Monday, June 07, 2010

உணர்வும் உப்பும்.

"உப்புப் பெறாத வேலை" என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு.மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான்.அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'சுவை' என்பதே முதற்பொருள்.
இனிப்பு,கசப்பு,துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு 'வெளிளுப்பு' என்று பெயர்.பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு.பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது.தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது
'வெளிளுப்பு '.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம்'என்ற சொல் பிறந்தது என்பர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள்.அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர்.மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும்.இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள்.

உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. "தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது" என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்பு விளங்கியிருக்கிறது.கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் 'உமணர்' என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்து வுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது.

உப்பு விளையும் களத்திற்கு 'அளம்' என்றும் பெயர்.பெரிய உப்பளங்களுக்கு அரசர் களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.
அவை பேரளம்,கோவளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.சோழ - பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

'ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி. பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம்,செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம்,இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம்,கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம்,திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம்,வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து ,உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப் பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன ' என்று...தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. "நெல்லின் நேரே வெண்கல் உப்பு" என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக் கியத்தில் பார்க்கிறோம்.சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது.
இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்த தாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் "கல்மரவை" எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது.இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

யாரோ முரளி என்பவர் அப்பபோ மிஞ்சஞ்சலில் இப்படியான செய்திகளை தந்துகொண்டிருக்கிறார்.

முரளிக்கு நன்றி.

40 comments:

நசரேயன் said...

//யாரோ முரளி என்பவர் அப்பபோ மிஞ்சஞ்சலில் இப்படியான செய்திகளை தந்துகொண்டிருக்கிறார்.//

சண்டைக்கு வராம இருந்தா சரிதான்

Anonymous said...

உப்புமட சந்தியில் உப்பு... நல்ல பதிவு

Subankan said...

நல்ல தகவல்கள். முரளிக்கும், பகிர்வுக்கும் நன்றி :)

நேசமித்ரன் said...

நல்ல பதிவு

D.R.Ashok said...

குறிப்பா பெண்கள் உப்பசமா ஆகிடறாங்களே... அதுக்கு என்ன காரணம்..
சோம்பல்?
அதிக நேரம் கணனி முன்னால உக்காறது?
லேப்டாப்ப தலைக்கு வெச்சிட்டு தூங்கறது?


உப்புமாவுக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் உண்டா?


சீரியஸான வார்த்தைகள்.. நம் பரிணாமம் கடலிருந்தே தோன்றியதாம்... நமக்கு உப்பு தாயை போன்றது...


டய்பெடிஸ் பேசண்ட்டுக்கு half salt டுதான்...


அப்புறம் கலாய்க்கற மூட்ல இருக்கும்போது வந்து மாட்டியது உங்கள் பதிவு...


மத்தபடி உப்பு சத்தான பதிவு..


சரி.. நீங்க.. எங்க தமிழ்ல எழுதியிருக்கிறா மாதிரி தெரியுது... ஏன்னா நெறைய புரியுதுங்க... :))

தமிழ் உதயம் said...

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் "கல்மரவை" எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது.இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன

இதை படித்ததும், எங்கள் அம்மா எப்போதோ புழங்கிய எங்கள் வீட்டு மரச்சட்டி ஞாபகத்துக்கு வந்தது.

சி. கருணாகரசு said...

"உப்பு"மடச் சந்தி..???

ஜெய்லானி said...

@@@கடையம் ஆனந்த்--//

உப்புமட சந்தியில் உப்பு... நல்ல பதிவு //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

- இரவீ - said...

//உணர்வும் உப்பும்.//
உணர்வு.... உப்புமா? உப்பாதானு? யார் உங்க கிட்ட கேள்வி கேட்டது?.

- இரவீ - said...

//பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு//
பொருளாதாரத்தில உப்பும் பண்பாடும் போட்டு குலுக்கி வச்சிருந்திருப்பாங்கலோ???

- இரவீ - said...

//தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது
'வெளிளுப்பு './/
தண்ணி கூடதான் அப்டி கலக்கும்... அப்டீனா??? தண்ணி பேரு வெளிளுண்ணியா???

- இரவீ - said...

//செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம்'என்ற சொல் பிறந்தது என்பர்.//

செய்த வேலைக்கு மாற்றாக பணமும் (பண ரசீது(செக்))- ஆன்சைட்(தேசிய பயனம்) கொடுத்தால் - பரதேசி சொல் பிறந்ததா???

- இரவீ - said...

//ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.//

அங்க தான் ஆரம்பிக்குதா? ஒகே ஒகே...

- இரவீ - said...

//இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள்//

உப்புமட சந்தினு இருக்கிறதுல யேதாவது உள்நோக்கம் இருக்கா?

- இரவீ - said...

//உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது//
அப்ப கருணாவ கடல்ல தள்ளினா - அவருக்கு நன்றி உணர்ச்சி வந்துடுமா?

- இரவீ - said...

//அவை பேரளம்,கோவளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.சோழ - பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள்.//
இதான வேனாம்கிறது... கோவளம் ஒகே... பேரளம் எங்க ஊருக்கு பக்கம் - பேரளதுக்கும் கடலுக்கும் எவ்லோ தூரம் ... சும்மா கதை விடாதீங்க.

- இரவீ - said...

//உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் "கல்மரவை" எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது.//
மரக்கால்(மரவை) கூட இப்ப இரும்புலதான் ஊர்ல இருக்கு :(

- இரவீ - said...

யாரோ முரளிக்கும் உங்கக்கும் உப்புங்கோ ச நன்றிங்கோ.

நட்புடன் ஜமால் said...

உப்பிட்ட(முரளி)வரை உள்ளலவும் நினையுங்கோ ஹேமா!

--------------------

நல்ல பகிர்வு

இந்த சந்திமடத்தில் உப்பு

கே.ஆர்.பி.செந்தில் said...

உப்புமட சந்தியில் உப்பு... நல்ல பதிவு

கலா said...

படித்து வரும் போதே ..யோசித்தேன்
ஹேமா இவ்வளவு புத்திசாலியாகிட்டாரே
என்று!!
அப்புறம்தான் எனக்குப் புத்திவந்தது
சரி..சரி முகத்தைக் கோணவேண்டாம்
அப்புறம் நான் செய்த உப்புப் பாயாசம்
கொஞ்சம் கொடுக்கட்டுமா?இல்லாவிட்டால்
அதன் செய்முறையைக் கொடுக்கட்டுமா?

உப்பை உணர்த்திய உயர்வுக்கு நன்றிடா
பரிசாக ஒன்று கொடுக்கட்டுமா?
ஆ..ஆஆ. காட்டு
உப்பு போடத்தான்!!

ஸ்ரீராம். said...

.'யாரோ' முரளிக்கு நன்றிகள்...அதை எங்களுக்கு தந்த உங்களுக்கும் நன்றிகள். உப்பிட்டவரை உள்ளளவும் மறக்க மாட்டோம்..! உப்பிட்டதால், அதுவும் அளவாய் இட்டதால் சுவையான பதிவு.

சத்ரியன் said...

ஹேமா,

உப்புக்க(டை)தை நல்லா கல்லா
கட்டியிருக்கே!

உங்களுக்குத் தகவல் அனுப்பிய முரளிக்கும், அதை பதிவிட்ட உனக்கும் நன்றிகள் ஹேமா.

Anonymous said...

எங்க வீட்டுல ஒரு பெரிய பீங்கான் ஜாடிலதான் அம்மா உப்பு போட்டு வைச்சிருப்பாங்க. நல்ல பகிர்வு ஹேமா

அம்பிகா said...

நல்ல பகிர்வு ஹேமா.
உப்பை போல உபயோகமான தகவல்கள்.

ஜெயா said...

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சுவை என்பதே முதற்பொருள்.

உப்பு இல்லா பண்டம் குப்பையிலே தான்.....உப்பைப் பற்றி உப்புமடச்சந்தியில் நல்ல பதிவு ஹேமா.

அக்பர் said...

நல்லதொரு பகிர்வு நன்றி ஹேமா.

கலாநேசன் said...

'யாரோ'முரளிக்கும் ....அதை எங்களுக்கு தந்த உங்களுக்கும் நன்றிகள்

சுந்தர்ஜி said...

இந்தப் பதிவை உப்புச் சப்பில்லாதது என்றோ-உப்புப் பெற்றாதது என்றோ-சொல்லமுடியாது.உப்பிட்டவரை உள்ளளவு நினையாவிடினும் உப்புப் பற்றி பதிவிட்ட உங்களையும் ”யாரோ” முரளியையும் மறக்க மனம் கூடுதில்லையே.

ஹேமா said...

//நசர்...சண்டைக்கு வராம இருந்தா சரிதான்,//
ஏன் இந்தக் கொலை வெறி உங்களுக்கு.


கடையம் ஆனந்த்...நிறைய நிறைய நாளுக்கு அப்புறம் உங்கள் பின்னூட்டம்.
அன்புக்கு நன்றி தோழரே.


சுபா...அடிக்கடி வாறான் தம்பி இப்போ.சந்தோஷமாயிருக்கு.
புதுப் பதிவுகள் இல்லையா ?


நேசன்...நன்றி நன்றி.


அஷோக்...முதல்ல பதிவு என்னன்னு விளங்கிச்சோ !
இது உப்பு.நீங்க சொல்ற உப்புறது-உப்புமா எல்லாம் வேற.ஓ..நீங்களே சொல்லிட்டிங்க.நீங்க இந்தப் பதிவு பாக்கிறப்போ இருந்த நிலைமையே வேற !


தமிழ்...எங்கள் அம்மம்மா வீட்டிலும் இப்படியா ஜாடிகள் இருந்ததாய் ஞாபகம்.ஊறுகாய்,உப்பு,புளி போட்டு வைத்திருப்பா அம்மம்மா.


அரசு....பாத்தீங்களோ உப்புமடச் சந்திக்கு ஏத்தமாதிரிப் பதிவு.

ஜெய்...உப்புக்கும் ஒரு சோதனை போட்டும் பாருங்களேன்."உப்புப் பரிசோதனை".

ஹேமா said...

இரவீ...ரவி வர வர ரொம்ப புத்திசாலியா ஆயிட்டு வாறீங்க.
என்னமா அசத்தலான கேள்விகள்.
அ...ப்...பா...டி !

//தண்ணி பேரு வெளிளுண்ணியா???//

வாவ்...பாருங்க பாருங்க எல்லாரும் !

//செய்த வேலைக்கு மாற்றாக பணமும் (பண ரசீது(செக்))- ஆன்சைட்(தேசிய பயனம்) கொடுத்தால் - பரதேசி சொல் பிறந்ததா???//

ஐயோ....ஐயோ....
அறிவுக் கடலே...!

//அங்க தான் ஆரம்பிக்குதா?
ஒகே ஒகே...//

இங்க கொஞ்சம் பயந்த மாதிரித் தெரியுது !

//உப்புமட சந்தினு இருக்கிறதுல யேதாவது உள்நோக்கம் இருக்கா?//

ச்ச..ச்ச...அப்பிடி இதுவரைக்கும் இல்லை.முந்தி எங்க சந்தியில இருக்கிற மடத்தில ஒரு ஆச்சி உப்பு வியாபாரம் செய்தாங்களாம்.அதான் எங்க சந்திக்கு உப்புமடச் சந்தின்னு பெயர் வந்திச்சாம்.

//அப்ப கருணாவ கடல்ல தள்ளினா - அவருக்கு நன்றி உணர்ச்சி வந்துடுமா?//

அறிவுக் களஞ்சியம்!உப்பைச் சாப்பிடணும் நன்றி உணர்வுக்கு.
உப்புத் தண்ணில நீந்தணும்ன்னு சொல்லல.

ரவி முடில....போதும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தர முடில !

//உப்பிட்ட(முரளி)வரை உள்ளலவும் நினையுங்கோ ஹேமா!//

நன்றி ரவி உங்களுக்கும்.முரளியை உள்ளம் உள்ள அளவும் நினைப்போம் எல்லோரும்.

ஹேமா said...

ஜமால்...உண்மை ஜமால் எனக்கும் புதிய செய்திகளுடனான நல்ல உப்புப் பதிவு இது.இதுபோல நிறையவே
"சங்கச் சிந்தனைகள்" என்கிற பெயரில் நல்ல நல்ல நீதிக் கதைகள் செய்திகள் தந்திருக்கிறார்.
அப்பப்போ அவர் பெயரிலேயே தருகிறேன்.


செந்தில்...உப்பாயிருக்கா உப்புப் பதிவு !சமாளிச்சுக்கோங்க.அடுத்த பதிவில சமப்படுத்திக்கலாம்.


கலா....கலா நான் ரவியைக் கலாய்க்க நீங்க என்னைக் கலாய்க்கிறீங்களா !கலா ரவி ஒரு புதுப் பேர் வச்சிருக்கிறார் உங்களுக்கு !என்னன்னு சொல்ல மாட்டேன்.ஒரு பதிவு சோகமா இருந்தா அடுத்த பதிவு சந்தோஷமா போடலாம்தானே அதுதான் உப்புப் பதிவு.அதுக்காக என்னை "மொக்கு" எண்டு சொல்றேல்ல.ஆ...ஆ....உ..ப்...பூ....வேண்டாம் எனக்கு.


ஸ்ரீராம்....நன்றி நன்றி...எங்கள் புளொக் எல்லாருக்கும் நன்றி.


சத்ரியா....உப்புக்கதை-கடை நல்லாவேயிருக்கு.முரளி பதிவு பார்ப்பார் என்று நினைக்கிறேன்.


சின்ன அம்மிணி....அளவோட உப்புப் பின்னூட்டம் போட்டிருக்காங்க.நன்றி.


அம்பிகா...உப்புமடச் சந்திக்கும் வாறதுக்கு நன்றி தோழி.


ஜெயா...உங்களுக்குத்தான் சந்தோஷம்.இப்போ அடிக்கடி உப்புமடச் சந்தி களை கட்டுதெல்லோ !


அக்பர்...நன்றி நன்றி.


கலாநேசன்...உங்கள் அன்புக்கு நன்றி.குழந்தை நிலாவுக்கும் வாங்களேன்.


சுந்தர்ஜி....உப்புக்கு இருக்கும் மதிப்பு யாருக்கு இருக்கு சொல்லுங்கோ பார்க்கலாம் !

கலா said...

கலா நான் ரவியைக் கலாய்க்க
நீங்க என்னைக் கலாய்க்கிறீங்களா
!கலா ரவி ஒரு புதுப் பேர்
வச்சிருக்கிறார் உங்களுக்கு
!என்னன்னு சொல்ல மாட்டேன்.\\\\\\

ஹேமா அது என்ன புதுப் பெயர்?
ரவி எனக்கும் சொன்னால் நானும்
அறிந்து கொள்வேன் அல்லவா?

நல்லபெயரா?கெட்டபெயரா?
நல்லதென்றால் பரவாயில்லை..

கெட்டதென்றால் இருவரையும்
சேர்த்து 1..2...3..4..என எண்ண
வைத்துவிடுவேன்

நீங்கள் யாராவது ஒருவரில் என்
புதுப் பெயரைச் சொல்ல வேண்டும்
இல்லாவிட்டால் ......
நான் வேலை நிறுத்தம்
அதாவது பின்னோட்டம் இல்லை
அப்புறம் என் இரசிகர்கள்....
உங்களை..?????

ஹுஸைனம்மா said...

”யாரோ முரளி” - பேர் நல்லாருக்கே!!

புதிய சுவையான தகவல்கள் - நன்றி!

- இரவீ - said...

//ரவி எனக்கும் சொன்னால் நானும்
அறிந்து கொள்வேன் அல்லவா?//

அக்கா வணக்கம் ... "அரிந்து கொல்லுவீங்கலா" உண்மயா இது யேதோ உள் நாட்டு இல்ல வெளி நாட்டு சதி மாதிரி தெரியுது...
யெதுக்கும் நீங்க உங்க அக்கா ஹேமாவுக்கு கடிதம் (அ) தந்தி ஒன்னு அனுப்பி விவரம் கேக்கனும்.

- இரவீ - said...

//கெட்டதென்றால் இருவரையும்
சேர்த்து 1..2...3..4..என எண்ண
வைத்துவிடுவேன்//

4..3..2..1 னு அடுத்த பாடமா???

- இரவீ - said...

//நீங்கள் யாராவது ஒருவரில் என்
புதுப் பெயரைச் சொல்ல வேண்டும்
இல்லாவிட்டால் ......
நான் வேலை நிறுத்தம்
அதாவது பின்னோட்டம் இல்லை
அப்புறம் என் இரசிகர்கள்....
உங்களை..????? //

நான் கூட இரசிகர்ல ஒரு ஆள் ...
ஹேமா... எங்க கோவம் பாத்தது இல்ல நீங்க... கொட்டினா தாங்க மாட்டீங்க... ஒழுங்கா சொல்லுங்க. நீங்க அக்காவ திட்டனும்னா கூட நேரா திட்டளாம்... இப்டி ஏன் ????

தமிழ் மதுரம் said...

பாட்டி..வயசு போகப் போக சமூக சிந்தனைகள் அதிகரிக்குது. உண்மையோ?

yarl said...

உப்பு மடசந்தியில் உப்பு. அருமை. "யாரோ முரளியை" "அன்புடன் முரளி" யாக மாற்றுவோம். இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் ஹேமா.

ஹேமா said...

மங்கை நன்றி...உப்புப் பதிவு எனக்கும் பிடிச்சிருக்கு.நல்ல தவல்கள்.உண்மையில் அன்புடன் முரளிக்கு மீண்டும் நன்றி.யாழ் உங்களுக்கும் கூட !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP