக்க முதல் ஓடி வந்து ரசிச்சதுக்கு சந்தோஷம்.


ஜெயராமன்...நன்றி முதல் வருகைக்கு.கண்ணீர் வடிக்கும் கவிதைகள் படித்தேன் உங்கள் பக்கம்.ஆறுதல் தேவை.


நிலா...அன்று கலாவுக்கு பதில் பின்னூட்டம் தந்துவிட்டு உங்கள் பக்கம் வந்து "கலா" என்று சொல்லிவிட்டேன்.
கோபமில்லைத்தானே !


ஸ்டார்ஜன்...நன்றி நன்றி நகைச்சுவை அன்புக்கு.


தமிழ்....எப்பிடி எப்பிடி எங்கட யோசனை.நல்லாயிருக்கெல்லோ !


அக்பர்...நன்றியும்
சந்தோஷமும் வந்ததுக்கு.


சௌந்தர்...வாங்கோ வாங்கோ.கலக்குவோம்.


அம்பிகா....பாரா அண்ணா திட்டிட்டார்.உண்மையா நல்லாயிருக்குத்தானே பதிவு.
கொஞ்சம் சிரிச்சா அவருக்குப் பிடிக்கேல்ல !


ஜெயா...வாங்கோ.எனக்கு இப்ப கவலையெல்லாம் பாரா அண்ணா ஓட்டும் போடேல்ல.நல்லாயிருக்கு சொல்லவுமில்ல.திட்டிட்டுப் போய்ட்டார்.


கமல் தாத்தா...வாங்கோ.எப்பிடி இருக்கிறியள்.வெத்திலை இடிச்சுத் தரவோ !பொக்கை வாயால சிரிச்சாலும் நல்ல வடிவு நீங்கள் !


மேவீ...வோடா போன் காரன் பாக்கமாட்டான் என்கிற தைரியம்தான்.அதுக்காகச் சொல்லிக் குடுக்கிறதில்ல !


அமைதிச்சாரல்...முதல் வருகைக்கும் அன்பான வரவேற்புக்கும் அன்பு நன்றி.
அடிக்கடி வாங்கோ !
நான்தான் அடிக்கடி நகைச்சுவைப் பதிவு போட மாட்டேன் !

ஹேமா said...

வால்...வாங்கோ.சொல்லியிருந்தால் இங்க கும்மியடிச்சிருக்கலாமே.
எனக்கும் பிடிக்கும் கும்மி.


ராஜவம்சம்...என்ன ம்..ம்ம்.
சொல்லாமச் சிரிச்சா எப்பிடி !


நசர்....ஏன் கோவமா ?
கும்மியடிக்க விடலன்னு.
இப்பத்தானே வால் வந்திட்டுப் போயிருக்கார் !
இது நீங்க இல்ல !


பனி..சங்கர் நன்றி... நன்றி.


நேசன்...நீங்கதான் சொன்னீங்க கவிதை ஒரே போர்ன்னு.வேற என்னாச்சும் எழுதச்சொல்லி.
பாரா அண்ணா திட்டுறார்.
நீங்களே சொல்லுங்க.


செந்தில்...எனக்கும் பயோடேட்டா எழுதிடாதீங்க.
பயங்கரமான ஆள் நீங்க !


பாரா அண்ணா...ப்ளீஸ் ப்ளீஸ்.என்ன இப்பிடிக் கோவிச்சுக்கிட்டா எங்க போவேன் நான்.எப்பவுமே அழுவுற கவிதை எழுதுறேன்னு தானே இந்தப் பக்கமே திறந்தேன்.கொஞ்சம் கதைக்க.கொஞ்சம் சிரிக்க.ஓட்டுப் போடுங்க.நீங்களும் சிரிங்க.
கவிதை போர்ன்னு சொன்ன ஆளைக் கேளுங்க நல்லா சொல்லிட்டேன் !


சங்கவி..எனக்கா எனக்கா சொன்னீங்க.நன்றி நண்பா !


கார்த்திக்...அதுக்கும் ஒரு நேரம்தான்.நல்ல நேரமா இல்ல கெட்ட நேரமா ?பாரா அண்ணா தவிர எல்லாரும் நல்லாருக்குத்தானே சொல்றாங்க!


ஸ்ரீராம்...ஓ...இதுவும் விளம்பரமாச்சோ !
நன்றிதான் உங்களுக்கு.


யவாகர்.....நன்றி நண்பரே முதல் வருகைக்கு.வருவேன் உங்கள் பக்கம்.

ஹுஸைனம்மா said...

தலைப்பைப் பார்த்து பயந்துபோய்த்தான் வந்தேன், மறுபடியுமான்னு??

அழகுப் படங்கள்!!

- இரவீ - said...

//இந்த நாய் உண்மையில் என்னதான்....நினைக்கிறது !//

இது ஹேமா... நாயா?

- இரவீ - said...

அய்யைய்யோ நான் கேட்டது கேமாவினுடைய நாயா னு...

தப்பா எடுத்துக்காதீங்க ஹேமா.

- இரவீ - said...

// ஜெயா said...

நீ சைலண்டா நில்லு நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்...இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப நினைக்கும் நாய்க் குட்டி....

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு ஹேமா....//

நானும் இதை வழிமொழிகிறேன்... உங்க படம் எல்லாமே நல்லா இருக்கு.

- இரவீ - said...

// கலா said...

எங்கிட்டச் சொல்லுப்பா நான்
சமரசம் பண்ணி பிரித்து வந்து
உங்கிட்ட ஒப்படைக்கின்றேன்..//

அக்கக்க...

உங்களை மெச்சி...
உங்க சேவையை மெச்சி....
"பிரித்து மேயும் பிரியாமனி " எனும் பட்டம் வழங்கப்படுகிறது...

பிரித்து மேயும் பிரியாமனி .... வாழ்க! வாழ்க!.
அக்கா... பிரியாமனி.... வாழ்க! வாழ்க!.
பிரித்து மேயும் பிரியாமனி .... வாழ்க! வாழ்க!.


கொ.ப.சே,
பிரியானி (ச) பிரியாமனி ரசிகர் சங்கம்.

கமலேஷ் said...

ம்ம்..ரைட்டு...இன்னைக்கி ஹேமா ரொம்ப சந்தோசமா இருக்குறாங்கன்னு நினைக்கிறேன்.

வித்தியாசமா நல்லா இருக்குங்க...

ஹேமா said...

நன்றி ராமலஷ்மி அக்கா.ஏன் கவிதைப் பக்கம் வாறதில்ல நீங்க?வரணும்.வாங்க.


ரொபின்..நன்றி நன்றி முதல் வருகைக்கு.


வெளிச்சத்தில்...வாங்க வாங்க.ஏதோ எதார்த்தமாகப் போட்ட பதிவே தவிர.யாரையும் நோகச் செய்ய அல்ல.அதோடு இது ஒரு போனுக்குரிய விளம்பரம் என்று சரியாக எனக்குத் தெரியாது.
எல்லோரும் சொன்ன பிறகே அவதானித்தேன்.
உங்கள் வரவுக்கு சந்தோஷம்.


ஜெய்...சண்டை போட்டாலும் பயப்பிடாதீங்க.யாராச்சும் சண்டைக்கு வந்தாலும் நான் போகமாட்டேன்.


பொன்சிவா...வாங்க.உங்கள் அபிப்பிராயம் கூட நல்லாத்தானிருக்கு.
மாத்தலாம்ன்னா நேரம்தான் கிடைக்கல.போகட்டும்.அடுத்த முறை நீங்க சொன்னதுபோல.சரியா !


அரசு....பயமில்லாம வந்திட்டீங்க.அதானே பாத்தேன்.
பக்கத்துணையா அடிதடிக்கு ஆள் கூட்டிக்கொண்டுதான் வந்திருக்கிறீங்க !


கலா...கலா...கலா ஏனப்பா எரியிற நெருப்பில....!கடவுளே நான் கொஞ்சம் சிரிக்கலாமே எண்டுதான் இந்தப் பதிவைப் போட்டேன்.
கதையை மாத்தாதேங்கோ.நீங்களும் சிரியுங்கோ கொஞ்சம்.சிரிக்காத ஆக்கள் எல்லாரும் இருக்கட்டும்.


நடா..நன்றி நன்றி வடையும் பண்ணும் தந்ததுக்கு !


வேலு...நீங்கதான் என் பக்கம்.
நல்லாச் சிரிங்க.சிரிச்சா ஆயுள் கூடுமாம் !


கார்த்திக் சிதம்பரம்..நன்றி நன்றி.படம் பாத்துக் கதை சொல்றதும் ஒரு கலைதானே !


அஷோக்...சிரிக்கச் சொல்லித்தான் பதிவு.கேள்வியெல்லாம் கேட்டால் கெட்ட கோவம் வரும்.
சொல்லிப்போட்டன் !


ஆறுமுகம்...சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க.


மது...நல்லாருக்கு சொல்லிட்டு சிரிக்கணும்.


ஜோதிஜி..நீங்களும் ரசிச்சீங்களா !அதிசயம்தான்.திட்டுவீங்களோன்னு இருந்திச்சு."மனம் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்".


ஹுஸைனம்மா...வாங்க வாங்க.அப்பிடியொண்ணும் இல்ல.பயப்பிடாதேங்கோ !


ரவி...ரவி...என்னைத் தானே நாய் சொன்னீங்க.இருக்கட்டும் இருக்கட்டும்.என்னோட விட்டா பரவாயில்ல.ஜெயா...கலாவையெல்லாம் வேற வம்புக்கு இழுக்கிறீங்க.
ஜெயா பாவம்.கலாக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சது எனக்கில்ல தெரியும் !


கமலேஸ்...ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.
என்ன பாரா அண்ணாவைத்தான் சமாதானப்படுத்தணும் !

கலா said...

உங்களை மெச்சி...
உங்க சேவையை மெச்சி....
"பிரித்து மேயும் பிரியாமனி "
எனும் பட்டம் வழங்கப்படுகிறது...

பிரித்து மேயும் பிரியாமனி .... வாழ்க! வாழ்க!.
அக்கா... பிரியாமனி.... வாழ்க! வாழ்க!.
பிரித்து மேயும் பிரியாமனி .... வாழ்க! வாழ்க!.


கொ.ப.சே,
பிரியானி (ச) பிரியாமனி ரசிகர் சங்கம்\\\\\\\

தமிழ்க் கடலே .... இதில் எத்தனையோ பிழைகள்
இருக்கின்றன...

திரும்பவும் படித்துப் பாரும் புலவரே!
அண்ணா உங்களுக்குப் பட்டம் கிடைக்காமல்
எனக்கு {தங்கை} பட்டம் கிடைத்தது மகிழ்சியில்லை
உங்கள் கெவுரவப் பிரச்சனையல்லவா?

உலகம் பேசும் புத்தியில்லா அண்ணன் பட்டம் வாங்காமல்...
புத்திசாலித் தங்கை வாங்கி விட்டாளே என்று ஊர் பழி சொல்லும்
என்னால் வரலாமா?அண்ணா! பழிக்கு ஆளாகலாமா?
அதனால் இந்தப் பட்டம் வேண்டாம் டா அண்ணா

- இரவீ - said...

//இதில் எத்தனையோ பிழைகள்
இருக்கின்றன...//

இருந்துட்டு போது... அதனால என்ன? அய்யா நடத்தும் மாநாடு பாதியில நின்னுடவா போகுது, சின்ன புள்ளைக்கு சொல்லி குடுங்க...

//உங்கள் கெவுரவப் பிரச்சனையல்லவா?//

நானும் அதுவும்(கெவுரவும்) டூ ... :(

அதுசரி... "கெவுரவ... வா" இல்ல "கெளரவ.. வா"??? அரியாத புள்ள தெரியாம யேதாவது கேட்டிருந்தா மன்னிக்கனும்...


//திரும்பவும் படித்துப் பாரும் புலவரே!//
//தமிழ்க் கடலே ...//
//புத்தியில்லா அண்ணன்//
//வேண்டாம் டா அண்ணா//

ஒன்றுக்கு நாளாய் பட்டம் கொடுத்த தமக்கையே... நன்றி நன்றி ...

//அண்ணா உங்களுக்குப் பட்டம் கிடைக்காமல், //

அண்ணன் பட்டம் ஏற்கனவே நிறைய இருக்கு கவலை வேண்டாம்.

//புத்திசாலித் தங்கை வாங்கி விட்டாளே என்று ஊர் பழி சொல்லும் //

எப்போதும் வாங்குறதே பொழைப்பா இருந்தா... ஊர் அப்டிதான் கண்ணு சொல்லும்... பொறாம புடிச்ச பயபுல்லயோ.

அன்று முருகனுக்கு பட்டம் கொடுத்தாள் ஓளவை....
இன்று அண்ணன்னு பட்டம் கொடுத்தாள் தமிழ் தங்கை....

- இரவீ - said...

//என்னைத் தானே நாய் சொன்னீங்க.இருக்கட்டும் இருக்கட்டும்.//

எவ்ளோ சந்தோசம்னு பாருங்க மக்களே ... இதுக்கு நான் பொறுப்பு அல்ல.

//என்னோட விட்டா பரவாயில்ல.ஜெயா...கலாவையெல்லாம் வேற வம்புக்கு இழுக்கிறீங்க.//

சூது வாது தெரியாத புள்ளைகிட்ட என்னமோ சொல்லுறீங்க... எனக்கு புரியல ...
அவங்ககிட்ட கோழிமூட்டி விடுறத நிப்பாட்டினா ... உங்களுக்கு கோடிபுண்ணியம் கிட்ட
அரசமரத்தடியான் அருள்புரிவான்.

//ஜெயா பாவம்.கலாக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சது எனக்கில்ல தெரியும்//

பாவம் அவங்களுமா ??? ... கோவம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும்னு ...
குண்றக்குடி அடிகளாரோ யாரோ சொல்லி இருக்காங்கா - அதனால் கவலை வேண்டாம்.
குத்து பட்டாலும் மோதிர "கை" தானே.

ஜெயா said...

ஆகா ஆகா.....ஜெயா பாவம்.....

நன்றி நன்றி.

கலா said...

ஹேமா நாலுவிரல்களிலும் மோதிரம்
போட்டு விரல்களை மடக்கி நொங்..நொங்..நொங்கென்று
பல தடவைகள் நல்லா அந்த மரமண்டையில் ..
குத்து. அப்பவாவது உறைக்கின்றதா என்று பார்ப்போம்
என் சார்பிலும்...குத்து ...விழட்டும்

சுந்தர்ஜி said...

வசீகரிக்கும் நாயும் அதன் மனம் படித்த ஹேமாவின் வரிகளும்.சபாஷ்.அழகு நாயா அல்லது அதன் மனதா என்று குழம்பவைத்துவிட்டது இந்த ஹேமாவின் இடுகை.

ஜெயா said...

கெவுரவம்- பிழை
கௌரவம்- சரி

கோழிமூட்டி-பிழை
கோழ்மூட்டுதல்-சரி

மோதிரக்கை குத்து-பிழை
மோதிரவிரல் குட்டு-சரி

- இரவீ - said...

வெற்றி என்பக்கம்... புரியல????
ஜெயம் என்பக்கம் தான் எப்போதும் அதாவது நடுநிலமைன்னு சொல்லவந்தேன் (டக்குனு வாயில குத்திடாதீங்க)
நன்றி நன்றி நன்றி ... கண்டிப்பா திருந்த முயர்ச்சிக்கறேன்.

யம்ம... யம்மா....
எவ்வளவு கோவம் ...
தாங்காது தாயி தாங்காது,
குட்ட வந்தப்ப சிரிச்ச மாதிரி சிரிச்சுகிட்டே இருக்கோணும் என்ன ...

ஏன்னு தெரியல கண்ணுமுன்ன எங்க ஊரு காளியாட்டம் வந்து போச்சு ...
எவ்வளவு வருஷம் ஆச்சு அதெல்லாம் பாத்து ...
அந்த பூசாரி தத்தா இருக்காரானு தெரியல , ஆறு ஆறரை அடி உயரம் இருப்பாரு ...
பச்சை பட்டு , கச்சை , முகபடாம் மற்றும் அந்த நாலு கையோட அவரு ஆடினா ...
நெஞ்சுல படபடப்போட ஒளிஞ்சு பாக்குறதுல உள்ள சுகம் ... அட அட அட ...
அதவிட மனசோட காலும் சேந்து ஆடும் பாருங்க ஆட்டம் ... ச எல்லாம் இப்ப நடக்குதானே தெரியல ???

(இதுக்கு நோ குத்திபாயிங்... ஓகே) .

Anonymous said...

Is anybody who concerns themselves with your well being is aware how sick you are?

Anonymous said...

:-)))))))

nalla erukku.

கலா said...

கெவுரவம்- பிழை
கௌரவம்- சரி\\\\

நன்றி ஜெயா,எனக்குத் தெரியும் தவறுதலாக
சுட்டியில் தட்டிவிட்டேன்
பின்னோட்டம் போட்டபின் தான்
கவனித்தேன் மன்னிக்கவும்


மோதிரக்கை குத்து-பிழை
மோதிரவிரல் குட்டு-சரி\\\\
இது நான் வேண்டுமென்றுதான்
போட்டது ஏன் தெரியுமா?
குட்டினால் அவ்வளவாக
வலிக்காது..
{அதனால் குத்து என்று போட்டேன்}
குத்தினால்தான் {ஓங்கிக்}
அதுவும் மோதிரத்தால் குத்தினால்
எப்படியிருக்கும்?
இரத்தம் வரும்
அதனுடன் சேர்ந்து அதோட
கொழுப்பும் வருமல்லவா!

25

ஜெயா said...

உங்கள் தமிழ் அறிவு பற்றி எனக்கு நன்றாக தெரியும் கலா... நான் அந்த சொற்பிழைகளை திருத்தம் செய்தது தமிழ் எழுத்துப் பிழை விடும் இரவீ அவர்களுக்காக...மன்னிக்கவும்.

”மோதிரத்தால் ஓங்கிக் குத்தினால் இரத்தம் வரும். அதோடு சேர்ந்து அதன் கொழுப்பும் வருமா????ஆஆஆ....

Michele Rodriguez said...

கெவுரவம்- பிழை கௌரவம்- சரி கோழிமூட்டி-பிழை கோழ்மூட்டுதல்-சரி மோதிரக்கை குத்து-பிழை மோதிரவிரல் குட்டு-சரி

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP