Tuesday, March 10, 2009

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

தமிழ்மணம் சம்பந்தமாய் எனக்குள்ளே ஒரு கேள்வி.குழந்தைநிலா தளம் தமிழ்மணத்தோடு இணையத் தொடங்கி ஒரு வருஷமும் முடிஞ்சும் போச்சு.நான் ஒவ்வொரு பதிவையும் தமிழ் மணத்தோடு இணைத்துவிட்டு எதிர்பார்த்திருப்பேன்.

இங்க தாங்க என்னோட கேள்வி-இல்லாட்டி ஆதங்கம்ன்னும் வச்சுக்கலாம்.என்னோட பதிவுகளில் ஒன்று கூட இன்றுவரை சூடான பதிவுகளுக்குள்ளோ அல்லது வாசகர் பரிந்துரைக்கோ போனதில்லை.
காரணம் என்ன?சிலரது சாதாரணப் பதிவுகளை எல்லாம் நான் கண்டிருக்கிறேன்.சூடான பதிவுகளுக்குள்ளும் வாசகர் பரிந்துரைப் பதிவுக்குள்ளும்.

குழந்தைநிலாவில் 170 கவிதைகள்,உப்புமடச் சந்தியில் 28 பதிவுகளும் போட்டிருக்கிறேன்.ஒன்றுகூடவா அதைப் படிப்பவர்கள்
மனதில் பதியாமல் - பாதிக்காமல் இருக்கிறது.

சமீபத்தில் யூத் விகடனில் கூட இரண்டு கவிதைகள் வெளியாயின.
அடிக்கடி தமிழிஸ் தளத்தில் பிரபல படைப்புகளுக்குள் பதிவாகிறது.

தமிழ்மணத்தில் மட்டும் ஏன் இந்த வஞ்சகம்?
சரி....தமிழ்மணத்தில் தப்பு இல்லையென்றால்
என்னில் தப்பா?

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அல்லது என் பதிவுகள் சரியில்லையா?

எனக்கு தமிழ்மண நிர்வாகத்திடமிருந்தோ அல்லது என் இணைய நண்பர்களிடமிருந்தோ பதில் வேணும்.எதிர் பார்க்கிறேன்.இல்லை என் பதிவுகள் தரமாயில்லை என்று யாராவது சொன்னால் எழுதுவதையாவது நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

எனவே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சே ஆகணும்.

ஆதங்கத்தோடு-அன்போடு ஹேமா(சுவிஸ்)

19 comments:

கமல் said...

Hi! 1st sorry for writting in english... i'm so bussy hema...... i'm writting tihs comment from my work place.... we haven't got tamil font....in my office pc...


just we can say...

one reason.... why u'r post doesn't come as a hot spot post in tamil manam:

i'ts depend on yoou'r hedding....
ex: if u give a heding as a ''pulikalin adijum....puthukkudijirupu samarum..!


it's deffently come in tamilmanam....

next reason...it's depend on the viewe's vots...

if we give more tamilmanam vote.... we can see u'r post as a hot post list in tamilmananm....

if give a popular heding....if u didn't write any other introduction insiede..... i'ts alos come as a hot post in tamilmanam..


any way hema...

we will wait and see....

try again...give a amazing heading.... then we can se what's going on there......


sorry for writting in english...


i will write down every thing in tamil ASAP.....

Anonymous said...

தமிழ்மணத்தின் நடவடிக்கை அப்படி தான் இருக்கிறது. இதை நானும் பல முறை கண்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் விட்டு தள்ளுங்க.

உங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறதே? அது போதுமே? உங்கள் கவிதைகளை படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் வருகிறதே. அந்த அன்பான நண்பர்கள் இருக்கிறhர்கள்.


பெரிய பதிவர்கள், நட்சத்திர பதிவர்கள், சுடான பதிவர்கள் இது போக ஒவ்வொரு பிரிவு இதில் இடம் பிடிப்பது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

எல்லா பக்கமும் அரசியல் இருக்கிறது. ஒருவேளை இங்கேயும் அரசியல் இருக்கிறதே என்னவோ?


உலகத்தில் எங்கேயே வசிக்கும் தமிழர்கள் மனதால் பதிவுகளில் ஒன்றுப்பட்டு இருக்கிறhர்கள். மனநிம்மதியோடு பதிவு இடுகிறhர்கள். அந்த நிம்பதியில் கிடைக்கும் நண்பர்கள் போதுமே.

ஆதங்கம் வரும் போது நிம்பதி பறி போய் விடும்.

போட்டி போட்டு பதிவுகள் எழுதுபவர்களை விட ஆத்ம திருப்திக்கு எழுதுபவர்கள் இங்கே அதிகம். ஆத்ம திருப்தி தான் நமக்கு வேண்டும். அதனால் அவற்றையெல்லாம் விட்டு தள்ளுங்க.


இது என்னுடைய கருத்து.

மோனி said...

___சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக.___

--- நீங்களே சொல்லி இருக்கீங்க ...

___போட்டி போட்டு பதிவுகள் எழுதுபவர்களை விட ஆத்ம திருப்திக்கு எழுதுபவர்கள் இங்கே அதிகம். ஆத்ம திருப்தி தான் நமக்கு வேண்டும். அதனால் அவற்றையெல்லாம் விட்டு தள்ளுங்க.___

--- கடையம் ஆனந்த்-ம சொல்லிட்டார் ...

விட்டுத்தள்ளுங்க ...
எழுதிக் குவிங்க ...

ஆதவா said...

சகோதரி.... நான் வந்து எழுதி ஒரு மாதங்கள் ஆனபின்பு இப்பொழுதுதான் எனது இரு பதிவுகள் (முகவரி, முத்தமிடுங்கள்) பரிந்துறைக்கப்பட்ட பகுதியில் வந்தது. சுமார் ஏழு ஓட்டுக்கள் வந்தாலே போதும் அங்கே வந்துவிடுகிறது. ஆனால் நல்ல நல்ல பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதில்லை... அது என்னவோ நமக்கே பார்க்கப் பார்க்க பொறாமையாகத்தான் இருக்கிறது... (ஒரு சில பதிவுகள் முப்பது ஓட்டுக்கள்.... யப்பாடி... ) நிறைய வாசகர்கள் படிக்கிறார்கள் அவர்களது பதிவுகளை.... அப்படி நிறைய படித்தால் அது சூடான இடுகைகளுக்குச் செல்கிறது.. (என்னுடையது அங்கே எல்லாம் வருவதே மிகப்பெரிய விஷயம்.)

இதில் தமிழ்மணத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை. வாசகர்களுடைய பரிந்துரைகளும் அவர்களது பார்வைகளுமே காரணம்...

என்னைப் பொறுத்தமட்டில் ஒரு சிலர் (உங்களைப் போன்றோர்) நல்ல பதிவுகள் கொடுத்தும் பரிந்துரை செய்யாமல் இருப்பது தவறுதான்... அதற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது.... வாசகர்களைக் கவருவதற்காக பதிவுகள் கொடுப்பதை விட, நம் திருப்திக்காக, பரிந்துரை இல்லாவிடினும் தரமான பதிவுகள் தரலாம்.....

நாம் வேண்டுமானால் இப்படி செய்யலாம்..

நம் நண்பர்களுக்குள் பிடித்த பதிவுகளுக்கு தமிழ்மணக் கருவிப் பட்டையில் வாக்குகள் (+ or -) கொடுக்கலாம்..... என்ன சொல்றீங்க?

ஆதவா said...

////if give a popular heding....if u didn't write any other introduction insiede..... i'ts alos come as a hot post in tamilmanam../////

கமல் சொல்வது சரிதான்.... உங்களுக்கு ஒன்று தெரியுமா.. இந்த வாரம் முழுக்க நான் காதல் பதிவுகளைத்தான் எழுதினேன்... சுமார் ஆயிரம் பேர் வந்து படித்திருக்கிறார்கள்... ஆனால் நானே சிலாகித்து எழுதிய சில கவிதைகளை மொத்தமே 20 பேர்தான் படித்தார்கள்... என்ன கொடுமை கமல் இது???

ஆதவா said...

கடையம் ஆனந்தின் ஒவ்வொரு வரிகளையும் ஒப்புக்கொள்ளுகிறேன்....!!!!!!

Anonymous said...

வாதம், விவாதம் என்று போகின்ற போதும் டென்சன் தான் வரும்.
நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் இடம் பிடித்தால் மனம் நிறைந்து விடுமா? புரியவில்லை.

நமக்கு பிடித்த பதிவுகளை எழுதும் போது அதை மற்றவர்கள் ஆதரிக்கும் போது தானாகவே திருப்தி வந்து விடுமே?

இதெல்லாம் தேவையில்லாது. டென்சனை குறைக்க தான் நிறைய பேர் பதிவுகள் எழுதுகிறhர்கள். நான் கூட அதற்கு தான் எழுதுகிறேன்.

பிறகு இது போல் கேள்வி எழுப்பி டென்சனை கூட்ட வேண்டும். இது கூட தேவைற்ற பதிவு தான் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு பதில் சொல்வதால் நீங்கள் என்னை தவறhக நினைத்தால் கூட பரவாயில்லை. தப்பில்லை. என்னுடைய கருத்து இது.

தமிழ்மணம் திரட்டி நிர்வாகம் said...

வணக்கம்,
தமிழ்மணம் தொடர்பான உங்கள் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பில்
உதவிக்குழு நண்பர்கள் விரைவில் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம் உதவிக்குழு.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

======================
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்

வால்பையன் said...

தமிழ்மண தவறல்ல

தமிழ்மண வாசகர்கள் தவறு!
எல்லா பதிவுகளையும் படிப்பதில்லை, நேரமின்மை காரணமாக.

மற்றொரு வழி இருக்கிறது.

நீங்களும் நிறைய நண்பர்களுக்கு பின்னூட்டம் இடுங்கள், அவர்களும் உங்களுக்கு பின்னூட்டம் இடுவார்கள், உங்கள் ப்ளாக் மறுமொழிகள் இடப்பட்டவைகளில் வரும். மேலும் நண்பர்கள் திறந்து பார்ப்பார்கள்.

அதிக வாசகர்களால் திறக்கப்பட்ட வலைப்பூவே சூடான இடுக்கையில் வரும்.

நசரேயன் said...

எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மணம் சூடான இடுக்கைக்கு unigue ஹிட் வேண்டும் குறைஞ்சது ஒரு 150௦ ஹிட் வேணும், வாசகர் பரிந்துரை பதிவை படிக்கிற எல்லோரும் ஓட்டு thumps up போடணும் போட்டா தன்னாலே வாசகர் பரிந்துரைக்கு வரும் ஒரு பத்து ஓட்டு இருந்தால் போதும்,உங்களுக்குன்னு ஒரு ரசிகர் ௬ட்டம் இருக்கு என்னை மாதிரி, இனிமேல எல்லோரும் ஓட்டு போடுகிறோம், அதனாலே கோபபடாம சுக்கு காபி போட்டு குடிங்க

நசரேயன் said...

Unique hit

கீழை ராஸா said...

ஏன் இந்த கொலைவெறி...?

ஹேமா அவர்களே...
நண்பர் வால்பையன் சொன்னது உண்மையான விசயம் என்றாலும் சில நுணுக்கங்களை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்...
இந்த பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல கேள்வி...நல்ல பதிவு...இருந்தாலும் ஒரு சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய பதிவை கெடுத்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது...
ஆமாங்க என்க்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்பதற்கு பதிலாக,

"தமிழ்மணத்திற்கு சூடான இடுக்கைகள் பற்றி சூடான கேள்வி"

"தமிழ்மண நிர்வாகிகளே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"

இப்படி ஒரு பெயரை வைத்திருந்தால்...ஒரே நாளில் 200 ஹிட் உறுதி...நீங்களும் சூடான இடுக்கை உள்ளே...
அடுத்து முயற்சியுங்கள்...வெற்றி நிச்சயம்.
அடுத்து பரிந்துரை அதெல்லாம் எதிர்பார்க்காதீங்க...அது உங்கள் பதிவுக்கு கிடைக்கும் அங்கிகாரம் அல்ல உங்களை ஒரு குழுமத்திற்கு தெரிந்திருந்தால் போதும்..அதெல்லாம் பற்றி கவலைப்படாமே எழுதுங்க...படிக்க நாங்க இருக்கோம்...

ஹேமா said...

எல்லாருக்கும் நன்றி.என் வீட்டில் இன்னும் சூடுதான்.தணியவே இல்லை.கிண்டல் அடித்தே என்னைச் சூடாக்குகிறார்கள்.

ஜெயா said...

ஹேமா அக்கா என்ன நீங்க.எவ்வளவு தைரியமான ஆள் நீங்க.வீட்டில அப்பிடித்தான்.விடுங்கோ அவையளின்ர பகிடியை.அவைக்கும் தெரியும் நீங்க நல்ல எழுதுவீங்க எண்டு.அவையள் சும்மா.நீங்க எழுதுறதை வாசிக்க எண்டே எவ்வளவு பேர் இருக்கினம்.
இதுக்கெல்லாம் போய்.விடுங்க ஹேமா அக்கா.நாளைக்கு குழந்தைநிலாவில புதுக்கவிதை போடவேணும்.சரியோ.

Muniappan Pakkangal said...

I don't know abt this Hema.Kadayam Anand & Mony have told nicely.Ithukkellama kavalaipaduvaanga.You kanow the wordinds of Arignar Anna "Potruvor potrattum,Puzhuthuvaari thootruvor thootrattum,Yetrathoru karuththai un nenju yerkumaayin yevar varinum anjarka.cheer up Hema.

MayVee said...

present madam

Ravee (இரவீ ) said...

என்ன இது ???
இவ்ளோ நடந்திருக்கா... :((

ஹேமா said...

இரவீ,அது பெரிய சண்டை வீட்ல....அப்புறம் நான் தமிழ்மணத்தோடயும்,நம்ம நண்பர்களோடயும் சண்டை.நீங்கதான் கண்டுக்கவே இல்லை.தமிழ்மணம் மெயில் போட்டிருந்தாங்க.இது அவங்க பிரச்சனை இல்லையாம்.
என்னோட நண்பர்கள்தான் தமிழ்மண ஓட்டுப் போடணுமாம்.

சந்தோஷ் said...

nalla question. kadamaiya senjuttu palanai edhir pakkaradhula thappe illa.ennala mudium bodhu unga padhivugallukku vimarsam eludharen.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP