ஐடியா மணிக்கும் அதிராவுக்குமான சங்கிலிச் சண்டை முடியாத சண்டையாய்த் தொடருது.அது நிரூவின் பக்கத்திலயும் போட்டு மணியின் மானத்தை இன்னும் வாங்கியாச்சு.இப்பத்தான் தெரியுது அவர் பல்லும் விளக்காத ஒரு ஆள் என்று.அதுதான் அவரின்ர பதிவின் பக்கம் போற நேரம் ஒரே நாத்தம்.என்னடா என்ர வீட்ல எலி இல்லையே எண்டு யோசிச்சன்.இப்பத்தான் விளங்குது எங்கயிருந்து நாத்தம் வந்த்து எண்டு.நன்றி நிரூவுக்கு.இனி மூக்கைப் பொத்திக்கொண்டு போக நினைச்சிருக்கிறன் அவரின்ர பக்கத்துக்கு.வேற ஏதாவது வழி இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கோ.இதில இன்னொன்றும் தெரியுமோ பல்லு விளக்காம இருக்கிறதுக்கு பெரிசா ஒரு காதல் கதையையே சொல்லிட்டார் மணி.நான் என்ன சொல்ல வந்தேனென்றால்.....இவர்களது சங்கிலிக் கதை என் சித்தப்பா ஒருவரை அடிக்கடி ஞாபகப்படுத்துது.அவர் இறந்து 2 வருடமாகிவிட்டது.
எனக்கொரு முருகானந்தச் சித்தப்பா முருகானந்தச் சித்தப்பா எண்டு ஒருத்தர் இருந்தார்.தம்பி எண்டும் ஒரு பெயரும் இருந்தது இவருக்கு.நல்ல தவில் வித்வான்.நல்லாத்தண்ணியடிப்பார்.தண்ணியடிச்சால்தான் அன்பு பெருகி ஓடும்.சேவகங்களுக்குப் போனால் அங்கு சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுத்து விடுவார்கள்.நடுச்சாமத்தில் லாந்தர் விளக்குப் பிடிச்சபடி வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி நல்ல நித்திரையாய்க் கிடக்கும் எங்களையும் எழுப்பி வச்சுக்கொண்டு சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ தூங்கி விழும் எங்களுக்குச் சாப்ப்பாடு தீத்தி விடுவார்.அந்த லாந்தரை கிணத்துக்கட்டில் வைத்துக்கொண்டு இரவு இரவாக உடுப்புத் தோய்ச்சுக் காயவிடுவார்.இப்பிடி நிறைய நகைச்சுவையான நல்ல ஒரு மனிதர்.கெட்ட பழக்கம் சாரயம் குடிக்கிறதுதான்.
அநேகமாக யோகன் பாரிஸ் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவரை.நல்லூரடி முத்திரைச் சந்தையடி நல்லரசு என்பவரின் மகன் இவர்.ஆரம்பகாலத்தில் மூளாய் பாலகிருஷ்ணன் அவர்களிடமும்,பிறகு கோண்டாவில் கானமூர்த்தி அவர்களிடமும் தவில் வாசித்தவர்.இந்த இடையில் அளவெட்டி பத்மநாதன் அவர்களிடம் தவில் வாசித்த காலம்.இங்குதான் அந்தச் சங்கிலிக் கதை......
இவர் குழப்படி என்று நகைகள்,தவில் எல்லாமே பத்மநாதன் அவர்கள் வீட்டில்தான் இருக்கும்.கச்சேரிக்குப் போகும் நேரம் மட்டுமே கைக்குக் கிடைக்கும்.அவரது சம்பளம்கூட சித்தியிடம் நேரடியாகப் பத்மநாதன் அவர்களே வீட்டுக்கு வந்து கொடுத்துப் போவார்கள்.இப்படி இருந்த காலத்தில்தான் சித்தப்பாவுக்கு அபாரமாக மூளை வேலை செய்திருக்கு.இடைக்கிடை சித்தி காசு கொடுப்பா.அதில் மட்டுமே தண்ணியடிச்சுகொண்டு சாமிமாதிரி...நல்ல பிள்ளையாம்.
ஒரு நாள் சித்தி கவனிச்சிட்டு அம்மம்மாவோடு கதைச்சிருக்கிறா."உந்தச் சங்கிலி முந்தி நீளமாவெல்லோ இருந்தது......"எண்டு.கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் விட்டு வச்சிருக்கினம் மனுசனை நம்பி.ஆனால் வர வர உண்மையாவே ஒரு வருஷத்திற்குள் சங்கிலி சின்னனாகிப் போய்க்கொண்டிருந்திருக்கு.பார்த்தால் அதிலுள்ள ஒற்றை ஒற்றை மணியாகக் கழற்றி வித்துக் குடிச்சிருக்கிறார்.ஆனாக் கேட்டால் "இல்ல அது அப்பிடியேதான் முதலும் இருந்தது எண்டு....." எண்டு சொல்லிட்டு அதைப் பற்றி எதுவுமே தெரியாயதுமாதிரிப் போய்விடுவாராம்.
மணி,அதிரா சங்கிலிச் சண்டையில் என் சித்தப்பாவை ஞாபகப் படுத்தினேன்.வெற்றிலை அதிகம் போடுவதாலேயே புற்றுநோய் வந்து எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.அவரை நினைப்பதில் சங்கடமும் சந்தோஷமும்.நன்றி மணிக்கும் அதிராவுக்கும் !
எனக்கொரு முருகானந்தச் சித்தப்பா முருகானந்தச் சித்தப்பா எண்டு ஒருத்தர் இருந்தார்.தம்பி எண்டும் ஒரு பெயரும் இருந்தது இவருக்கு.நல்ல தவில் வித்வான்.நல்லாத்தண்ணியடிப்பார்.தண்ணியடிச்சால்தான் அன்பு பெருகி ஓடும்.சேவகங்களுக்குப் போனால் அங்கு சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுத்து விடுவார்கள்.நடுச்சாமத்தில் லாந்தர் விளக்குப் பிடிச்சபடி வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி நல்ல நித்திரையாய்க் கிடக்கும் எங்களையும் எழுப்பி வச்சுக்கொண்டு சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ தூங்கி விழும் எங்களுக்குச் சாப்ப்பாடு தீத்தி விடுவார்.அந்த லாந்தரை கிணத்துக்கட்டில் வைத்துக்கொண்டு இரவு இரவாக உடுப்புத் தோய்ச்சுக் காயவிடுவார்.இப்பிடி நிறைய நகைச்சுவையான நல்ல ஒரு மனிதர்.கெட்ட பழக்கம் சாரயம் குடிக்கிறதுதான்.
அநேகமாக யோகன் பாரிஸ் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவரை.நல்லூரடி முத்திரைச் சந்தையடி நல்லரசு என்பவரின் மகன் இவர்.ஆரம்பகாலத்தில் மூளாய் பாலகிருஷ்ணன் அவர்களிடமும்,பிறகு கோண்டாவில் கானமூர்த்தி அவர்களிடமும் தவில் வாசித்தவர்.இந்த இடையில் அளவெட்டி பத்மநாதன் அவர்களிடம் தவில் வாசித்த காலம்.இங்குதான் அந்தச் சங்கிலிக் கதை......
இவர் குழப்படி என்று நகைகள்,தவில் எல்லாமே பத்மநாதன் அவர்கள் வீட்டில்தான் இருக்கும்.கச்சேரிக்குப் போகும் நேரம் மட்டுமே கைக்குக் கிடைக்கும்.அவரது சம்பளம்கூட சித்தியிடம் நேரடியாகப் பத்மநாதன் அவர்களே வீட்டுக்கு வந்து கொடுத்துப் போவார்கள்.இப்படி இருந்த காலத்தில்தான் சித்தப்பாவுக்கு அபாரமாக மூளை வேலை செய்திருக்கு.இடைக்கிடை சித்தி காசு கொடுப்பா.அதில் மட்டுமே தண்ணியடிச்சுகொண்டு சாமிமாதிரி...நல்ல பிள்ளையாம்.
ஒரு நாள் சித்தி கவனிச்சிட்டு அம்மம்மாவோடு கதைச்சிருக்கிறா."உந்தச் சங்கிலி முந்தி நீளமாவெல்லோ இருந்தது......"எண்டு.கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் விட்டு வச்சிருக்கினம் மனுசனை நம்பி.ஆனால் வர வர உண்மையாவே ஒரு வருஷத்திற்குள் சங்கிலி சின்னனாகிப் போய்க்கொண்டிருந்திருக்கு.பார்த்தால் அதிலுள்ள ஒற்றை ஒற்றை மணியாகக் கழற்றி வித்துக் குடிச்சிருக்கிறார்.ஆனாக் கேட்டால் "இல்ல அது அப்பிடியேதான் முதலும் இருந்தது எண்டு....." எண்டு சொல்லிட்டு அதைப் பற்றி எதுவுமே தெரியாயதுமாதிரிப் போய்விடுவாராம்.
மணி,அதிரா சங்கிலிச் சண்டையில் என் சித்தப்பாவை ஞாபகப் படுத்தினேன்.வெற்றிலை அதிகம் போடுவதாலேயே புற்றுநோய் வந்து எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.அவரை நினைப்பதில் சங்கடமும் சந்தோஷமும்.நன்றி மணிக்கும் அதிராவுக்கும் !
ஓஷோ ஜோக்.
ஹெர்னி மிக விரைவாக காரை ஓட்டிக் கொண்டுசென்றான்.பின்னால் தொடர்ந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் அவனை மறித்து...
'சார், இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.
'ஒ அப்படியா, நான் கூட எங்கே என் காதுதான் செவிடாயிருச்சோன்னு பயந்து போயிட்டேன்' என்றான்.
93 comments:
//...இவர் குழப்படி என்று ......//
ஊரில இப்பிடி குழப்படி விட்டவையள் எத்தனை பேர், ஹேமா :))))
நல்லதோர் ஞாபகப்படுத்தல் ஹேமா.
அது சரி எங்கட ஆட்கள் பத்தி நீங்க தொடக்கத்தில சொல்றது.... உண்மையோ?
ரதி இப்பிடி ஒரு பதிவுக்கு வந்ததே பெரிய விஷயம்.வாங்கோ வாங்கோ.
பின்ன பொய் சொல்றனே.மணி அதிரான்ர கழுத்தில கிடந்த 5 பவுண் தங்க...தங்கச் சங்கிலியை எடுத்திட்டாராம்.அது கன நேர்த்திக்கடனில கடனாய்க் கிடக்கு முருகனுக்கு.எடுத்தது எண்டு நிரூபிச்சும் மணி மாட்றமாதிரி இல்ல.அதிரா தேம்சுக்க பிடிச்சுத் தள்ள ரெடியா இருக்கிறா.நாங்கள் கொஞ்சப்பேர் பொய்ச்சாட்சி சொல்லி மணியைக் காப்பாத்தி வச்சிருக்கிறம்.
இப்பிடி உண்மையான பெரி......ய கதை அவையளின்ர சங்கிலிக் கதை ரதி.நான் இப்ப கொஞ்சம் உதுகளுக்கும் நேரம் செலவழிக்கிறன்.அதுதான் தெரிஞ்சு வச்சிருக்கிறன் ரதி !
புது மாதிரியான திருட்டு ஹேமா. சுவையாக சொன்னீர்கள்.
ஹய்யோடா... உங்கட சித்தப்பா புத்திசாலிதான். நல்ல டெக்னிக்கயில்ல கண்டுபுடிச்சிருக்கார். கடைசியில கொடுத்திருக்கற ஜோக் வாய்விட்டுச் சிரிக்க வெச்சுது ஃப்ரெண்ட்!
சுவையான பதிவு ஹேமா :-)
சித்தப்பாவின் ஐடியா சூப்பர்.
அதிரான்ர கழுத்தில கிடந்த 5 பவுண் தங்க...தங்கச் சங்கிலியை எடுத்திட்டாராம்.
அப்படி இல்லியே ஹேமா பூஸாரின் கழுத்திலிருந்தல்லோ சங்கிலி எடுத்தருன்னு கதை போயிட்டு இருக்கு
தமிழ்...என் சித்தப்பாவை உங்களைக்கூட நினைக்க வச்சிட்டேன் பாத்தீங்களா !
கணேஸ்...வாங்க ஃப்ரெண்ட்.சித்தப்பா சந்தோஷப்படுவார் உங்க கருத்துப் பார்த்து.பூலோகத்துலயும் தொடரப்போறார்....!
விச்சு...அவரைத் திட்டினவங்கதான் அதிகம்.உங்க கருத்து அவரைச் சந்தோஷப்படுத்தும் !
லஷ்மி..அம்மா என் தவறைச் சரிப்படுத்திட்டீங்க.நாம் பூஸாரெண்டு நினைச்சிட்டு எழுதாம விட்டிட்டேன்.நன்றி லஷ்மிம்மா !
ரதி...ஒரு திருத்தம்.அதிரான்ர பூஸாரின்ர கழுத்தில கிடந்த 5பவுண் சங்கிலியைத்தான் மணி எடுத்தாராம் எண்டு ஒரு புரளி !
sithappa!
anupavam nalla manitharkalellaam-
thanniyilathaan ketta per edukkuraanga!
joke !
sirippu sirappu!
முதல் பாதி
கைகலப்பு...
கலாய்ப்பு...இடையில்
சித்தப்பு...பின் பாதி
கலகலப்பு...
தொடருங்கள் ஹேமா ...-:)
இரவு வணக்கம் ஹேமா!///எனக்கொரு முருகானந்தச் சித்தப்பா முருகானந்தச் சித்தப்பா எண்டு ஒருத்தர் இருந்தார்.தம்பி எண்டும் ஒரு பெயரும் இருந்தது.///அப்ப அவருக்கு ரெண்டு பேரோ?இல்லாட்டி ரெண்டு பெரும் ஒரே ஆளோ????
அந்த "உங்கட" சித்தப்பாவை எனக்கும் தெரியும்.அந்தக் காலத்தில எங்கட ஊருக்கு ஒரேயொரு திருவிழாவுக்கு மட்டும் பத்மநாதன் கோஷ்டி வரும்!அதைவிட நல்லூரிலையும் பாத்திருக்கிறன்!அவரோ இப்பிடிச் செய்தவர்?ஆச்சரியமா இருக்கு!இதுக்கு கொஞ்சம் விட்டுப் புடிச்சிருக்கலாம்.
பொதுவாகவே,நாதஸ்வரம் தவில் வாசிப்போர் வெற்றிலை,பாக்குக்கு அடிமையானவர்கள்.அதோடு குடியும் சேர்ந்தால்.....................!
வாங்கோ சீனி.குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லித்தானே பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் !
ரெவரி....என் பதிவு கவிதை எழுத வைக்குதோ.சந்தோஷமயிருக்கு !
வாங்கோ அப்பா யோகா.என்ன நக்கலாக்கும்.ஒரு ஆளுக்கு 2 பேர்.உங்களை அப்பா,ஐயா,தாத்தா,அண்ணா,அப்பு எண்டு சொல்றமாதிரி !
ம்ம்...உங்களுக்கும் தெரியுமோ சித்தப்புவை.நல்லூர்த் திருவிழா 25 நாளும் கண்டிருப்பீங்கள்.பத்மநாதன் தானே நல்லூர்க்கந்தனின் ஆதீன விதவான்.சித்தப்பவைப் பார்ப்பவர்கள் பாவி என்கிற அளவுக்கு சரியான நல்ல மனுஷன் !
ஐயோ ஹேமா அக்காள் அந்த நல்லமனுசன் எங்க ஊர் அம்மன் கோயில் திருவிழாவிலும் ராகுலின் தேர்த் திருவிழாவிலும் வாசித்து இருக்கின்றார் பாவிப்பயல் ராகுல் அவருக்கு காசு வெற்றிலையில் வைத்து தட்சனை கொடுத்து இருக்கின்றான் என்று என்னோட சொல்லீட்டுப்போறான் skipe ili. ஊரில் அழவெட்டி பத்மாநாதன் ,காணமூர்த்தி,பஞ்சமூர்த்தி விடயம் அடுத்த தொடரிதான் சொல்ல இருந்தன் பதிவு நீண்டம் என்பதால்! மனசு கனக்குது ஹேமா அவர் சித்தாப்பா என்கின்ற போது! எங்க ஊரில் மேளம் தவில் வாசிக்காத கோண்டாவில் வித்துவான்கள் இல்லை அந்தளவு எங்கள் ஊர்க்காரங்க யாழில் கடைகள் கட்டியாண்ட வியாபாரிகள்!
கும்மிப்பதிவில் இப்படி தெரிந்த சில உறவுகளைச் சொன்னால் எப்படி பின்னூட்டம் போடுவது மன்னித்துவிடுங்க மனசு கனக்குது இன்னும் நாதஸ்வர் கோஸ்ரியைப்பற்றி என்னிடம் ராகுல் கேட்ட அத்தனை இன்பதுன்பங்களைச் சொல்ல வேண்டி இருப்பதால் இந்த பதிவில் என்னால் கும்ம முடியாது பிறகு கொப்பி பேஸ்ட் ஆகிவிடும். நான் பலதடவை நகைச்சுவையாக கோண்டாவில் பற்றி என் தொடர் சொல்லும் என்று சில பதிவுகளில் விளம்பரம் செய்துவிட்டேன் ஹேமா அக்காள்!மன்னியுங்கோ!
நேசன்...சித்தப்பாவும் நகைச்சுவையை ரசிப்பவர்தான்.அவர் இல்லாத நேரத்திலும் நினைக்க வைக்கிறாரே.நான் இந்தப் பதிவைக் கலகலப்பாகத்தான் நினைத்துப் பதிவிட்டேன்.பாருங்களேன் உங்கட ராகுலுக்கும் தெரிஞ்ச ஆளின்ர பதிவு போட்டிருக்கிறன்.சந்தோஷமா ஏதும் சொல்லாமப் போறியள் !
ஓஓஓ...கவலையான பதிவெண்டே ஆக்கள் வராமப் போனவையள்.சரியாப்போச்சு !
இந்த நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்துவான்கள் பற்றி ராகுலின் இரு இடங்களில் விபரிக்க இருப்பதால் எந்த பின்னூட்டமும் இனிப் போட்டமாட்டன் ஹேமா!
ச்சும்மா ஒரு கலகலப்புக்கு எழுதினா...............நான்,கண்ணைக் கட்டிக் கோவம்,§ கண் விழுந்த பாவம் § பாம்பு வந்து(என்னை)கொத்தும்!ஹ!ஹ!ஹா!!!!!!!!
Guten Nacht!!!!!Bonne Nuit!!!!!
அப்புக்கு கோவம் வந்திட்டுதாம்.பாம்பு வந்து கொத்துமெண்டு வேற தனிய இருக்கிற என்னைப் பயமுறுத்துறார்.நான் இரவைக்கு நித்திரை கொள்றேல்லையே !
பதிவுலகம் ஒரு நாதஸ்வர கலைஞனின் இன்பதுன்பம் தெரியாது அதுவும் தாண்டி என் தொடரில் முக்கியமான ஒரு ஜீவன் இன்னும் சில அங்கம் கடந்து வரும் பெயர் மாற்றத்துடன் அந்தவித்துவானின் துயரம் இந்த சில கும்மிப் பதிவாளருக்குத் தெரியாமல் போகலாம் மலையகம் மறக்கலாம்! தனிமரமும் ,ராகுலும் அவர்களின் குரலாகத்தான் இந்தப் பதிவுலகில் இருக்கின்றோம் !என்பதிவை வெளியிட சற்றுமுன்னர் கூடஅவன் கூட skipe வழியாக ஒரு முக்கிய நூல் விசயமாக அதுவும் இந்த (உங்கள் )சித்தப்பாபோல அவர் நேரில் செய்த சம்பசனையை எப்படி மெருகூட்டலாம் என்ற போது அவன் சொன்ன விடயத்தை நீங்கள் ஏழுதியதைக் கூட நானும் வாசிக்கவில்லை அவனுடன் பிசியாகப் பேசியதால்!
யோகா ஐயா என்னை சில இடங்களில் வாயை மூடு என்று சொல்லுகின்றார் என்னால் முடியாது இளரத்தம் துடிக்குது!ஹேமா! ஆனாலும் தொடரை தவிர்க்க முடியாமல் தொடரவேண்டி இருக்கு!
யோகா அப்பா உலக அனுபவம் கண்டவர் நேசன்.அவர் சொல்றதும் சில சமயங்களில சரியாய்த்தான் இருக்கும்.எனக்கும் இந்தப் பயம் இருக்கு.சில விஷயங்களைச் சொல்லும்போது ஒரு சரியான அணுகுமுறையோடு சொல்லவேணும் மற்றவர்களைப் பாதிக்காமல்.ஆனால் சொல்ல வந்த்ததையும் வடிவாகச் சொல்லவேணும்.இதுக்கு அனுபவம் நிறையவே தேவையாயிருக்கு !
யோகா ஐயாவும் கேளுங்கோ சில நேரம் அந்த ஜெயந்தி இப்படியும் இருக்கலாம்(மன்னிக்கவும் மனசு ஹேமா பதிவால் சரியாக எதையும் ஒருமுகப்படுத்த முடியவில்லை ராகுல் வேற பேசனும் என அழைப்பில் வாரான்!இனிய உறக்கம் கண்களைத் தழுவட்டும்!
ஹாய் இதோ நானும் வந்திட்டேன். யாரெல்லாம் இன்னும் தூங்காம இருக்கிறிங்க கையை உயத்துங்கோ பார்க்காலாம்
நகைச்சுவைக்கும் சீராளிக்கும் இடையில் சில வித்தியாசம் இருக்கு இது கும்மிப்பதிவாளருக்கும், ஈழத்து இலக்கியத்தை தூற்றும் மோதாவிகளுக்கும் தெரியாமல் போகலாம் தனிமரமும்,ராகுலும் நன்கு அறிவார்கள் சீராளியில் சிந்தும் இரத்தம்!
நான்...நான் நான் மட்டும்தான்.அப்பாவும்,நேசனும் வந்திட்டுப்போட்டினம்.இப்ப நித்திரை.மற்றவையளுக்குப் பிடிக்கேல்லையாக்கும் வரேல்ல இந்தப்பக்கம் !
அம்பலத்தார் நானும் ராகுலும் ஒரே நேரத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றோம் அப்ப ரெண்டு கை இருக்கு!
ஹேமா said...
//நான்...நான் நான் மட்டும்தான்.அப்பாவும்,நேசனும் வந்திட்டுப்போட்டினம்.இப்ப நித்திரை.மற்றவையளுக்குப் பிடிக்கேல்லையாக்கும் வரேல்ல இந்தப்பக்கம்//
!Don´t worry Hema நான் எனக்குப் பிடித்த எல்லா இடத்திற்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவன்.
இங்கையும் சங்கிலியே. அதிராவின்ரை சங்கிலியை ஆளாளுக்கு தூக்கிகொண்டு ஓடுறியளோ. பாவம் அதிரா திருப்பிக்கொடுத்துவிடுவமோ.
தனிமரம் said...
//அம்பலத்தார் நானும் ராகுலும் ஒரே நேரத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றோம் அப்ப ரெண்டு கை இருக்கு!//
ஆகா புரியுது.
அதிரான்ர சங்கிலியும் மணியத்தாருமெண்டு லங்காஸ்ரீ நியூஸ்லகூட இருந்திச்சே கவனிச்சீங்களோ !
ஆகா....நேசன் ரெண்டு ஆளா இருக்கிறார் எண்டு சொல்றீங்களோ அம்பலம் ஐயா(குழப்பிவிடுவம் ஆக்களை) !
அம்பலத்தார் அவன் ராகுல் ஏழுத மாட்டான் என் நண்பன் ஆனால் தனிமரம் எழுதும் அவன் நண்பன் நான்!
சே ஹேமா எனக்கு முன்னமே உங்கட சித்தப்பாவை தெரியாமல் போச்சுது. நல்ல ஐடியாக்காரனாக இருந்திருப்பார்போல தெரியுது. அவரிடம் கேட்டு நல்ல ஐடியாக்களாக தெரிந்துவைத்திருந்தால் இப்ப தொழிலுக்கு...... உதவியாக இருந்திருக்கும். Just missed
இப்பகூட என்ன வந்திட்டுது.சித்தப்பாவியைக் கூப்பிட்டுக் கதைப்பமே !
கூட்டுக்கள்ளரையும் சித்தப்பாவி சிலநேரம் காட்டிக் குடுக்கும் !
தனிமரம் said...
//அம்பலத்தார் அவன் ராகுல் ஏழுத மாட்டான் என் நண்பன் ஆனால் தனிமரம் எழுதும் அவன் நண்பன் நான்!//
அதுவும் சரிதான் இடதுகையிற்கு எழுதத்தெரியாது வலதுகைதான் எழுதும்
ஹேமா said...
//இப்பகூட என்ன வந்திட்டுது.சித்தப்பாவியைக் கூப்பிட்டுக் கதைப்பமே !//
என்ன ஹேமா என்னை இன்றைக்கு நிம்மதியாக நித்திரைகொள்ளவிடுகிறது இல்லை என்று முடிவுபண்ணிவிட்டியளோ. படுக்கப்போற நேரத்தில சித்தப்பாவியை கூப்பிடுறன் என்று சொல்லுறியள்.
என்னை மட்டும் உங்கட கூட்டாளி பாம்பெண்டு பயமுறுத்திப்போட்டு டொச்சிலயும்,ப்ரெஞ்சிலயும் மாறி மாறி இரவு வணக்கம் சொல்லிட்டுப் போயிருக்கிறார்.நானும் முடிஞ்ச ஆக்களைத்தானே வெருட்டலாம்.நீங்களும் சித்தப்பான்ர ஐடியா வேணுமெண்டீங்கள்.அதுதான்....!
ஹேமா said...
//ஆகா....நேசன் ரெண்டு ஆளா இருக்கிறார் எண்டு சொல்றீங்களோ அம்பலம் ஐயா(குழப்பிவிடுவம் ஆக்களை) !//
ஓம் ஹேமா, குழப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பம். ஹி ஹி
நேசன் குழம்பித்தான் நிக்கிறார்.பாருங்கோ பின்னூட்டங்கள் ஒன்றிரண்டை.ராகுல் + நேசன்.
Yoga.S.FR said...
//..............நான்,கண்ணைக் கட்டிக் கோவம்,§ கண் விழுந்த பாவம் § பாம்பு வந்து(என்னை) கொத்தும்!ஹ!ஹ!ஹா!!!!!!!!//
என்ன யோகா சின்னப்பிள்ளையளை இப்படியே வெருட்டுறது. இங்fகை பாருங்கோ ஹேமா கண்ணை கசக்கிக்கொண்டு அழுதுகொண்டு நிற்கிறா.
சரி சரி ஹேமா அழாதையுங்கோ நான் யோகா அப்பாவுக்கு சொல்லிப்போட்டன் இனி வெருட்டமாட்டார்.
ஹேமா said...
//நேசன் குழம்பித்தான் நிக்கிறார்.//
என்ன நேசன் இன்று நல்ல வெயில் அதுதான் நிறைய தண்ணி கு(அ)டிச்சிட்டியளோ
அடுத்த நேசன்ர பதிவில பால்கோப்பி குடிச்சா எனக்குப் பாதியை வைக்கச்சொல்லுங்கோ யோகா அப்பாவை.வெருட்ற ஆக்களுக்குப் பாதிக் கோப்பிதான்.
நேசனைக் குழப்பாதேங்கோ.அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் ஒண்டும் செய்யேலாது.எனக்கோ அரசியல் பெரிசாத் தெரியவும் மாட்டுது.நிரூட்ட சொல்லி பிளாஸ்டர் வாங்கி வாயில ஒட்றவரைக்கும் கஸ்டம். சொல்லிப்போட்டன் !
Ok Good night. Bye
இரவு சந்தோஷமாயும் அமைதியாயும் இருக்கட்டும் அம்பலம் ஐயா.நானும் படுக்கப்போறேன் !
நான் தண்ணி அடிக்கும் ஆள் இல்லை யோகா ஐயா! குழப்பியும் இல்லை தெளிவாகத்தான் தான் இருக்கின்றேன் இப்ப பாரீஸ் நேரம் இரவு 10.38 சரியா ஆனால் இந்த ராகுல் பதிவுலக அரசியலில் வரமாட்டான் அவன் இடதுசாரிக்காரன் என்றாலும் இந்த தொடர் முடிய தனிமரம் போய் விடும் என நினைக்கின்றேன் முடிவு பார்ப்போம்! ஹீ ஹீ இப்போது.10.40
ஹேமா said...
//நேசன் குழம்பித்தான் நிக்கிறார்.//
என்ன நேசன் இன்று நல்ல வெயில் அதுதான் நிறைய தண்ணி கு(அ)டிச்சிட்டியளோ
//குடுமத்தில் கும்மியடிப்பதே முடிவாப்போச்சு அம்பலத்தார் இருங்கோ செல்லம்மா அக்காளிடம் போட்டுக்கொடுக்கின்றன்!ஹீ
அக்காள் ஒரு பால்க்கோப்பி கிடைக்குமா ??நான் தான் 50 பின்னூட்டம்!.
50 ஆவது ஷொட்டில் அம்பலம் ஐயா செல்லம்மா மாமியிடம் அகப்பட்டுக்கொள்கிறார்.போட்டுக் கொடுத்தவர் நேசன் !
நேசன்....பிடியுங்கோ பால்க்கோப்பியோட பருத்தித்துறை வடை.சூப்பரா இருக்கும் !
அமுதமலையில் பொழியும் நிலவு !பாடல் கேளுங்கோ ரகுவரன் நடிப்பை பாரூங்கோ !
நான் வடை சாப்பிடுவது இல்லை என் இன்னொரு மச்சாள் பருத்தித்துறைமச்சாள் !அவள் ஒரு ரீச்சர் நான் ஒரு விவசாயி!ஹீ ஹீ
பாட்டு லிங்க் எங்க.காணேல்ல !
ஓஓஓஓ...வடைக்காதல் கதையோ.காதலுக்காக வடை சாப்பிடாமல் விட்ட நேசனோ !
பால்கோப்பி போதும் இந்த அமுதமழை பொழியும் நிலவில் கேட்டுக்கொண்டே குடித்துக்கொண்டு வேலையில் இணைகின்றேன்!இனிய உறக்கம்கண்களுக்கு!
இரவு வேலையா நேசன்.பத்திரமா இருங்கோ.நானும் நித்திரைக்கு ரெடி.சந்திப்போம் பதிவுகளோட !
.நாளைக்காலையில்
கண்டிப்பாக இணைந்த்துவிடுகின்றேன்!
தனிமரம் said...
// வடை சாப்பிடுவது இல்லை.... மச்சாள் ரீச்சர்.. நான் ஒரு விவசாயி!ஹீ ஹீ//
நேசன் இவற்றுக்கான தொடர்பு & விளக்கம் Please
கோப்பியை நேசன் பறித்துக்கொண்டு ஓடியதற்கு வன்மையான கண்டனங்கள்.
திருட்டில் புது யுத்தி தெரியுது. எதுக்கும் ‘மூளை’யில போட்டு வைக்கிறேன். நாளை பின்ன பயன்படலாம் பாருங்க.
இனிய காலை வணக்கம் ஹேமா! புதன்கிழமை வாழ்த்துக்கள்! :-))
முதலில் மன்னிக்கவும்! இந்தப் பதிவை நான் மொபைலில் படிக்கும் போது நேரம் இரவு நேரம் 11.30!
நேற்று கடும் வேலை! மற்றும் வீட்டுக்குவர தாமதமாகியதால், கவனிக்கவே இல்லை!
பொறூங்கோ, திரும்பவும் ஒருக்கா முதலேந்து படிக்கிறன்!
ஐடியா மணிக்கும் அதிராவுக்குமான சங்கிலிச் சண்டை முடியாத சண்டையாய்த் தொடருது. ////////
ஹா ஹா ஹா சங்கிலிப் பிரச்சனை பழைய பிரச்சனை ஹேமா! சங்கிலியில் ஆரம்பிச்சு, இப்ப கடை போடுற அளவுக்கு நிறைய பொருட்கள் எடுத்தாச்சு! ஹி ஹி ஹி ஹி இனி பென்னாம் பெரிய கிரேன் கொண்டு போய், அவாவின்ர வீட்டைத் தூக்கிக்கொண்டு வந்து, பாரிஸில் வைக்கப் போறன்!
அவா வேலை முடிஞ்சு வந்து பார்ப்பா! வீடு இருந்த இடத்தில வெறும் வெட்ட வெளிதான் இருக்கும்! ஹி ஹி ஹி ஹி வடிவேலு ஒரு படத்தில கிணத்தைக் காணேலை எண்டு போலீஸ்ல கம்ப்ளைன் குடுப்பார்!அதைக் கேட்டு போலீஸ் அப்செட்டாகி, இன்ஸ்பெக்டரா இருந்தவர், டீ ப்ரொமோட் ஆகி, ஏட்டு ஆகிடுவார்!
அதே மாதிரி அதிராவும், லண்டன் பொலீஸ்ல “ வீட்டைக் காணேல சேர்” எண்டு கொம்ப்ளைன் குடுக்க, கடைசியில லண்டன் போலீஸ் மெண்டலாகி, கடைசியில தேம்ஸ்ல குதிக்கப் போகினம்!
உஷ்...............!! இந்த வீடு களவெடுக்கிற விஷயம் பரம ரகசியம்! அவாவுக்கு சொல்லிப் போடாதேங்கோ! :-))))))))
அது நிரூவின் பக்கத்திலயும் போட்டு மணியின் மானத்தை இன்னும் வாங்கியாச்சு.////////////////\
எனக்கு என்ன கடுப்பு எண்டா ஹேமா, நிரூபன் ஃபேஸ்புக்குக்கு ஒரு மெஸ்ஸெஜ் அனுப்பினான்
“ மச்சி, உன்னைய பாராட்டி ஒரு பதிவு போடுறன்” எண்டு! நானும் அதை அப்ப்டியே நம்பிட்டன்!
ஹி ஹி ஹி ஹி ஹி கடைசியில பார்த்தா நான் பல்லு விளக்காத த பற்றி போட்டு, மானத்தை வாங்கிட்டான்!
நல்ல வேளை, நான் மாசக்கணக்கில குளிக்காம இருக்கிறது பற்றி நிரூ ஒண்டும் எழுதேலை! அதால கொஞ்ச மானம் மிச்சம் இருக்கு! ம்.......... அதை வைச்சு சமாளிப்பம்! :-))))))
இப்பத்தான் தெரியுது அவர் பல்லும் விளக்காத ஒரு ஆள் என்று.அதுதான் அவரின்ர பதிவின் பக்கம் போற நேரம் ஒரே நாத்தம்.////////////
ஹி ஹி ஹி ஹி அடுத்த பதிவு போடேக்குள்ள, நாலைஞ்சு செண்ட் போத்தில் வைச்சு விடுறன்! எடுத்து அடிச்சுப் போட்டு பதிவ வாசியுங்கோ! ஹா ஹா ஹா !!!
இதில இன்னொன்றும் தெரியுமோ பல்லு விளக்காம இருக்கிறதுக்கு பெரிசா ஒரு காதல் கதையையே சொல்லிட்டார் மணி.///////////
அதில ஒரு பிரச்சனை ஹேமா! அந்தக் கதையில ஆதிரை டீச்சர் பற்றி சொல்லியிருந்தன்! உண்மையாவே ஆதிரை எண்டு ஒரு டீச்சர் இருந்தவா! அவாவை ஒரு மாஸ்டர் லவ் பண்ணப் போக, டீச்சர் பேசிப் போட்டா! பிறகு மாஸ்டர் சூ சைட் எல்லாம் பண்ணேல! ஆனா ஸ்கூல் மாறினவர்!
அந்தக் கதையைத் தான், கொஞ்சம் உருட்டி பிரட்டி அதில சொன்னான்! ஆனா படிக்கிற ஆக்கள் நான் பூஸாரைப் பற்றித்தான் சொல்லுறன் எண்டு நினைசவையாம்! எனக்கு கனநேரத்துக்குப் பிறகுதான் உறைச்சுது! ஏனெண்டா ஆதிரை டீச்சரின்ர பேரும், பூஸாரின்ர பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறபடியால!
எனக்கு பிறகு ஒரு கவலையாப் போய்ச்சு! பூஸார் கோவிச்சிட்டாரோ தெரியேலை! பூஸாரையும் வேற ஒன் லைன்ல காணேல!
என்ன இருந்தாலும் அவர் வந்து சொல்லும் வரை ஒரு சங்கடமாத்தான் இருக்கு :-(
காலை வணக்கம்,ஹேமா!Guten Morgan!!!!Bonjour!!!
நான் என்ன சொல்ல வந்தேனென்றால்.....இவர்களது சங்கிலிக் கதை என் சித்தப்பா ஒருவரை அடிக்கடி ஞாபகப்படுத்துது.அவர் இறந்து 2 வருடமாகிவிட்டது.:////////
அட, எங்கட சங்கிலிப் பிரச்சனையால உங்கள் சித்தப்பாவின் நினைவுகள் உங்களுக்கு வந்தது மகிழ்ச்சியான விஷயம்! எப்படி சித்தப்பாவை உங்களால மறக்கேல்லாதோ, அதே மாதிரி எங்க்ட சங்கிலி பிரச்சனையையும் உங்களால மறக்க முடியாது! ஹா ஹா ஹா !!!
ஹேமா வேலைக்குப் போறன்! அங்க இருந்து தொடர்கிறேன்! பை பை!!
தெரியாதவங்களும் கத்துக்கிட போறாங்க . ஜோக் நல்ல இருந்தது .
சங்கிலியால எப்பவுமே வம்பு தாங்க . நூதன திருட்டு .
நூதன திருட்டு .
நூதன திருட்டு .
http://www.thanimaram.org/2011/08/blog-post.html// இந்தப்பதிவில் சாய்ந்தாடம்மா பாடல் இணைத்து இருக்கின்றேன் ஹேமா!
இரவு வேலையில்லை சில சமயம் முடிவது இரவு 11.மணிக்கு ஓட்டல் வேலை!
நேசன் குழம்பித்தான் நிக்கிறார்.பாருங்கோ பின்னூட்டங்கள் ஒன்றிரண்டை.ராகுல் + நேசன்.
20 March, 2012 22:24
//அவனின் சார்பில் எழுதும் போது நேசன் தானே பதில் சொல்லனும் ஹேமா!ஹீ
அம்பலத்தாருக்கு சூடா ஒரு பால்கோப்பி கொடுங்கோ ஹேமா!
பாட்டு லிங்க் எங்க.காணேல்ல !
ஓஓஓஓ...வடைக்காதல் கதையோ.காதலுக்காக வடை சாப்பிடாமல் விட்ட நேசனோ !
சீச்சீ /அப்படி அல்ல இது நாட்டாமை பெரியதாத்தாவின் தீர்ப்பை மாற்றமுடியாது ஹீ ஹீ அவளுக்கு என்னை விட ஒரு வயது அதிகம்.ஆனால் வடை கொஞ்சம் அலர்ஜி !வாயுத் தொல்லை பருப்பு!
தனிமரம் said...
// வடை சாப்பிடுவது இல்லை.... மச்சாள் ரீச்சர்.. நான் ஒரு விவசாயி!ஹீ ஹீ//
நேசன் இவற்றுக்கான தொடர்பு & விளக்கம் Please
//ஹீ அம்பலத்தார் தூண்டில் போடுகின்றார்! நான் அவனில்லை என்றாலும், தாய்மாமா வழி மச்சாள் ஒரு ஆசிரியர் பருத்துத்துறையில் இப்பவும் இருக்கா. எனக்கும் அவளுக்கும் வயது அதிகம் என்னைவிட ஊர் திருவிழாக்கு மட்டும் கிராமம் வரும் போது வயலைக்கூட்டிக் கொண்டே காட்டுவம் வீட்டில் அவள் தாய்வழிப்பாட்டி பட்டணம் எங்களைப்பார்த்து அப்படித்தான் சொல்லுவா!ஹீ ஊர் பாலம் தாண்டி போன எங்க மாமா புரட்சி செய்து கட்டிய மாமி வீட்டில் பிரிவு செய்து விட்டா ஒரு காலத்தில் !இதுவும் குடும்ப அரசியல் அம்பலத்தார்! இன்னும் பல விடயங்கள் என் நண்பன் ராகுல் சொல்வான் பொறுங்கோ!
சித்தப்பாவின் கழுத்துச் சங்கிலி எப்படி இடைகுறைந்தது என்று எனக்குத் தெரியும் பதில் பிறகு வேலை அதிகம்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சங்கிலிக் கதைதான், சங்கிலி போல தொடருதே தவிர, என் சங்கிலி கிடைத்த பாடில்லையே.. அதில இப்போ சித்தப்பாவின் கதையைச் சொல்லி.. எனக்கு நித்திரை வராமல் பண்ணிட்டீங்களே ஹேமா....:))).. நான் களவுபோகுமெனக் கனவிலயும் நினைச்சிருக்கேல்லை:)) அதனால அளவெடுத்து வைக்கவில்லையே.... ஆண்டவா இது என்ன புதுசா வந்திருக்கிற சோதனை:)))?:
//ஹா ஹா ஹா சங்கிலிப் பிரச்சனை பழைய பிரச்சனை ஹேமா! சங்கிலியில் ஆரம்பிச்சு, இப்ப கடை போடுற அளவுக்கு நிறைய பொருட்கள் எடுத்தாச்சு! ஹி ஹி ஹி ஹி இனி பென்னாம் பெரிய கிரேன் கொண்டு போய், அவாவின்ர வீட்டைத் தூக்கிக்கொண்டு வந்து, பாரிஸில் வைக்கப் போறன்! //
அச்சச்சோ இந்தக் கொடுமையைப் படிச்சனீங்களோஓஓஓஒ?:))
ஹேமா..ஹேமா.. இது சரிவராது.. இப்பூடி நீங்கள் எல்லோரும் பொய்ச் சாட்சி சொல்லுறதாலதான்.. அவரும் இப்பூடி வழுக்கிக் கொண்டு போறது மட்டுமில்லாமல் வீட்டிலயும் எல்லோ கை வைக்கப் பார்க்கிறார்.. இனியும் நான் சும்மா இருக்க மாட்டன் பொயிங்கி எழும்பப் போறன்.... இனி மெயின் சுவிஜ்ல கை வச்சால்தான் உவர் சரிப்பட்டு வருவார்:)))
உங்கள் சித்தப்பா, குடித்தாலும் நல்ல நகைச்சுவையாளர்.
பலபேர் குடித்தாலே நகைச்சுவைதான் வரும்..
சிலர் மட்டும் தான் குடித்து விட்டு அடிப்பது. விரட்டுவது.... எனக்கு அப்படியானோரைக் கண்ணிலும் காட்டப்படாது.
நேரம் கிடைக்கவில்லை ஹேமா... இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்த்தான் மீண்டும் வருவேன்:))
// தனிமரம் said...
சித்தப்பாவின் கழுத்துச் சங்கிலி எப்படி இடைகுறைந்தது என்று எனக்குத் தெரியும் பதில் பிறகு வேலை அதிகம்//
ஹேமா... இவர்தான் கட் பண்ணிப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்... அட்ரசை எடுத்துச் சித்திக்கு அனுப்புங்கோ:))
//அந்தக் கதையைத் தான், கொஞ்சம் உருட்டி பிரட்டி அதில சொன்னான்! ஆனா படிக்கிற ஆக்கள் நான் பூஸாரைப் பற்றித்தான் சொல்லுறன் எண்டு நினைசவையாம்! எனக்கு கனநேரத்துக்குப் பிறகுதான் உறைச்சுது! ஏனெண்டா ஆதிரை டீச்சரின்ர பேரும், பூஸாரின்ர பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறபடியால!
எனக்கு பிறகு ஒரு கவலையாப் போய்ச்சு! பூஸார் கோவிச்சிட்டாரோ தெரியேலை! பூஸாரையும் வேற ஒன் லைன்ல காணேல!
என்ன இருந்தாலும் அவர் வந்து சொல்லும் வரை ஒரு சங்கடமாத்தான் இருக்கு :-(////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை நான் இதை தற்செயலாகக் கண்டேன்...:)) இல்லாவிட்டால் பார்த்திருக்க மாட்டேன், பார்த்திராவிட்டால்... பதிலும் இருந்திருக்காது... பிறகு சென் நதியில மிதக்கினம் என பேப்பரிலதான் படிச்சிருப்பம்:)).. கவலை எண்டால் கண்ணாடியோட குதிப்பினம்தானே?:)) என்ன ஹேமா?:)
எதுக்கும் ஒருக்கால் எட்டிப் பாருங்கோ ஹேமா... ஆள் ரெயினுக்குள்ள இருக்கிறாரோ என:)).
விடுங்க விடுங்க.. என்னை விடுங்க தடுக்காதீங்க.. நான் தேம்ஸ்க்குப் போறேன்.... ஏனெண்டால் இத்தனை பின்னூட்டங்கள் போட்டு என்னோடு பழகிய பின்பும் என்னைப்போய்க் கோபிச்சிருப்பனோ என தப்பாக நினைச்சிட்டினம்...
நான் எதுக்கும் “அதிராத” அதிராவாக்கும்:)))... ஆதிரை ரீச்சரையும் ஃபிரெண்ட்டாக்கிட்டால் போச்சு... இதுக்கெல்லாம் கோபம் வருமோ? அசிங்கமாக ஏதும் எழுதினால் மட்டுமே விலத்துவேன்... ஆனா கோபிக்க மாட்டேன்:)).
எனக்கு நேரம் கிடைக்குதில்லை... அதனால் நெட்டை எட்டிப் பார்க்கப்படாது என கங்கணம் கட்டிக்கொண்டு என் வேலைகளைக் கவனிக்கிறேன்:)).. அதுதான் காரணம்.
///என்ன இருந்தாலும் அவர் வந்து சொல்லும் வரை ஒரு சங்கடமாத்தான் இருக்கு :-(///////
என்ர சங்கிலியை எடுத்திட்டும் சங்கடப் படாதாக்களெல்லாம்.. இப்ப சங்கடப் படுகினம் ஹேமா... இந்தச் சாட்டை வச்சே சங்கிலியை நைஸா வாங்கித் தாங்கோவன் ஹேமா:))..
மிரட்டிப் பார்த்தாச்சு.. கோர்ட்ஸ்க்குப் போய்ப் பார்த்தாச்சு.... எதுக்கும் சரி வரேல்லை.. இனி.. மெல்லமா நல்லபிள்ளையாக்கி.. நைசாக் கேட்டுப்பார்ப்பம் என்ன:)).
வெற்றிலை அதிகம் போடுவதாலேயே புற்றுநோய் வந்து எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.அவரை நினைப்பதில் சங்கடமும் சந்தோஷமும்.நன்றி மணிக்கும் அதிராவுக்கும் ! ://///////
ஐயோ ஹேமா! உங்க சித்தப்பாவுக்கு வெத்திலை போட்டோ , புற்று நோய் வந்தது?
வெற்றிலை போட்டா புற்று நோய் வரும் எண்டு முதலும் எங்கேயோ படிச்ச ஞாபகம் இருக்கு!
ஆனா எனக்கு ஒராள் சொன்னவா, தான் வெத்திலை போடுறவாவாம்! ஒரு பிரச்சனையும் இல்லையாம் எண்டு! அவாவின்ர கதைய கேட்டு நானும் வெத்திலை போடலாம் எண்டு நினைச்சிருக்கிறன்!
ஆனா நீங்க சொல்லுறத கேட்க பயமா இருக்கு!
ஹா ஹா ஹா இப்ப நான் என்ன செய்யிறது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சங்கிலிக் கதைதான், சங்கிலி போல தொடருதே தவிர, என் சங்கிலி கிடைத்த பாடில்லையே.. /////////
பாருங்கோ ஹேமா, சங்கிலிய எங்கேயோ மிஸ் பண்ணிட்டு, ஒண்ணுமே தெரியாத அப்பாவியை, களவு என்பதை கனவில் கூட நினைக்காத ஒரு அப்புராணியை, சூது வாது அறியாத ஒரு பச்சப் புள்ளையை, பின்னேரம் 6 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியால போகாத ஒரு பால்குடி பபாவை “ சங்கிலி கள்ளன்” எண்டு சொன்னா, காணாமல் போன சங்கிலி எப்புடி வரும் எண்டு ஒருக்கா கேளுங்கோ ஹேமா!
ஹா ஹா ஹா ஹா !!!
. இனியும் நான் சும்மா இருக்க மாட்டன் பொயிங்கி எழும்பப் போறன்.... இனி மெயின் சுவிஜ்ல கை வச்சால்தான் உவர் சரிப்பட்டு வருவார்:)))//////////
ஹா ஹா ஹா என்ன செய்தாலும், அந்த சங்கிலிப் பிரச்சனை தீராது :-)))))
ஏனெண்டா அடைவு வைச்ச ரிசீட்ட அம்பலத்தார் அண்ணர் துலைச்சுப் போட்டாரம்! நம்பரும் பாடமில்லையாம்! :-)))
விடுங்க விடுங்க.. என்னை விடுங்க தடுக்காதீங்க.. நான் தேம்ஸ்க்குப் போறேன்.... ஏனெண்டால் இத்தனை பின்னூட்டங்கள் போட்டு என்னோடு பழகிய பின்பும் என்னைப்போய்க் கோபிச்சிருப்பனோ என தப்பாக நினைச்சிட்டினம்...////////
ஐ..... கோவிக்கேலையா? நல்லதாப் போய்ச்சு! அதில்லை நல்லா பழகுற ஆக்கள் எல்லாம் வெறும் அற்ப விஷயங்களுக்காக கோவிச்சுக்கொண்டு போறவை! நீங்கள் எப்படியெண்டு தெரியாதுதானே! அதான் கேட்டேன்! :-)))))
மிரட்டிப் பார்த்தாச்சு.. கோர்ட்ஸ்க்குப் போய்ப் பார்த்தாச்சு.... எதுக்கும் சரி வரேல்லை.. இனி.. மெல்லமா நல்லபிள்ளையாக்கி.. நைசாக் கேட்டுப்பார்ப்பம் என்ன:)).:////////
ஹா ஹா ஹா அது என்ன நல்ல பிள்ளை ஆக்கிறது? நான் பேசிக்காவே நல்ல பிள்ளைதான்! அதுவும் 5 வயசில் இருந்தே! அவ்வ்வ்வ்வ்!!
சுவாரஸ்ய அரட்டைக் கச்சேரி. நடு இரவில் தூங்கும் குழந்தைகளை எழுப்பி உணவூட்டிய அந்த நல்ல மனிதரின் பாசம் அவரைப் புரிய வைத்தது.
மெயின் சுவிஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ல கைவைக்கப் போறன் எண்டதால பபபபபபயந்ந்ந்ந்து சங்கிலியை வள்ளி கழுத்தில போட்டிடினம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))) எங்கிட்டயேவா?:))..
சொல்றதைச் செய்வமில்ல:)))).. ஹையோ.. நான் ஒருமாதம் லீவூஊஊஊஊஊஊஊஊ அண்டாட்டிகா போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).
அந்த சண்டையில் சித்தப்பாவின் சங்கிலி நினைவுகளை பகிர்ந்தமை நல்லாதான் இருக்கு.
Post a Comment