....எரிச்சல்.
ஏன்...ஏன் எப்பவும் எனக்கு எரிச்சல்?
எல்லாரிலயும் எரிச்சல்?
ஊரில பிரச்சனை கேட்டால் எரிச்சல்.நாட்டு நடப்பை நியூசிலை பாத்தால் எரிச்சல்.
கடவுளே கடவுளே எண்டு இப்போ கடவுளிலயும் எரிச்சல்.எங்கட ராஜபக்சவிலயும்
எரிச்சல்.அவரிண்ட தம்பிக்காரன் கோத்தபாயவிலயும் எரிச்சல்.ரணிலிலயும் எரிச்சல்.
ரத்வத்தவிலயும் எரிச்சல்.எட்டப்பர் கூட்டத்திலயும் எரிச்சல்.தமிழரை நடு ஆத்தில விட்டுப் போனவையிலயும் எரிச்சல்.
இவர் போன் பண்ணினாலும் எரிச்சல்.பண்ணாட்டிலும் எரிச்சல்.என்னம்மா என்னடி செய்யிறாய் எண்டாலும் எரிச்சல்.அம்மா திட்டினாலும் எரிச்சல்.அப்பா கத்திக் கதைச்சாலும் எரிச்சல்.பக்கத்து வீட்டு யூகோகாரி(யூகோசிலாவியாப் பெண்)"டொக் டொக்" எண்டு பலகை நிலத்தில நடக்கிற சத்தத்தால எரிச்சல்.முன் வீட்டு மனிசன் அடிக்கடி தும்முற சத்தத்துக்கும் எரிச்சல்.தண்ணி அடிக்கிறவையளப் பாத்தாலே எரிச்சல்.சிகரெட் மணம் கதவு இடுக்குக்குள்ளால வருது.அதுவும் எரிச்சல்.
குழந்தைகள் கார்ட்டூன் பார்த்து அர்த்தமில்லாமல் சிரிச்சுக் கும்மாளம் போடேக்கையும் எரிச்சல்.குழப்படி செய்து சண்டை பிடிக்கேக்கையும் எரிச்சல்.
வேலை இடத்துப் பிரச்சனையைச் சிநேகிதி போன் பண்ணி அறுத்தாலும் எரிச்சல்.
தபால்காரன் பெல் அடிச்சு "ஹலோ ரெஜிஸ்டர் போஸ்ட்" எண்டாலும் எரிச்சல்.
பிறகு டோக்கனை பொக்ஸுக்குள்ள போட்டிட்டுப் போனாலும் எரிச்சல்.
கடையில போய் கேட்டது இல்லையெண்டா எரிச்சல்.
இருக்கிறதும் சரியில்ல விலைகூட எண்டாலும் எரிச்சல்.
கடைக்காரர் மூஞ்சியை"உம்"எண்டு நீட்டிக்கொண்டு நிண்டாலும் எரிச்சல்.
வெள்ளையர் கடைகளில பெட்டையள் கட்டைக் காற்சட்டையோட
வளைஞ்சு வளிஞ்சு கதைச்சாலும் எரிச்சல்.றோட்டில கார் 50Km போகாம 80Km போனால் எரிச்சல்.போகிற காரை மறிச்சுக் குற்றப்பணம் எழுதிற போலீஸ்காரரிலயும் எரிச்சல்.
படிக்கிற வயசில வேலைக்கு போறதுகளைப் பாத்தால் எரிச்சல்.உடம்பை நல்லா வச்சுக்கொண்டு வேலைக்குப் போகாதவையளை கண்டாலே எரிச்சல்.
வெயில் எறிச்சாலும் எரிச்சல்.பனி கொட்டினாலும் எரிச்சல்.சமைக்கப் போனா இண்டைக்கு என்ன சமைக்கிறது எண்டு எரிச்சல்.சரி சமைச்சிட்டா சாப்பிடவும் கொஞ்சம் எரிச்சல்.
பிறகு கை கழுவவும் எரிச்சல்.
சிரிக்காதேங்கோ..........கழிவறை - குளியலறை நுழையவும் எரிச்சல்.
நித்திரை வராத என்னிலும் எரிச்சல்.காலைல அடிக்கிற அலாரத்திலயும் எரிச்சல்.
கொம்யூட்டர் இறுகினா தலைகீழாப் போட்டு உடைக்கிற எரிச்சல்.புளொக்கரில கும்மியடிக்கிற ஆக்களிலயும் எரிச்சல்.இதை வாசிக்கிற உங்களிலயும் எரிச்சல்.எழுதின என்னிலயும் எரிச்சல்.எரிச்சலுக்கு மேலேயும் ச...ரி...யா...ன எரிச்சல்.விடிஞ்சாப் பொழுது பட்டா முழுக்க முழுக்க எரிச்சல்.
அதுதான் கொலை ஒண்டு செய்யப்போறேன்.அந்த எரிச்சலைக்
கொலை செய்யப்போறேன்.கொஞ்சம் பொறுங்கோ.பிறகு கதைக்கிறன்.
கொலை செய்யக்கூட எரிச்சல் வந்திடும்.எரிச்சல் வாறதுக்குள்ள கொலை
ஒண்டு செய்திட்டு வாறன்.அப்ப போய்ட்டு வரட்டே !
ஹேமா(சுவிஸ்)
தமிழ்மணத்திலயும் தமிழிஸ்லயும் ஓட்டும் போடுங்கோ.
52 comments:
இந்த சமுதாயத்தின்பால் நாம் வெறுத்து நிற்கின்றபோது எது நடந்தாலும் எரிச்சலாகத்தான் தெரியும்...என்ன செய்வது சகோதரி....
//அதுதான் கொலை ஒண்டு செய்யப்போறேன்.
அந்த எரிச்சலைக் கொலை செய்யப்போறேன்.
கொஞ்சம் பொறுங்கோ.பிறகு கதைக்கிறன்.
கொலை செய்யக்கூட எரிச்சல் வந்திடும்.//
சரிதான் இந்த கருணைக்கொலையை செய்துவிடுங்கள்...எரியாமல் உள்ளுர எரியும் நெருப்பு அணைந்திடும்...
அத்தனைக்கும் எரிச்சல் பட்டா எரிச்சலுக்கே உங்க மீது ஒரு எரிச்சல் வந்துடாதா?
//புளொக்கரில
கும்மியடிக்கிற ஆக்களிலயும் எரிச்சல்.
இதை வாசிக்கிற உங்களிலயும் எரிச்சல்.
எழுதின என்னிலயும் எரிச்சல்.//
ஹேமா,
எல்லாத்துக்கும் எரிச்சலா? சரிதான்...!ஒருமுறை மருத்துவரிடம் போய்ட்டு வாங்கோ.
நான் ஒரு வாரத்துக்கு உப்புமடச் சந்திப் பக்கம் வாரத நிறுத்திக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
ஐய்யய்யோ, ....இதுக்கும் எரிச்சல் படாதிங்கோ.....!வாரேன்.
//க.பாலாஜி ...
இந்த சமுதாயத்தின்பால் நாம் வெறுத்து நிற்கின்றபோது எது நடந்தாலும் எரிச்சலாகத்தான் தெரியும்...என்ன செய்வது சகோதரி....
சரிதான் இந்த கருணைக்கொலையை செய்துவிடுங்கள்...எரியாமல் உள்ளுர எரியும் நெருப்பு அணைந்திடும்...//
என்னவோ பாலாஜி உண்மையாவே இப்பிடித்தான் இருக்கு.வெறுப்பாய் வெறுமையாய்.நன்றி உங்களுக்கு.
//புளொக்கரில
கும்மியடிக்கிற ஆக்களிலயும் எரிச்சல்.
இதை வாசிக்கிற உங்களிலயும் எரிச்சல்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு அழுகை அழுகையா வருது நானும் போய் அழுதிட்டு வாரேன் :)
//சி.கருணாகரசு ...
அத்தனைக்கும் எரிச்சல் பட்டா எரிச்சலுக்கே உங்க மீது ஒரு எரிச்சல் வந்துடாதா?//
அதுக்கும் பயமாத்தான் இருக்கு.ஆனா அதைத்தானே கொலை செய்யப் போறேன்.பிறகு எப்பிடி ?
//சத்ரியன் ... ஹேமா,எல்லாத்துக்கும் எரிச்சலா? சரிதான்...!ஒருமுறை மருத்துவரிடம் போய்ட்டு வாங்கோ.நான் ஒரு வாரத்துக்கு உப்புமடச் சந்திப் பக்கம் வாரத நிறுத்திக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
ஐய்யய்யோ, ....இதுக்கும் எரிச்சல் படாதிங்கோ.....!வாரேன்.//
இஞ்ச வாங்கோ வாங்கோ உங்களில சரியான எரிச்சல்.பயப்பிடுத்திறது ஆக்களை.நான் டாகடரிட்ட போகத் தேவையில்லை பாருங்கோ.டாக்டர் முனியப்பன் இங்க அடிக்கடி வருவார் என்னைப் பாக்க.ம்ம்ம்..சரி அதுக்காக வராம விடாம வாங்கோ சத்ரியன்.
சுகம்தானே.
சத்ரியன் குழந்தைநிலாவில நீங்க கேட்ட "உயிர் உரஞ்சி" என் இருக்கிறது. "உறிஞ்சி" என இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.சரிதானே?
இல்லை சத்ரியன்.என் மன எண்ணத்தின்படி "உரஞ்சி" (உரசி) தான்.இரு உயிர்கள் உரஞ்சிக் கொள்வதால் எரிந்து போவதாக.
//ஆயில்யன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு அழுகை அழுகையா வருது நானும் போய் அழுதிட்டு வாரேன்//
ஏன் அழணும் ஆயில்யன்.நீங்கதான் கும்மி அடிக்கிறதே இல்லையே !
என்ன ஹேமா..நேற்று 'தெனாலி' படம் பார்த்தியளோ ??!!... :))
அந்த முதல் படத்தையும் கடைசி படத்தையும் எடுத்து விடுங்களேன்.
பார்க்கவே எரிச்சலா இருக்கு.
வேறு ஏதாவது படம் போடுங்கள்.
//துபாய் ராஜா...
அந்த முதல் படத்தையும் கடைசி படத்தையும் எடுத்து விடுங்களேன்.
பார்க்கவே எரிச்சலா இருக்கு.
வேறு ஏதாவது படம் போடுங்கள்.//
ராஜா,தெனாலி படத்தை விட எங்கட வாழ்க்கை கேவலமாப் போச்சுப் போங்கோ.எரிச்சல் வரட்டும் எண்டுதானே படமே போட்டிருக்கேன்.
ஏன் எடுக்கவேணும்.
இல்ல எடுக்கமாட்டேன்.
ஹேமா said...
//ஆயில்யன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு அழுகை அழுகையா வருது நானும் போய் அழுதிட்டு வாரேன்//
ஏன் அழணும் ஆயில்யன்.நீங்கதான் கும்மி அடிக்கிறதே இல்லையே !
]]
என் மீதா ஹேமா.
சிரிப்பாய் அல்ல நிஜமாய் கேட்கிறேன்.
// நட்புடன் ஜமால்...என் மீதா ஹேமா.
சிரிப்பாய் அல்ல நிஜமாய் கேட்கிறேன்.//
ஜமால் ஏன் இவ்வளவு தாமதம்.எப்பவோ எதிர்பார்த்தேன்.விரதம் இருக்கிறதால தூங்கிட்டீங்களா?
என்ன ஜமால் இப்பிடிக் கேக்கிறீங்க.
கும்மி என்கிறது எனக்கு என் மனசுக்கு சிலநேரங்களில் மட்டும் பிடிக்காம இருந்தாலும் எனக்கும் பிடித்த ஒன்றே.இது எழுதினப்போ எனக்கு இருந்த மனநிலையை வச்சே எழுதியிருக்கேன்.இதில யாரையுமே குத்தம் சொல்ல இல்ல.சில பதிவுகளில் சிலர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டதுகூட இருக்கு ஜமால்.
அலுவலகத்தில் இன்றிலிருந்து இணையம் இல்லை.
அதனால் இனி வருவது தாமதமாகத்தான் இருக்கும்.
நீங்களும் என்ன மாதிரித்தானே.. தெனாலில கமல் சொன்ன 'பய' லிஸ்டை பாத்து வந்த எரிச்சலால இப்பிடி எரிஞ்சு விளுகிறியல்..நானும் இப்பிடித்தான் சந்தேகப்பட்டு ஒண்டு எழுதினனான்.. நீங்கள் எரிஞ்சு விழாமல் படிப்பியல் எண்டால் இங்க போய் பாருன்கோ..http://pzuthippuyal.blogspot.com/
எரிச்சல்னா என்ன ?
ஏன் உங்களுக்கு மட்டும் இவ்ளோ எரிச்சல் ?
ஏன் எரிச்சலை கொலை செய்ய போறீங்க ?
நீங்க யாழ்ப்பாணமா இல்ல ஸ்விஸ்ஸ் ஆ?
ஒருவேளை யாழ்ப்பான ஸ்விஸ்ஸ் ஆ?
//ஏன்...ஏன் எப்பவும் எனக்கு எரிச்சல்?..//
எங்ககிட்ட கேட்டா ? நீங்க தான் சொல்லணும் ...
//எல்லாரிலயும் எரிச்சல்?//
லாரி கிட்ட எதுக்கு எரிச்சல்?
//ஊரில பிரச்சனை கேட்டால் எரிச்சல்//
எரிச்சல் ஊரின் பேருலையா... இல்லை பிரச்சனை பேருலையா...
//கடையில போய் கேட்டது இல்லையெண்டா எரிச்சல்//
அப்போ இருக்கறதை கேட்டல் எரிச்சல் வராதா ?
//இருக்கிறதும் சரியில்ல விலைகூட எண்டாலும் எரிச்சல்//
சரியில்ல அப்டீங்கரதுக்கு எரிச்சலா - இல்ல விலைகூட அப்டீங்கரதுக்கு எரிச்சலா ?
//கடைக்காரர் மூஞ்சியை"உம்"எண்டு நீட்டிக்கொண்டு நிண்டாலும் எரிச்சல்//
அவருக்கு என்ன எரிச்சலோ ?
//சிரிக்காதேங்கோ..........//
தேங்காய் சிரிச்சா கூட எரிச்சலா ?
//கும்மியடிக்கிற ஆக்களிலயும் எரிச்சல்//
சாதாரண எரிச்சலா - வயித்தெரிச்சலா ?
//அதுதான் கொலை ஒண்டு செய்யப்போறேன்//
இவ்ளோ நேரம்...??
//கொஞ்சம் பொறுங்கோ.பிறகு கதைக்கிறன்//
இது என்ன அர்ஜென்ட் எரிச்சல் ????
//அப்ப போய்ட்டு வரட்டே !//
நானும் அப்ப போய்ட்டு வரட்டே ...
இரவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
//சத்ரியன் குழந்தைநிலாவில நீங்க கேட்ட "உயிர் உரஞ்சி" என் இருக்கிறது. "உறிஞ்சி" என இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.சரிதானே?
இல்லை சத்ரியன்.என் மன எண்ணத்தின்படி "உரஞ்சி" (உரசி) தான்.இரு உயிர்கள் உரஞ்சிக் கொள்வதால் எரிந்து போவதாக.//
ஹேமா,
மன்னிக்கோணும்.உரஞ்சி என்கிற சொல்லுக்கு உரசி என்றொரு பொருள் உள்ளதை (இதுவரை)நான் அறிந்திருக்கவில்லை.இன்று ஒரு புது சொல் கற்றுக்கொடுத்ததற்கு நன்றி.
//நட்புடன் ஜமால் said...
இரவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//
ஹேமா & ஜமால்
யாரோ செய்த சதி இது ...
ஹேமா,
இப்போ திரும்ப வந்ததால.....
திரும்ப போய்ட்டு வரட்டே ...
உங்களுக்கு ஒன்னும் எரிச்சல் இல்லையே ?
இப்போ திரும்ப வந்ததால.....
திரும்ப போய்ட்டு வரட்டே ...
உங்களுக்கு ஒன்னும் எரிச்சல் இல்லையே ]]
இப்படி கும்மி அடிச்சி போட்டு
எரிச்சல் இல்லையா என்றால்
எஞ்ஞனம் இரவீ
//
இப்படி கும்மி அடிச்சி போட்டு
எரிச்சல் இல்லையா என்றால்
எஞ்ஞனம் இரவீ//
ஜமால் இது அன்னிய சதி ...
எரிச்சலை கொலை செய்த ஹேமா வுக்கு - இது புரியனும்.
அது தான் என் கவலை இப்பொது ...
இப்போ திரும்ப திரும்ப வந்ததால.....
திரும்ப திரும்ப போய்ட்டு வரட்டே ...
உங்களுக்கு ஒன்னும் எரிச்சல் எரிச்சல் இல்லையே ???
என்னாச்சு ஹேமா..??
:-(((
சுதர்ஷன்,வாங்கோ...வாங்கோ எரிச்சல் இல்லாமத்தானே வந்தனீங்கள்.அப்பிடியே குழந்தைநிலாவுக்கும் வந்திட்டுப் போங்கோ.நானும் வாறன் உங்கட வீட்டுப் பக்கம்.சந்திக்கலாம்.
அவர் எங்கட ஊர்ப் பெடியன்.
அதுதான் ...எங்கட தமிழில கதைச்சனான்.
நினைச்சேன் இண்ணைக்கு யாராச்சும் கும்மி அடிப்பாங்கன்னு.இரவீ தனியா பாவம் தனித்தவில் மாதிரி.யாரும் துணக்கு வராமலேயே அடிச்சிருக்கார்.
பாவம்.களைச்சுப்போயிருப்பார்.
ஏன் ஜமால் ஆயில்யன் தூரமா நின்னுட்டாங்க !
இப்பத்தான் வேலையால வந்திருக்கேன்.இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்குப் பொழுது விடிஞ்சு போயிடும்.வேற யாராச்சும் சொல்லுங்க.அளவோட கும்மி அடிங்க.அதுவும் சந்தோஷம்தான்.
இப்போ எரிச்சல் இல்ல.
ஹேமா ...
படத்த மாத்தினதால என்னுடைய பின்னூட்டத்த எல்லாம் திரும்ப வாங்கிக்கறேன் ....
//இவர் போன் பண்ணினாலும் எரிச்சல்.
பண்ணாட்டிலும் எரிச்சல்//
அந்த போன கொண்டுவந்து எங்க வீட்டு குப்பதொட்டியில போட்டுடுங்க ...முடிஞ்சா அவர் போனையும் ...
(அப்படா ரெண்டு போனாவது கெடைக்கட்டும்)
//குழப்படி செய்து சண்டை பிடிக்கேக்கையும் எரிச்சல்//
குழாயடி சண்டை தான் கூடாது ... குழப்பம் இருந்தா தான் தெளிவு தெரியும் (எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு).
//றோட்டில கார் 50Km போகாம 80Km போனால் எரிச்சல்.//
ஆடதேரியாதவன் மேடை சரிஇல்லைனு சொன்ன கதையா இருக்கு ...
//போகிற காரை மறிச்சுக் குற்றப்பணம் எழுதிற போலீஸ்காரரிலயும் எரிச்சல்//
ஒழுங்கா போனா அவர் ஏன் அங்க வரார் - அது சரி எவ்வளவு மொய் ?
அப்ப அப்ப அப்ப போய்ட்டு வரட்டே !
பாவம் ஹேமா நீங்க.....
//தமிழ்ப்பறவை...
என்னாச்சு ஹேமா..??//
தமிழ்ப்பறவை அண்ணா எனக்கு என்ன ஆச்சு.நல்லாத்தானே இருக்கேன்.ஏன் இப்பிடி எனக்காகக் கவலைப் படுறீங்க எல்லாரும்,
அரசியல்,வாழ்வியல்.மனவியல் ன்னு சொல்லியிருக்கேன்.யாரும் ஏன் கண்டுக்ககல ?
//- இரவீ - ...
ஹேமா ...
படத்த மாத்தினதால என்னுடைய பின்னூட்டத்த எல்லாம் திரும்ப வாங்கிக்கறேன் ....//
ரவி ரொம்ப நன்றி.நிறையக் கஸ்டப்படுறீங்க என் எரிச்சல் போக்கன்னு.எப்பாச்சும் சமூகத்தில், மனிதரில் ,என்னில் உங்களில் வரும் எரிச்சலையே இப்படிக் கோர்த்தேன்.
ஏன் என்னை ஒரு மாதிரிப் பாக்கிறீங்க,?
//பிரியமுடன்...வசந்த் ...
பாவம் ஹேமா நீங்க.....//
சரியாப்போச்சு வசந்த் நீங்களும் கூட !
படத்தை மாற்றமாட்டேன் என்று யாரோ சொன்னதாக நினைவு.....
இப்பத்தான் கமலின் தென்னாலி படம் பாத்தீங்களா??? ஹிஹி
//சி.கருணாகரசு said...
படத்தை மாற்றமாட்டேன் என்று யாரோ சொன்னதாக நினைவு.....//
ரிபீட் .. ரிபீட் .. ரிபீட் ...
//ரவி ரொம்ப நன்றி.நிறையக் கஸ்டப்படுறீங்க என் எரிச்சல் போக்கன்னு.எப்பாச்சும் சமூகத்தில், மனிதரில் ,என்னில் உங்களில் வரும் எரிச்சலையே இப்படிக் கோர்த்தேன்.
ஏன் என்னை ஒரு மாதிரிப் பாக்கிறீங்க,?//
ஹேமா - உங்களுக்கும் எங்களது நன்றி.
எரிச்சல் எல்லாருக்கும் வர விஷயம் தான்.
அது உங்களுடையதா இருந்தா மட்டும் தான் நீங்க அதை கையாள முடியும்,
மற்றவரிடமிருந்து வரும் போது சிரமமான விஷயம் அது ...
அதுக்கு தான் இவ்ளோ கும்மி.
தவறாக எடுத்து கொ(ல்ல)ள்ள வேண்டாம்.
Erichal-ippadi oru pathivu thevayaa Hema ?
:))
Post a Comment