Monday, June 28, 2010

யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு.

1974ம் ஆண்டு தை மாதம்.நினைத்தாலே கண்ணுக்குள் நிறைந்த மாதம்.ஊரெங்கும் கோலாகலம்.வீடெங்கும் திருமணக் கோலம்.
சாணகமுற்றங்கள் சுத்தமாய் அழகழகான கோலங்களோடு.மனங்களில் குதூகலம்.எல்லோருக்குமே பறவைகளாய் பறப்பதாய் ஒரு நினைப்பு.மழையடித்து ஓய்ந்திருந்த வாரம் அது.

வயல்கள் தோட்டங்களில் நிறைந்த சேறும் சகதியும்.கிணறு முட்டிய மழைநீர்.ஆறுகள் பெருக்கெடுத்தோடுகிறதென்று சொல்லப் பிடிக்கும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இல்லை.இரவெல்லாம் தவளைச் சத்தம்.ஓ...அவைகளுக்கும் கொண்டாட்டம்.அடித்த மழையால் பனிக்குளிர் வேறு."எழும்பு எழும்பு"என்கிற சத்தத்தைப் புறக்கணித்து இன்னும் இழுத்துப் போர்த்த வைக்கிறது குளிர்.

என்றாலும் குளிர்ந்த காற்றோடு திடீரென்று தடவும் ஒரு நினைவு.அவளின் அழகு. அவளுக்காக அவளின் விழாவுக்காகவே இத்தனை விழாக்கோலம்.ஊரெங்கும் பூரணகும்பமும் தோரணங்களும்.

ஆமாம் எங்கள் தமிழுக்கு ஒரு விழா.எங்கள் தமிழ் மொழிக்கு ஒரு அங்கீகாரம். சந்தோஷத்தைன் உச்சத்தில் நாங்கள் அனைவருமே."எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு.பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிச்சயம் என்று சங்கே முழங்கு.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா."இளம் பிள்ளைத்தமாய் திரிந்தாலும் தமிழின் எங்கள் மொழியில் பெருமை ஆழப் பதியத் தொடங்கிய கணங்கள் அவை.எனவே அந்தச் சந்தோஷத்திற்காக என்னென்னவெல்லாமோ செய்தோம்.உடம்பெங்கும் எறும்பு ஊர்வதாய் ஒரு உள்ளுணர்வு.ஆனந்தத்தின் எல்லை.பாடினோம் ஆடினோம்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1974ம் ஆண்டு தையில் நான்காம் அனைத்துலக தமிழாராச்சி மாநாட்டை நடத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டு அத்தனை நிகழ்வுகளும் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும் நான்.

அந்தக் காலகட்டத்தில் ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியின் அதிகாரம்.
அவருக்கோ யாழில் இந்த விழாவைக் கொண்டாட விருப்பமில்லை.தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தை இலவசமாக உதவுவதாகச் சொல்கிறார்.தமிழ்ப் பெரியவர்களின் அழுத்தத்தில் யாழில் நடாத்த ஒப்புக்கொண்டாலும் குழப்பும் மனநிலையிலேயே இருந்தது அரசு.

விழாவை நடத்த யாழில் இருக்கின்ற பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டு அரசால் பொறுப்பேற்கப்பட்ட வீரசிங்க மண்டபம்,யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ்.திறந்த வெளியரங்கம்,அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் கூட மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு மறுக்கப்பட்டது.எனவே தனியார் மண்டபங்களைத் தேடி அலைந்தனர்.

எனவே அரசின் இந்த மறுப்புக்களால் ஊடகங்கள் மாநாடு நடைபெறாது என்று அறிவிக்கத் தொடங்கிய சூழ்நிலையில் "1974 தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ்.நகரில் இடம்பெறும் என மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கட்டணம் அறவிடப்படாமலே திரையரங்குகளில் விளம்பரம் செய்தும்,சுவரொட்டிகள் மூலமும் அரசை வென்றனர்.

அந்நிலையில் அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அறிஞர்களையும் பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியது.பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்குக் கிடைத்த இலங்கை அரசின் அசிங்கத்தை அவர்களும் உலகுக்குப் பறைசாற்றினர்.

இருப்பினும் சென்னையிலிருந்து உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்திருந்தார்.

மாநாடு நடக்கக் குறிப்பிட்ட திகதிக்கு 3 நாட்களுக்கு முன்னம்தான் மாநாட்டை நடத்துவதற்கான அரசின் அனுமதி கிடைத்தது.வண.சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ்.றிமர் மண்டபத்திலும் அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ்.திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் நடைபெற்றன.

3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ்.திறந்த வெளியரங்கில் நடைபெறுவதாகவே இருந்தது.ஆனால் அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் A.T.துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார்.மாநகர முதல்வரையோ சந்திக்க முடியாமலிருந்தது.அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.(இந்த மறைவும் அரசின் அழுத்தமே)

வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபத்தின் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாகியது.பார்வையாளர்கள் தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் இருந்தபடி நிகழ்ச்சிகளைப் ரசித்துக் கொண்டிருந்தனர். போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில் ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன.

அப்போதான் என்ன ஏது என்று பார்வையாளர்கள் உணரும் முன்னமே கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர்.குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து வகை தொகையின்றி கண்ணீர்க் குண்டுகளையும் விசிறி,துப்பாக்கிக் குண்டுகளால் மின் கம்பிகளை அறுந்து விழும்படியாகச் செய்தனர்.

அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

இனி...அப்பா சொன்னது

அந்த இரவில் அப்பாவும் நானுமாய் யாழ் நகருக்குள் நிற்கிறோம்.வானமெங்கும் இரவு கலைத்த மின்சார விளக்குகள்.உயர உயராமான சிகரங்கள்.திரும்பவும் திரும்பவும் சொல்கிறேன் சந்தோஷமாக இருந்தோம்.அத்தனை பேருமே சந்தோஷமாகவே இருந்தோம்.தமிழின் உணர்வோடு கலந்திருந்தோம்.

(சொல்லும்போது குரல் அடைத்து வில்லங்கமாக வெளிவந்தது)எனக்கு இப்போதும் நினைவோடு கண்ணுக்குள் வருகிறது.முகமெல்லாம் அத்தனை சந்தோஷம்.றீகல் தியேட்டர் தாண்டி வீரசிங்கம் மண்டபம் வருகிறோம்.அலையலையாய் ஆண்களும் பெண்களுமாய் மக்கள் அலை.அறிவுஜீவிகள் அறிஞர்கள் கல்விமான்களின் கூடம்.மேடையைத் தலைகள் மறைக்க உன்னி உன்னிப் பார்த்தபடி நிற்கிறேன்.ஒலிபெருக்கியின் சத்தத்தோடு புரிந்துகொள்கிறேன் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று.

அப்போதுதான் என்ன...ஏதோ அறுந்ததாய் நினைக்கிறேன்.எனக்கும் அந்தச் சத்தத்துக்குமான தொடர்பா.சொல்லத் தெரியவில்லை.குழப்பமான உளறலான வார்த்தைகள் தெளிவில்லாமல் கேட்கிறது.சிங்களத்தால் அதட்டல் சத்தமும் கேட்கிறது.ஆனால் புரியவில்லை.அப்பாவின் கையை எட்டிப் பிடிக்கிறேன்.அந்தக் குளிரிலும் அப்பாவின் கை வியர்வையால் பிசுபிசுக்கிறது.

பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது.அந்த மக்கள் அலைகளுக்கு காற்றில் ஏதோ செய்தி பரப்புகிறது.இவ்வளவும்தான் இவ்வளவும்தான்.பிறகு என்ன நடந்தது !தமிழைப் பேசுவதன்றி என்ன தவறு செய்தோம்.அதன்பிறகு....எங்கள் தமிழுக்கு ஒரு விழா எடுத்தோம்.
அவ்வளவும்தானே.

ஆனந்தம் அனர்த்தமாய் மாறிக்கொண்டிருந்தது.

மின்சாரம் நின்றது.தொடர்புக் கம்பிகள் அறுந்து விழுகிறது.மின்னி மின்னி நெருப்புத் தனல்கள் வான் நோக்கிப் பறக்கிறது.அமைதியாய் இருந்த அலைகள் இப்போ கொந்தளித்துச் சிதறிக் கலைகின்றன்.

"அப்பு ராசா தம்பி"என்று அப்பா கையை இறுக்கிப் பிடிக்கிறார்.துவக்கு வெடிச்சத்தங்கள் கேட்கிறது.எப்போதாவது வேட்டையாடும்போதோ விசர் நாயைச் சுடும்போதோ கேட்கின்ற அந்தச் சத்தம்தான் அது.இப்போ அது தொடர்ந்து கேட்கிறது.வேட்டைக்காரர்களோ அல்லது விசர் நாய்களைச் சுடுபவர்களோ வந்துவிட்டனர்.வெள்ளை நிறத்தில் குண்டு மழை.கண் எரிகிறது.வெறும் புகைக்கு இப்படிக் கண் எரியாது.வீட்டில் கண்ணூறு நாவூறு என்று செத்தல் மிளகாயும் வேப்பிலையும் போட்டு எரித்து எச்சில் துப்பச் சொன்னபோது எரிந்த கண் எரிவு வேறு.இது வேறு.

கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.

அந்த இரவு முழுதுமே அவலச் சத்தங்கள் கேட்டு அடங்கிப்போயிருந்தது.நாங்களும் சேறு பூசியபடி அப்படியே இருந்தோம்.விடிந்தது.வெளிச்சத்தில் அடையாளங்கள் கண்டுகொண்டோம்.
யாரோ கை கொடுக்க வெளியில் வந்தோம்.அப்பா நடந்தே போவோம் வீட்டுக்கு என்றார். பதில் ஒன்றுமே சொல்லாமல் அப்பாவின் பின்னுக்கே நடந்தே போனோம் நானும் இன்னும் பலரும்.

யாழ்.பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள் ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் நிரப்பப்பட்டதாம்.

இரவு முழுதும் அணையாத அரிக்கேன் லாம்போடு அம்மா குந்தியிருந்தா.எங்களைக் கண்டதும்"ஐயோ என்று குழறினா.அன்று தொடங்கிய "ஐயோ" சத்தம்தான் இன்றுவரை ஈழத்தில் தொடர்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைக்கூட அரசின் தலையீடு இல்லாமல் தாமே சுதந்திரமாக நடத்தமுடியாது என்பதை உலகிற்கு உறுதிப்படுத்திய நிகழ்வாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் முயற்சி எடுத்ததாம் அரசு.பாதிரியார் உடையில் ஜனார்த்தனன் கொழும்பு சென்றடந்து இந்திய தூதரகம் மூலமாகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது.அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும்
உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்.

[அப்பா சொன்னதும் இணையத்தில் சேகரித்துக்கொண்டதும்.]

65 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

இத்தனை ஆண்டுகள் கடந்தும் நடந்தது தமிழுக்காய் இன்னொரு மாநாடு அதே சிங்கள வெறியர்களை ஆதரிக்கும் கூட்டத்தாரால் நடைபெற்ற மாநாடு..

மனசு கொதித்து போகிறது ..

இப்போதும் தமிழனாய் பிறந்ததற்கும் .. இந்திய தேசத்தில் வாழ்வதற்கும் வெட்கப்படுகிறேன்

ராஜ நடராஜன் said...

இதுவரை தெரியாத வரலாறு.பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//வெறும் புகைக்கு இப்படிக் கண் எரியாது.வீட்டில் கண்ணூறு நாவூறு என்று செத்தல் மிளகாயும் வேப்பிலையும் போட்டு எரித்து எச்சில் துப்பச் சொன்னபோது எரிந்த கண் எரிவு வேறு.இது வேறு.//

இரண்டு அனுபவங்களும் எனக்கு உண்டு.

கலா said...

அன்று தொடங்கிய "ஐயோ"
சத்தம்தான்
இன்றுவரை ஈழத்தில்
தொடர்கிறது\\\\\\

ஹேமா தமிழர்கள் கட்டாயம்
தெரிந்திருக்க வேண்டிய ஒரு
{நடந்த} நிகழ்வை இட்டிருக்கிறாய்
மிக்க நன்றி.

படித்ததும் கண்ணீர்தான் வழிகிறது
அங்கு நம் இனத்தைத் தேற்றுவதற்கு
யாருமில்லை இனிமேலும்...!!????

LK said...

:(((

வந்தியத்தேவன் said...

அன்று தமிழுக்கு விழா எடுத்தார்கள். இன்றோ?

தனிநாயகம் அடிகளார் என்ற தனிமனிதரால் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைப் பற்றி செம்மறி மாநாட்டில் தமிழீனத் தலைவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இந்த இரத்தம் சிந்திய மாநாட்டை விட கோவை குடும்ப மாநாடு பெரிதாம்.

தமிழ் மதுரம் said...

காலங் கடந்தாலும் மாறாத வழுக்கள். லண்டனிலை இருந்த்து ஒராள் இந்தத் தொடருக்குப் பக்க பலமாக இருந்ததாக எங்களின் சர்வதேசப் புலனாய்வுத் தகவல்கள் தெர்விக்கின்றன. சும்மா ஒரு பகிடிக்குச் சொன்னேன்.
மர்மத் தொடர் வாசிப்பது போல இருந்தது பதிவு.

‘’தமிழர்களின் உரிமைக்குரல் தான் இப்போது உறங்கி விட்டது. இனி இப்படியான இடங்களிலாவது உரிமைக் குரல்களைக் காணுவோம்.


ஹேமா சுகம் கேட்டதாகச் சொல்லவும்?

பகிர்வுக்கு நன்றிகள் ஹேமா.

நமிதாவின் குத்தாட்டத்தினூடாகவும், துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறும் சுஜீவாவின் சிங்களப் பொப்பிசையாலும் எமது வரலாறுகள் இப்போது நசுங்கி அமிழ்ந்து கொண்டு செல்லுகின்றன.

தமிழ் அமுதன் said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று பதிவு..!


செம்மொழி மாநாடு முடிந்த பிறகு பதிவிட்ட..உங்கள் பண்பு பாராட்டுக்குரியது..!

ஜோதிஜி said...

எத்தனை அழகான உரையாலுக்கான திறமைகள்.
உள்ளே ஒழிந்து உள்ளதை நான் ஏற்கனவே அறிந்ததே.
அதனால் தான் உங்கள் கவிதைகளை விட இது போன்ற நிறைய விசயங்களை எப்போதுமே எதிர்பார்க்கின்றேன்.

படித்து முடித்து முடித்ததும் அந்த இடத்தில் இருந்தது போல் இருந்தது. இதே விசயத்தை புத்தகங்களில் படித்த போதிலும் அது செத்த கருவாடு போல உயிர் அற்ற வெறும் வார்த்தைகளாக இருந்தது,

ஜெயா said...

கண்டிப்பாக தமிழ்மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வு.இதுவரை நிறையப் பேருக்கு தெரியாத வரலாறை பதிவு இட்டமைக்கு பாராட்டுக்கள் ஹேமா....

பா.ராஜாராம் said...

கையறு நிலை.. :-(

'அப்பா பேசியது'க்கு பிறகு கண்கள் கண்கள் கலங்கத் தொடங்கியதுடா.

மனசை சொல்லும் மொழி ஹேமா.

பிரசன்னா said...

எத்தனை..? எத்தனை? பயங்கரங்கள் :(

Subankan said...

:((

அம்பிகா said...

கண்கள் கலங்குகின்றன.
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய வரலாறு.

VELU.G said...

தமிழர் அனைவருக்கும் தெரிய வேண்டிய செய்திகள் பகிர்விற்கு நன்றி

நிலாமதி said...

ஆழ மனதின் வலி மீண்டும் நினைவு வந்தது. என்று விடியும் நம் நல்வாழ்வு.....பதிவுக்கு நன்றி. ..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்.. மனம் கனக்கின்றது.. ஏன்???? ஏன்?????

தமிழனிடம் ஒற்றுமையும் உணர்வும் குறைவாக இருக்கா?????

வரலாற்று பகிர்வு ஹேமா... என்னை போற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை...

D.R.Ashok said...

:(

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நினைவுகள் சில நேரங்களில் வரம்
பல நேரங்களில் வலி ! :(

அக்பர் said...

வலித்தால் கூட அழ முடியாத உலகத்தில் இருக்கிறோம்.

ரம்மி said...

யாழ் தமிழ் மாநாடு, உமக்கு மகிழ்வுக்குரியது எனில் - கோவை மாநாடு எமக்கு! இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், கோவை நகரின் மேலும், முதல்வரின் மேலும் காட்டம் இருப்பதில் அர்த்தம் ஏதுமில்லை! கோவையும் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியே- இது நாள் வரை! தற்போது மிகவும் பெருமையாகவும்,மகிழ்வுடனும் இருக்கிறோம்! தயவு செய்து, மீண்டும் பழங்கதைகளைப் பேசி, மற்றவர்களை பழியாக்காதீர்! பலனேதும் ஏற்படுவதில்லை!
உங்களின் துன்பத்திற்கு உங்கள் தலைமையே காரணமன்றி, கலைஞரோ,எங்கள் மக்களோ காரணமில்லை!

ஸ்ரீராம். said...

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். துன்ப நினைவுகளை வேண்டாம் என்றாலும் விட்டு விலகுவதில்லை.

ஜோதிஜி said...

வலித்தால் கூட அழ முடியாத உலகத்தில் இருக்கிறோம்.

மிகச் சரியான வார்த்தைகள்

தமிழ் உதயம் said...

.அன்று தொடங்கிய "ஐயோ" சத்தம்தான் இன்றுவரை ஈழத்தில் தொடர்கிறது.

இன்னும் எவ்வளவு நாளைக்கு ஒலிக்க வேண்டுமோ.

கெட்டவன் said...

//யாழ் தமிழ் மாநாடு, உமக்கு மகிழ்வுக்குரியது எனில் - கோவை மாநாடு எமக்கு! ///
சகோதரா ரம்மி,
யாழ் தமிழ் மாநாடு உலக தமிழ் இனத்தின் மேல் கட்டவிழ்த்துவிடபட்ட பயங்கரவாதம் யாருக்கும் மகிழ்ச்சியில்லை ... தமிழ்க்காக நடந்த மாநாடிற்க்கும் தனி ஆளுக்காக நடத்தபட்ட மாநாட்டிற்க்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்...நான் வாதம் செய்யவில்லை என் தமிழினம்... தன்மானத்தோடு நிற்க உலக தமிழர்களான உங்கள அனைவரையும் வேண்டி கொள்கிறேன்.. எல்லைகளை வைத்து தமிழர்களை பிரித்து பார்க்காதீர்...எல்லைகள் அற்றவன் தமிழ்ன் தமிழகத்திலிருந்து...கெட்டவன்(தமிழின எதிரிகளுக்கு)

ஜெய்லானி said...

//அன்று தொடங்கிய "ஐயோ"
சத்தம்தான்
இன்றுவரை ஈழத்தில்
தொடர்கிறது//

கே.ஆர்.பி.செந்தில் உங்க பதில்தான் என்னுடைய பதிலும்..

பாருங்க ஹேமா.. இதுக்கும் யாரே ஒரு நல்லவர் தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு போட்டிருக்கிறார்.

நசரேயன் said...

//
பா.ராஜாராம் said...
கையறு நிலை.. :-(

'அப்பா பேசியது'க்கு பிறகு கண்கள் கண்கள் கலங்கத் தொடங்கியதுடா.

மனசை சொல்லும் மொழி ஹேமா.

//

மறுபடி சொல்லிக்கிறேன்

ராஜவம்சம் said...

ஐயோ.........
என்ன செய்ய புலம்புவதைத்தவிர

Cool Boy கிருத்திகன். said...

அம்மா இந்த கதையை சொல்ல கேட்டிருக்கிறேன்..
உப்பு மட சந்தி அங்கிள்களும் சிலாகித்திருக்கின்றார்கள்.
மடத்துவாசல் பிள்ளையார் கோவிலடியில் பொம்பர் குத்தியதை சோகமாக சொல்லி மலரும் நினைவுகளில் மூள்குவார்கள்..

- இரவீ - said...

தேவையான பதிவு , அறியத்தந்தமைக்கு நன்றி ஹேமா.

நேசமித்ரன் said...

இத்துணை இன்றியமையாத இடுகையை எப்படித் தவற விடத்தெரிந்தேன் ..

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் டார்ச் அடித்திருக்கிறீர்கள் ஹேமா

அப்பா பேசும் பகுதியில் இமைகளில் நீர் நனைத்தது

இடுகைக்குப் பின்னால் இருக்கும் வலி, உழைப்பு , ஆதங்கம்
எல்லாம் சொல்லித் தீராதது உணரத்தக்கது

இந்த இடுகைக்கு பெருமை கொள்ளலாம் நீங்கள்

நேசமித்ரன் said...

ரம்மி

என் கண்டனங்கள்!

kasthuri said...

pl check this news to know how Tamil scholars are treated in TN . High court has slammed the GOVT .
Read this .http://www.vikatan.com/news/news.asp?artid=3803

சக்(ங்)கடத்தார் said...

ரம்மி said...
யாழ் தமிழ் மாநாடு, உமக்கு மகிழ்வுக்குரியது எனில் - கோவை மாநாடு எமக்கு! இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், கோவை நகரின் மேலும், முதல்வரின் மேலும் காட்டம் இருப்பதில் அர்த்தம் ஏதுமில்லை! கோவையும் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியே- இது நாள் வரை! தற்போது மிகவும் பெருமையாகவும்,மகிழ்வுடனும் இருக்கிறோம்! தயவு செய்து, மீண்டும் பழங்கதைகளைப் பேசி, மற்றவர்களை பழியாக்காதீர்! பலனேதும் ஏற்படுவதில்லை!
உங்களின் துன்பத்திற்கு உங்கள் தலைமையே காரணமன்றி, கலைஞரோ,எங்கள் மக்களோ காரணமில்லை!//


அன்பு நண்பா! தாய்த் தேச உறவே! தொப்புள் கொடியின் பெருமை விளக்கும் தோழமையே! இந்தப் பதிவில் தங்களின் மாநாட்டினைப் பற்றி ஏதாவது குறைகள் கூறப்பட்டுள்ளனவா? ஒரு வரியிலாவது தமிழக மாநாட்டைப் பற்றி எதாவது தவறான வார்த்தைப் பிரயோகங்கள், வசனங்கள் வருகின்றனவா? ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்க நினைக்கிறீர்கள்?இதற்குத் தான் சொல்வது பதிவினைப் படித்த பிறகு தான் பின்னூட்டம் போட வேணும் என்று. பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டால் இப்படித் தான் மூக்குடை பட வேண்டும். உங்களின் வன்முறையினை உருவாக்கும் கருத்தினை மீளப் பெறவும்.

archchana said...

பகிர்விற்கு நன்றி.
// அன்பு நண்பா! தாய்த் தேச உறவே! தொப்புள் கொடியின் பெருமை விளக்கும் தோழமையே! இந்தப் பதிவில் தங்களின் மாநாட்டினைப் பற்றி ஏதாவது குறைகள் கூறப்பட்டுள்ளனவா? ஒரு வரியிலாவது தமிழக மாநாட்டைப் பற்றி எதாவது தவறான வார்த்தைப் பிரயோகங்கள், வசனங்கள் வருகின்றனவா? ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்க நினைக்கிறீர்கள்?இதற்குத் தான் சொல்வது பதிவினைப் படித்த பிறகு தான் பின்னூட்டம் போட வேணும் என்று. பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டால் இப்படித் தான் மூக்குடை பட வேண்டும். உங்களின் வன்முறையினை உருவாக்கும் கருத்தினை மீளப் பெறவும்///

நானும் வழிமொழிகிறேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்விற்கு நன்றி.
// அன்பு நண்பா! தாய்த் தேச உறவே! தொப்புள் கொடியின் பெருமை விளக்கும் தோழமையே! இந்தப் பதிவில் தங்களின் மாநாட்டினைப் பற்றி ஏதாவது குறைகள் கூறப்பட்டுள்ளனவா? ஒரு வரியிலாவது தமிழக மாநாட்டைப் பற்றி எதாவது தவறான வார்த்தைப் பிரயோகங்கள், வசனங்கள் வருகின்றனவா? ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்க நினைக்கிறீர்கள்?இதற்குத் தான் சொல்வது பதிவினைப் படித்த பிறகு தான் பின்னூட்டம் போட வேணும் என்று. பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டால் இப்படித் தான் மூக்குடை பட வேண்டும். உங்களின் வன்முறையினை உருவாக்கும் கருத்தினை மீளப் பெறவும்///

நானும் வழிமொழிகிறேன்.

Karthick Chidambaram said...

:((

லெமூரியன்... said...

இந்த நிகழ்வுகளை படித்து அறிந்து கொண்டிருக்கிறேன் முன்பே....ஆனால் அந்த அவலத்தை அனுபவித்த உங்களின் பகிர்வை படிக்கும் பொழுது நானும் உங்களில் ஒருவராக குழிக்குள் அடைபட்டு ஒழிந்திருந்தது போன்ற ஓருணர்வு..!

அவலங்கள் தொடர்கதை ஆகி...இப்பொழுது அங்கு நடக்கும் அவலங்கள் வெளியே கேட்காவண்ணம் மறைக்க பட்டுகொண்டிருக்கிறது...
தமிழகத்தின் குள்ளநரி கூட்டத்தின் பக்கபலத்துடன்...

கந்தப்பு said...

வசிக்க இதயம் வலிக்கிறது.

பித்தனின் வாக்கு said...

Hamu while reading your bad experience, i feel sad and bad.

Anonymous said...

இந்த நான்காவது தமிழாராட்சி மாநாடு பற்றி இங்கே (http://shanthru.blogspot.com/2010/06/blog-post_8719.html)
முற்றிலும் மாறாக கூறப்பட்டுள்ளதே இதில் எதை நம்புவது?

Er.L.C.NATHAN said...

hema ezhuthiyathu manathai pizhinthathu entraal rammi ezhuthiyathu manathai vettip pottathu. intha mathiri thamizh throkikalum intha ulahil saahaamal irukkiraarkalee! iyaho, en thamizh naadee!!!

நிலா முகிலன் said...

உங்கள் நினைவுகள் மகிழ்வையும் கண்ணீரையும் ஒன்று சேர வரவழைக்கிறது. நல்ல எழுத்து நடை ஹேமா.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

ஹேமா said...

செந்தில்...நன்றி நன்றி.முதல் பின்னூட்டமும் உங்களின் உணர்வும் ...என்ன செய்யலாம் செந்தில்.எல்லாம் அரசியல்.
மக்களைப் பற்றி நினைப்பவர்கள் அரசியலுக்கு வெளியில் அல்லவா !


நடா நன்றி...உங்களுக்கு நாவூறு கண்ணூறு !சரி சரி...எங்கே கண்ணீர்ப் புகைக்குள் அகப்பட்டீங்க.
கல்யாணத்தில ஓமப் புகையோ !


கலா...நன்றி தோழி.இன்னும்
எங்கள் வாழ்வு புகையில்லாமலே கண்ணீரோடுதானே !


கார்த்திக்....ஒரு கதை கேட்பது போல உணர்ந்தீர்களோ.
ம்ம்ம்...ஈழத்தவர் கதை !


வந்தியத் தேவன்...நன்றி வருகைக்கு.//செம்மறி மாநாட்டில் தமிழீனத் தலைவர்//
விடுங்கோ.வலி எங்களுக்குத்தானே.
அவர்களுக்கென்ன !


கமல்...நன்றி.உங்கள் சுகம் இலண்டன் பார்த்ததாம்.சும்மா விளையாடாதேங்கோ.இங்க யாரும்
எனக்கு உதவி செய்றதில்லை
பதிவு எழுதுறதுக்கு.
எங்கள் வரலாற்றுத் தடங்கள் மாற்றி மறைக்கப்பட்டாலும் இப்படியான ஆவணங்கள் சாட்சி சொல்லும்தானே.


தமிழ் அமுதன்...வாங்கோ வாங்கோ.இது ஒரு சின்னப் பதிவு.இதன் விரிவாக்கம் நிறையவே இருக்கும்.யாரையும் குறை சொல்லவென்று எழுத நினைக்கவில்லை நான்.இந்த மாநாடு எங்களூரில் நடந்த மாநாட்டை நினைக்க வைத்தது.அவ்ளோதான்.


ஜோதிஜி...நன்றி நன்றி உங்க அன்புக்கு.எனக்குள் என்ன திறமை இருக்கோ என்னமோ மனசில வலி, என் தேசம் ,என் மக்கள் உணர்வு நிறைஞ்சு கிடக்கு.


ஜெயா....வருங்கால எங்கள் தலைமுறைகள் அறியவேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு.
எங்களுக்கே அரை குறைதான் தெரிய வருது.அவர்கள் காலத்தில் எல்லாம் மூடி மறைக்கப்பட்டு சிங்களவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.அதனால் இவையெல்லாம் தேவையான பொக்கிஷங்கள்.


பாரா அண்ணா...அப்பாவும் சொல்லும்போதும் கலங்கிவிட்டார் !


பிரசன்னா..நடந்தது முழுக்கப் பயங்கரம்.ஆனால் பயங்கரவாதிகள்ன்னு
பேர் வாங்கினது நாங்கதானே !


சுபாங்கன்...வாங்கோ.என்ன அதிர்ச்சியா.அறிஞ்சு வச்சிருங்கோ.
இப்பிடியெல்லாம் நாங்கள் அவதிப்பட்டிருக்கிறோமடா தம்பி.


அம்பிகா...நன்றி.இதெல்லாம் மாற்றமுடியாதெனச் சொல்லும் ஈழத்தவரின் தலையெழுத்து.

ஹேமா said...

வேலு..நன்றி என் பகிர்வோடு இணந்து கொண்டமைக்கு.


நிலா...எங்கள வலிகள் வலித்துக்கொண்டேதான் இருக்கவேணும்.நாங்கள்பட்ட அவமானங்கள் நிரந்தரம்தானே.


ஞானம்...சரியாக எடை போடுகிறீர்கள்.எங்களின் இந்நிலைக்குக் காரணமே எங்களுக்குள் இல்லாத ஒற்றுமைதான் காரணம்.ஏன்...இப்போகூடப் பாருங்களேன் இணையத் தளங்களில் கூட முகம் தெரியாமலே நீ...நான்,பெரியவன் ..சின்னவன் என்று அடித்துக்கொள்கிறார்கள்.
ஒதுக்கி வைக்கிறார்கள்.அப்போ !


அஷோக்...மயங்கி விழுந்திடாதேங்கோ.
எங்கட கதைகள் இதுபோல
நிறையக் கிடக்கு.அப்பப்போ சொல்லிக்கொள்ளலாம் நினைவலைகளாக.


ஷங்கர்....//நினைவுகள் சில நேரங்களில் வரம்
பல நேரங்களில் வலி//
நாங்கள் வலி வேண்டியே வரம் கேட்டிருக்கிறோம் போல !


அக்பர்...//வலித்தால் கூட அழ முடியாத உலகத்தில் இருக்கிறோம்.//புரிகிறது அக்பர் உங்கள் ஆதங்கம்.ஜோதிஜியும் உங்கள் கருத்தை இன்னும் வலுயுறுத்துகிறார்.உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.இதுதான் இன உணர்வு.


ரம்மி....வாங்க வணக்கம் தோழரே.இந்தப் பதிவில் நான் யாரையும் குறை சொல்லவேயில்லை.
எங்கள் புலம்பல் எப்பவும் போல.
பழங்கதை பேசுவதே ஈழத்தவனின் பொழுது போக்கு இப்பல்லாம் !


ஸ்ரீராம்....பாருங்களேன் பழைய நினைவுகளைக் கூட நினைக்க வேண்டாமாம்.இது என்ன துன்பம் எங்களுக்கு !


தமிழ்...என்ன நீங்க.சத்தமும் இரத்தமும் ஓய்ந்துதானே இருக்கு.
இப்போவெல்லாம் வலிக்காமல் அடிக்கிறதுதானாம் ஈழத்தவனுக்குச் சரியாய் இருக்கும் !


கெட்டவன்....நன்றி.
உணர்ச்சிவசப்பட்டேதான் அழிஞ்சுபோய் நிக்கிறோம்.
விடுங்கோ.அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்குச் சரியாகவே படும் சொல்லிப்புரிய வைக்க முடியாது.
என்றாலும் நன்றி உங்களுக்கு.


ஜெய்...அடுத்த பிறப்பில் எல்லோரும் ஓரிடமாகப் பிறப்போம்.எனக்குள்ளும் அந்த ஆசை இருக்கு.ஜெய் உங்களுக்குத் தெரியாதா ?யார் ஈழம் பற்றிய
பதிவு போட்டாலும் யாரோ தமிழ்மணத்தில் காத்திருந்து மைனஸ் ஓட்டு எப்போதும் போடுகிறார்கள்!


நசர்...நன்றி நன்றி.துன்பங்களை மனசோட இல்லாமல் உங்ககூட பகிர்ந்திருக்கிறேன்.


ராஜவம்சம்...எங்களோடு
சேர்ந்து நீங்களும்தானே
ரொம்பக் காலமாக புலம்புகிறீர்கள்.
யார் காதில் கேட்கிறது !

Madumitha said...

எங்களுக்கெல்லாம் தெரியாத
மறு பக்கத்தை எழுதியிருக்கிறீர்கள்.

எட்டாவது மாநாடு எங்க
ஊர்லதான் நடந்தது.
அது ஒரு அரசியல் மாநாடு
போலதான் நடந்தது,

ஹேமா said...

கிருத்திகன்...நீங்களும் இந்தப் பதிவு உண்மையென்று ஒப்புவிக்கிறமாதிரி இருக்கு உங்க அம்மா சொன்னதைச் சொன்னது.நன்றி கூல் கிருத்திகன்.


ரவி...என்னைவிட இப்படியான பதிவுகளை ஊக்கப்படுத்துவதில் உங்களுக்கும் ஆர்வம் அதிகம்.
அன்பின் இணைவுக்கு நன்றி.


நேசன்...அன்போடு கை கோர்த்துக்கொண்டமைக்கு நன்றி.


கஸ்தூரி...நன்றி.செய்தி வாசித்தேன்.


சக்(ங்)கடத்தார்...வாங்கோ வாங்கோ.
ஏனப்பு வயசு போனாக் கோப்பபட வேணுமோ.தெரியாதவைக்கு எடுத்துச் சொல்லவேணும்.சொல்லியும் விளங்காட்டிப் பேசாம இருப்பம்.
எங்கட வலியும் கஸ்டமும் எங்களோட.எண்டாலும் அழகா ரம்மிக்குச் சொல்லியிருக்கியள்.
நல்லதப்பு.


அர்ச்சனா..நன்றி நன்றி.தமிழின உணர்வோடு புதிதாய் என்னோடு இணைந்திருக்கிறீர்கள்.நன்றி.


உலவு.கொம்...நன்றி நண்பரே.நான் சொல்லாமலே எல்லோருமே ரம்மி அவர்களுக்குச் சொல்லிவிட்டீர்கள்.
உண்மையைப் புரிந்திருப்பார் ரம்மி.


கார்த்திக் சிதம்பரம்...
நன்றி.வாருங்கள்.


லெமூரியன்...வாங்க வாங்க.
அடிக்கடி எங்கள் அவலங்களை ஞாபகப்படுத்திக்கணும்.அதுவே வலிச்சாலும் ஒரு வெறி அல்லது அடங்காத்தனம்.


கந்தப்பு...நன்றி வருகைக்கும் புரிந்துகொண்டமைகும்.


சுதா(பித்தனின் வாக்கு)...இன்னும் விடுமுறை முடியலயா.
சுகம்தானே.என்ன...இன்னும் கல்யாணச் சாப்பாடு முடியலயா?சீக்கிரமா வாங்க சாமி.அன்புக்கு நன்றி.


நாதன்...அவர்களுக்கும் மிக்க நன்றி.சிலர் ஏதாவது சொன்னால் என்மீது தப்போ எனப் பயமாயிருக்கும்.உங்களைப் போன்றவர்கள் கை கொடுக்கும்போது தைரியமடைகிறேன்.ரம்மி போன்றவர்களை தமிழ்த் துரோகிகள் என்று சொல்ல முடியாது.
நாட்டில்,உலகில் என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியாதவர்கள் மட்டுமே.அதோடு நல்ல பயிர்களுக்கு நடுவில் களைகள் இருப்பதும் இயல்புதானே.


அனானி...உண்மையைச் சரியாகச் சொல்கிறீர்கள் என்று உங்கள் மனச்சாட்சிக்குச் சரியாக இருந்தால் ஏன் உங்கள் பெயரை மறைக்கிறீர்கள்?ம்ம்ம்...சந்ரு...!ஒருவேளை ஊடகவியளாளர் என்கிற முறையில் நிறைய அரசியல் விபரங்கள் அறிந்து வைத்திருக்கிறார் போலும்!அனுபவித்தவர்களுக்கு மட்டுமே உண்மை புரியும்.வலியையும் சொல்வார்கள்.ஒரே விஷயத்தைப் பலமாதிரியும் வாசிப்பவர்கள் அவர்களாகவே பகுத்துப் புரிந்துகொள்வார்கள்.இதுதான் வாழ்வும் அரசியலும் !


நிலாமுகிலன்...நன்றி.எழுத்துநடை எங்கள் இயல்மொழிதானே.


மது நன்றி.இயல் வாழ்வைக்கூட அரசியலாக்குகிறார்கள் அரசியல்வாதிகள்.

அண்ணாமலை..!! said...

ஒரு துயரத்தின் வரலாற்றுப்பதிவு இது.
ரொம்பவே நன்றிகள் உங்களுக்கு!

அப்பாதுரை said...

வலிக்க வைக்கும் விவரங்கள். சிந்திக்க வைக்கும் கட்டுரை.
வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த/இருக்கும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் நம் இனம் அங்கே ஏன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் என்ற மொழியின்/இனத்தின் காரணமாகவா இத்தனை கொலைகள்? இத்தனை ரத்தம்? இத்தனை சோகம்? பிரிவு தேடும் தீவிரம் ஒரு புறம் இருக்கட்டும்; அது கடந்து போன தலைமுறை. இனி அடுத்து வரும் இனச் சந்ததி என்ன செய்ய வேண்டும்? வேர்களைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு ஓடுவது தான் வழியா?

அப்பாதுரை said...

என்ன தான் தமிழ் தமிழினம் என்று பேசினாலும் அவரவர் சிக்கல் அவரவருக்கு என்ற மனப்பாங்கு தான் இந்திய மற்றும் பிற நாட்டு தமிழர்கள் மனநிலை. கருணாநிதி போன்றவர்களும் அப்படித் தான். சோனியா காந்தி - இந்தியாவின் பிரதமர் பெயர் கூட சட்டென்று மறந்து விட்டது :) - அவரும் அப்படித் தான். ரம்மியும் பிரிவினை பேசவில்லை; ஹேமாவும் தூண்டவில்லை. இருக்கும் சேற்றைச் சுட்டிக் காட்டி என்ன பயன்? லன் டனிலும், டோரான்டோவிலும், ப்ரேங்க்பர்டிலும், ஜெனீவாவிலும், பேரிசிலும் பிற இடங்களிலும் சிதறிய இலங்கைத் தமிழரின் சந்ததி இனி இலங்கைத் திரும்புவது சாத்தியத்தில் சிறு பங்கு. அங்கேயே வேரைப் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழரும் அவரின் வருங்கால தமிழினமும் - தழைக்க வேண்டியதில்லை - தறிகெடாமலிருக்க ஏதாவது வழி செய்ய முடியுமா? தலைவர்களை நம்பியே இருக்காமல் தொண்டர்கள் ஏதாவது செய்ய முடியுமா? சிறு துளியாய் ஏதாவது செய்ய முடியுமா? இன்றைக்கு இலங்கைத் தமிழருக்கு நிதி உதவி செய்தால் கூட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக உலக அதிகாரங்கள் கருதுகின்றன.

'இலங்கைத் தமிழர் இயக்கம்' ஒரு விடுதலை/சீர்திருத்த/மனித உரிமை தொட்ட இயக்கம் என்ற அங்கீகாரம் உலக அளவில் கிடைக்காதது இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராமல் போனதற்கான பல காரணங்களுள் ஒன்று என்று நினைக்கிறேன். மனித உரிமைக்காக உலகமெங்கும் போராடும் குழுக்களும் இயக்கங்களும் இலங்கைத் தமிழரை ஒதுக்கியது தமிழீழத் தலைமை ஒரு தீவிரவாதக் கூட்டம் என்று உலகெங்கும் நம்பப் பட்டதாலா? இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை ஒரு தலைவனாகக் கருத்தப்பட்ட பிரபாகரன் உலகப் பார்வையில் தீவிரவாதியாகக் கருதப்பட்டது தமிழீழப் பிரச்சினை தொடர ஏதுவானதா? காந்திகளும் தெரசாக்களும் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை; பிரபாகரன்களும் சிக்கலைத் தீர்ப்பதில்லை. காந்தி தெரசா-பிரபாகரனுக்கு இடைப்பட்ட தலைமையில் இலங்கைத் தமிழனுக்கு விடிவு பிறக்குமா? அப்படிப்பட்ட தலைமை உருவாகிறதா? இன்றைய தலைமுறை அதை உருவாக்க முடியுமா?

ஜோதிஜி said...

ஹேமா அப்பாதுரை கொடுத்த கருத்து உங்கள் எழுத்துக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. என்னைப் போன்றவர்கள் நீங்கள் எது குறித்து அதிகம் எழுத வேண்டும் என்று உணர்த்திய அக்கறை.

ஹேமா said...

அப்பா...நன்றி உங்களுக்கு.
நிறைவான பின்னூட்டம்.அரசியல் தவிர்த்த சாதாரண ஒரு தமிழனின் மனதை அப்படியே கொட்டி வைத்திருக்கிறீர்கள்.எங்கள் மனதின் கேள்விகளும் இதுவேதான்.

எங்களுக்குள் முதன்மையான பலயீனம் ஒற்றுமைக் குறைவு.
அத்தனை கைகளும் அத்தனை தமிழனின் குரல்களும் சேரும்போது அதன் பலமும் அதிர்வும் உலகைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்.என்றாலும் புலம் பெயர் தமிழர்கள் முயன்றோம்.
ஆனால் இங்கும் அதே ஒற்றுமைக் குறைநிலைதான்.

எங்களுக்குத் தேவையானதைக் கேட்டோம்.தீவிரவாதம் என்றது இலங்கை அரசாங்கமும் உலகும்.

பிரபாகரன் அவர்களைப் பற்றிப் பேச எந்த வகையிலும் நான் தகுதியானவள் அல்ல.தமிழனுக்கு அதிஸ்டமில்லை.அவ்ளோதான்.

இனி வரும் காலமும் தலைமுறையும் கேள்விக்
குறியோடுதான்.இதேநேரத்தில் இலங்கை அரசாங்கம் தன் முயற்சியோடு முழுமூச்சாக தமிழர் பகுதிகளெல்லாம் ஊடுருவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

யுத்த நேரத்தில் மற்றைய நாடுகளோடு இணங்கிப் போய்க்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் இப்போ யார் சொல்வதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.என்றாலும் இப்போ ஐ.நா. நிபுணர் குழு போர்க்குற்றங்கள் விசாரிக்கவென்று முனைகிறது.அவர்களோடு ஒத்துழைக்காமல் கசப்பான அனுபங்களைச் சந்தித்ததாகவே
பான் கீ மூன் அவர்கள் சொல்கிறார்.

பார்க்கலாம்....
ஈழத்தவனின் வாழ்வு பெரியதொரு கேள்விக்குறிதான் நிலத்திலும் புலத்திலும்.என்றாலும் எங்கள் வாழ்வு தேவைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிற நிலையை மட்டும் ஞாபகப் படுத்தியபடி இருப்போம் நிலத்திலும் சரி புலத்திலும் சரி !


ஜோதிஜி....என்னை ஊக்கப்படுத்தி என் எழுத்துக்களை அழகாக்கிக்கொண்டே வருகிறீர்கள்.நன்றி.


அண்ணாமலை....
உங்களுக்கும் என் நன்றி.

ஜோதிஜி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

இந்த பின்னூட்டத்தில் இவராகத்தான் இருப்பார் என்று சொல்லியுள்ளவர் என்னிடம் ஸ்கைபேயில் உரையாடும் போது நான் ஈழத்தில் வாழ்ந்தாலும் பல விடங்கள் உங்கள் எழுத்தின் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன் என்றார். வேறு சிலரும் இதே போல் தனிப்பட்ட மின் அஞ்சல் வாயிலாக தெரிவித்துக் கொண்டே தான் இன்று வரையிலும் இருக்கிறார்கள்.

இது பெருமை அல்ல. பல விடங்கள் வெளியே தெரியாமல் தான் இன்னமும் இருக்கிறது.

ஜோதிஜி said...

போன ஜென்மத்தில் ஈழத்தில் நான் பிறந்து இறப்பேன் போல. அந்த அளவிற்கு ஈழ விஷயங்கள் இன்று வரைக்கும் தேடலாகத்தான் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பதிப்பகம் நான் புத்தகமாக எழுதியுள்ள விசயத்தை படித்து பார்த்து என்னை அழைத்தார்கள். வெளியிட வேலை நடந்து கொண்டு இருக்கிறது. இறையருள் இருந்தால் வரலாம்....

அவர்கள் பிரபல பதிப்பகம். ஈழம் குறித்து எத்தனையோ படித்து உள்ளேன். உங்கள் பார்வை முற்றிலும் புதிதாக ஆச்சரியமாக இருக்கிறது என்றார். அவர் வயது 60க்கு மேல் இருக்கும்.

இத்தனைக்கும் அவர் முதல் பதிவாக படித்தது ஆங்கிலேயர்கள் தொடக்கமான 1933 வரைக்கும். அந்த அளவிற்கு அர்பணிப்போடு புத்தகமாக்கியே தீரவேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் படித்து உருவாக்கி இருந்தேன். எவருமே இத்தனை உண்மையான ஆதாரங்கள் கொடுத்தது இல்லை.

நான் மதிக்கும் மதிப்புக்கு உரியவர் அதை படித்து முடித்து என்னிடம் கேட்ட கேள்வி பொய் சொல்லாதீர்கள் எத்தனை நாள் ஈழத்தில் இதற்காக இருந்தீர்கள் என்றார்.

நீங்கள் அப்பாதுரைக்கு கொடுத்த பதில் உங்கள் உண்மையான திறமையும் மொத்த இலங்கைப் பிரச்சனையின் உங்கள் தீர்க்கமான பார்வையும்.

வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்.

வளர்க நலமுடன்.

ஹேமா said...

ஜோதிஜி...எனக்கும் நீங்க யார்ன்னு சரியா தெரில.ஆனா என்னைக் கவனிக்கிறீங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது.

அப்பாதுரை ஐயாவைவிட இவ்வளவு வேகமா என்னோட பின்னூட்டம் பாத்திருக்கீங்க.
சந்தோஷமாயிருக்கு.முதல்ல ஒரு பின்னூட்டம் போட்டு அழிச்சு அப்புறமாப் போட்டேன்.காரணம் பயம்.சொல்லத் தெரியாமல் என்னாச்சும் சொல்றேனோன்னு.

உங்க பின்னூட்டம் மனசை லேசாக்கிடிச்சு !நன்றி ஜோதிஜி !

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

வெற்றிக்கு வாழ்த்துகள்.

yarl said...

தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் ஹேமா. நான் சொன்னேன் அல்லவா? இந்த வருடம் உங்களுக்கான வெற்றி வருடம். எல்லாவற்றையும் வென்று எடுப்பீர்கள். மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள். உங்கள் மினஞ்சல் எனக்கு கிடைக்குமா?

கும்மி said...

தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.

ஹேமா said...

தமிழ்மண விருதுக்கு இங்கு வாழ்த்திய உங்கள் எல்லாருக்கும் நன்றி.

யாழ் மங்கை உங்களுக்காக jeenunilach@google.com

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP