அதோடு அத்திரி அவர்களின் பதிவிலும் தொப்பை "யூத்தின்" அடையாளம்...!என்கிற பதிவும் பார்த்தேன்.25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.இது அத்திரி சொன்னது. சரி கொள்ளு இனி என்ன சொல்லுது என்று பார்ப்போமே...
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம்,கொள்ளு துவையல்,கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.
கொள்ளு ரசம்
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
கொள்ளு மசியல்
கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு குழம்பு
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
பொடியாக்கி வைத்துக்கொள்ள.
துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)
ஜொள்ளு ன்னு நினைக்காமல் தொப்பை வச்ச எல்லோருமே கொள்ளு பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா ! (உதவி - இணையம்)
ஹேமா(சுவிஸ்)
44 comments:
me the first
அட போங்க... அத்திரிக்கு தான் வேலையில்ல.. உங்களுக்குமா? என்னமோ சொல்லுறீங்க...
ஆனந்து,அப்போ எங்களுக்கெல்லாம் வேலையில்ல.சரி...அத்திரி பாக்கட்டும் 3 - 4 மாடிப் படி ஏறி இறங்க வசதி இல்லாதவங்களுக்கு மட்டும்தான்.உங்களுக்கு இல்ல.
கொள்லை போட்டி கொல்லிறீங்க ஹேமா..
நீங்கள் சொன்ன அத்துனை கொள்ளு அயிட்டமும் எனக்கு ரொம்ப பிடித்தமானது ஹேமா... அடிக்கடி நான் கேட்டு சாப்பிடுவது. என்னை குதிரையானு கேட்டுடாதீங்க
//உங்களுக்கும் கொள்ளுத் தின்றால் கொளுப்புக் கரையும் எண்டு சொல்ல எண்டுதான் இந்தப் பதிவு.//
இளந்தொப்பைத் தெரிய ஆரம்பிச்சிட்டதே என்ன செய்யலாம்...னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். நீங்க வழி கண்டுபிடிச்சி சொல்லிட்டீங்க.
(இதத் தான் "இடுக்கண் களைவதுஆம் நட்பு",...ன்னு சொன்னாரோ?)
சின்னப்பிள்ளைல சாப்பிட்டதுதான் இவ்வளவு காலம் தாக்குப்பிடிச்சிருக்குமோ?
மருத்துவச்சி ஹேமா விற்கு நன்றி.
அறிவுரை எங்களுக்கு மட்டும் தானா, நீங்களும் சாப்பிடரீங்களா ஹேமா ?
//ஆ.ஞானசேகரன் said...
கொள்லை போட்டி கொல்லிறீங்க ஹேமா..
நீங்கள் சொன்ன அத்துனை கொள்ளு அயிட்டமும் எனக்கு ரொம்ப பிடித்தமானது ஹேமா... அடிக்கடி நான் கேட்டு சாப்பிடுவது. என்னை குதிரையானு கேட்டுடாதீங்க//
ஞானம் பாத்தீங்களா நீங்க விருப்பமா கொள்ளு சாப்பிடுற படியாத்தான் அழகா இருக்கீங்களோ.அதோட தம் பிடிச்சு நிறைய கட்டுரை எல்லாம் எழுதுறீங்க.
//சத்ரியன் ...அறிவுரை எங்களுக்கு மட்டும் தானா, நீங்களும் சாப்பிடரீங்களா ஹேமா ?//
சத்ரியன் பாருங்க உதாரணம் சொல்ல ஞானசேகரன் இருக்கார்.கவனியுங்க.
எனக்கு இப்போதைக்கு கொள்ளுத் தேவைப்படாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.ஆனாலும் கவனமா இருக்கேன்.
கொள்ளு உடம்பை குறைக்கும்,
ஜொள்ளு உடம்பை ரணகளமாக்கும்.
அனைவரும் கருத்தில் 'கொள்ள' வேண்டிய நல்லதொரு நன்மை பதிவு.
சூப்,ரசம்,மசியல்,குழம்பு,பொடின்னு செய்முறை குறிப்புகளூம் கொடுத்து கலக்கிட்டீங்க.....வாழ்த்துக்கள்.
கொள்ளோட சேர்த்து லொள்ளும்
இங்கே பாருங்களேன்
நல்லப் பகிர்வு
உபயோகமானதும் கூட
பிடித்தமான பண்டங்கள் செய்முறையுடன் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
superp.
ஹேமா இரண்டு மூன்று மாதங்களாக
நீங்கள் செய்து சாப்பிட்டு,உடல் கட்டான
கட்டுடல் என வந்த பின்தானே ......
மற்றவர்களும் பயன் பெறட்டும் {ரொம்ப நல்ல
மனசு}எனப் பகிர்ந்து கொண்டீர்கள்.
ரொம்ப நன்றி ஹேமா.
நல்ல பகிர்வு அதன் படி நடந்து கொண்டால்
ஆரோக்கியம் நிட்சயம்.
நான் கொள்ளும் ,எள்ளும் சாப்பிடுகின்றேன்
அந்த எடை...சும்மா ஒரு 85தான் ஆகின்றது
இன்னும் கொஞ்சம் கூடலாமென முயற்ச்சி
கின்றேன் முடியல்லீங்க
//நையாண்டி நைனா said...
கொள்ளு உடம்பை குறைக்கும்,
ஜொள்ளு உடம்பை ரணகளமாக்கும்.//
நைனா,ஜொள்ளூம் உடம்பைக் குணப்படுத்துமே.சிரிப்பதும் ஆயுளைக் கூட்டும்தானே.கொள்ளு உடம்புக்குன்னா ஜொள்ளு மனசுக்குன்னு சொல்லலாமா.
//துபாய் ராஜா ...சூப்,ரசம்,மசியல்,
குழம்பு,பொடின்னு செய்முறை குறிப்புகளூம் கொடுத்து கலக்கிட்டீங்க.....வாழ்த்துக்கள்.//
வாங்க துபாய் ராஜா.நானும் கொள்ளு சூப் மட்டும்தான் சாப்பிட்டு இருக்கேன்.மத்ததெல்லாம் செய்து பாக்கணும்.
நன்றி ஜமால்,நான் தந்த குறிப்புகளை விட நீங்க தந்த வடை அருமையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.செய்து பாத்திட்டாப் போச்சு.
//வாங்க துபாய் ராஜா.நானும் கொள்ளு சூப் மட்டும்தான் சாப்பிட்டு இருக்கேன்.மத்ததெல்லாம் செய்து பாக்கணும்//
ஆஹா!! அப்ப நாங்கதான் டெஸ்ட் பீஸா ??!!....... :))
நேசன் உங்களுக்கும் கொள்ளு பிடிக்குமா?ஆனா நான் கேள்விப்பட்டவரைக்கும் நம்ம ஊர்ல குதிரைக்குத்தான் கொள்ளு குடுப்பாங்க.நான் இங்கு வந்த
பிறகுதான் எங்கள் சாப்பாட்டுக்கும் பாவிப்பது தெரிஞ்சது.இங்கே கொள்ளு கலந்து சலாட் செய்வாங்க.நல்லா இருக்கும்.
நன்றி தமிழ் காதலன் முதல் வருகைக்கு.அடிக்கடி வாங்க.
குழந்தைநிலாவுக்கும் வரலாமே !
//Kala said...
ஹேமா இரண்டு மூன்று மாதங்களாக
நீங்கள் செய்து சாப்பிட்டு,உடல் கட்டான கட்டுடல் என வந்த பின்தானே ......
மற்றவர்களும் பயன் பெறட்டும் {ரொம்ப நல்ல
மனசு}எனப் பகிர்ந்து கொண்டீர்கள்.
ரொம்ப நன்றி ஹேமா.//
கலா,யார் சொன்னா நான் உடம்பு குறைக்க கொள்ளு சாபிட்டேன்னு.
கலா வதந்திகளை நம்பவேணாம்.
நான் கண்டு பிடிக்கிறேன் யார்ன்னு.
என் மனசை நீங்களும் பாத்தாச்சா !
//நான் கொள்ளும் ,எள்ளும் சாப்பிடுகின்றேன்
அந்த எடை...சும்மா ஒரு 85தான் ஆகின்றது
இன்னும் கொஞ்சம் கூடலாமென முயற்ச்சிகின்றேன் முடியல்லீங்க//
கலா,எள்ளும் கொள்ளும் சாப்பிட்டா சொஞ்சம் பத்தியமாகவும் குறைந்தது
1-3 மாதத்திற்காவது இருக்கணுமே.
இருந்தீங்களா? இருந்து பாருங்க.
கிலோ குறையும்.
கலா 58 கிலோதானே,இப்போ என்ன வந்திடுச்சு.இன்னும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் தோழி.
கொள்ளு கொள்ளுனு கொன்னுட்டீங்க... ச்ச பின்னிட்டீங்க...
நல்ல உபயோகமான பதிவு ...
நன்றி ஹேமா.
நல்ல பதிவு ஹேமா.......
இந்த பதிவு வந்ததுக்கப்புறம் கொள்ளு பருப்பின் விலை தமிழகத்தில் ஏறிவிட்டதாம்.வியாபாரிகள் ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம்
மிகவும் உபயோகமான பதிவு
நன்றி ஹேமா :)
//(இரவீ )...
கொள்ளு கொள்ளுனு கொன்னுட்டீங்க... ச்ச பின்னிட்டீங்க...
நல்ல உபயோகமான பதிவு ...
நன்றி ஹேமா.//
ரவி,நீங்க ...போங்க.கொள்ளையே கொன்னுட்டீங்க.உங்களுக்குத் தொப்பை இல்லயாக்கும்.
அத்திரி உண்மையாவா!அப்போ இங்கேயும் கிடைக்காம போயிடுமே.இறக்குமதி செய்ய மாட்டாங்களே.
இனி ஆனந்த் சொன்ன மாதிரி மூணு மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதுதான்.வேற வழி ?
வாங்க அய்யனார்.உங்கள் முதல் வருகைக்கும் அனபான கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் கவிதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன்.
பின்னூட்டம் இடும் தைரியம் இல்லை.நீங்களும் குழந்தைநிலா இதுவரை வரவில்லையென்று நினைக்கிறேன்.வாங்களேன்.
///"தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு///////
எனக்கே எனக்கா!! அப்பா ஒரு மாதிரி ஒரு வழி கிடச்சிட்டது!! ஆனால் அக்கா கொள்ளு சூப் செய்து தரதான் ஆள் இல்ல! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//கலை - இராகலை ...
///"தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு///////
எனக்கே எனக்கா!! அப்பா ஒரு மாதிரி ஒரு வழி கிடச்சிட்டது!! ஆனால் அக்கா கொள்ளு சூப் செய்து தரதான் ஆள் இல்ல! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
கலை,நீங்கள் சலாட் சாப்பிடுவீங்கதானே.கொஞ்சம் அவிச்சுக் கலந்து சாப்பிடுங்கோ.
இல்லாட்டி கொள்ளை நொருவலா அரைச்சு வச்சுக்கொண்டு ஒவ்வொரு நாள் காலையிலயும் ஒரு 10 நிமிஷம் 2- 3 தேக்கரண்டி போட்டு ஊறவிட்டுச் சாப்பிட்டுப் பாருங்கோ.தொடர்ந்து 6 மாதத்திற்காவது பாவிச்சுப் பாவிக்கவேணும்.
இன்னொன்று செல்ல வண்டி(வயிறு)யென்று எங்கட ஊர்ல சொல்ல்லுவினம்.
அப்பிடியென்றால் ....!
அதுசரி...தொப்பை கரைக்கிற சாட்டில உங்கட அம்மாவுக்கு என்னவோ செய்தி சொல்ற
மாதிரியும் இருக்கே !
//தொப்பை கரைக்கிற சாட்டில உங்கட அம்மாவுக்கு என்னவோ செய்தி சொல்ற
மாதிரியும் இருக்கே !//
ஹேமா,
கலை இராகலை உங்களை அக்கா என்று சொல்லியிருக்கிறார்.எனக்கென்னவோ அக்காவும் கூட உதவலாமே(அம்மாவுக்கு எடுத்துச் சொல்ல!) என்று நினைத்திருப்பார் போல...!
கொள்ளுச் சாப்பிட வச்சு என்னைக் குதிரை ஆக்கப் பார்க்கிறீங்களா
தொப்பையைக் குறைக்க இந்த ஒரு கப் கொள்ளு சாப்பாட்டிற்கு முன்பா, சாப்பாடிற்கு பிறகா ?
Nalla kollu vaithiya post Hema-Neenga ippadi pathivu ittaa,naanga yeppadi pozhaikirathu ?
//கானா பிரபா said...
கொள்ளுச் சாப்பிட வச்சு என்னைக் குதிரை ஆக்கப் பார்க்கிறீங்களா//
பிரபா,உங்களைப் பாத்தா கொள்ளு தேவைப்படாது எண்டுதான் நினைக்கிறன்.எண்டாலும் குதிரை சாப்பிடுறதைச் சாப்பிட்டாத்தான் ஆகும் எண்டா ஒண்டும் செய்ய ஏலாதுதானே !
// Muniappan Pakkangal said...
Nalla kollu vaithiya post Hema-Neenga ippadi pathivu ittaa,naanga yeppadi pozhaikirathu ?//
என்ன டாக்டர் நீங்க....நான் என்னமோ இப்பிடி பதிவு போட்டாத்தான் உப்புமடச்சந்தி கலகலன்னு இருக்கு.இல்லாட்டி ஈ ,காக்காகூட வராதாம்.நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க.உங்க வண்டி ஓடிட்டே இருக்கும்.எப்பவும் உங்க சேவை தொடர்ந்து இருக்கணும் டாக்டர்.
//வஜ்ரா ...
தொப்பையைக் குறைக்க இந்த ஒரு கப் கொள்ளு சாப்பாட்டிற்கு முன்பா,
சாப்பாடிற்கு பிறகா ?//
வஜ்ரா,அப்பாடி...முடில.இந்தக் கேள்விக்கு இன்று முழுதும் யோசிச்சே நான் மெலிஞ்சுபோனேன்.
முதல் முதல் வாறீங்க.சுகமான கேள்வியோட வரக்கூடாதோ !
பகிர்விற்கு நன்றி ஹேமா.
வண்ணத்துப் பூச்சியார்,ரொம்ப நாளைக்கு அப்புறமா உங்களைப் பார்க்கிறேன்.சந்தோஷம்.
ஹேமா நல்ல தகவல்..கொள்ளு குழம்பு புதிதாக உள்ளது செய்து பார்த்துட்டு சொல்றேன்...நன்றி..
அன்புடன்,
அம்மு.
b.p.raja...
very good
ஹலோ யார் ராஜா நீங்க?எப்பவோ போட்ட பதிவுக்குச் சின்னதா ஒரு வெரிகுட் போட்டிருக்கீங்க !
ethana naal kollu thanni kudikanum atha sollunga madam
கும்மாய அடிசில் (கொள்ளு சாதம்) பற்றி நானறிந்ததை எனது பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் பாருங்கள். தங்களது பக்கங்களும் மிகவும் பயனுள்ளவை.
-செழியன்
Na dubai la erukken.. enga samaikkum vasathi kidaiyathu..
So கொள்ளு ah night oru glass la oora vachiddu.. morning antha water madrum antha கொள்ளு ah sapdalamaa???
Post a Comment