1)அறிவோடு இருப்போம் அழகு இருக்காது.பணம் இருக்கும் அழகு இருக்காது.
2)கல்யாணம் செய்து குழந்தைகள்கூட இருக்கலாம்.காதல் இருக்காது.அல்லது விரும்பிய காதல் தள்ளப்பட்டு விரும்பாத ஒரு காதலுக்குள் திணிக்கப்பட்டிருப்போம்.
3)அதுபோல கடவுள் என்பது[வர்]என்ன? இருக்கா இல்லையா? உலகின் இயற்கையை வளப்படுத்துவது கடவுளா?அப்படிக் கடவுள்தான் என்றால் ஏன் என் மக்களின் இத்தனை அவலம்?புளுக்களோடு சிநேகம் கொள்ள முயற்சிக்கும் என் அத்தனை சனங்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா?
4)அடுத்து பணம்.பணம்தான் வாழ்வா?வாழ்வுக்குப் பணம் தேவை என்றாலும் பணமேதான் வாழ்வு என்று என் மனம் நினைக்க மறுக்கிறது.உறவுகளைப் பிரிந்து இருப்பதாலோ என்னமோ அன்பை மட்டுமே மனம் தேடி நிற்கிறது.கள்ளமில்லா பொய்யில்லா அன்பு எங்கே கிடைக்கும்?ஆனால் எதைக் கொடுத்தாலும் அது கிடைப்பது மட்டும் எட்டாக் கனியாகிறது.
கீழே உள்ள கேள்விகளை நான் இங்கு தொடர் பதிவாக்க நினைக்கிறேன்.என் மனதில் உள்ளதையும் எழுதுகிறேன்.ஒவ்வொருவரும் 3-5 பேரைத் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுக் கொள்வோம்.எல்லோரது கருத்துக்களையும் அடுத்தவர் மனம் நோகாமல் பகிர்ந்துகொள்வோம்.நகைச்சுவையானாலும் ஏற்றுக்கொள்வோம்.முரண்பட்ட கருத்தானாலும் வரவேற்று அதிலும் ஒளிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்வோமே !

1)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?
மனதின் அழகு கண்கள் ஊடாக அன்பின் ஒளியோடு தெறிப்பதே அழகு.ஒருவரின் உருவமோ பருவமோ பணமோ பதவியோ அழகைக் கூட்டவோ குறைக்கவோ மாட்டாது.
அன்பு மட்டுமே அழகைக் கூட்டும்.
மனதின் அமைதியையும் தரும்.நிச்சயமாக அழகு நிரந்தரமற்றது.நொடியில் இல்லாமல் மறையும் ஒரு மாயை இந்த அழகு.

2)காதல் மனிதனுக்கு அவசியமா ?
உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல் இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல் வாழ்வின் பலம்.பலஹீனம் அல்ல.
விழியோடு ஒரு சொட்டுக் கண்ணீர்.
அதுபேசும் உன்னோடு.
நிமிடம்...
பேச நேரமில்லை உனக்கு.
நின்மதியில்லை எனக்கு.
நீ நினைக்காத நேரங்களில் எல்லாம்
கவிதைகள் கிறுக்குகிறேன்.
உன்னை நினைக்கும்
எனக்கான தருணங்களையும்
எடுத்துவிடு என்கிறாய்.
நானோ...
உன் கை கோர்த்து நடக்கிறேன்
காதல் குழந்தை பின் தொடர !!!

3)கடவுள் உண்டா ?
இருக்கிறதா இல்லையா என்கிற ஆடுபாலத்திலேயே நான்.சில இடங்களில் மறுத்தாலும் சிலசமயம் ஆம் என்கிறேன்.கடவுள் வழிபாடு என்பதை மனிதனை நல்வழிப்படுத்த ஒரு வாழ்வின் நல்வாய்பாடு.ஆனால் கடவுள்?என்னைப் பொறுத்தவரை கடவுளே அகதியாய் இங்கு எங்களோடு.நாடு கடக்கும்போது கொண்டு வந்துவிட்டதலோ என்னமோ அங்குள்ளவர்களைக் காப்பாற்ற முடியவில்லை கடவுளால்.

4)பணம் அவசியமா ?
அவசியம்.ஆனால் எங்கு எப்போ எதற்கு என்பதை உணர்ந்து செலவின் தேவைகளாலும் தெளிவு இருத்தல் நல்லது.பணம் வீண் பகையைச் சேமிக்கும்.உறவைக் கெடுக்கும்.உண்மை அன்பு பணத்திற்குப் பலியாகும்.வாய் இருக்கும் மனிதனைவிட வாயில்லாப் பணம் எதையும் சாதிக்கும்.நாய் தின்னாக் காசு நாலு இடத்துச் சச்சரவுகளையும் கொண்டு வரும்.எனவே வாழ்வுக்கு தேவையான பணம் மட்டுமே வாழ்வை வளமாக்கும்.
சந்தோஷமாக்கும்.வறுமைக் கொட்டில்களிலேதான் அன்பு கொட்டிக் கிடக்கிறது பணத்தைவிட.
நான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...
கடையம் ஆனந்த்- மனம்
ஞானசேகரன்-அம்மா அப்பா
சக்தி-வீட்டுப்புறா
இரவீ-கண்டுகொண்டேன்
மேவீ-தினசரி வாழ்க்கை
ஹேமா(சுவிஸ்)
40 comments:
மிக்க நன்றி ஹேமா... ஒரு நல்ல தொடரா இருக்கு.. முடிந்தவரை முயற்சிக்கின்றேன்... மிக்க நன்றி ஹேமா..
நல்ல தொடர்பதிவு ஹேமா. விரைவில் பதிவு போடுகிறேன். இன்றைக்கு ஒரு புது பதிவு வருகிறது. இன்னும் 2 வாரதிற்கு ஆபீசில் வேலை அதிகம். இடைவேளையில் வந்து கருத்து தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி சகோதரி ஆனால் எனக்கு எழுத வருமா?? சந்தேகம் தான் ஆனால் முயற்சிக்கிறேன்
ஹேமா இது என்னோட கருத்து மட்டுமே...
அழகு...என்பது,
இன்னொரு உயிரின் துயர்கண்டு
இரங்கும் இதயம்.
காதல்...என்பது,
காதல் என்பது கற்று
சுவாசிப்பவன் மட்டுமே
முழுமையாய் வாழ்கிறான் ( இது என் கவி வரி)
கடவுள்...என்பது,
என்னையே நாத்திகனாக்க
இழுத்துச் செல்லும்
எண்ண ஓட்டம்.
பணம்...என்பது
ஆட்டியும் வைக்கும்
ஆடவும் வைக்கும் ஒரு
காகித கடவுள்.
இதுதான் எனக்குத் தெரிந்த "நான்கு வேதம்"
//ஆ.ஞானசேகரன் said...
மிக்க நன்றி ஹேமா... ஒரு நல்ல தொடரா இருக்கு.. முடிந்தவரை முயற்சிக்கின்றேன்... மிக்க நன்றி ஹேமா..//
வாங்க ஞானம்.உங்களிடமிருந்து நிறைவான பதிவை எதிர்பார்க்கலாம்.
ஆவலாய் இருக்கிறேன்.
வாங்க ஆனந்த்.என்னோட மனசில இருக்கிற சங்கடமான கேள்விகளும் பதில்களும்.எழுதமுடியாமல் நீண்ட அலசலுக்குள் கொண்டு வரவேண்டிய விஷயத்தைச் சுருக்கிச் சொல்ல முடியாததால் நிறுத்திக் கொண்டேன்.
உங்களாலும் நிறையச் சொல்ல முடியும்.காத்திருக்கிறேன்.
//sakthi said...
மிக்க நன்றி சகோதரி ஆனால் எனக்கு எழுத வருமா?? சந்தேகம் தான் ஆனால் முயற்சிக்கிறேன்//
வாங்க சக்தி.சும்மா நாலு கேள்விகள்.இயல்பாக வாழ்வின் நடமுறையோடு ஒட்டின கேள்விகள்தானே.உங்களால் முடியும்.எழுதுங்கள்.
ஹேமா,
கதை பேச கூப்பிட்டு, கதை எழுத சொல்லுறீங்க ...
வார்த்தை அனைத்தும் உங்க வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்க,
சிந்திய சிதறிய வார்த்தைகளை எடுத்து பின்னூட்டமிடவே திணறுகிறேன் ...
இதில் பதிவு வேறு வேண்டுமா ?
முயற்சிக்கறேன் விரைவில்.
அது சரி ...
அந்த கவிதை யாருக்கு ?
ஹேமா ..... உண்மையை சொல்ல வேண்டுமானால் கேள்விகள் என்னை ரொம்ப ஆச்சிரிய பட வைக்கிறது ...... கேள்விகள் அணைத்தும் வாழ்க்கையின் தேடல்களுக்கு தேவையானவை ......
"கல்யாணம் செய்து குழந்தைகள்கூட இருக்கலாம்.காதல் இருக்காது.அல்லது விரும்பிய காதல் தள்ளப்பட்டு விரும்பாத ஒரு காதலுக்குள் திணிக்கப்பட்டிருப்போம்"
இந்த வரிகள் பலரது வாழ்க்கையில் முற்றிலும் உண்மை. இப்போ உலகத்தில் காதலின் அர்த்தமும் காரணமும் மாறி கொண்டே இருக்கிறது.... இது இங்கே போய் விடுமோ என்று தெரியவில்லை
சிறிது யோசித்தால் வாழ்க்கையே இதற்குள் அடங்கி விடுகிறது
உங்கள் பதில்கள் நன்று ..... ஆனால் கேள்விகளை இன்னும் மேன்மை படுத்தி இருக்கலாம்
அழகு
காதல்
பணம்
கடவுள்
------------------------
அழகான காதல்
இருந்து
பணமும் வேண்டிய அளவு
இருந்தால்
கடவுளை நினையோம் ...
காதல் இல்லாமல் எந்த உயிரினமும் இருக்காது ஹேமா.
நாம் எதிர்ப்பார்ப்பவரிடமிருந்து வேண்டுமானால் நாம் எதிர்ப்பார்க்கும் காதல் இல்லாமல் இருக்கலாம். நிச்சியமாக அந்த ஒரு மனிதம் யாரையேனும் காதலித்து கொண்டு தான் இருக்கும், மிகக்குறைந்த பட்ச்சமாக தன்னை தானேவேனும் ...
அக்கா சூப்பரான தொடர் பதிவு தான்! எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகளே! நிரைய சொல்லனும் போல இருக்கு நேரம் இடிக்குது! நேரம் கிடைக்கும் போது பதிவாகவே போடுகிறேன்!
///நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல் வாழ்வின் பலம்.பலஹீனம் அல்ல.///
சூப்பர்
///விழியோடு ஒரு சொட்டுக் கண்ணீர்.
அதுபேசும் உன்னோடு.
நிமிடம்...
பேச நேரமில்லை உனக்கு.
நின்மதியில்லை எனக்கு.//
அருமை அருமை
ஹேமா இந்த பதிவு உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
1, காதல் : ஏன்னா பிற உயிர்கள் மேல நாம அன்பா இருந்தால் தான் உண்மையான கடவுளையே உணர முடியும். அதுனால் முதல் இடம் காதலுக்கு.
"கல்யாணம் செய்து குழந்தைகள்கூட இருக்கலாம்.காதல் இருக்காது.அல்லது விரும்பிய காதல் தள்ளப்பட்டு விரும்பாத ஒரு காதலுக்குள் திணிக்கப்பட்டிருப்போம்"
ஆம் ஹேமா இது முற்றிலும் பலரது வாழ்க்கையில் உண்மை தான். நாம் அன்றாடம் இதுபோல் பலரை பார்க்கலாம்.
2, கடவுள் :இருக்காரோ இல்லையோ, இருக்கார் என்று நம்பினால் மனபாரத்தைக் குறைக்கலாம். அன்பிருந்தால் மட்டுமே கடவுளை உணர முடியும்.
3, அழகு : யார இருந்தாலும் எப்பவும் கலகலன்னு சிரிச்சிட்டு சந்தோஸமா இருக்கவங்கள் பார்க்க எப்பவுமே அழகாத் தெரியுவாங்க.
4, பணம் : பணத்தின் தேவையைப் பத்தி பல பேரு தப்பா புரிச்சிருக்காங்க. நம்பளோட தேவைக்கு தான் என்பது போய், பணத்துக்காக தன் வாழ்வையே அர்பணித்து விடுகிறார்கள் பல பேர்.
////மனதின் அழகு கண்கள் ஊடாக அன்பின் ஒளியோடு தெறிப்பதே அழகு.ஒருவரின் உருவமோ பருவமோ பணமோ பதவியோ அழகைக் கூட்டவோ குறைக்கவோ மாட்டாது.
அன்பு மட்டுமே அழகைக் கூட்டும்.
மனதின் அமைதியையும் தரும்.நிச்சயமாக அழகு நிரந்தரமற்றது.நொடியில் இல்லாமல் மறையும் ஒரு மாயை இந்த அழகு.///
The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt within the heart.
- Helen Keller
வாங்க கருணாகரசு.என்னைவிட கவிதையா அசத்திட்டீங்க.நானும் முதல் கவிதை வடிவில்தான் நினைத்துவிட்டு,குழந்தைநிலாவும் கவிதை ஆனபடியால் விட்டுவிட்டேன்.உண்மயில் உங்கள் கருத்து எல்லாமே அருமையா இருக்கு.உங்களுக்கும் யார்
மூலமகவாவது வரும் இந்தப்பதிவு.
ரவி,வாங்க .முதல்ல சீக்கிரம் பதிவைப் போடுங்க.ஆனந்தும் 2 வாரம்ன்னு சொல்லிட்டார்.ஞானம் ,சக்தியும் போடுவாங்க.மேவீ இப்போ ஊர்ல இல்லன்னு சொன்னார்.ஏன்னா நாங்கதான் தொடக்குறோம்.சீக்கிரமா மத்தவங்களைக் கூப்பிடணும்.
இரவீ ...//
ஹேமா,
கதை பேச கூப்பிட்டு, கதை எழுத சொல்லுறீங்க ...
வார்த்தை அனைத்தும் உங்க வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்க,
சிந்திய சிதறிய வார்த்தைகளை எடுத்து பின்னூட்டமிடவே திணறுகிறேன் ...
இதில் பதிவு வேறு வேண்டுமா ?
முயற்சிக்கறேன் விரைவில்.
அது சரி ...
அந்த கவிதை யாருக்கு ?//
ரவி என் வீட்டு முற்றத்தில் பதி எடுத்து உங்கள் வீட்டில் நட்டாலும் அழகான பூக்கள்தானே பூக்கப் போகிறது.
ம்.....கவிதை யாருக்கு !
என் பார்வையில்,
அழகு - அழியக்கூடியது.
காதல் - காலம் பல கடந்து நிற்கும்.
பணம் - மனம்,குணம் மாற்றும்.
கடவுள் - அன்பே சிவம்.
தங்கள் கருத்துக்களும்,கவிதையும் அருமை.படங்களும் அழகு.
வாங்கடா டம்பி மேவீ.வீட்டுக்கு வந்திட்டீங்களா?ரித்திக்குட்டி என்ன பண்றா.
மேவீ,சீக்கிரமா பதிவு போட்டு மத்தவங்களையும் கூப்பிடுங்க.
வாழ்வியல் எனக்குப் பிடிக்கும்.
அதோடான முரண்பாடுகளும் பிடிக்கும்.இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கு.சலிப்பு ஏற்படாமல் இருக்கவே போதும் என்று நிறுத்திவிட்டேன்.இன்னொரு முறை பதிவாக்கினால் போச்சு.
வாங்க ஜமால்.உங்க தளம் இப்போ சரிதானே.
//நட்புடன் ஜமால் ...
காதல் இல்லாமல் எந்த உயிரினமும் இருக்காது ஹேமா.
நாம் எதிர்ப்பார்ப்பவரிடமிருந்து வேண்டுமானால் நாம் எதிர்ப்பார்க்கும் காதல் இல்லாமல் இருக்கலாம். நிச்சியமாக அந்த ஒரு மனிதம் யாரையேனும் காதலித்து கொண்டு தான் இருக்கும், மிகக்குறைந்த பட்ச்சமாக தன்னை தானேவேனும் ...//
உண்மை ஜமால்.எத்தனை காதல் வந்தாலும்,நீங்கள் சொல்கிற அந்தக் காதல்தான் உண்மையானதாக இருக்கும்.
நீங்களும் ரெடியா இருங்க.
உங்களையும் தேடி வரும் பதிவு.
வாங்கோ கலை.நிறைய வேலைக்குள்ளும் வந்து போறீங்களே.சந்தோஷமாயிருக்கு.
கலை உங்களைக் காணும் நேரமெல்லாம்.கமல்,கவின் வந்து போகினம் ஞாபகத்தில.
யோசிக்கதேங்கோ கலை எப்படியும் பதிவு சுற்றிச் சுழன்று உங்கள் பக்கமும் வரும்.அப்போ தெளிவா எழுதிப் போடுங்கோ.
மகா வாங்கோ...வாங்கோ.எங்க நிறைய நாளாக் காணோம்.ஊர்ல இல்லையா?நானும் பழமொழியோடு ஒளிச்சிட்டேன்.
சரி உங்களுக்கும் யாராவது பதிவு போட இடம் தருவாங்க.பதிவை இங்கேயே போட்டு முடிச்சால் எப்பிடி !நீங்க காதல்,கடவுள் ,அழகு பணம்ன்னு வரிசைப் படுத்தியிருக்கிறீங்க.அதுவும் அழகுதான்.கருத்துக்களும் அருமை.
//துபாய் ராஜா said...
என் பார்வையில்,
அழகு - அழியக்கூடியது.
காதல் - காலம் பல கடந்து நிற்கும்.
பணம் - மனம்,குணம் மாற்றும்.
கடவுள் - அன்பே சிவம்.
தங்கள் கருத்துக்களும்,கவிதையும் அருமை.படங்களும் அழகு.//
ராஜா,உங்கள் பார்வையும் சிறப்பு.இதற்காகவேதான் இந்தப் பதிப்பு.எல்லோரது மன ஓட்டங்களையும் காணலாம்.
உங்களுக்கும் வரும்.
ஆயத்தப் படுத்துங்க.
ஆமாம் ஹேமா நான் ஊர்ல இல்லை. மலேசியா போயிருந்தேன். அதனால தான் வர முடியல.
உண்மை ஜமால்.எத்தனை காதல் வந்தாலும்,நீங்கள் சொல்கிற அந்தக் காதல்தான் உண்மையானதாக இருக்கும்.
நீங்களும் ரெடியா இருங்க.
உங்களையும் தேடி வரும் பதிவு.]]
பதிவிடும் வித்தை இன்னும் பயிலனும் ஹேமா!
பின்னூட்டுவதே இப்பவெல்லாம் சரியாக வரமாட்டேன்குது ...
--------------
அங்கே ஒருத்தவங்க மெயில் ஐடி இருக்கு பாருங்க அதை டெலீட் செய்திடுங்க - பப்ளிக்கில் இருக்க வேண்டாம்.
//ஜமால்...பதிவிடும் வித்தை இன்னும் பயிலனும் ஹேமா!
பின்னூட்டுவதே இப்பவெல்லாம் சரியாக வரமாட்டேன்குது ...//
ஏன் ஜமால்,இவ்வளவு மனசை அலுத்துக் கொள்றீங்க.ந்ல்லாத்தானே எழுதுறீங்க.நீங்க சொன்னபடி அழிச்சிட்டேன்.நானும் கவனிக்கல.நன்றி ஜமால்.
******************************
மகா,இனிப் பதிவுகள் போடுவீங்கதானே.ஆனா திகில் பதிவுகள் வேணாம் எனக்கு.
அழகு_வெளியழகு,உள்ளழகு என இரண்டாக எடுத்துக்கலாம்
வாழ்க்கையில் வெளியழகை விட,உள்ளழகுதான் மிக முக்கியம்.
வெளியழகு அழிய,மறைய சாத்தியங்கள் உண்டு{நோய் வந்தால்,
விபத்து ஏற்பட்டால்,முதிர்ச்சி வந்தால்}ஆனால் உள்ளழகு{மன அழகு}
எது வந்தாலும்,எது நடந்தாலும் உடலில் உயிர் உள்ளவரை அழியவோ,
மறையவோ முடியாது.{அழகான மனதுள்ளவர்க்கு,உள்ளொன்று வைத்து
புறமொன்று சொல்பவர்கல்ல}பொதுவாக அழகு என்பது வானவில்லைப்
போல்...அமைப்பால்,நிறங்களால்,கவர்ச்சியால் ,ஈக்கும்தன்மையால்
மனங்களைக் கொள்ளைகொள்ளும் . குறைந்த நேரத்தில் பின் அழிந்துவிடும்.
அழகு குறிப்பிட்ட காலஎல்லை வரைதான் நிலைக்கும்.{அழகு பலவகைப்படும்
ஒவ்வொன்றாக விளக்கம் இங்கு கொடுக்க முடியாது நான் பொதுவாகச் சொன்னேன்}
காதல்_அந்த நாள் முதல் இந்த நாள்வரை{ஏன்?இனி வரப்போகும் யுகங்கள்கூட}காதல் இருந்து கொண்டேதான் இருக்கும். காதலும் வாழ்கையைப் போல் பல பாடங்களைக் கற்றுத் தரும் நமக்கு இதில்
கஷ்ரம்,நஷ்ரம்,வெற்றி,தோல்வி, குழப்பம் ,ஏன்?பைத்தியம்,தற்கொலை
என பலவற்றை உண்டாக்கும்.அவரவர்கள் தேர்வைப் பொறுத்திருக்கிறது
{அதைத்தான் விதி என்பார்கள்.}ஊர்வன,பறப்பன,நடப்பன எல்லாவற்றிலும்
காதல் உண்டு.காதல் இருவரை இணைக்கும் பாலம்,சுகமான அவஸ்தை,
சொல்லமுடியா உணர்வு,நினைக்க...இனிக்க வைக்கும் நினைவு,அறியத்
துடிக்கும் அன்பின் ஆழம்,இணைக்கும் பிரிக்கும் இயல்பு எனச் சொல்லிக்
கொண்டே போகலாம்....சிலருக்கு வேம்பு சிலருக்கு கரும்பு.
பணம்_இப்போதைய மனித வாழ்வுக்கு இதுவின்றி வாழ்வில்லை
அப்படி நாம் தள்ளப் பட்டிருக்கின்றோம்.பணத்துக்காக... மனைவியை,
குழந்தயை,வயதான தாய்,தந்தயை,குடும்பத்தார்,உற்றார் உறவினர்கள்
ஆசாபாசங்களை ஒதுக்கிவிட்டு தனிமையில் விருப்புவெறுப்பு இல்லாமல்
{சுகமாய் வாழ}சோகமாய்..கவலையுடன் அனைத்தையும் பிரித்து வைப்பதே
இந்தப் பணம்தான். இன்னும் இன்னுமென ஆசை ஊட்டும் அரக்கன்,
இறக்கையில்லா மனிதனை பறக்க வைத்துப் பார்பவன் தன்னை நேசிப்பவர்களை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்.
கடவுள்_என் கருத்து உண்டு என்றுதான் வரும்.உண்டா?இல்லையா?
என விவாதிக்க விருப்பமில்லை.{உண்டென்றால் அது உண்டு,இல்லையென்றால் அது இல்லை}அவரவர் கொள்கையைப் பொறுத்தது
நம்பிக்கை.உ+ம் எனக்கு தலைவலியோ நெஞ்சுவலியோ என்று மற்றவர்களிடம் நான் சொன்னால் மருத்துவரைப் பார் மாத்திரை
சாப்பிடு என்பார் அவர்களுக்கு என் வலியின் வேதனை,அது உணர்த்தும்
உணர்வு நிட்சயமாய் அவர்களுக்குத் தெரியாது.அது எனக்கு மட்டும்தான்
தெரியும்,புரியும். அதனால் உணர்ந்தவர்களுக்கு உணர்த்துவது ,உணர்வது
தான் கடவுள் நம்பிக்கை{கடவுள் என்ற பெயரில் சில மூடநம்பிக்கைகளை}நம்புவவள்ளல்ல. வளர்ச்சி அடைந்த விஞ்ஞானம்
இப்படித்தான்..அப்படித்தான் நடக்குமென்பார் {சில}ஆனால் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும் விஞ்ஞானத்தையும் மிஞ்சிய ஒரு ஞானம்
உண்டு .என் கூற்று இறைவன் உண்டு எனக்கு நம்பிக்கையும் உண்டு.
{ஹேமா ஒரு மாத அவசர விடுப்பு 24லிருந்து வலையத்தை நோட்டம்
விடமுடியாது அதனால் பின்னோட்டமும் வராது மன்னிக்கவும்}
நல்லாயிருக்கு இந்த விளையாட்டு.
வாழ்த்துக்கள்.
’சக்தி’ ..link .. ’அம்மா அப்பாவுக்கு’ போகுது கவனிக்கவும் :)
பிடிக்குமா பிடிக்காதா உண்மையா பொய்யா இருக்கா இல்லையா கேள்விகளும் பதில்களும் யோசிக்க வைக்கிறது ஹேமா.
காதல் கவிதைகள் எனக்கலகலத்த வலைப்பூ புதுவிடயமொன்றோடு நன்று தோழி.
ஹேமா !
//நாய் தின்னாக் காசு//
இந்த வரிகளைப் படித்தபோது எங்கள் ஊரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எங்கள் அயலில் ஒரு அண்ணனும் தம்பியும் நெடுகலும் சண்டைப்படுவினம் அவரதை இவர் எடுத்தார் இவரதை அவர் எடுத்தாலென.
அப்படியொரு நாள் ஒருவரது சட்டைப்பொக்கற்றில் இருந்த பணத்தை மற்றவர் எடுத்துவிட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தர்க்கம் வந்தபோது
அண்ணன்காரன் சொன்னார் 'காசென்ன காசு நாய் தின்னாக்காசு'' என்று அதுக்கு தம்பி சொன்னார் மீனைக்கட்டிப்போட்டுப்பார் நாய் மிச்சம் விடாதென.
சாந்தி
வாவ்...கலா.இத்தனை அழகா வாழ்வை ரசிக்கிறீங்க.அப்படி வாழ்வை உணர்கிறபடியால்தால் அதை அனுபவித்து எழுத
முடிகிறது.அருமையான பகிர்வு.அத்தனைக்கு நிறைவான விளக்கங்கள்.தோழி சுகமான விடுமுறையாக அமையட்டும் உங்களுக்கு.மீண்டும் சந்திப்போம்.
/amirtham said...
நல்லாயிருக்கு இந்த விளையாட்டு.
வாழ்த்துக்கள்.
’சக்தி’ ..link .. ’அம்மா அப்பாவுக்கு’ போகுது கவனிக்கவும் :)//
வாங்க அமிர்தம் அம்மா.உங்கள் பதிவின் பக்கம் வர முயற்சித்தேன் முடியவில்லை.ஏன் ?
நீங்கள் சொனபடியால்தான் கவனித்தேன்.நன்றி அம்மா.மாற்றிவிட்டேன்.
வாங்கோ சாந்தி.உப்புமடச் சந்தி கொஞ்சம் கலகலக்க சிரிக்க என்றேதான் தொடங்கப்பட்டது.
காரணம் கவிதைகள் எப்போதும் அழுகிறது என்று கடையம் ஆனந்த் மற்றும் பலர் அடிக்கடி என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.
நீங்களும் வந்தது சந்தோஷம் தோழி.
//சாந்தி...அண்ணன்காரன் சொன்னார் 'காசென்ன காசு நாய் தின்னாக்காசு'' என்று அதுக்கு தம்பி சொன்னார் மீனைக்கட்டிப்போட்டுப்பார் நாய் மிச்சம் விடாதென.//
நீங்கள் சொன்ன "நாய் தின்னாக் காசு"கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்குது.சிரிச்சு அடங்கி உங்கட பக்கம் வந்தேன்.அழுதுமுடித்துத்தான் இரவு படுக்கைக்குப் போனேன் சாந்தி.
Nice topics,let the thodar pathivaalarhal give it nicely Hema.
நல்ல முயற்சி...
ஒவ்வொன்றுக்கும் உங்கள் விளக்கம் அருமை...
நிச்சயமாக இவ்வலைப்பூவில் இவ்வளவு அடர்த்தி எதிர்பார்க்கவில்லை.
இனி அடிக்கடி வருவேன்...
காதல் தலைப்பிலிருக்கும் படமும், கவிதையும் அருமை(இவ்வலைப்பூவில் கவிதை கிடையாது என்று சொன்னீர்கள்..உங்களையும் மீறிப் பின் தொடர்கிறது உங்கள் கவிதைக் குழந்தை(நிலா)..) :-)
pathivukku
-:)
thirumba sangili thodara aarambicchathukku
-:(
வாங்க டாக்டர்.இந்தப் பதிவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.பல கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்தானே.அதற்காகவே.
*********************************
//தமிழ்ப்பறவை...கவிதையும் அருமை(இவ்வலைப்பூவில் கவிதை கிடையாது என்று சொன்னீர்கள்.
உங்களையும் மீறிப் பின் தொடர்கிறது உங்கள் கவிதைக் குழந்தை(நிலா)//
அண்ணா இன்னும் வாழ்வியல்- சமூகவியல்-நகைச்சுவைன்னு எழுத நினைக்கிறேன்.முழுதான தெளிவு என்னிடம் குறைவு.அரைகுறையாய் எழுதித் திட்டு வாங்கக்கூடாதுதானே !
உண்மைதான் அண்ணா.நிலா என்னையும் அறியாமல் தொடர்கிறாள் இங்கும்.கொஞ்சம் காலுக்குக் கீழ அடி குடுக்கணும்."வானம் வெளித்த பின்னும்"அதுதான் உன் வீடுன்னு.
ஹேமா நல்ல பதிவு..தொடர்ந்து காண ஆவலுடன் இருக்கிறேன்..
அன்புடன்,
அம்மு.
Post a Comment