Wednesday, December 31, 2008

இனிதே வரும்...2009

ன் அன்பு நிறை நண்பர்களுக்கு,
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ம்ம்ம்....பாரடா மச்சான்,அந்தப் பெட்டையள் இரண்டும் போற போக்கை.எங்களையெல்லாம் திரும்பியும் பாக்கமாட்டினம் போல!
சிலுப்பிக்கொண்டு போகினம்.பெரிய எண்ணம்தான்
அவையளுக்கு.அங்கால...அடுத்த போஸ்ட் மரத்துக்குக் கீழ கோட் சூட் போட்டவங்கள் யாராவது நிப்பாங்கள்.அந்தப் பெடியளோட மட்டும் பேசுவினமாக்கும்!

ஹேமா(சுவிஸ்)

31 comments:

Anonymous said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

\\ம்ம்ம்....பாரடா அந்தப் பெட்டையள் இரண்டும் போற போக்கை.எங்களையெல்லாம் திரும்பியும் பாக்கமாட்டினம் போல!
பெரிய எண்ணம்தான் அவையளுக்கு.அங்கால அடுத்த போஸ்ட் மரத்துக்குக் கீழ கோட் சூட் போட்டவங்கள் யாராவது நிப்பாங்கள்.
அந்தப் பெடியளோட மட்டும் பேசுவினமாக்கும்!
\\
எங்களை நாய் ரேஞ்சுக்கு ஆக்கிடியள்

Anonymous said...

பிறந்திட்ட புத்தாண்டு சிறப்பா அமைஞ்ச்சிட வாழ்த்துக்கள்.....

Anonymous said...

புது வருசத்திலயும் நல்லா யோசிக்கிறீங்கள்.... எப்படிங்க அது உங்களால மட்டும் முடியுது???? கலக்கல் தான்,,,,,,,என்ன தான் இருந்தாலும் எங்கட உறவுகளை மறக்க மாட்டீங்கள் போல...;))))

Anonymous said...

காஸ்ட்யூம் அபாரம்.

Anonymous said...

ஹேமா,
என்னுடைய வளர்ப்புகளை - உங்கட வளர்ப்பு இப்படி கேலி செய்யறது எந்தவிதத்தில் நியாயம் ?

Anonymous said...

என்ன ஒரு அழகு ...., ரஜினியும் கமலும், பேபி ஷாலினி & பேபி ஷம்லிய நெனச்சு பொலம்புற மாதிரி இல்ல?

Anonymous said...

சரி விடுங்க ஏன் இன் இந்த அழகான வளர்ப்புகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தனும்...
இந்த வருடத்தில் வரும் உங்கள் அனைத்து பதிவுகளும் - இதேபோல் எங்களை பலமணித்துளிகள் சிரிக்கவைக்கட்டும்.

Anonymous said...

அய்யோ...அய்யோ... என்ன ஹேமா இது?
புத்தாண்டு சிந்தனையோ? ஹி...ஹி...ஹி.

Anonymous said...

கபீஷ்,வாங்கோ.இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட.என்ன நீங்க அரசியலா,கணக்கு வழக்கா அசத்துறீங்க உங்க பதிவுகளில.
அதுதான் பின்னூட்டம் என்ன போடுறது உங்களுக்குன்னு பேசாம பாத்திட்டு வந்திட்டேன்.

Anonymous said...

கவின்,அச்சோ...அச்சோ.ஏன் நான் சொன்னேனா!

Anonymous said...

கமல் புதுவருஷத்தில நன்றியுள்ள உறவுகளை மறக்கலாமோ!

Anonymous said...

SUREஷ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உண்மையாவே சொல்றீங்களா உடுப்புகள் அழகு என்று.தைச்சுப் போட்டவங்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.

Anonymous said...

இரவீ அவையள் உங்கட ஆக்களோ.
ஐயோ...எனக்குத் தெரியாதப்பா.
என்றாலும் உங்கட அவையள் ஒரு ஹலோ சொல்லிட்டிட்டுப் போகலாம்தானே!அதென்ன கோட் சூட் போட்ட ஆக்களோட மட்டும் கதைக்கினம்.

ஓ...கமல்,ரஜனி.ஷாலினி,ஷம்லி.இவையளின்ர ரசிகர்கள் கடுப்பாகப் போகிரார்கள்.எனக்குத் தெரியாது.
நீங்களே சமாளிச்சுக்கோங்க.

வெளிநாடுகளில் அவர்களுக்குப் பிறகுதான் நாங்கள்.அடுத்த பிறவியில் நான் இங்கு அவையளாப் பிறக்க வேணும்.உயில் கூட எழுதி வைக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு.

நன்றியுள்ளவர்களோடு என் 2009 ஐ சந்தோஷமாகத் தொடங்கி
யிருக்கிறேன்.இனி உப்புமடச் சந்தியை உங்களைப் போன்ற
வர்களோடு கை கோர்த்தபடி கலகலப்பாக்க வேணும்.சரியோ!

Anonymous said...

ஆனந்த்,வாங்கோ...வாங்கோ.என்ன நீங்க?கவலையா இருந்தாலும் சொல்றீங்க.சந்தோஷமா இருந்தாலும் சொல்றீங்க.புத்தாண்டு கொஞ்சம் சிரிப்போடு தொடங்கட்டுமே என்றுதான்.இப்போ சந்தோஷமா?எனக்கும் சிரிக்கத் தெரியுமே!

Anonymous said...

ஹேமா, என்னுடைய வளர்ப்பு என்று தெரியாதுன்னு சாமர்த்தியமா தப்பிச்சுட்டீங்க... நாகரீகமா வளர்த்ததால - உடுப்பு போடாத ஆக்களுட கதைகிரதில்லயாம்.

உயிலா? உயில வச்சி அவை என்ன செய்யும் ... மக்கள் அவ்வளவு குழம்பிபோய் இருக்காவளா?

//நன்றியுள்ளவர்களோடு என் 2009 ஐ சந்தோஷமாகத் தொடங்கி
யிருக்கிறேன்.// வா ...வ் நல்ல தொடக்கம்.

மற்றுமொரு வேண்டுகோள் - தொடர்ந்து இந்த தமிழ் வழமையே உபயோகப்படுத்துங்கள்.
படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு.

Anonymous said...

இது என்ன உட்குத்து வருசமும் அதுவுமா?, அசத்துறீங்க..., அப்ப கல்லூரிக் காலங்களிலை...
என்னவோ நடக்கட்டும், அடுத்த முறை வரக்கை சந்தியில் உப்பு மடச்சந்தியிலை இருக்க ஒரு மதகு கட்டுங்கோ. வாறவை விலாவாரியா இருந்து சொல்லியிட்டு போகட்டும்.

Anonymous said...

வலையும் பதிவும் நல்லாயிருக்கு ஹேமா.

வாழ்த்துக்கள்

Anonymous said...

இரவீ உங்கட அவையள் எண்டாக்கூட நான் ஒண்டும்சொல்ல மாட்டேன்.
ஏனெண்டா அது அவையளின்ர பேச்சுரிமை.அதில நாங்கள் தலையிட
கூடாதெல்லோ!ஓ...ஓ...உடுப்புப் போடாதலாலேயோ அவையள் கதைக்காமப் போனவையள்.சரி...
சரி எங்கட அவையளுக்கும் கொஞ்சம் நான் புத்தி சொல்ல வேணும்"அடேய் பெடியள் இனியாவது உடுப்புப் போடுங்கோடா"எண்டு.

Anonymous said...

//கல்லூரிக் காலங்களிலை...
என்னவோ நடக்கட்டும், அடுத்த முறை வரக்கை சந்தியில் உப்பு மடச்சந்தியிலை இருக்க ஒரு மதகு கட்டுங்கோ. வாறவை விலாவாரியா இருந்து சொல்லியிட்டு போகட்டும்.//

காரூரன் பள்ளிக்கூடச் சங்கதி
யெல்லாம் இங்க சொல்லக்கூடாது.
மதகு கட்டினால் நல்லது எண்டுதான் நானும் நினைக்கிறன்.ஆனா நீங்கள் எல்லாம் அடிக்கடி வாறதைப் பொறுத்துத்தான் யோசிக்கவேணும்.

Anonymous said...

வாங்க வண்ணாத்தியாரே.உங்களுக்கு ஒன்றும் கலாய்க்க வரலயா?சரி முதல்ல வந்ததுக்கே நன்றி.அடிக்கடி வாங்க.

Anonymous said...

வணக்கம் வண்ணாத்தியாரே.
குழந்தைகளின் சினிமாவின் உலகம் உங்கள் பதிவில் இருக்கே!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்களுக்குப் பின்னூட்டம் என்னால் போட முடியவில்லை.உங்கள் பின்னூட்ட முறையில் என்னால் பின்னூட்டம் போட ஏனோ என் கணணி விடுவதில்லை.

Anonymous said...

புத்தாண்டு பிறந்ததும் கலாய்க்கவா.??
வேண்டாமே...

பின்னூட்டம் இட ஏதும் தடை இல்லையே.??

Anonymous said...

இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...!

கலக்குங்கோ...:)

Anonymous said...

தமிழன் உங்களுக்கும் என் புத்தம்புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்ன தமிழன்,சும்மாவாச்சும் ஏதாவது அவையளுக்குச் சொல்லிட்டுப் போகலாம்தானே!அட என்ன நீங்க?

Anonymous said...

New Year aarambam nalla irukke.Where did u get the pet s photos,especially the one like lasapsu.

Anonymous said...

வாங்க முனியப்பன்.உங்களுக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் சேவையில் இன்னும் நிறைவோடு வளர வாழ்த்துக்களும் கூட.

எனக்கு இந்த போட்டோக்கள் மெயிலில் வந்தன.அழகாய் சட்டை போட்டிருக்கிறார்கள்.இல்லையா!

அதுசரி முனியப்பன் உங்களுக்கு எங்கள் யாழ்ப்பாண இலங்கைத்
தமிழில் என்ன எழுதியிருக்கிறேன் என்று விளங்கினதா?அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லையே!

Anonymous said...

காலம் கடந்து வந்திருக்கிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா

Anonymous said...

வாங்க பிரபா.உங்கள் வரவு எப்பவுமே நல்வரவுதான்.

Anonymous said...

I know Jaffna tamil Hema,One of my workers is a ceylon refugee[malaiyaga thamilar in ur words] & i come across tamileelam people settled in tamilnadu.The way they talk tamil is something close to heart.

Anonymous said...

ஓ.... அப்போ முனியப்பனுக்கு யாழ்ப்பாணத் தமிழும் விளங்கும்.
அப்பிடியெல்லோ!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP