Thursday, January 22, 2009

மீண்டும் மகளாகிறாள்(6)

தியின் சங்கடம் குமாரைச்(டக்சன்)சிந்திக்க வைத்தது.குமாரும் அம்மாவிடமும் இது பற்றி ஆலோசித்தார்.தாயாருக்கு பெரிதான விருப்பம் இல்லை.என்றாலும் "போய் இருந்து பார்த்துவிட்டுப்
பிடிக்கவில்லையென்றால் உடனே வந்துவிடு" என்று அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தார்.மூத்த மகன் ஆதலால் தாய் மனம் பிரிவை வேண்டாம் என்றது.குமார் அதைத்தொடர்ந்து அடுத்த நாளே தன் அலுவலகத்திலும் வேலை மாற்றம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.ரதியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.அதோடு அவள் அம்மா ஆகப்போகிறாள் என்கிற சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.


அடுத்து மூன்று மாதத்தில் குமாருக்கு வேலை யாழ்ப்பாணம் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கிளைக்கு மாற்றப்பட்டது.அவள் தன் கணவனுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள்.பெற்றோரின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீட்டில் இருந்தபடியால் தாய் தங்கையின் உதவியும் நிறையவே கிடைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு.குமாரின் அம்மாவும் 2 மாதத்திற்கு ஒருமுறை வந்து போய்க்கொண்டிருந்தா.இப்படியே வாழ்வில் எந்தவித சலனமும் இல்லாமல் மிகமிகச் சந்தோஷமாக வருடம் நான்கு கடந்து கொண்டிருந்தது.ரதியும் குமாரும் ஜீவா,ரஜீவன் எனும் இரண்டு குஞ்சுகளுக்குப் பெற்றோரும் ஆகிவிட்டனர்.அவர்கள் வாழ்வு இனிக்கும் தேன்கூடாய் ரசிக்கக்கூடியதாய் அழகாய் இருந்தது.


இப்படியிருக்க ஒரு சனிக்கிழமையன்று குமார் தன் சிநேகிதன் வீட்டுக்கு வசாவிளான் போய்வருவதாகச் சொல்லிப் போனார்.போனவர் ஞாயிறு அன்றும் திரும்பி வரவில்லை.காரணம்புரியாமல் இருந்தது.அந்தக் காலகட்டங்களில் இன்றுபோல கைகளில் தொலைபேசி வசதிகள் இல்லை.எனவே சரி அப்படியே தன் சிநேகிதனோடு வேலைக்குப் போய்விட்டு திங்கள் பின்னேரம் வீடு திரும்புவார் என்று காத்திருந்தனர்.


திங்களன்று மதியம்போல குமாரின் வேலை அலுவலகத்திலிருந்து குமார் வேலைக்கு வரவில்லையென்று குமாரைத் தேடிக்கொண்டு வந்தனர்.ரதிக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது.அதன்பின்னர் அம்மாவிடம் ஏதோ ரகசியமாகக் கதைத்தார்கள்.ரதிக்கு ஏதோ விபரீதம் என்று ஓரளவுக்குப் புரிந்துவிட்டது.என்ன்றாலும் மனம் அவலப்பட்டது.அம்மா முழுதாக எதையும் சொல்ல மறுத்தார்.அது ஒன்றுமில்லை என்று மட்டும் சொன்னா.அவள் தன் கணவன் சென்றதையும் அவரத் தேடி வந்தவர்களையும் தொடர்பு படுத்திப் பார்த்துக் குழம்பியிருந்தாள்.அவளது அம்மா தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெதுவாகச் சொன்னார் டக்சனுக்கு ஏதோ அடிபட்டுக் காயமாம்.யாழ்
பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
வைத்தியசாலையில் இருந்து வந்த செய்தியைத்தான் அலுவலகத்திலிருந்து வந்து சொல்லிவிட்டுப் போனார்கள் என்றா.


அதன் பின் அம்மா ரதியின் ஒன்றுவிட்ட அண்ணன் வீட்டுக்கு வைத்தியசாலை போக உதவி கேட்டுப் போவதாகச் சொல்லிப்போனா.
பிறகு திரும்புகையில் அண்ணா பெரியம்மா என 5-6 சொந்தக்காரருடன் திரும்பி வந்தார்.அப்போது அவளது அண்ணிதான் அவளை மெல்ல ஆறுதல் படுத்தி குமார் இலங்கை இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்துவிட்டார் என்று தகவல் வந்திருக்கிறது என்று என்றாலும் சரிவரத் தெரியவில்லை.அண்ணா போய் அறிந்து வருவார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தா.ரதி வாய்விட்டுக்
கதறத் தொடங்கிவிட்டாள்.அவளது சிறகுகள் பிய்க்கப்பட்டதுபோல் துடிதுடித்தாள்.உயிர் பறந்துகொண்டிருந்தது.அதன் பிறகு
நடப்பவைகள் தானாகவே நடந்துகொண்டிருந்தது.அவளிடம் அனுமதி எதுவும் கேட்காமலேயே.தந்தி கொடுக்கப்பட்டு அப்பா வந்தார்.மாமி வந்தா.உறவினர்கள் வந்தார்கள்.மாமி தன் மகனின் பிரிவை அதன் அவஸ்தையை சிங்களத்தில் சொல்லிச் சொல்லி அழுதா.எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.ரதியின் கண்ணில் இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.அவள் மரத்துவிட்டாள்.


எல்லாமே...எல்லாமே நடந்து முடிந்தது. அதில்கூடச் சிக்கல் இருந்தது.
வைத்தியசாலையில் 3 நாளாகியும் உடலைத் தர மறுத்தனர்.காரணம் அவர் விடுதலைப் புலி இயக்கத்தைச் சார்ந்தவராம்.ஏனென்றால் அவர் இராணுவத்தினர் பிடித்துக்கொண்டு போனபோது சிங்களத்தில் உரையாடியிருக்கிறார்.அவரது அடையாள அட்டையில் குமாரலிங்கம் என்கிற அவரது தமிழ்ப் பெயரே காரணம்.பின்னர் அதற்கு எத்தனையோ அத்தாட்சிகள் காட்டியே நான்காம் நாள் உடல் தகனம் செய்யப்பட்டது.


பின்னர் எட்டிய செய்தியின்படி,குமார் வசாவிளான் போனசமயம் ஊரடங்குச் சட்டம் இரவில் அமுலில் இருந்த நேரம்.இந்தச் சமயம் குமார் சிநேகிதர்களோடு கொஞ்சம் கலகலப்பாகவே மெல்லிய போதையில் இருந்திருக்கின்றார்.வீட்டிலிருந்து எதிர்க் கடைக்கு(ஊரடக்குச் சட்ட நேரங்களில் சிலர் வீட்டோடு இருக்கும் கடைகள் என்றால் அவர்கள் வீடுகளில் சாமான்கள் வாங்கலாம்.)ஒழுங்கை எனப்படுகிற சிறு தெருவைக் கடந்திருக்கிறார் சிகரெட் வாங்குவதற்காக.அதே நேரம் ஜீப்பில் வந்த இராணுவத்தினர் ஏற்றிக்கொண்டுபோய் விசாரித்திருக்கிறார்கள்.


குமார் தன்னைச் சிங்களத்திலே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.தான் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்வதாகவும் சொல்ல, இராணுவத்தினர் வேலை அலுவலகத்தினரோடு தொடர்பு கொள்ள, அவர்கள் குமாரினது அடையாள அட்டையைக் கொண்டு வர அங்கேயே அவர்களுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.அடையாள அட்டையில் குமாரலிங்கம் நாகலிங்கம் சுத்தமான தமிழ்ப்பெயர்.இந்த மாறாட்டமான பெயரும்,மொழியுமே அவரின் உயிருக்கு எதிரியாய் ஆனது.


சந்தேகத்தின் பெயரில் திரும்பத் திரும்ப அடித்து மிரட்டி சிகரெட்டால் சுட்டு மின்சாரத்தால் உடம்பைப் பொசுக்கி சித்திரவதைப் படுத்திக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.இரண்டாம் நாள் சித்திரவதையின் உச்சக்கட்டத்தில் குமார் தாங்கமுடியாமல் குழறியபடி இருந்த இடத்தைவிட்டு எழும்பி ஓட முயற்சித்திருக்கிறார்.அந்தச் சமயத்தில்தான் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் தொடையிலும் நெஞ்சிலுமாய் இரு சூடுகள் விழுந்திருக்கிறது.இப்படித்தான் அவரது இறப்பின் விளக்கம் அரைகுறையாகத் தெரிய வந்தது ரதி வீட்டாருக்கு.வைத்திய சாலையிலும் குமாரது இரு மணிக்கட்டுக்களிலும் குமார் என்றும்,டக்சன் என்றும் பெயரை எழுதிக் கட்டியிருந்தார்கள்.நடந்தது என்னவோ யாருக்கும் தெரியாது.அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


22 வயதில் இரண்டு குழந்தைகளோடு ரதி இளம் விதவையாகத் திரும்பவும் தன் பெற்றோருக்கே மகளாகி இருக்கிறாள்.அவளைப் பெற்றவர்களது நிழலே அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் ஆறுதலாக இருக்கிறது.


இந்த இளம் விதவைத் தாய் தன் மகளுக்குச் சொல்லும் தன் கதையாகவே "மீண்டும் மளாகிறாள்"கதையின் ஆரம்பத்தில் "மடி கொஞ்சம் தருவாயா"கவிதையை எழுதியிருந்தேன்.

மடி கொஞ்சம் தருவாயா

********************************
மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!


உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!


ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!


நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!


கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து
என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!


நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!


நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!


ஹேமா(சுவிஸ்)

மீண்டும் மகளாகிய அந்த ரதி இன்னும் தன் குழந்தைகளோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் காலத்தின் ஓட்டத்தோடு.


(ரதியின் வாழ்வு தொடர்ந்தாலும்,கதையை இத்தோடு முடிக்கிறேன்.)
ஹேமா(சுவிஸ்)

15 comments:

Anonymous said...

Rathi,hope is leading a sacrificed life for her children.As i expected the story is a tragic one but i didn't expect this much pain for Rathi.

Anonymous said...

வாங்க முனியப்பன்.நீங்க மட்டும்தான் ரதியின் வாழ்க்கைக் கதையை ஆர்வத்தோட எதிர்பார்த்திருக்கீங்க.ரதியின் வாழ்க்கைபோல எங்கள் நாட்டின் அவலத்தால் எத்தனையோ கதைகள்.இளம் விதவையாய் இருந்தாலும் ஊமைபோல யாருடன் பழகாத கூச்ச சுபாவமுள்ள அந்த ரதி இன்று நிறைந்த துணிவோடு ஓரளவு நல்ல நிலையில் தன் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல அப்பாபோல அன்போடு வழிநடத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.ஊரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட எததனோயோ பேருக்கு நடுவில் ரதியின் வாழ்க்கை உயர்வோடு இருக்கிறது.அதற்காக அவள் தன் அப்பா அம்மா சகோதரனுக்கும் சகோதரிகளுக்கும்தான் கடவுள்போல நன்றி சொல்லியபடி என் அருகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

Anonymous said...

முனியப்பன்,சில சமயங்களில் மனம் நொந்து தவிக்கிறாள்.யாரக்குறை சொல்ல முடியும்.காதல் என்று வந்து அவள் படிப்பைக் குழப்பியவனையா?அதனால் அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்த பெற்றோரையா?வாயே பேசாமல் தலை அசைத்த தன்னையா?இல்லை அவள் வாழ்வை இப்படி ஆக்கிவைத்த கடவுளையா?ஓர் இளம் பெண் எங்கள் சமூகத்தின் நடுவில் வாழ்வதென்பது அப்பப்பா....!அதைவிடக் கொடுமை வேறு எதுவுமே இல்லை.

Anonymous said...

Loosing the betterhalf itself is a bitter life.But living with confidence is great.My wishes to Rathi to succeed in life.Pl post ur medical queries to my maduraimuniappan@gmail.com.One more thing, we have to accept facts & real life.Pl visit my previous post Kaathal postmortem when u find time.

Anonymous said...

Wishing u a speedy recovery from ur illness.Hope u r back to normal.

Anonymous said...

Hema,
I haven't read your post yetas not in the mood to read anything that has tragedy. Pls visit my post and send mail in the list.

(Not to publish)

Anonymous said...

அன்பு ஹேமா ... முதன் முதலாக உங்கள் உப்பு மடச்சந்தி வந்தேன்...வாசித்த முதல் கதை மற்றும் அங்கு கண்ட வீடியோக்கள் என் மனதை வாட்டுகின்றது ... வாழ்க்கை பறி போன ரதியின் வேதனையை நான் உணர்கிறேன்... அவரை நீங்கள் சந்தித்தால் என் அன்பை சொலுங்கள்...மனதை உணர்த்த உங்களை போல முடியாது...ஹேமா...

Anonymous said...

ஓ...மது மன்னிச்சுக்கொள்ளுங்கோ.உப்புமடச்சந்தி நான் உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா?நான் குழந்தைநிலாவில் தெரிவித்து இருக்கிறேனே.சரி இப்போ என்ன வந்துவிட்டீர்களே எங்கள் ஊர்ச் சந்திக்குகதை பேச.

நான் இந்தப் பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து போடலாம் என்றுதான் தொடங்கினேன்.அதற்கு இன்னும் எங்கள் நாட்டின் நிலைமையால் மனநிலை இடம் கொடுக்காமல் இருக்கிறது.ஆனாலும் வரும் கொஞ்சம் சிரிக்க.

Anonymous said...

மது,ரதி எனக்குக் கிட்டவாகத்தான் இருக்கிறா.உங்கள் அனபைப் பகிர்ந்துகொண்டா.நன்றி மது.

சிலசமயங்களில் வருவதை,
தருவதை,கிடைப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை எமக்கு கண்டிப்பாகத் தேவையாக இருக்கிறது.

Anonymous said...

தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழைத்துள்ளேன்.
மறக்காமல் இடுகை இட வேண்டுகிறேன்.
விபரங்களுக்கு இங்கே பாருங்கள்

Anonymous said...

நல்ல கதையிதென்று சொல்லவா ? இல்லை நாங்கள் அழுததுயர் என்று சொல்லவா ?

எதுவோ நாங்கள் வாழ்ந்த ஊரும் உறவும் துயர்களோடான நினைவுகளும் எங்களுக்குப் பலம் தருவதாக. ரதிக்கும் பலம் கிடைக்கட்டும்.

சாந்தி

Anonymous said...

வாங்கோ சாந்தி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.உங்கள் நான் பல காலங்களுக்கு முன்னமே அறிந்திருக்கிறேன்.என் குழந்தைநிலாப் பக்கமும் நீங்கள் வரவேணும்.

கருத்துக்கும் நன்றி.இந்த ரதிகள் போல எத்தனை ரதிகளும் கதைகளும் எங்கள் நாட்டில்.என்றுதான் சந்தோஷ சங்கீதம் பாடப்போகிறோம்!

Anonymous said...

நன்றி திகழ்.எனக்கும் மறையும் தமிழ் எழுத்துக்களை ஞாபகப்படுத்துவதில் அக்கறை இருக்கிறது.இப்போ இன்னமும் உடல் நிலை சரிவராமலே இருக்கிறது.நிச்சயம் வழக்கில் மறைந்த சொற்களின் தொடர் போடுவேன்.

Anonymous said...

அன்பு சகோதரி, ஒரு இணைப்பினூடாக இப்பதிவுக்கு வந்தேன், தங்களின் மறு தளம் இது என்பதை அறிந்து கொண்டேன்...

இக்கதை, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்திருக்கிறதா... தங்களுக்குத் தெரியாவிடினும் இது போன்று பல நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதை கதை என்பதைக் காட்டிலும் நிகழ்வு என்று தானே சொல்லவேண்டும். தமிழ் என்ற சொல், உயிரைக் கயிறால் இறுக்கும் கொலையாளியா?

யாருக்காகவோ எதற்காகவோ, அல்லது காரணமில்லாமலோ, காரணம் படுத்தியோ சாகடிக்கப்பட்ட உயிர்களுக்கு என்றேனும் ஒருநாள் அர்த்தமிருக்கும்.. அந்த அர்த்தங்களுக்காக நொடிப்பொழுதெல்லாம் அச்சங்களோடு இனி ஒருப்பொழுதும் உயிர் போகவேண்டாம்....

அந்த குழந்தைக்கு வலி தெரியாது.... ஆனால் வலியில்தானே வாழ்கிறது...

மறக்க இயலாத நிகழ்வுகள் சகோதரி..

Anonymous said...

ஆதவா,வாங்கோ...வாங்கோ.சந்தோஷமாயிருக்கு.என் சந்திக்கு வந்ததுக்கு.இனி நிறையவே கதைத்துக் கொள்ளலாம்.
குழந்தைநிலா வழியாக நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைத்திருந்தேன்.நன்றி ஆதவா.

எங்கள் வலிகள் நிறையவே.
சிலசமயங்களில் சிரித்தும் அழுகையுமாய்.எங்களை நாங்களே தேற்றியபடி.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP