Tuesday, March 17, 2009

நிலா அம்மாவின் 31+1 கேள்விகள்.

(உண்மை...நான் சொல்வெதெல்லாம் உண்மை.)

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெயர் ஹேமவதி.என் குடும்பம் கொஞ்சம் இசையில் கலந்த குடும்பம்.அதால ஒரு இராகத்தின் பெயரைத் தேடி வச்சாங்களாம் என் பெரிய மாமா.ஆனாலும் அவருக்குத் தேனுகா ன்னு வைக்கத்தானாம் விருப்பம்.என் அப்பா ஒரு ஆசிரியர்.அவர் அகராதி பாத்திட்டு தேனுகா ன்னா எருமைக் கூட்டம் ன்னு வைக்க விடலயாம்.ஆனாலும் வீட்ல வேற வேற செல்லப் பேர்ல எல்லாம் கூப்பிடுவாங்க.(அதெல்லாம் சொல்லக்கூடாது)ஆனா சுவிஸ் வந்து எல்லாருமே-வெள்ளைக்காரர் உட்பட ஹேமா தான்.

என்னோட பெயர் எனக்கு நிறையப் பிடிக்கும்.எப்போவோ வானொலில ஹேமவதி ராகத்தில ஒரு கீர்த்தனையும் கேட்டிருக்கிறேன்.ஆனா சங்கீதம் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ம்ம்ம்....எப்போ அழுதேன்?போன வருஷம் அப்பா அம்மாவை சிஙப்பூர்ல போய்ப் பாத்திட்டு வரும்போது விமான நிலையத்தில் நின்று நிறைய அழுதேன்.ஏன் என் ஊர் பற்றிய பதிவுகள் படிக்கும்போதும்,என் பதிவுகளை நான் எழுதும்போதும் கலங்கிவிடுவேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்காது.அழகா இல்ல.ஆனா படிக்கிற காலத்தில அழகாத்தான் இருந்திச்சு.பிறகு எழுதிற சந்தர்ப்பம் ரொம்ப காலம் விட்டும் போச்சு.அதனாலேயோ என்னமோ...!

4).பிடித்த மதிய உணவு என்ன?

எனக்கு சாப்பாடுன்னு அவாப்பட்டு பிடிக்கும்ன்னு சொல்ல எதுவுமில்ல.எல்லாமே பிடிக்கும்.பசிக்கு வயித்துக்கு ஏதாச்சும்.
சிலசமயங்களில் 2-3 காய்கறிகளை உப்புக் கொஞ்சம் தூவி ஆவில அவிச்சிட்டு நூடுல்ஸ் போட்டும் சாப்பிடுவேன்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நான் யார் கூடவும் உடனேயே ஒட்டிக்க மாட்டேன்.1-2 சிநேகிதிகள்தான் இருக்காங்க.அவங்க கூட அளவோடதான்.நானும் மூக்கு நுழைக்க மாட்டேன்.நுழைக்க விடவும் மாட்டேன்.ஆனா அளவோட ரொம்பகால சிநேகிதமா இருப்பேன்ஆனா நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்.சொல்லாமல் அரை மனதோடும் பழகப் பிடிக்காது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியிலயும் கடலிலயும் குளிச்சிருக்கேன்.ஆனா அருவியில குளிக்கத்தான் நிறையப் பிடிக்கும்.நான் அப்பாவின் வேலை காரணமாக மலையகப் பகுதியில் வாழ்ந்திருக்கிறேன்.அங்கு அடிக்கடி அருவிக்குளியல்.
அப்பாடி...இப்போ நினைச்சாலும் இப்பவே ஓடிப்போக வேணும் மாதிரி இருக்கு. கடைசியாக 2003 ல் குளிச்சேன்.ஐயோ...அருவிலங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தின் மகிழ்ச்சி-புன்னகையை.அதிலிருந்தே எடை போடலாம் தொடர்ந்து கதைக்கலாமா வேணாமன்னு.(பொய்யாகவும் புன்னகை வரலாம்.பிறகு கவனிச்சுப் பழகிக்கலாம்.)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது>>>>துணிவு.தளராத நம்பிக்கை.முயற்சி.இரக்கப்படுவேன்.உடனே உதவி செய்யும் குணம்.(செய்திட்டு மாட்டிக்கிறது அப்புறம்)

பிடிக்காதது>>>>கொஞ்சம் பிடிவாதம்,என்னப்போலவே மத்தவங்களும் இருக்கணும்ன்னு நினைக்கிறது.(நான் சரியா-நேர்மையா இருக்கிறதா நினைக்கிறேன்.மத்தவங்க பார்வைல...தெரில!)

9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்சது>>>>நான் திட்டினாலும் அன்பா இருக்கிறது.

பிடிக்காதது>>>>முயற்சி,தேடல் இல்லாத சோம்பேறித்தனம்.(முயன்றால் நிறைய வளர்ச்சி தெரியும்.)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

வேற யாரு?அந்தச் சரி பாதிதான்.அப்புறம் அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

மெல்லிய றோஸ் நிறம்.

12.என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வானொலி.நான் தூங்கும் நேரம் தவிர எந்த நேரமும் அது தூங்காது.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?

மெல்லிய ஊதா நிறம்.

14.பிடித்த மனம் ?

இரவில் பூக்களின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நான் இவரை ரசித்துப் படித்த கதை"ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்" ல் தான் சந்தித்தேன்.படித்துப் பார்த்தால் எங்கள் ஊர்க் கதை.ஒருவேளை அவரும் எங்கள் ஊர்க்காரராக இருப்பாரோ என்று கேட்டேன்.

//நீங்க கோண்டாவில் - நான் கும்பகோணம்.//
ஓ...அப்படியா!என்ன நடுவில கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கு.அப்படித்தானே?

//ஆனா இருவருமே தமிழர்கள்.
தாய் - தாய்நாடு பிடித்தவர்கள் - என்று நினைக்கின்றேன்.//
அதென்றால் உண்மை.//

இப்படித்தான் எங்கள் நட்பு உருவானது.பிறகு நிறையவே எழுத்துப் பிழைகள் விடுவார்.திருத்திவிடுங்க என்று உரிமையும் தந்தார்.இயல்பாய் சின்னச் சின்ன விஷயங்கள்தான் எழுதுகிறார்.சோம்பேறி அல்லது மனச் சோர்வு போலும்.மனதால் சங்கடங்கள்-வேதனைகள்.உடைத்தெறிய முடியாமல் கஸ்டபடுகிறார்.அவரின் பதிவுகளுக்குள் பெரிய விஷயங்கள் அடங்கியிருக்கவில்லை என்றாலும் ஒரு வேதனை தெரியும்.அவரைச் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டு வர வேணும் என்பதில் எனக்கு ஒரு ஆசை.ஆதங்கமும்கூட.பாருங்களேன் அவரை யார்னு...!பின்னூட்டத்தில் "அவருக்கும் பெரிய எண்ணம்."இப்படி செல்லமாகப் பேசியபடி தொடங்கினது எங்கள் நட்பு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?

எனக்கு நிலா ன்னாலே ரொம்பப் பிடிக்கும்.அவங்க பேர்ல நிலா ஒட்டிக்கிட்டு இருக்கு.ஒரு நாள் போய் பார்த்தேன்.நிலாக்குட்டி போட்டோக்கள் அசத்திடுச்சு.அவங்க இயல்பான எழுத்துக்களும் பிடிச்சிருக்கு.கடைசியா மொக்கை கவிதைன்னு கலக்கியிருக்கிறாங்க.யாராச்சும் பாத்தீங்களா...!

கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு

17. பிடித்த விளையாட்டு ?

இப்போதைக்கு ஒண்ணும் இல்ல.ஊர்ல இருக்கிறப்போ கிரிக்கெட் விருப்பமா பாப்பேன்.ஆ...ன்னு கிரிக்கெட் பாத்து மாமா வாங்கித் தந்த பார்க்கர் பேனாவைத்
தொலைத்த ஞாபகம்.

18.கண்ணாடி அணிபவரா?

வெயில் காலங்களில் கார் ஓட்டும்போது மட்டும்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கதை உள்ள படங்கள்.உதாரணம் ஹேராம்,மொழி,ஆட்டோகிராவ்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நான் கடவுள்.இப்படியும் இருக்குமா என்கிற சந்தேகத்தோடு.
இருக்கிறதாம் என்றும் கேள்விப்படுகிறேன்.

அச்சோ...இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! (இது புலம்பல்)

21.பிடித்த பருவ காலம் எது?

பனி பூவாய்க் கொட்டி உள்ளம் வரை குளிர வைக்கும் காலம்.அழகான நிலாக்காலம்.மழை பெய்து மரங்கள் கழுவப்பட்டு ஈரத்தலை அசைத்தபடி இருக்கும் அந்தச் சமயம் ஒரு அழகு.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?

இப்போதைக்கு இணையங்களில் ஏதாவது படித்தால் மட்டுமே உண்டு.நேரமே இல்லை.
(இப்படியே தொடர் பதிவுகள் என் பதிவுகள் பின்னூட்டங்களுக்குமே நேரம்.)


23.உங்கள் டெச்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றவே மாட்டேன்.நிறையக் காலமாக எனக்குப் பிடித்த படம் மட்டுமே.(சொல்ல மாட்டேன் யார்ன்னு.)

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது>>>>மெல்லிய இசை மட்டும்.

பிடிக்காதது>>>>சத்தமாய்-அதுவும் தூஷன வார்த்தைகள் பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?

இப்பவே கண்டம் விட்டுக் கண்டம் மாறித்தானே !ஸ்பெயின்,பாரீஸ்,ஜேர்மனி,லண்டன்,சிங்கப்பூர்,மலேசியா,இந்தியா(கேரளா,இராமேஸ்வரம்) U.A.E போயிருக்கேன்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எல்லோரும் கொஞ்சம் ஒத்துக்கொண்ட விஷயம், சின்னதாய் கவிதைன்னு சொல்லிக் கிறுக்கிறேன்னு.சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் இங்கு லண்டன் தமிழ் வானொலிக்கு.கொஞ்சம் பாத்ரூமில் பாட வரும்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

மனசுக்குள்ள தப்புன்னு தெரிஞ்சும் சரின்னு சொல்ல்லி வாதடுறதை ஏத்துக்கவே முடியாது.நம்ம நாட்டு அரசியல் அப்பிடித்தான் கிட்டத்தட்ட.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வேற என்ன !பிடிவாதம்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிஸ்-இதைவிட வேற என்ன சுற்றுலாத்தலம் வேணும்.எங்கள் நாட்டின் மலையகப் பகுதிகள்(நுவரெலியா,கண்டி) மிக மிக அழகு.

March 4, 2009 - 5:13 PM

Switzerland tops tourism competitiveness index
Switzerland has retained its position as the world's best place for the tourism and travel business, the World Economic Forum (WEF) said on Tuesday.
Austria, Germany, France and Canada followed, but the Geneva-based WEF said current economic troubles had not yet made their way into the rankings. Thea Chiesa, a WEF economist, said the situation would be different next year.
"We will see the current stimulus plans, being implemented by different nations, start to bear fruit," Chiesa said.
Infrastructure and environmental sustainability are among the WEF's 14 major factors when measuring competitiveness in the tourism sector.
"To thrive, or even survive, in this period of uncertainty and change, both the travel and tourism industry – and destinations themselves – will need to approach the challenges in a holistic and systemic manner," Chiesa said.
The report also explored the impact of oil prices on the tourism industry and the importance of price competitiveness.
Jennifer Blanke, a senior economist with the organisation's global competitiveness group, said countries must look at long-term issues that will come into play once the economic crisis subsides.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சுயநலமில்லாம,யாருக்கும் கஷ்டம் கொடுக்காம முடிஞ்சா முடியாதவங்களுக்கு உதவி செய்துகிட்டு வாழனும்ங்கிறதில வைராக்கியமா இருக்கேன்.இருந்திட்டும் இருக்கேன்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !

சமையல்.(தானும் நடுவுல புகுந்து....அட்டகாசம்.தாங்க முடியாது.)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.(இது என் கேள்வி)

வாழ்வு அழகான ஒரு கவிதைபோல.அதன் வரிகளின் வடிவில்தான் அதன் மெருகு.

விதி முறை
.மூணு பேரை மட்டுமே அழைக்கலாம்.
.இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.

நான் அழைப்பது : இரவீ - கண்டுகொண்டேன்.
http://blogravee.blogspot.com/

நன்றி - நிலாவும் அம்மாவும் -
(எ)பொன்னாத்தா சண்டைக்கோழி.

http://sandaikozhi.blogspot.com/

என்னை அறிவித்துக் கொண்டவள் இவள்.
ஹேமா(சுவிஸ்)

118 comments:

MayVee said...

me th 1st

MayVee said...

arumai nalla irukku ppa ....
naala velai naan escape

ஹேமா said...

மேவி,இன்னும் தூங்கலியா?நான் இன்னும் தூங்கலை.இனித்தான்.
முதல் வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

//நீங்க கோண்டாவில் - நான் கும்பகோணம்.//
ஓ...அப்படியா!என்ன நடுவில கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கலக்கல்ஸ்

தொடர்பதிவின் மூலம் நீங்கள் ஆர் எண்டு அறியக்கூடியதா இருந்தது :)கொண்டிருக்கு.அப்படித்தானே?//

ஹேமா said...

பிரபா,கன காலத்துக்குப் பிறகு
இந்தப் பக்கம்.காத்துக் கொஞ்சம் பலமாத்தான் அடிச்சிட்டுது.
வாங்கோ...வாங்கோ.

Anonymous said...

நல்ல பதிவு, சிறப்பாக இருக்கிறது. அடுத்து ரவீயா? அட்ராசாக்கை...அட்ராசக்கை.

புல்லட் பாண்டி said...

ஒரு பத்து கேள்வியா சுருக்கியிருக்கலாம்! ஸ்க்ரோல் பண்ணி கால்மூட்டெல்லாம் வலிக்குது... :)

உங்கள்ப்பற்றி தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது...

பிள்ளைங்களப் பற்றி ஒண்ணுமே எழுதல? அது தப்பான அபிப்பிராயத்த தொற்றுவிக்காதோ?

வாழ்த்துக்கள். :)

ஹேமா said...

வால் பாண்டி,பிள்ளைகள் இருந்தால் நிச்சயம் அறிவித்து இருப்பேனே !

என்ன செய்ய நான்,இவ்வளவு கேள்விகளோடுதான் தொடரைத் தொடங்கியிருக்கிறார் நிலா அம்மா.
அதோடு எனக்கும் ஒரு குறை.
ஒருவரை மட்டுமே அறிமுகப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்.கடைசி மூவரை -இருவரை அறிமுகப்படுத்த அனுமதித்திருக்கலாம்.உங்கள் வருகைக்கு நன்றி பாண்டி.

நட்புடன் ஜமால் said...

அடிக்கடி இடம் மாத்தாதிங்க

1st போயிடிச்சி பாருங்க ...

நட்புடன் ஜமால் said...

பேர் பிறந்த விதம் அழகு ...

அபுஅஃப்ஸர் said...

நானே கேள்வி நானே பதில்..

நல்லயிருக்கு, ஆனாலும் எனக்கு நிறைய கேள்வி கேக்கனும்னு ஆசை ஆனால் வேணாம் விட்டுடுங்க அப்புறம் அழுதுடுவீங்க

நட்புடன் ஜமால் said...

\\கடைசியாக அழுதது எப்பொழுது\\

அருமையா சொல்லி இருக்கீங்க ...

இப்னு ஹம்துன் said...

இந்த மாதிரியான பதிவுகளில் பதிவர்களைப் பத்தியும் அறிந்துகொள்ள முடிகிறதே. .ம் நல்ல யோசனைதான்.

கேள்விகளைக் குறைத்திருக்கலாம்..... அடுத்து அழைப்பவர்களை அதிகரித்திருக்கலாம்..

கணினி தேசம் said...

ரொம்ப நீளமா இருக்கு அப்புறமா படிக்கிறேன்.

கணினி தேசம் said...

//நான் அழைப்பது : இரவீ - கண்டுகொண்டேன்.//

இரவீ மாட்டி கிட்டீங்களா? ki.ki.ki...

வாழ்த்துகள்!!

ஹேமா said...

வாங்க ஆனந்த்,உங்களைத் தப்ப வச்சிட்டேனே.சந்தோஷப்படுங்க.2 பேருக்கு அனுமதின்னா நீங்களும் மாட்டிக்கிட்டு இருப்பீங்க.எப்பவுமே உங்களைத்தான் மாட்டுறேன்னு திட்டுவீங்களோன்னு தான்....இந்த முறை இரவீ.

ஹேமா said...

ஜமால் இடம் மாத்தல.டெம்லெட் இன்னும் அழகு படுத்த ஆசை.ஆனால் ஹெடர் இப்பிடியே இருக்கணும்ன்னும் ஆசை.அதனால ஹெடர் ஒண்ணும் ஒத்து வருதில்லை.அதனாலதான் குழப்பம்.

ஹேமா said...

இப்னு,நீங்க சொன்ன அதே கேள்வி எனக்குள்ளயும்.

நிலா அம்மா சொன்னாங்கன்னா இன்னும் ஒருவரை-இருவரை அழைக்கலாம் தொடர.

ஹேமா said...

கணணி தேசம் கேள்விகள் நீளம் என்று இல்லை.சாதாரண எங்களைப்பற்றின கேள்விகள்தானே.
என்ன....எங்களைப் பற்றி சொல்லணும்.அவ்வளவுதானே.
இதைப் படிக்க ஏன் இவ்வளவு சோம்பேறித்தனம்.

எனக்கும் ரொம்ப சந்தோஷம் இரவீ மாட்டிக்கிட்டார்.

Ravee (இரவீ ) said...

'அவருக்கும் பெரிய எண்ணம்.' (ஹேமாவுக்குதாங்க...)

Ravee (இரவீ ) said...

"நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்."
உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்.

Ravee (இரவீ ) said...

//பிடிக்காதது>>>>கொஞ்சம் பிடிவாதம்//
இந்த கொஞ்சத்த கூட நீக்கி இருக்கலாம்.

Ravee (இரவீ ) said...

//சோம்பேறி அல்லது மனச் சோர்வு போலும்.//

ஹி ஹி ... சோம்பேறி தனம் தான் வேற என்ன.

//அவரின் பதிவுகளுக்குள் பெரிய விஷயங்கள் அடங்கியிருக்கவில்லை என்றாலும் ஒரு வேதனை தெரியும்.//

அட... எப்படி எல்லாம் நோட் பண்ணுறாங்க பாரேன்.

//அவரைச் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டு வர வேணும் என்பதில் எனக்கு ஒரு ஆசை.ஆதங்கமும்கூட.//

மிக்க நன்றி ஹேமா - உண்மையாகவே எனக்கு இந்த வலை பதிவு - பின்னூட்டம் நிறைய சந்தோசம் தந்திருக்கு.
- இடைவெளிவிட்டால் பதிவு எங்கே என்று - பதிவிட ஊக்கம் கொடுக்கும் நண்பர்கள்,
- ஏன் வரவில்லை ? எங்கே போனீங்க னு - கேக்கும் போது - சந்தோசம் தொண்டை அடைக்க பதில் சொல்லி இருக்கிறேன்.
- இந்த பதிவு பாருங்க ரொம்ப நல்லா இருக்கு, அதை பாருங்க ரொம்ப நல்லா இருக்குன்னு ஊக்கம் கொடுக்கும் நண்பர்கள்.
- என் சொத்தை பதிவிற்கு கூட - முகம் சுழிக்காது பின்னூட்டம் போடும் என் நண்பர்கள்.
வேறு என்ன வேணும் எனக்கு... இதுவே மிக மிக சந்தோசம் எனக்கு.

ஆமா இப்படி சொல்லிபுட்டு - என்ன பதிவுக்கு கூப்பிட்டதில் உங்களுக்கு சந்தோசம் தானே???

Ravee (இரவீ ) said...

//அச்சோ...இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! (இது புலம்பல்)//
வயித்துகுள்ள புளிகரைக்குதுன்னு சொல்லுவாங்க தெரியுமா ???
எனக்கு இப்ப அப்டி தான் இருக்கு ... (இப்பவே கண்ண கட்டுதே)

Ravee (இரவீ ) said...

//ஸ்பெயின்,பாரீஸ்,ஜேர்மனி,லண்டன்,சிங்கப்பூர்,மலேசியா,இந்தியா(கேரளா,இராமேஸ்வரம்) U.A.E போயிருக்கேன்.//
நீங்க என்ன "கோபால் பல்பொடி" கம்பெனில வேல பாக்கறீங்களா (இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் னு விளம்பரம் கேட்டிருக்கேன் அதான் வேற ஒன்னும் இல்ல).

Ravee (இரவீ ) said...

//சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் இங்கு லண்டன் தமிழ் வானொலிக்கு//
எங்களுக்கும் பதிவிடுங்கோ.

Ravee (இரவீ ) said...

//வாழ்வு அழகான ஒரு கவிதைபோல//
என்னங்க பட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்க ...
எனக்கு கவிதையெல்லாம் வராதே??? என்ன பண்ணலாம் ???

Ravee (இரவீ ) said...

//உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.//
இதுக்கு என்னா பண்ணனும் ?
//நான் அழைப்பது : இரவீ - கண்டுகொண்டேன்.//
ஒரு சின்ன திருத்தம் "நான் அழைப்பது : இரவீ - காணவில்லை."

என்னை மாட்டிவிட்ட மகராசி:
ஹேமா(சுவிஸ்)

Ravee (இரவீ ) said...

அந்த "சண்டைக்கோழி" அக்கா பதிவுக்கு போய் - மொக்க பின்னூட்டம் போட்டா பழிக்கு பழி வாங்கிதலாமல .

நிலாவும் அம்மாவும் said...

1.**/////தேனுகா ன்னா எருமைக் கூட்டம் ///***...

அவ்வ்வ்வ்
---------------------------------
2.***///என் ஊர் பற்றிய பதிவுகள் படிக்கும்போதும்,என் பதிவுகளை நான் எழுதும்போதும் கலங்கிவிடுவேன்///***
எங்களையும் சேர்த்துள்ள கண் கலங்க வைக்குறேங்க
--------------------------------
3.இருப்பேன்ஆனா நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்///********

ஆஹா.....ரொம்ப நல்ல பழக்கமா இருக்கே .....எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க...ரொம்ப எளிதா எல்லார் கிட்டயும் பழகிடுவேன்
---------------------------------
4.வேற யாரு?அந்தச் சரி பாதிதான்.////****

வருத்தமா தான் இருக்கு
------------------------------
5.வெயில் காலங்களில் கார் ஓட்டும்போது மட்டும்.///***
ஏன் இல்லைன்னா கண்ணு தெரியாதா ...ஹி ஹி
----------------------------

சரி சரி, ஸ்னோ உருண்டைய எடுத்துட்டு என்னை அடிக்க வர்றது தெரியுது...விடு ஜூட்

Ravee (இரவீ ) said...

@ஆனந்த்
//அடுத்து ரவீயா? அட்ராசாக்கை...அட்ராசக்கை.//
வீட்டுக்கு வந்து செய்தி சொன்னப்பவே நெனச்சேன். சந்தோசம் தான...

@கணினி தேசம்
//நான் அழைப்பது : இரவீ - கண்டுகொண்டேன்.

இரவீ மாட்டி கிட்டீங்களா? ki.ki.ki...//

என்ன ஒரு வில்லத்தனம்...

நிலாவும் அம்மாவும் said...

இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! (இது புலம்பல்)//


ஒன்னு ரெண்டு கேள்விகள் எல்லாம் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க பத்தாது தோழி

----------------------------------

***///மாற்றவே மாட்டேன்.நிறையக் காலமாக எனக்குப் பிடித்த படம் மட்டுமே.(சொல்ல மாட்டேன் யார்ன்னு.///***

ஐ ...நான் பார்த்துட்டேனே..எனக்கு தெரியுமே
--------------------------------

சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் இங்கு லண்டன் தமிழ் வானொலிக்கு///***

எம்புட்டு பெரிய விஷயம்...வாழ்த்துக்கள் தோழி

----------------------------------
வாழ்வு அழகான ஒரு கவிதைபோல///***

நச்!!

ஹேமா said...

நிலா அம்மா சொல்லவே இல்லையே .இன்னும் இரண்டு பேரைத் தொடருக்கு இணைக்கணும்.சரி சொல்லுங்க.அதுக்குத்தான் ஸ்னோ போல் ரெடி பண்றேன்.

நிலாவும் அம்மாவும் said...

விதி முறை
.ஒரே ஒருவரை மட்டுமே அழைக்கலாம்.///*******************

ஆஹா ..இது இன்னும் சட்ட புத்தகத்துல எழுதப்படல ...அதுனால மாத்திக்குவோம்...

தயவு செஞ்சு எத்தனை பேரை வேணும்னாலும் கூப்பிட்டுக்கொங்க..

என்ன கஷ்டமா இருக்கும்னா எல்லாரை பற்றியும் பிடித்த விஷயங்கள் எழுதும் பொது ஒருத்தரை விட இன்னொருவரை மிகை படுத்தி எழுதிட்டோம்னா தப்பாயிடும்...எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை ஹேமா

நிலாவும் அம்மாவும் said...

புல்லட் பாண்டி said...
ஒரு பத்து கேள்வியா சுருக்கியிருக்கலாம்! ஸ்க்ரோல் பண்ணி கால்மூட்டெல்லாம் வலிக்குது... :) ///**********8


ஜண்டுபாம் ஜண்டுபாம் தலை வலி நீக்கும் பாம்....முட்டிக்கும் போட்டு பாருங்களேன்..

நிலாவும் அம்மாவும் said...

Ravee (இரவீ ) said...
அந்த "சண்டைக்கோழி" அக்கா பதிவுக்கு போய் - மொக்க பின்னூட்டம் போட்டா பழிக்கு பழி வாங்கிதலாமல .///******


ஏன் ஏன் ஏன் இந்த கொலை வெறி

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன்.. அப்புறமா கண்டிப்பா வந்து கும்மி அடிப்பேன்

ஹேமா said...

// (இரவீ ) ...
//பிடிக்காதது>>>>கொஞ்சம் பிடிவாதம்//
இந்த கொஞ்சத்த கூட நீக்கி இருக்கலாம்.//

இரவீ,இருக்கிறதை இருக்குதுன்னுதானே சொல்லணும்.

இரவீ,நிலா அம்மாதான் தொடர் தொடக்கி என்னைக் கூப்பிட்டாங்க.
மூணாவதா நீங்கதான்.அதனால முன்னுக்கு 5 பேர் இல்லை.இனி நிலா அம்மா எத்தனை பேரையும் கூப்பிடலாம் சொல்லிட்டாங்க.
அதனால நீங்க எத்தனை பேரையும் கூப்பிடுங்க.

பதிவு போட்ட பிறகு இனிக் கூப்பிட எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.
அதனால நான் கூப்பிடாமலேயே விடுறேன்.

ஹேமா said...

5.//வெயில் காலங்களில் கார் ஓட்டும்போது மட்டும்.///***
ஏன் இல்லைன்னா கண்ணு தெரியாதா ...ஹி ஹி //

நிலா அம்மா இப்பிடிக் கலாய்க்கிறீங்களே...!

நிலா அம்மா சந்தோஷம்தானே.
என்னப்பத்தி இன்னும் சந்தேகம்
தீராம திணறுறாங்க பாருங்க
நம்ம நண்பர்கள்.

ஹேமா said...

நசரேயன் உள்ளேன் மட்டும் சொன்னாப் போதுமா?

ஆருகிட்டயாவது மாட்டுவீங்க பாருங்க.

ஆதவா said...

ஹேஹே... தப்பிச்சேன்!!!!

உங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது!!! இரவு ஆகையால் மீண்டும் நாளை காலை வந்து தெளிவாக படிக்கிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// (உண்மை...நான் சொல்வெதெல்லாம் உண்மை.) //

நம்பி விட்டோம்.

இராகவன் நைஜிரியா said...

// என் அப்பா ஒரு ஆசிரியர்.அவர் அகராதி பாத்திட்டு தேனுகா ன்னா எருமைக் கூட்டம் ன்னு வைக்க விடலயாம். //

இஃகி... இஃகி...

இராகவன் நைஜிரியா said...

// 7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தின் மகிழ்ச்சி-புன்னகையை.அதிலிருந்தே எடை போடலாம் தொடர்ந்து கதைக்கலாமா வேணாமன்னு.(பொய்யாகவும் புன்னகை வரலாம்.பிறகு கவனிச்சுப் பழகிக்கலாம்.)//

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள்.

ஹேமா said...

ஆதவா,கண்டிப்பா வந்து சொல்லணும் உங்க அபிப்பிராயங்களை.

ஹேமா said...

இராகவன்,சிரிக்காதீஙக்.உங்களுக்கும் சுத்திகிட்டு வரும் இந்தத் தொடர்.அப்போ நானும் சிரிப்பேனே...!

நசரேயன் said...

//சங்கீதம் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது.
//
தெரிஞ்சா பாடகி ஆகி இருப்பீங்களோ

நசரேயன் said...

//பிடிக்காது.அழகா இல்ல.ஆனா படிக்கிற காலத்தில அழகாத்தான் இருந்திச்சு.பிறகு எழுதிற சந்தர்ப்பம் ரொம்ப காலம் விட்டும் போச்சு.அதனாலேயோ என்னமோ...!
//

பதிவு எழுத வந்து விட்டீர்களா

நசரேயன் said...

//எனக்கு சாப்பாடுன்னு அவாப்பட்டு பிடிக்கும்ன்னு சொல்ல எதுவுமில்ல.எல்லாமே பிடிக்கும்.பசிக்கு வயித்துக்கு ஏதாச்சும்.
சிலசமயங்களில் 2-3 காய்கறிகளை உப்புக் கொஞ்சம் தூவி ஆவில அவிச்சிட்டு நூடுல்ஸ் போட்டும் சாப்பிடுவேன்.//
மொத்தத்துல சமையல் தெரியாதுன்னு சொல்லுறீங்க

நசரேயன் said...

//1-2 சிநேகிதிகள்தான் //

இது 12 ஆ இல்ல ஒண்ணா இல்ல ரெண்டா

நசரேயன் said...

//கடைசியாக 2003 ல் குளிச்சேன்.ஐயோ...அருவிலங்க.
//

நம்பிட்டேன்

நசரேயன் said...

//அதிலிருந்தே எடை போடலாம் தொடர்ந்து கதைக்கலாமா வேணாமன்னு //

உங்களுக்கு எடை மிஷன் தேவை படாது

நசரேயன் said...

//கொஞ்சம் பிடிவாதம்,என்னப்போலவே மத்தவங்களும் இருக்கணும்ன்னு நினைக்கிறது //


ரெம்ப கஷ்டம்

நசரேயன் said...

//வேற யாரு?அந்தச் சரி பாதிதான் //

சரி பாதி அண்ணாச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

நசரேயன் said...

//அச்சோ...இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! //

படிக்கிறவங்க கஷ்டம் யாருக்கு தெரியுது

நசரேயன் said...

இப்போதைக்கு அவ்வளவு தான்

ஹேமா said...

நசரேயன் ...
//அச்சோ...இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! //

படிக்கிறவங்க கஷ்டம் யாருக்கு தெரியுது.

நசரேயன் ரொம்ப கஸ்டப்பட்டீங்களா?அதைப் போயி நிலா அம்மாகிட்ட கேளுங்க.நான் இல்லப்பா.

ஹேமா said...

நசரேயன் ...
//1- 2 சிநேகிதிகள்தான் //

இது 12 ஆ இல்ல ஒண்ணா இல்ல ரெண்டா//

அச்சோ...அச்சோ..எஙக போய் என் தலையை முட்டிக்கிறது.

//சரி பாதி அண்ணாச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.//

எத்தனையோ கவிதைல சொல்லிக் கெஞ்சியும் பாத்தாச்சு.சாமி இருப்பிடம் விட்டு அசையாதாம்.நான் என்ன செய்ய..!

நட்புடன் ஜமால் said...

\\இராகவன்,சிரிக்காதீஙக்.உங்களுக்கும் சுத்திகிட்டு வரும் இந்தத் தொடர்.அப்போ நானும் சிரிப்பேனே...!\\

ஏன் இந்த மர்டர் வெறி

ஹேமா said...

//அபுஅஃப்ஸர் ...
நானே கேள்வி நானே பதில்..

நல்லயிருக்கு, ஆனாலும் எனக்கு நிறைய கேள்வி கேக்கனும்னு ஆசை ஆனால் வேணாம் விட்டுடுங்க அப்புறம் அழுதுடுவீங்க//

அபு உங்களை மேல தவறவிட்டுட்டேன்.பரவா இல்லதானே.வேற என்ன கேக்கப்போறீங்க.இதை விட இன்னும் என்ன இருக்கு.பிரம்பு வச்சுக்கிட்டு,
கொச்சிக்கா வச்சிக்கிட்டுக் கேக்கப்போறீங்களா ?

Muniappan Pakkangal said...

Nandri Hema for the info abt u.The way in which it is brought out is nice.

நிலாவும் அம்மாவும் said...

ஹா ஹா...ஹேமா....கேள்வி பதிலை விட, நம்ம மக்கள் அடிக்குற பின்னூட்ட லூட்டி தான் ரொம்ப நல்லா இருக்கு.....அனுபவிங்க அனுபவிங்க

MayVee said...

"உப்புமடச் சந்தி..."popular agiruchu pola......

MayVee said...

unga padivai nalla marketing pannitinga hema....
parunga ivvalavu comments....

MayVee said...

me th 65th

MayVee said...

"கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு, சிறப்பாக இருக்கிறது. அடுத்து ரவீயா? அட்ராசாக்கை...அட்ராசக்கை."

enga hema eluthinathukku en raviyai beat pannuringa....
pavamunga avaru

MayVee said...

"இப்னு ஹம்துன் said...
இந்த மாதிரியான பதிவுகளில் பதிவர்களைப் பத்தியும் அறிந்துகொள்ள முடிகிறதே. .ம் நல்ல யோசனைதான்.

கேள்விகளைக் குறைத்திருக்கலாம்..... அடுத்து அழைப்பவர்களை அதிகரித்திருக்கலாம்.."

sari... ippo enna solla varinga

MayVee said...

"நட்புடன் ஜமால் said...
அடிக்கடி இடம் மாத்தாதிங்க

1st போயிடிச்சி பாருங்க ..."

ha ha....
jamal unga place me occupied ah...

MayVee said...

"Ravee (இரவீ ) said...
"நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்."
உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்."


ithu ice thaane....
he he he

Anonymous said...

நல்லாயிருக்கு ஹேமா, உங்களைப் பத்தி நிறையா தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ஹேமா said...

முனியப்பன் நான் தான் நன்றி சொல்லணும் உங்களுக்கு.பொறுமையா இவ்வளவையும் படிச்சதுக்கு.

ஹேமா said...

//நிலாவும் அம்மாவும்...
ஹா ஹா...ஹேமா....கேள்வி பதிலை விட, நம்ம மக்கள் அடிக்குற பின்னூட்ட லூட்டி தான் ரொம்ப நல்லா இருக்கு.....அனுபவிங்க அனுபவிங்க//

நிலா அம்மா உங்களுக்கும் பங்கு இந்தச் சந்தோஷத்தில.

ஹேமா said...

மேவி,தனியா இருந்து கும்மியடிச்சிருக்கீங்க.யாரும் வரலியா...!

ஹேமா said...

மகா,சந்தோஷம் வாங்க.உங்க வீட்டுக்கு வந்தேன்.பின்னூட்டம்தான் போட முடில.இன்னும் வருவேன்.

Anonymous said...

உங்களுக்கு... பெயரினை தேனுகான்னேவச்சிருகலாம்
ஹிஹிஹிஹி
கலக்கல் பதிவு
கன்னக்க விசயம் சொல்லி
இருக்கீங்க..

MayVee said...

76

MayVee said...

77

MayVee said...

78

MayVee said...

78

MayVee said...

78

MayVee said...

81
&
82

MayVee said...

81
&
82

MayVee said...

83 & 84

MayVee said...

83 & 84

MayVee said...

85 & 86

MayVee said...

85 & 86

MayVee said...

87, 88 , 89 , 90

MayVee said...

87, 88 , 89 , 90

MayVee said...

87, 88 , 89 , 90

MayVee said...

87, 88 , 89 , 90

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

91, 92, 93, 94

MayVee said...

97 , 98

MayVee said...

97 ,98

MayVee said...

99

MayVee said...

for th first time am 100 in உப்புமடச் சந்தி...

MayVee said...

101

MayVee said...

102

MayVee said...

"மகா said...
நல்லாயிருக்கு ஹேமா, உங்களைப் பத்தி நிறையா தெரிஞ்சுக்க முடிஞ்சது."

periya repeat.....

Ravee (இரவீ ) said...

// MayVee said...

"கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு, சிறப்பாக இருக்கிறது. அடுத்து ரவீயா? அட்ராசாக்கை...அட்ராசக்கை."

enga hema eluthinathukku en raviyai beat pannuringa....
pavamunga அவரு//
வீட்டு பூனைய அடிச்சா... காட்டு பூனை ஓடும்னு நெனச்சிருப்பரோ ????

Ravee (இரவீ ) said...

//MayVee said...

"Ravee (இரவீ ) said...
"நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்."
உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்."


ithu ice thaane....
he he he//

இதுக்கு எனக்கு ஐஸ் வாங்கி தரபோரீங்களா? ஐ ஜாலி.

Ravee (இரவீ ) said...

//கவின் said...

உங்களுக்கு... பெயரினை தேனுகான்னேவச்சிருகலாம்
ஹிஹிஹிஹி
கலக்கல் பதிவு
கன்னக்க விசயம் சொல்லி
இருக்கீங்க..//

கவின் ஒரு மாவீரன்னு ஒத்துக்கறேன். (மனசுக்குள்: ஹேமா கிட்ட சிக்கி சின்னா பின்னமா ஆகபோறாறு)
(பதில் பின்னூட்டம் போட்டதுக்கெல்லாம் என்னையும் சேர்த்து திட்ட கூடாது- ஆமா இப்பவே சொல்லிபுட்டேன்).

Ravee (இரவீ ) said...

//ஹேமா ...
இரவீ,நிலா அம்மாதான் தொடர் தொடக்கி என்னைக் கூப்பிட்டாங்க.
மூணாவதா நீங்கதான்.அதனால முன்னுக்கு 5 பேர் இல்லை.இனி நிலா அம்மா எத்தனை பேரையும் கூப்பிடலாம் சொல்லிட்டாங்க.
அதனால நீங்க எத்தனை பேரையும் கூப்பிடுங்க.///

கூண்டோட என்கிட்டே மட்டுரத நெனச்சா ...
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது ...

மக்களே !!!!!!!! எல்லாம் தயாரா இருங்க ...

Ravee (இரவீ ) said...

ஹேமா - சிறப்பு சலுகையா நான் பதினைந்தாவது கேள்விக்கு மட்டும் பதில் போட்டா போதுமா ?

Ravee (இரவீ ) said...

ஐ 108 நான் தான் போட்டேன்.

ஹேமா said...

உப்புமடச் சந்திக்கு 100 அடிச்ச பெருமை கொடுத்த மேவிக்கு ஹேமாவின் நன்றி.
பாராட்டுக்களும் கூட.

(தனியா இருந்து பொழுது போகலைன்னா இப்பிடியா!)

ஹேமா said...

//கவின் ...
உங்களுக்கு... பெயரினை தேனுகான்னே வச்சிருகலாம்
ஹிஹிஹிஹி
கலக்கல் பதிவு
கன்னக்க விசயம் சொல்லி
இருக்கீங்க..//

கவின்,வேற ஒண்டும் சொல்லக் கிடைக்கேல்லையாகும்.எவ்வளவு ஆசை இருக்கு அப்புவுக்கு.
உங்களைப்போல ஆக்களிட்ட இருந்து அப்பவே எங்கட அப்பா காப்பாத்திப் போட்டார்.

அதுசரி எங்க எங்கட
பயில்வான் கமல்?

ஹேமா said...

//கூண்டோட என்கிட்டே மட்டுரத நெனச்சா ...
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது...

மக்களே !!!!!!!! எல்லாம் தயாரா இருங்க ...//


பாருங்க மக்களே.யார் யார் மாட்டுறீங்களோ தெரில.கண்டிப்பா நான் நினைக்கிறேன்.ஆனந்த்,மேவி,
நசரேயன் அகப்படுவாங்க.எப்பிடீ
னாலும் இரவீக்கு இருக்கிற சந்தோஷத்தைப் பாருங்க மக்களே !

ஹேமா said...

//(இரவீ )...
ஹேமா - சிறப்பு சலுகையா நான் பதினைந்தாவது கேள்விக்கு மட்டும் பதில் போட்டா போதுமா ?//

அதென்ன 15 ஆவது கேள்வியில மட்டும் விஷேசம்.எத்தினை பேரைப் பத்தி எழுதணும்.களைச்சே போவீங்க இரவீ.கை வலிக்கும்.

சரி...சரி 108 ஆவது பின்னூட்டம்,மேவியோட போட்ட உங்க கும்மிக்கும் நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

கேள்விகள் அதிகம்.. பதிகள் அருமை..

நன்றாக கலக்குரிங்அக் ஹேமா

கமல் said...

என் பெயர் ஹேமவதி.என் குடும்பம் கொஞ்சம் இசையில் கலந்த குடும்பம்.அதால ஒரு இராகத்தின் பெயரைத் தேடி வச்சாங்களாம் என் பெரிய மாமா.ஆனாலும் அவருக்குத் தேனுகா ன்னு வைக்கத்தானாம் விருப்பம்.என் அப்பா ஒரு ஆசிரியர்.அவர் அகராதி பாத்திட்டு தேனுகா ன்னா எருமைக் கூட்டம் ன்னு வைக்க விடலயாம்.ஆனாலும் வீட்ல வேற வேற செல்லப் பேர்ல எல்லாம் கூப்பிடுவாங்க.(அதெல்லாம் சொல்லக்கூடாது)ஆனா சுவிஸ் வந்து எல்லாருமே-வெள்ளைக்காரர் உட்பட ஹேமா தான்.//ஸப்பா...இந்தளவு விசயம் ஒரு பேரிலை இருக்கா?
கவின் இதைக் காணேல்லைப் போல....ஹேமா அக்காவைப் பிறகு மாட்டு அக்கா ஆக்கியிருப்பான்??? நல்ல பதில்களும் நறுக்கெனும் கேள்விகளும்..!

MayVee said...

new template nalla irukkunga

MayVee said...

me th 117th

தமிழ்நெஞ்சம் said...

நாங்களெல்லாம் கையெழுத்துப் போடக்கூட பேனா வைத்துக்கொள்வதில்லை

ஒரு சின்ன கார்டை நீட்டினால் அதுவே வருகையை எழுதிவிடுகிறது.

உங்கள் ஏக்கம் என்னையும் ஏங்க வைத்துவிட்டது.. பேனா பிடித்து எழுதிய காலங்கள் வசந்த காலங்கள்

//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்காது.அழகா இல்ல.ஆனா படிக்கிற காலத்தில அழகாத்தான் இருந்திச்சு.பிறகு எழுதிற சந்தர்ப்பம் ரொம்ப காலம் விட்டும் போச்சு.அதனாலேயோ என்னமோ...!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP