ஒரு பக்கத்தில எங்கட நாடு எங்கட தேசம் எண்டு போர்ச்சூழல் இடப்பெயர்வு இழப்புக்கள்.இப்போது அடிக்கடி தீக்குளிப்பின் உக்கிரம்.இதற்கிடையில் புலம்பெயர்ந்த எம் மக்களில் சிலர் நாம் தப்பிவிட்டோம் என்று வெளிநாடு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டு தங்கள் குடும்ப உறவுகள் அத்தனை பேரையும் கனடா லண்டன் என்று அழைத்து இருத்திவிட்டு ஆடம்பரமான வாழ்வும் அரட்டையான பொழுதுமாக வாழ்கிறார்கள்.
உண்மையில் சிலருக்கு அங்க என்ன நடக்குது என்றே தெரியாத ஒரு சந்தோஷமான வாழ்க்கை.யாரோ அடிபடுறாங்கள்.ஏன் என்கிறதிலயும் பெரிய விளக்கம் இல்லை.ஊர்ல சண்டை முடிஞ்சா ஒருக்கா போய்ட்டு வரலாம் என்கிற மாதிரி.ஏன் இவங்கள் அடிபடுறாங்கள் என்று கேள்விகளும் உதிரும் வாயால்.இப்பிடி நிறைய வித்தியாசமான எங்கட ஈழத்து அகதித் தமிழர்களைக் காணலாம் வெளிநாடுகளில.(சொல்ல வெட்கம்தான்.ஆனலும் என்ன செய்ய !)
இந்த வரிசையில ஒருவர்...
நான் வேலை செய்யும் இடத்தில் எம் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் என்னிடம் கேட்டது எனக்கு தூக்கி வாரிப் போட்டது."என்ன ஹேமா ஊரில இண்டைக்கு சண்டையாம்".எனக்கு பதில சொல்ல வரவே இல்லை.ஐயோ..கடவுளே கிளிநொச்சி வன்னி பரந்தன் என்று மக்கள் படும் துயரமும் கண்ணீரும் இடப் பெயர்வுகளும் தங்கள் மண்ணிலேயே கைதிகளாய் முள் வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறதும் இரத்த ஆறுகளுக்குள் அன்றாட சீவியமும் கடந்தால் பிணக் குவியல்களுக்குள் தங்கள் உறவுகளைத் தேடியபடி எம் சொந்தங்கள் எங்கே !இங்கு காரில் பவனியும் பாரில் பியருமாய் காற்றைக்கூட விலை கொடுத்துச் சுவாசிக்கும் இவர்கள் எங்கே.ஊரில் எத்தனை வருட காலமாக போர் நடக்கிறது.அகதித் தஞ்சம் கேட்டதே 20 வருடங்களுக்கு முன் ஊரில் போர் என்றுதானே.
சரி அதன்பின் எத்தனை எத்தனையோ இழப்புக்கள்.தற்சமயம் ஈழத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்று இராணுவம் தமிழரை அடியோடு அறுவடை செய்துகொண்டு கோவில்கள், பாடசாலைகளென்று ,குஞ்சுகள் ,இளசுகள் என்று பார்த்துப் பார்த்து அழித்துக்கொண்டே நகர்கிறது.இன்று மட்டுமா செய்தியில் போர்-சண்டை என்றுதானே கேட்கிறோம்.
எப்பவும்தானே.ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அவர் தற்செய்லாக யாரோ சொன்னதை மட்டும் காதில் விழுத்தியிருக்கிறார்.அதுதான் அந்த
"இண்டைக்கு ஊரில சண்டையாம்".ம்ம்ம்ம்....
அடுத்து இன்னொரு குடும்பம்...
வருடப் பிறப்பையொட்டி என் சிநேகிதியோடு எம்மவர் வீடு ஒன்று ஒரு மாலைப் பொழுதில் போயிருந்தேன்.போய் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன்.அவர்கள் பேச்சில் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவர்கள் எனத் தெரிந்தது.மூன்று குழந்தைகள்.முறையே 15 ,1,0 4 என.அவருக்கும் 8 சகோதர சகோதரிகள்.சுவிஸில் 4 பேரும் கனடாவில் 4 பேருமாய்.அப்பாவும் கூட.பெண்ணின் பக்கத்தில் மூவர்.அவவும் அண்ணாவும் இங்கு. தங்கை லண்டனில்.பிரச்சனையே இல்லை.ஊர்ல எல்லோரும் சுகமோ என்றேன். "எல்லாரும் இங்கதானே.எங்களுக்குப் பிரச்சனை இல்லை.பதில் சலனமில்லாமல்.
இத்தனைக்கு இருவரும் சாதாரணமாக ஒரு உணவு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள்தான்.மொழியிலும் தேர்ச்சி இல்லை.சுவிஸில் 22 வருடங்கள் வாழ்நாள். இதுதான் அவர்கள் இயல் வாழ்வென அறிந்துகொண்டேன்.சரி....இது இருக்க ஒரு சின்னக் கதை சொல்லப் போகிறேன்.
சரி....தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கு.அந்த 4 வயதுக் குழந்தை மாற்றி மாற்றிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். "கலைஞர்"
தொலைக்காட்சியில் விஜய் ன் வில்லு படத்திற்காக வருடப்பிறப்பின் விஷேட நேரடிப் பேட்டி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.விஜய் பிரபுதேவா பிரகாஷ்ராஜ் இன்னும் சிலர் காட்சியில் தெரிந்தார்கள்.காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்த குழந்தை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு விஜய் விஜய் என்று ஏதோ சொல்லிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.அழவும் தொடங்கினான்.காரணம் புரியவில்லை எனக்கு.
அம்மாவும் "என்னவோ நல்லாச் சிரிக்கினம்.என்னவாயிருக்கும்".என்றபடி "தம்பி அது சத்தம் வராது.நாங்கள் கலைஞர் தொடர்பு மட்டை வாங்கவில்லை.தீபமும் Sun T.V தான் இருக்கு என்று சொல்ல குழந்தை மாற்றியைத் தூக்கி எறிந்துவிட்டு அழுகிறான்.அம்மா சொல்கிறா."ஓம் அக்கா விஜய் வில்லு படம் எங்கட அண்ணா வேலை செய்கிற ஹொட்டலில வந்து சூட்டிங் எடுத்தவங்கள்.நாங்கள் வீட்டில எல்லாரும் போய்ப் பாத்தனாங்கள்.விஜய் தம்பியைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சினவர்.ஹலோ சொல்லி எங்களுக்கும் கை தந்தவர்"என்றபடி "பாருங்கோ விஜயோட பிரபுதேவாவோட ,பிரகாஷ்ராஜோட வேற யாரோட எல்லாம் போட்டோக்களும் எடுத்தனாங்கள்" என்று போட்டோக்கள் காட்டினா.
இந்தச் சமயத்தில மகனிடம் கேக்கிறா"தம்பி விஜய் மாமாவை நாங்கள் பார்த்தனாங்கள் எல்லோ.என்ன கலரில கோட் போட்டிருந்தவர் சொல்லுங்கோ.உடனே "மஞ்சள் கலரில கோட்டும் கறுப்புக் கண்ணாடியும் போட்டிருந்தவர்"என்கிறது குழந்தை.இடையிடை தகப்பன் மற்றைய பிள்ளைகளும் வந்து பார்த்துவிட்டுச் சத்தம் வராததால் அவஸ்தையோடு விலகினார்கள்.சின்னக் குழந்தையோ சத்தம் வரும் என்கிற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.இப்படி ஒரு விஜய் ரசிகர்களா என்றபடி (மனதுக்குள்) பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி அங்கு ஒரு படம் நடந்துகொண்டிருக்கையில் தந்தையானவர் தொலைபேசியை எல்லோருக்கும் நடுவில் கொண்டு வந்து வைத்தார்.அதன் ஒலிபெருக்கியையும் அழுத்திவிட்டார்.இப்போ அதனூடாக விஜய் பேசுவது தெளிவாகக் கேட்கத் தொடங்கியது.
வீடு அமைதியானது.
அந்த வீட்டில் ஒரு அதிசயம் நடக்கிறது என்பதுபோல அத்தனை பேரின் முகத்திலும் கொள்ளை மகிழ்ச்சி.பூரிப்பு.விஜய் விஜய் என்று குழந்தை துள்ளத் தொடங்க தகப்பன் "தம்பி சத்தம் போடாதையடா விஜய் மாமா என்ன சொல்றார் எண்டு கேப்பம்" என்று அதட்ட ஒரே ஆரவாரம்தான் போங்களேன்.
என்ன நடந்தது தெரியுமோ....கலைஞர் தொலைக்காட்சிக்குக் கட்டணம் செலுத்தும் நண்பர் வீடு ஒன்றிற்குத் தொலைபேசியில் தொடர்பு எடுத்து தொலைபேசிக்குள்ளால் காட்சிகளுக்குக் குரல் கொடுபட்டிருக்கிறது.எப்படி இருக்கிறது எம் மக்களின் நிலை.தொடர்பு கேட்டவரையும் தொடர்பு கொடுத்தவரையும் நினைத்துப் பார்த்தால்...அகதி வாழ்வின் அவலம்.அங்கு அப்படி...இங்கு இப்படி !
ஹேமா(சுவிஸ்)
35 comments:
:(
முடியலை.... இதைவிட பல பெருங்க் கொடுமைகளை நான் இந்த ஓராண்டு காலத்திற்குள்ளேயே (புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால்) அனுபவித்துள்ளேன் !!!!! விஜய், சன் டிவி, கலைஞர் டிவி, தமிழ் சினிமா தொடர்பான விசயங்களை பட்டியலிட்டால் அது பல இதிகாச புத்தகங்களின் பக்க அளவுகளையும் தாண்டிச் செல்லும்....
இப்பொழுதெல்லாம், நல்லா இருங்க என்னும் ஒற்றைச் சொல்லில் இது தொடர்பான உரையாடலை தவிர்த்துவிடுகிறேன் !!! :)
இங்கு காரில் பவனியும் பாரில் பியருமாய் காற்றைக்கூட விலை கொடுத்துச் சுவாசிக்கும் இவர்கள் எங்கே.ஊரில் எத்தனை வருட காலமாக போர் நடக்கிறது.அகதித் தஞ்சம் கேட்டதே 20 வருடங்களுக்கு முன் ஊரில் போர் என்றுதானே.//
யோ நீங்கள் வேறை.... இப்ப அகதி அந்தஸ்து கேட்கிறதே இறந்து போன 25,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களை வைத்துத் தானே??
விஜய் படத்தைவிட இது கொடுமையா இருக்கு ...
இந்தச் சமயத்தில மகனிடம் கேக்கிறா"தம்பி விஜய் மாமாவை நாங்கள் பார்த்தனாங்கள் எல்லோ.என்ன கலரில கோட் போட்டிருந்தவர் சொல்லுங்கோ.உடனே "மஞ்சள் கலரில கோட்டும் கறுப்புக் கண்ணாடியும் போட்டிருந்தவர்//
இது மட்டும் உவைக்குத் தெரியும். ஆனால் ஊரிலை என்ன நடக்கு என்பது மட்டும் தெரியாதோ??
யம்மாடி
வில்லா
பயமா இருக்கு ...
பிள்ளை உங்கை சுவிஸிலை என்ன நடக்குது?? நல்லாத் தான் போட்டுத் தாக்குறீர்?? கையைக் குடும் மோனை?? எங்கடையளைத் திருத்தவே முடியாதாம்??
உதுக்குத் தான் சொல்லுவீனம் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று??
நல்ல கமராக் கண் உமக்கு? எல்லாத்தையும் ஒண்டும் விடாமல் அச்சொட்டாகப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கிறீர்???
எல்லோரும் எப்பிடிப் பிள்ளையள் சுகமாய் இருக்கிறீங்களே??
நானும் வந்துட்டேன் உப்புமடச் சந்திக்கு.
பிறந்த மண்,
தவழ்ந்த வீதி...
எப்படி மறக்க முடியும் ?
ஆடம்பரமும் சுகவாழ்வும் கண்ணை மறைக்கிறதா....
சொந்த ஊர் மறந்தவர்கள் தாயை மறந்தவர்களாவார்கள்
கொஞ்சம் நினைவூட்டுங்கள் அவர்களுக்கு..
மறதிக்காரர்கள்!!!
வ்
எனங்க இது .....
நானும் எனது நண்பர்களும் போகிற இடத்தில எல்லாம் பிற மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது , அந்த பிரச்சனைக்கு என்ன முடிவு என்று எல்லாம் எங்களால் முடிந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கிறோம் ....
ஆனால் உங்க நாட்டு மக்களே இப்படி இருக்காங்கன்னு படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு .......
//இப்பிடி நிறைய வித்தியாசமான எங்கட ஈழத்து அகதித் தமிழர்களைக் காணலாம் வெளிநாடுகளில.(சொல்ல வெட்கம்தான்.ஆனலும் என்ன செய்ய !)//
எனக்கும் இதே வருத்தம் உள்ளது ஹேமா..... தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்லவில்லை....ஆனால் நான் கண்டுருக்கின்ற்றேன்...
Nandri Hema on exposing people there. It all happens bcz of migration.
நானும் இதே நிலைமையை இங்கே பார்த்து இருக்கிறேன்
பதி வாங்க.உங்க முதல் வருகைக்கும் நன்றி.பதி,கொஞ்சமாவது மனுசனாப் பிறந்தவனுக்கு உணர்வு வேணும்.
இல்லாட்டி சிரமம்தான்.திருத்தவும் முடியாது.
பதி,என்னோட குழந்தைநிலாவுக்கும் வாங்க.
http://kuzhanthainila.blogspot.com/
கமல்,அந்த நேரம் நான் பாத்துக்கொண்டு இருக்கிறேன்.எப்பிடி இருந்திருக்கும் என் உணர்வு.
யோசிச்சுப் பாருங்கோ.அப்பிடியே கழுத்தைப் பிடிச்சு நெரிச்சா எண்டு இருந்திச்சு.இதை மாதிரி எத்தனை சம்பவங்கள்.ஊருக்கு உலகத்துக்கே உதவாத ஜென்மங்கள்.
நாய் தின்னாக் காசை மட்டும் ஏனோ சேர்த்துச் சேர்த்து வைக்குதுகள்.
அதுவும் ஒண்டு தெரியுமோ...
வங்கியில அந்த காட் வேணுமோ இந்த காட் வேணுமோ எண்டெல்லாம் வரும் எல்லாம் OK தான்.அது ஏன்..அதால என்ன பிரயோசனம்...அதுக்கு ஏன் கட்டணம் கட்டவேணும் எண்டெல்லாம் கவலையே இல்லை.
4-5 காட் வச்சிருந்தா பெருமையெல்லோ....!
ஜமால்,என்ன இப்பிடி பாய்ஞ்சு பிச்சுக்கொண்டு ஓடீட்டிங்கள்.
வில்லு ன்னா இவ்ளோ பயமோ...!
வாங்கோ..வாங்கோ சங்கடத்தார்.
எங்க கன நாளா இந்தப் பக்கம் காணேல்ல உங்களை.உந்தப் பெடியளைக் கொஞ்சம் கவனிச்சுக்
கொள்ளுஞ்கோ எண்டதோட ஓடியே போய்ட்டியள்.ஒருவேளை பெடியள் இருட்டடி தந்திட்டாங்களோ.அவங்கள் 2ஆ 3ஆ இப்போ 4 பேரா எல்லோ ஆகிட்டாங்கள்.நானும் கொஞ்சம் இப்போ அவங்களோட கவனமாத்தான் கதைக்கிறது.
சரி என்ன எனக்கு கமெராக் கண்ணோ...!இங்க எங்கட சனங்கள் படுற பாட்டைப் பாத்தா கண்ணே இல்லாமல் இருந்தா நல்லது எண்டு நினைப்பன் நான் சில நேரங்களில.
எவ்வளவு சாப்பாட்டைச் சமைச்சுக் கொட்டுதுகள் குப்பைக்குள்ள.ஒரு நாள் திகதி பிந்தினாலும் சாப்பிட மாட்டினமாம்.எறியினம் குப்பைக்குள்ள.இப்பிடி...இப்பிடி இன்னும் எத்தினை அப்பு.சொல்லி மாளாதணை.
கலை வந்தீங்கள்.பேசாமப் போய்ட்டீங்கள்.எதையாவது சொல்லி வம்பில மாட்ட வேணாம் எண்டு பயந்து ஜம் பண்ணீட்டீங்கள் போல.
என்ன இரவீ,இப்பிடி கும்மி அடிக்கிறீங்க.இதுக்குப் போய் உணர்ச்சி வசப்படலாமா?நாங்களே இதயங்களை கல்லாய் ஆக்கி ஆக்கி நாங்களே கல்லாய் இருக்கிறோம்.சரி...பிழை சொல்லக் கூட பயந்தபடி...!
//ஆதவன் said...
பிறந்த மண்,
தவழ்ந்த வீதி...
எப்படி மறக்க முடியும் ?
ஆடம்பரமும் சுகவாழ்வும் கண்ணை மறைக்கிறதா....
சொந்த ஊர் மறந்தவர்கள் தாயை மறந்தவர்களாவார்கள்
கொஞ்சம் நினைவூட்டுங்கள் அவர்களுக்கு..
மறதிக்காரர்கள்!!!//
ஆதவன்...முதல்ல நான் ஆதவான்னு நினைச்சிட்டேன்.இது ஆதவன்.வாங்க ஆதவன்.நீங்க நம்மவர்ன்னு நினைக்கிறேன்.சரியா?உங்கள் மன உணர்வு வலியோட வந்திருக்கு.
ஆதவன் நீங்க நினைக்கிறீங்களா அவர்கள் மறதிக்காரர் என்று.இல்லை ஆதவன்.சுயநலவாதிகள் என்றுதான் நான் சொல்வேன்.
//மேவி...ஆனால் உங்க நாட்டு மக்களே இப்படி இருக்காங்கன்னு படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு ...//
என்ன செய்ய மேவி தப்பை தப்புன்னு சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கு.
பிடுங்கப்படாத களைகள் இவர்கள்.
மேவி...இண்ணைக்கு தனி ஆவர்த்தனம்(கும்மி) இல்லையா...!நான் சும்மா.
//ஞானசேகரன்...எனக்கும் இதே வருத்தம் உள்ளது ஹேமா..... தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற முறையில் சொல்லவில்லை....
ஆனால் நான் கண்டுருக்கின்ற்றேன்...//
வாங்க ஞானசேகரன்.ஈழத்தமிழர் பற்றிய மனவருத்தம் நேற்றும் கணணி தேசத்தின் பதிவிலும் கண்டேன்.என்னதான் செய்யலாம்.சிலருக்குப் பட்டும் அறிவில்லையே...!
வாங்க முனியப்பன்.உங்கள் அனுபவங்கள் போல என் கசப்பான அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டேன் வேதனையோடு.
என்னால் முடிந்தது.
//நசரேயன்...
நானும் இதே நிலைமையை இங்கே பார்த்து இருக்கிறேன்.//
நசரேயன் நீங்கள் சொல்வது உண்மை.
ஏதோ காணாததைக் கண்டதுபோல எம்மவர்கள் வெளிநாட்டைக் கண்டு படும் பாடு....கடவுளே.தற்சமயச் சந்தோஷத்தை நிரந்தரம் என்று நினைக்கும் அப்பாவிகள்.வேறு என்ன செய்யமுடியும்.அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர.
நிஜமாகவே வேதனைதான்!
சூடான இடுகையில் உங்கள் பதிவு. வாழ்த்துக்கள் சகோதிரி. இனிமேல் யாருடனும் சண்டை போட அவசியம் இருக்காது?????????!
ரொம்பதான் கோபபட்டிருக்கிறியள்..!
நிஜாயமான கோபம்தான்!
கடையம் ஆனந்த் said...
சூடான இடுகையில் உங்கள் பதிவு. வாழ்த்துக்கள் சகோதிரி. இனிமேல் யாருடனும் சண்டை போட அவசியம் இருக்காது?????????!
*********************
ரிப்பீட்டோய்....!
வாங்க ஷி-நிசி.எங்கே ரொம்ப நாளா குழந்தைநிலாப் பக்கமும் காணல உங்களை.
ஆனந்த்,உண்மையாவா.இப்போதே போய்ப் பார்க்கிறேன்.ஹை----ஹை.
அட...எங்கட கவின்.எங்கையணை அடிக்கடி காணமல் போயிடுறியள்.
உதை மாதிரி எவ்வளவு அட்டகாசங்கள் செய்யுதுகள் எங்கட சனங்கள்.
இப்ப மட்டும் எப்பிடி என்ர பதிவு சூடான இடுகைகளுக்குள்ள வந்தது.
ஒரே...சந்தோஷம் எனக்கு.காரணம் என்ர நண்பர்களா....அல்லது என்ன?அது எப்பிடி எண்டு தெரிய வேணுமே...!
அந்த நிகழ்ச்சியில் குற்றமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மனதில் இந்த அடிமை வாழ்வில் மற்றவர் அனுபவிக்கும் துயர் பற்றி ஏதேனும் உணர்வில்லாமல் இருந்தால் அதுதான் தப்பு.
இருப்பினும், இந்த இடுகையை படிக்கும் போது ஒரு வித வெறுமை மனதில் தோன்றியது. :(
//ஊர் சுற்றி ...
அந்த நிகழ்ச்சியில் குற்றமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மனதில் இந்த அடிமை வாழ்வில் மற்றவர் அனுபவிக்கும் துயர் பற்றி ஏதேனும் உணர்வில்லாமல் இருந்தால் அதுதான் தப்பு.//
அதுசரி....நானும் இதையேதானே சொல்ல வந்தேன்.நீங்களும் சந்தோஷமாய் இருங்கள்.அதேநேரம் எங்கள் இனம் படும் அவலத்தையும் நினையுங்களேன் கொஞ்சம் என்று.அதனால்தான் முன் பந்தியில் அவர்களது வாழ்வியல் விபரம் தந்தேன்.ஊரைப் பற்றியோ...எங்கள் மக்களை பற்றியோ எதுவித அக்கறையே இல்லை.ஏன்....சுவிஸ் ல் எத்தனை ஊர்வலங்கள் செய்கிறார்கள்.போவதே இல்லை.கேட்டால்"இவங்களோட போனா ஒரு நாள் முழுக்க இந்தக் குளிருக்க காயவேணும்.ஒரே கூச்சல் சத்தம்.தலை இடிதான் வரும்.
போனாப்போல என்னதான் நடக்கப் போகுது" என்று அலட்சியமான கதைகள்.இவர்கள் சந்தோஷத்தில் என் வயிற்றெரிச்சல் இல்லவே இல்லை.
"ஹேமா said...
மேவி...இண்ணைக்கு தனி ஆவர்த்தனம்(கும்மி) இல்லையா...!நான் சும்மா."
ஏன் ......
என்னை ஆதவா கிட்ட மாட்டி விடாம விட மாட்டிங்க போல் இருக்கே ......
ஹேமா .....
முடிந்தால் இந்த வார அனந்த விகடன் வாங்கி பாருங்க .....
முக்கியமா 56 & 57 பக்கங்களை .......
ஒரு கனடா நாட்டில் இருக்கும் ஒரு புலம் பெயர்ந்தவர் ஒரு விஷயம் எழுதி இருக்கிறார் ......
Post a Comment