Sunday, December 07, 2008

மீண்டும் மகளாகிறாள்(3)

ப்படியாகக் காலம் கடந்துகொண்டிருந்த நேரத்தில் ரதி தன் பரீட்சையில் சாதாரணமாகவே வர்த்தகப் பிரிவில் சித்தி பெற்றிருந்தாள்.குடும்ப நிலை கருதி தொடர்ந்தும் தான் பாடசாலை போகவில்லையென்றும் தான் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து ஏதாவது தொழிலுக்கான பாடத்திட்டம் ஒன்றில் சேர்ந்து படிக்க என்று தன் கருத்தைத் தெரிவித்தாள்.அவளது அப்பாவும் அம்மாவும் கூட அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.

அவள் அந்தத் திட்டப்படி படிக்கத் தொடங்கி மாதமொன்று போயிருக்கும்.
அந்த நேரத்தில்தான் அவளது ஒன்றுவிட்ட அண்ணணின் திருமணம் நடைபெற்றது.அந்த அண்ணா திருமணம் செய்து கொண்ட மனைவியின் அதாவது, அண்ணியின் குடும்பமும் அந்தத் திருமணத்தின் பின்னர் எங்கள் ஊரிலேயே இருந்தார்கள்.இன்று ரதி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் அஸ்திவாரம் அன்றுதான் போடப்பட்டது.இதனை அப்போ அறிந்திருக்க யாருக்குமே ஞாயமில்லை.ரதியின் சொந்த வாழ்க்கை என்ற ஒன்று அப்போதான் ஆரம்பமாகியது.

ரதியின் அண்ணியின் தம்பி மோகன் இவளைவிட 3-4 வயதே மூத்தவனாய் இருப்பான்.இவர்களது குடும்பம் இசைக்கலைக் குடும்பம்.மோகனும் குடும்பக் கலையையே பழகித் தொழில் செய்து வந்தான்.சாதாரண இசைக் கலைஞன் அவன்.ரதி ஒவ்வொருநாளும் பேரூந்தில்தான் படிக்கப் போய் வந்து கொண்டிருந்தாள்.மோகன் ரதியைப் பின் தொடரத் தொடங்கியிருந்தான்.அவள் திரும்பி வரும் நேரங்களிலும் தான் எதேச்சையாக வருவதுபோல வந்து சந்திக்கத் தொடங்கினான்.பின்னர் மெதுவாகச் சுகம் விசாரித்துக் கதை கதை கொடுத்தான்.சாதாரணமாகக் கதைத்துப் பேசி வந்தவன் திடீரென்று ஒருநாள் ரதியிடம்"நிறைய நாள் தான் ஒன்றை மனதிற்குள் வைத்திருந்ததாயும் அதை இன்று ரதியிடம் சொல்லவே வேண்டும் என்றும் சொல்லி முடித்து ரதியை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான்".ரதியோ பயத்தில் வெலவெலத்துப் போனாள் கால்கள் நடுங்க மனம் படபடக்க வீடு வந்து சேர்ந்தது தெரியாமலே வந்து சேர்ந்தாள்.

அவளுக்கு அப்போது வயது பதினேழு மட்டுமே.அவளோ அல்லது அவளது வீட்டிலோ அவளுக்குத் திருமணம் என்று நினைக்காத நேரம்.அப்போ படிப்புக்கு என்று மட்டுமே அந்த வயது இருந்தது.அவள் நினைவிலும் படிப்பு மட்டுமே இருந்தது.அவள் அன்று இரவே சின்னதாகக் கடிதம் ஒன்று எழுதினாள் மோகனுக்கு.

மோகனுக்கு,நீங்கள் உங்கள் விருப்பத்தை எனக்குத் தெரிவித்தீர்கள்.தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.தற்சமயம் என் மனம் படிப்பில் மட்டுமே நாட்டமாக இருக்கிறது.இதற்காக எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றில்லை.ஆனால் என்னை இப்படித் தொந்தரவு செய்தீர்களானால் அநியாயமாக என் படிப்புக் குழம்பிவிடும்.எனக்குப் படித்துச் சின்னதாய் என்றாலும் ஒரு வேலை செய்யவேண்டும் என்று ஆசை.எங்கள் குடும்பச் சூழ்நிலை உங்களுக்குத் தெரியாதது அல்ல.இப்படி ஏதாவது வெளியில் தெரிந்து வீட்டுக்குத் தெரிய வந்தால் உடனே கல்யாணம் காட்சி என்று என்னை மாட்டிவிடுவார்கள்.அப்படி உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருந்தால் கொஞ்சம் நாள் போகவிட்டு உங்கள் அக்காவிடமே சொல்லுங்களேன்.அண்ணி அண்ணா மூலமாக நடக்க வேண்டிய விதி என்று ஒன்றிருந்தால் நடந்தேயாகும் எம் திருமணம்.அதுவரை அவசரப்படவேண்டாம்.தயவு செய்து என் படிப்பைக்
குழப்பவேண்டாம்.இப்படிக்கு ரதி.என்று மண்டாட்டமாக எழுதி அடுத்தநாளே மோகனின் கைக்குச் சேர்த்துவிட்டாள்.

அடுத்து ஒரு கிழமை போயிருக்கும்.அவளது பெரியம்மா ஒருநாள் மாலை ரதியின் விட்டுக்கு வந்திருந்தாள்.வீட்டில் சின்னதாய் சலசலப்பு.அப்பா வீட்டில் இல்லைதானே.அம்மாவும் பெரியம்மாவும் ரதியைக் கூப்பிட்டார்கள்.கூண்டுக்குள் விடப்பட்ட கைதிபோல விசாரித்தார்கள்."என்ன...மோகன்
சொல்லிக்கொண்டு திரியிறான் நீ அவனைக்
காதலிக்கிறாயாம்.கடிதமும் தந்தனீயாம்.அங்க நந்தாவில் வெளியில சேர்ந்திருந்து கஞ்சா அடிச்சுக்கொண்டு அதில இருந்த எல்லாருக்கும் சொல்லியிருக்கிறான்.கதை ஒண்டு வந்திருக்கு.என்ன உண்மையே அது."என்று பெரியம்மா கேட்டா.ரதிக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடியே ரதி நடந்தது என்னவோ அப்படியே சொல்லிவிட்டாள்.
(இன்னும் வருவாள்)

ஹேமா(சுவிஸ்)

38 comments:

Anonymous said...

கொஞ்சம் பொறுங்கோ முதல்லே இருந்து படிச்சுட்டு வாறன்...

Anonymous said...

தொடருகள்.......

Anonymous said...

கதை நல்லா போகுது! தெரிந்த கதையா?

Anonymous said...

யதார்த்தமான கதை ... பந்தி பிரித்திரு-
ந்தால், திறம்.
பொதுவாக, சகல சமூகங்களிலும் சகஜமாக இடம் பெறும் ஏமாற்று வித்தையிது ...
நாம் எமது பிள்ளைகளிடமிருந்து
சிலவற்றை மறைப்பதால் வந்த வினை
இது.
தயை செய்து தொடர்ந்து எழுதுங்கள்
நாம் திருந்துவோமா என பார்ப்போம்

Anonymous said...

நன்றிகள்........... ஆயிரம்...... நீங்க சொன்னபடி அதை எடுத்திட்டமல்லே..... இனி சுலபமாக்ருத்துரையிடலாமுங்க......... ரொம்பா தங்சுங்க

Anonymous said...

காணொளித் தொகுப்புத் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகிறோம் வாசக நெஞ்சங்களே! நாங்கள் முதலில் இணைத்திருந்த காணொளித் தொழில் கருவி சில கணினிகளில் தொழிற்படவில்லை என்கின்ற எம் வாசகர்களின் வேண்டுகோளிற்கின அனைத்து வாசகப் பெரு மக்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் இதனை மீள் பதிவிடுகின்றோம் என்பதை இவ் விடத்தில் அறியத் தருகின்றோம். இதற்காக மிகவும் கடுமையாக உழைத்த எமது காணொளித் தொழில் நுட்பப் பிரிவிற்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் எமது வாசகர்கள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Anonymous said...

யதார்த்தமும் எளிமையும் உங்கள் படைப்புக்கு அழகு சேர்க்கிறது.
இன்னும் நிறைய தங்கள் இலங்கைத் தமிழில் எதிர் பார்க்கிறோம்.

Anonymous said...

My comments after this part completes.

Anonymous said...

ஹேமா, said...
அக்கினிப் பெருமூச்சு...அப்பாடா....
சமாதானதிற்காகவும்,மக்களின் நன்மைக்காகவும் போர்.புத்தனின்....
புதிய ஹிட்லரின் புனிதப்போர்!!!ம்ம்ம்...நமக்கென்ன ஐயா..நாம நம்மடபாட்டில இருப்பம்.அழகு.//

//என்ன ஹேமா நீங்களா இப்படிச் சொல்வது?? நாங்கள் எங்கள் பாட்டில் இருந்தால் எம்மை வரலாறும், எமது மனச் சாட்சியும் மன்னிக்குமா??? எங்களுக்கென்றும் சில கடமைகள் உள்ளன. ''புலமும் களமும் கை கோர்த்தால் தான் எம் நிலமும் ஒரு நாள் மலரும்! உலகும் ஒரு நாள் எம் பக்கம் திரும்பும்.! என்றொரு வாக்குண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.!//

Anonymous said...

என் மனம் படிப்பில் மட்டுமே நாட்டமாக இருக்கிறது.இதற்காக ''எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றில்லை.ஆனால் என்னை இப்படித் தொந்தரவு செய்தீர்களானால் அநியாயமாக என் படிப்புக் குழம்பிவிடும்''.எனக்குப் படித்துச் சின்னதாய் என்றாலும் ஒரு வேலை செய்யவேண்டும் என்று ஆசை.எங்கள் குடும்பச் சூழ்நிலை உங்களுக்குத் தெரியாதது அல்ல.//

/ஹேமா அப்படியே பெண்களின் மனதிற்குள் உள்ளவற்றை ஒரு பெண்ணே சொல்லும் போது அழகாக இருக்கிறது. பெண்களுக்கு ஆண்களைப் பிடித்திருந்தாலும் பெண்களின் நாணத்தினால், அவர்களின் பயந்த சுபாவத்தினால் பெண்கள் நிறையப் பேர் இப்ப சொல்ல முடியாது. பிறகு சொல்கிறேன் என்று சொல்வது பற்றி நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்.. ம்..... என்னதான் இருந்தாலும் கொஞ்ச நாட் செல்ல சொல்லியிருப்பீங்களே... ம்... தொடருங்கள்..

Anonymous said...

''தொடருகள்.......''

pls explain.............cannot understand ............sorry for
being a daft case,

Anonymous said...

super

Anonymous said...

இயல்பான நடையில் சிறப்பாக இருக்கு, தொடருங்கள் ஹேமா.

Anonymous said...

வாங்கோ தமிழன்.படிச்சிட்டு வாரன் சொன்னீங்கள்.பிறகு காணேல்லையே!சரி...ஆறுதலா வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கோவன்.

Anonymous said...

கவின்,உங்கட தங்சுக்கு நானும் நன்றி சொல்றேன்.இப்போ நினைச்ச உடனே நிறையத் திட்டிப்போட்டு வரலாம் சுகமா.கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

கபீஷ் வாங்கோ.பட்ட கதை,பார்த்த கதை,பாடின கதை,கதையான கதை.

Anonymous said...

வணக்கம் benzaloy.முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் பெயரை தமிழில் சொல்லிப் பார்த்தேன். வரமறுக்கிறது.
எப்படி உங்கள் பெயரை உச்சரிக்கலாம்.கோவிக்காமல் சொல்வீர்களா?

உண்மைதான் எத்தனயோ சமுதாயச் சிக்கல்களைத் தேவையற்றது என எங்கள் மூத்தவர்கள் சரியாகச் சொல்லித் தராததாலேயே எங்களுக்குள் எத்தனை திறமை இருந்தும் பயம்,வெட்கம் என்று இன்றுவரை வெளிநாட்டவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு வாழமுடியாமல் தவிக்கிறோம்.
என்றாலும் இன்றைய சூழ்நிலையில் எவ்வளவோ நாம் முன்னேறியே இருக்கிறோம்.

அடுத்து உங்கள் சந்தேகம்
"தொடரு(ங்)கள்.அது எழுத்துப்பிழை. அவ்வளவுதான்.

Anonymous said...

வணக்கம்,வாங்க செய்யது.நன்றியும் கூட.உங்கள் பக்கம் வந்தேன்.உங்கள் பின்னூட்டப் பதிவு முறையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை.அந்தப் பின்னூட்ட முறையை என் கணணி ஏனோ மறுக்கிறது.என்றாலும் உங்கள்
"மேகங்கள் திரட்டுவது நீ"கவிதை காதலின் ஆழத்தோடு அழகாய் அமைந்திருந்தது.பின்னூட்டம் போட
முடியாமைக்கு கவலைப்படுகிறேன்.

Anonymous said...

வாங்க முனியப்பன். நன்றி வருகைக்கு.அடிக்கடி வாருங்கள்

Anonymous said...

வணக்கம் chuttiarun உங்கள் இணையத் தளத்தில் குறும்படங்கள்.ஆங்கிலப்படங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறதா?

Anonymous said...

/அக்கினிப் பெருமூச்சு...அப்பாடா....
சமாதானதிற்காகவும்,மக்களின் நன்மைக்காகவும் போர்.புத்தனின்....
புதிய ஹிட்லரின் புனிதப்போர்!!!ம்ம்ம்...நமக்கென்ன ஐயா..நாம நம்மடபாட்டில இருப்பம்.அழகு.//

என்ன கமல்,புரிந்துகொண்டது இவ்வளவும் தானா?நல்லவேளை கண்டணம் தெரிவிக்காமல்
விட்டீர்களே உங்கள் சகாக்களோடு.
அதுவரை தப்பினேன்.கடவுளே...
"அக்கினிப் பெருமூச்சு"மிகவும் ரசித்தேன்.நான் சொன்னது அப்படியே நக்கலாய்."நமக்கென்ன ஐயா..நாம நம்மடபாட்டில இருப்பம்"சொல்லும் விதம் மிக மிக அழகாய் இருந்தது.
அட போங்கடா.பகிடி,ஆதங்கம் ஒண்டும் விளங்காம!!!

Anonymous said...

//ம்..... என்னதான் இருந்தாலும் கொஞ்ச நாட் செல்ல சொல்லியிருப்பீங்களே...ம்... தொடருங்கள்..//
கமல்,கதை உங்கட கற்பனைல ஓ...இப்பிடித்தான் தொடருதோ?எனக்கு இப்ப ஒரு யோசனை.
என்னண்டா,இந்தக் கதை எப்படிப் போகப் போகுது எண்டு தலையங்கம் போட்டுக் கொஞ்சம் கேட்டுப் பார்ப்பமோ!

Anonymous said...

வாங்க ஆனந்த்,சுருக்கமாய் super.
ஏன் மனம் விட்டுச் சொல்லலாம்தானே!

Anonymous said...

வாங்கோ பிரபா.ஊக்கம் தரும் ஊட்டச்சத்து உங்கள் கருத்து.நன்றி.

Anonymous said...

''உங்கள் பெயரை தமிழில் சொல்லிப் பார்த்தேன். வரமறுக்கிறது''

அப்பிடி லேசாக வராது >>>
அது B ல் தொடங்குவதாலே
''பேன்'' எனவும் ''பெண்'' என்றும்
என்னை எனது பிள்ளைகளே
நையாண்டி செய்வார்கள் >>>

Ben என நண்பர்கள் >>>
''டாய்'' என மூத்தோர்களும் >>>
''தம்பி'' என்று அன்பாக சிலரும் >>>
வேறு பல விரும்பத்தகாத
கெட்ட வார்த்தைகளால் பலரும்
என்னை அழைப்பது வழமை >>>
நீங்கள் எப்டியும் அழைக்கலாம் >>> உங்களது பீடிகையுடன்
கேள்வியை தொடங்கும் ஸ்டைல் எனக்கு பிடித்ததொன்று >>>

Anonymous said...

தமிழ் பாடம் >>> திரவ்பதை உடன் மூத்தவர் இருந்தார் >>>
வாசலில் வைத்த செருப்பை நாய் கொண்டுசென்றுவிட்டது >>>
என வாத்தியார் சொல்ல >>>மாணவன் கேட்டன் >>>
என்ன சார், அந்த நாட்களிலேயே ''செருப்பை'' கண்டு
பிடிசிட்டான்களா? >>> ''ஓடுடா நாயே'' >>>
அந்த மாணவன் இன்று தமிழில் எழுத ஆசை பட்டு
உங்களிடம் >>>
''மீண்டும் மகளாகிறாள்'' என்றதன் உட் கருத்து என்ன ?
இந்த கதையை நீங்கள் தானே எழுதியது ?
ஒரு துணிஞ்ச பெண் >>> பழிக்கு பழி வாங்கும் character
என்றாலும் சரி >>> ஒரு சிறு கதையில் சிதரியுன்களேன்.

Anonymous said...

அன்பு சகோதிரி உங்களுக்கு கவிதை தான் நல்லா வரும்ன்னு நெனச்சேன். ஆனால் சிறுகதை எழுதியும் அமர்க்களப்படுத்துகிறீர்கள். அந்த பிரமிப்பில் வார்த்தை வரவில்லை. super..என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விட்டு போய் விட்டேன்.

கவியரசியாக இருந்த நீங்கள் தற்போது கதையரசியாகவும் உருவெடுத்தது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

எனது பதிவுக்கு தொடர்ந்து கருத்துக்கள் கூறி வரும் உங்களுக்கு மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் நேரமின்மை காரணத்தால் என்னால் உங்கள் பதிவுக்கு சில நேரங்களில் மறுமொழியிட முடியவில்லை. தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Anonymous said...

வாங்க பென்.செருப்புப் பகிடி கடிதான்.அதுசரி ...யார் தமிழ் படிக்கிறார்கள்.நீங்களா? புரியவில்லையே!

"மீண்டும் மகளாகிறாள்"கதை முடிய புரியும்உங்களுக்கும்.காத்திருங்கள்.ஏன்பழிவாங்கல்.வேண்டாம்.சின்னத்திரை நாடகம் போல் இல்லாமல் இயல்பு வாழ்வோடுதான் அமையும் இந்தக் கதை.இந்தக் கதையை நான்...
நானேதான் ஐயா எழுதினேன்.ஏன் ஐயா சந்தேகம்.

Anonymous said...

வாங்க ஆனந்த்.வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி.(என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலதானே)நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்.உண்மையில் இந்தத் தளம் கொஞ்சம் நகைச்சுவையாக கலந்துரையாடலாய் பலதும் பத்துமாய் நகர்த்தத்தான் தொடங்கியிருக்கிறேன்.(நேரம்தான் பிரச்சனை)அதற்கு ஒரு காரணம் நீங்கள்தான்.எப்போதும் என்னைச் சோகமாயே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்.ஒரு பதிவில் கவனியுங்கள்.உங்கள் பெயரைச் சொல்லியிருக்கிறேன்.உங்களுக்குத்தான் என் நன்றி ஆனந்த்.

Anonymous said...

கதையின் நடை நல்லாயிருக்கு.

அடுத்த பாகம் வர இன்னும் எவ்வளவு நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.

Anonymous said...

dear friend !!
shall i know the meaning of your
blog
"uppu mada santhi"
Deva.

Anonymous said...

Deva you took it up for me too! Thanks.
Besides, would like to know the well being of another Tamil Chava girl writer married in Swiss: Pavalarany
Would be ever grateful for contact with her who knows me as ben uncle.
Thank you, Hema.

Anonymous said...

வாங்க ஜமால்.கதை இன்னும்
ஒன்று இரண்டு பாகங்களில் முடித்துவிடுவேன்.நன்றி ஜமால்.

Anonymous said...

வாங்க தேவா."உப்புமடச் சந்தி"
என்பது என் ஊரின் ஞாபகமாக,நான் பிறந்து வளர்ந்த ஊரின் தெருச் சந்தியின் பெயர்.அந்தச் சந்தியில் ஒரு திண்ணைக்கட்டு.அதில் சிலசமயம் இளைஞர்கள் கூட்டம் துவிச்சக்கர வண்டிகளோடு,போய் வருகிற எல்லோரையுமே கிண்டல் பண்ணியபடி.அந்தத் திண்ணையைக் கடப்பதற்கு இடையில் அவர்கள் கடிக்கிற கடியில் காது பிய்ந்தே போகும்.ஒரு சமயங்களில் வயது போனவர்கள் அரசியலோ வீட்டுப் பிரச்சனயையோ பேசியபடி.சிலசமயம் கடலை விற்கும் ஒரு வயோதிப அம்மா.மீன் விற்பவரும் காத்திருப்பார் அங்கு.ஒரு சமயம் பேரூந்து ஒன்று மீன் விற்பவரோடு மோதியதில் அதில் வாங்க வந்தவர்கள் உட்பட 10-15 பேர் இறந்து போன சமபவமும் உண்டு இந்த உப்புமடச் சந்தியில்.மறக்க முடியாத என் ஊர் சந்தி இது.

Anonymous said...

நன்றி!
சொந்த ஊரை
மறக்கவில்லை நீங்கள்!
என் ப்ளாக் படித்து
விமர்சிங்க!
தேவா.

Anonymous said...

வணக்கம் தேவா.உங்கள் பக்கம் வந்தேன்.உங்கள் பக்கத்தில் பின்னூட்ட முறை மாற்றினால்தான் என்னால் பின்னூட்டம் போட முடியும்."மீண்டும் மகளாகிறாள்(1)ல்
பாருங்கள்.உங்களுக்கு பதில் தந்திருக்கிறேன்.

Anonymous said...

//போய் வருகிற எல்லோரையுமே கிண்டல் பண்ணியபடி\\

மேலே காணும் வசனம் அநேகமான ஊர்களுக்கு பொருந்தும் >>>
யாழ் குடா நாட்டில்
ஸ்போர்ட்ஸ் கு பிரபல்யமான ஊர் அரியாலை ஆகும் >>>
அங்குள்ள மாம்பழம் சந்தியில் எனது அபிமான அம்மன் கோவிலும், இந்திரன் டெய்லர் அவர்களும் புகழ் பெற்ற சங்கதிகள் >>>
இந்திரன் கடை விறாந்தையில் ஒரு சிறிய வாங்கு ... அதில் வந்து உட்காருவோர் பெரிய வாய் கொண்ட இளம் வட்டங்கள் >>>
வீதியில் எவர் சென்றாலும் இவர்களது கமெண்ட்ஸ் தாக்கும் >>>
வயதில் முதிந்தோர் இயக்கத்திடம் முறையிட >>>
இயக்கம் ஓர் வார்னிங் கொடுத்துப் பார்த்தது >>>
ஊஹூம், சரிவரவே இல்லை >>>
யாருமறியாது ஒரு டேப் ரேகோர்டேர் ஒன்றினை வைத்து, குரலுக்குரியோரை கைது செய்து உரிய தண்டனை வழங்கியே உபத்திரத்தை தீர்த்தது.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP