Wednesday, March 11, 2009

தமிழ்மணத்தில் சூடான பதிவில் இல்லை.வீட்டில் சூடு.

தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் என் பதிவுகள் வந்ததோ இல்லையோ, என் வீட்டில் அதீத சூடான சண்டை.பற்றி எரியாத ஒரு குறைதான்.வேலைக்குப் போய் வந்த நேரம் போக எந்த நேரமும் கணணியோடு இருக்கிறேன்.வீட்டில் வேலை - வெட்டி செய்வதில்லை.கண்ணும் கெட்டுப் போகப் போகிறது.ஆனால்
"என்ன நீ ஒழுங்காக எழுதிக் கிழிக்கிறாய்?எழுதியிருந்தால்
உன் பதிவுகளில் ஒன்றாவது தமிழ்மணத்தில் வந்திருக்குமே" என்று
என்னைச் சூடேற்றுகிறார்கள்.கிண்டல் பண்ணுகிறார்கள்.அதனால்தான்
நானும் ம்ம்ம் .......சூடாகிவிட்டேனோ!

இப்போது என் வீட்டில் என்னைக் கிண்டல் அடிப்பவர்களுக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும். (இனி யாராவது சூடாக்கினால் தமிழ்மணத்திற்குத்தான் அறிவிப்பேன்.)நான் எழுதும் பதிவுகள் தரமானதாக இருந்தாலும் தமிழ்மணத்தில் ஏனோ அது தவறவிடப்படுகிறது.

உப்புமடச் சந்திக்கு நான் இன்னும் தரமான பதிவுகள் கொடுப்பதில்லை.
என்றாலும் குழந்தைநிலாவின் பதிவுகள் என் மனதுக்கு நின்மதியையும் நிறைவையும் தருபவை.அங்கு என்னை ஊக்குவிக்க நிறையவே
நண்பர்களும் இருக்கிறார்கள். எனவே என்னை இனி யாராவது சூடாக்கினாலும் நான் குளிர்மையாக எழுதிக் கொண்டே இருக்கலாம்
என்றே நினைக்கிறேன்.எனக்கு ஆறுதல் சொன்ன கமல், கடையம் ஆனந்த்,ஆதவா,தமிழ்மண நிர்வாகம்,எப்பவுமே என் பக்கம் எட்டியே
பார்க்காத வால் பையன்,மோனி,நசரேயன்,கீழை ராஸா, ஜெயா,முனியப்பன்
எல்லோருக்கும் என் நன்றி.

அன்போடு ஹேமா(சுவிஸ்)

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//. எனவே என்னை இனி யாராவது சூடாக்கினாலும் நான் குளிர்மையாக எழுதிக் கொண்டே இருக்கலாம்//

:))

தமிழ் மதுரம் said...

ஹேமா உங்கை என்ன நடக்குது? நான் கொஞ்சம் பிசி...அது தான் அண்டைக்கு உங்கடை பதிவைப் பார்த்த உடனே ஆங்கிலத்தில் எழுத வேண்டி வந்தது. தங்கள் பதிவின் முக்கியத்துவம் பெரும்பாலும் தலைப்பில் தங்கியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.


நீங்கள் ஓர் ஆச்சரியமூட்டும் தலைப்பை வைத்தால் அது நிச்சயம் தமிழ் மணத்தின் சூடான இடுகைப் பகுதியில் வரும் என்பது எனது கருத்து?

கவலை எதற்கு?
உங்களுக்கென்று ஒரு பரந்து பட்ட வாசகர் வட்டம் இருக்கு? உங்கள் படைப்பிலக்கியங்களின் காத்திரத் தன்மை பற்றி உங்கள் வாசகர்கள் நன்றாக உணர்வார்கள் என நினைக்கின்றேன். எனவே தொடர்ந்தும் எழுதுங்கள்.....கவலையை மறந்து கனிவுடன் இலக்கியம் படையுங்கள்...!

மேவி... said...

present madam

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP