Monday, August 03, 2009

மம்மி சொல்லு சொல்லு...டாடி கேளு கேளு.

மம்மி...டாடி வீட்ல இருக்கீங்களா?இருந்தாலும் சீரியல் பாக்காம எங்களைப் பாக்க இல்லாட்டி நாங்க சொலறதைக் கேக்க கொஞ்சம் டைம் கிடைக்குமா ப்ளீஸ்...எங்க ஃபீலிங்ஸையும் கொஞ்சமாவது புரிஞ்சுக்குவீங்களா ப்ளீஸ்.

ம்யூட்டர்ல இல்லாட்டி மொபைல்ல அசின்,நயன் தாரான்னு ஸ்கிரீன் சேர்வர் வச்சா என்ன ஆகிப்போச்சு இப்போ.உலகக் குத்தமா?அட்டு மொபைலைக்கூட கொஞ்சமாச்சும் கலர்ஃபுல்லாக்குறதே அசின்தான்.
விட்டா...குலசாமி போட்டோவை ஸ்கிரீன் சேர்வரா வச்சுக்கச் சொல்லுவிங்க போல.உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க.கொம்யூட்டரும் மொபைலும் இல்லாத காலத்திலயே நீங்க சுப்ரமணியபுரம் அழகர் மாதிரி "நடையா இது நடையா... - கொடி அசைந்ததும் காற்று வந்ததா...." ஹம்மிங் போட்டுக்கிட்டு அலைஞ்சதை.கொஞ்சம் றீ-வைண்ட் பண்ணிப் பார்க்க விஷயம் வேணாமா அதுக்கான கலெக்க்ஷன் தான் இப்போ நடந்திட்டு இருக்கு.எங்க ஃபீலிங்ஸைப் புரிஞ்சுக்கோங்க கொஞ்சம் பிக் பாஸ்.

ம்மாவுக்குக் கோவம் வந்தா "பாரு அப்பன் புத்தி அப்படியே"ன்னு ஃபாதரை இழுக்கிறாங்க.அப்பாவுக்கு பி.பி எகிறினா "பிள்ளையாடி பெத்து வச்சிருக்கே"ன்னு அம்மாவைத் திட்டுறாரு.பெத்த பிள்ளையைத் திட்டுவதில்கூட பரஸ்பரம் பழிபோடுறதில தெளிவா இருக்கீங்களே.இதையே பார்த்து வளர்ந்தா எப்படி எங்களுக்குள் ஒற்றுமை எண்ணம் வளரும்?யோசிச்சுத் திட்டுங்க மம்மிஸ்....டாடிஸ்.

நாங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே பிள்ளையை இப்படித்தான் வளர்க்கணும்.இந்த ஸ்கூல்ல படிக்க வைக்கணும்.இந்த டிகிரி சேர்க்கணும்.
இந்த மாதிரித்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு எல்லாம் குறிச்சு வச்சுக்கிறீங்க.எங்களுக்குன்னு சொந்தமா லட்சியம் ஆசைகள்ன்னு கிடையவே கிடையாதா?ஒரு நாளாவது பொறுமையா?'உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?நீ என்னவா ஆகணும்ன்னு ஆசைப்படுறே?உன் கனவுக்கு நாங்களும் உதவியா இருக்கோம்'ன்னு ஆறுதலாய்ப் பேசியிருக்கீங்களா?ஒரு முறை அப்பிடிச் செய்து பாருங்க.உங்கமேல சத்தியமா நாங்க ஆயுசுக்கும் தவறான பாதையில போக மாட்டோம்.

து அட்வைஸ் பண்ற பேரன்ட்ஸுகான அட்வைஸ்.நாங்க தப்பு பண்ணினா கண்டிக்கிற உரிமை உங்களுக்கு இருக்கு.ஆனா அதுக்கு நேரம் காலம் கிடையாதா?கரெக்டா சாப்பிடுற டைம் பாத்துத்தான் ஒவ்வொரு பூவா போட்டு அர்ச்சனையை ஆரம்பிக்கிறீங்க.தட்டுல கையை வச்சதும் திட்ட ஆரம்பிச்சா எப்பிடி எங்களுக்குச் சோறு உள்ளே இறங்கும்?எதுவா இருந்தாலும் சாப்பிட்ட அப்புறம் பேசுங்க.அப்பதான் நீங்க சொல்றதைக் கேக்கிற சக்தியாவது உடம்புக்கு இருக்கும்.

ங்களைத் திட்டுங்க.ஆனா எங்க ஃப்ரெண்ட்ஸ் என்ன தப்புப் பண்ணினாங்க.'அவன் மூஞ்சியே சரியில்ல.பார்த்தா ரவுடி மாதிரி இருக்கான்னு பார்வையிலேயே சீல் குத்தி ஏன் சர்ட்ஃபிகேட் தாறீங்க.
இதில வேற உங்க மார்க் என்ன... பசன்டேஜ் என்ன?ன்னு கேட்டு
அவங்களை டார்ச்சர் பண்றீங்க.சொந்த வீட்ல இம்சைன்னு வந்தா இந்த வீட்லயும் இப்படியா?ன்னு தெறிச்சு ஓடுறான் பாவம் அவன்.நண்பர்கள்
கூடி நல்லதையும் கத்துக்குவோம்ன்னு நம்புங்க.ப்ளீஸ்.

நாங்க ஃபிக்ர் பாக்கிறதா திட்டுறீங்களே.நாங்க உங்க காலம் மாதிரி இல்லாம சாதி சமயம் பாக்காம சமத்துவமா வாழ நினைக்கிறோம்.சீதன ஒழிப்பை நடைமுறைக்கு கொண்டு வாறதும் நாங்கதான்.அதுக்குத்தான் அல்லும் பகலும் குட்டிச் சுவர் மேல இருந்து குழுவாக் கூடி ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம்.நல்லதையே பண்ணுவோம் இன்னைய தலைமுறை நாங்க.

போன வருடத்தில் ஏதோ புத்தகத்தில் படித்து நானே சிரித்துக்கொண்டது.

ஹேமா(சுவிஸ்)

18 comments:

கும்மாச்சி said...

உங்களுடைய சமீபத்திய மம்மி சொல்லு டாடி கேளு பதிவைப் படித்தேன் நன்றாக இருந்தது.

நட்புடன் ஜமால் said...

அம்மாவுக்குக் கோவம் வந்தா "பாரு அப்பன் புத்தி அப்படியே"ன்னு ஃபாதரை இழுக்கிறாங்க.அப்பாவுக்கு பி.பி எகிறினா "பிள்ளையாடி பெத்து வச்சிருக்கே"ன்னு அம்மாவைத் திட்டுறாரு.பெத்த பிள்ளையைத் திட்டுவதில்கூட பரஸ்பரம் பழிபோடுறதில தெளிவா இருக்கீங்களே.இதையே பார்த்து வளர்ந்தா எப்படி எங்களுக்குள் ஒற்றுமை எண்ணம் வளரும்?யோசிச்சுத் திட்டுங்க மம்மிஸ்....டாடிஸ்.]]


இது ரொம்ப சூப்பரு ...

துபாய் ராஜா said...

/போன வருடத்தில் ஏதோ புத்தகத்தில் படித்து நானே சிரித்துக்கொண்டது./

நாங்களும் சிரித்தோம்.

நல்லதொரு பகிர்வு.

மேவி... said...

youth vikatan entru ninaikkiren

மேவி... said...

pagirvu arumai ngo

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு பகிர்வு அத்தனையும் அருமை ஹேமா... வாழ்த்துகள்

Anonymous said...

:)

கலையரசன் said...

நாங்களும் யூத்துல்ல..

ஹேமா said...

வாங்க கும்மாச்சி.சிலசமயம் உங்களுக்கும் பயன்படும் பதிவுதானே !

ஹேமா said...

ஜமால் வாங்க .நீங்களும் இப்பிடிக் கேட்டீங்களா உங்க வீட்ல.

ஹேமா said...

துபாய் ராஜா உண்மையில் இன்றைய தலைமுறையினர் இப்படியெல்லாம் கேட்டாலும் கேட்பார்கள்.அவர்களின் வழியே தனி.

ஹேமா said...

//MayVee said...
youth vikatan entru ninaikkiren//

மேவி நீங்க சொன்னது சரி.

ஹேமா said...

ஞானசேகரன் நானும் இப்பிடி வீட்ல என்னாச்சும் சொல்லன்னு நினைச்சாலும் வரமாட்டேங்குது.
தைரியம் இல்லை.என்ன செய்யலாம் !

ஹேமா said...

சின்ன அம்மிணி...

கலையரசன்...

ஆனந்த்....

இப்பிடியெல்லாம் கேட்டா வீட்ல என்ன நடக்கும்.தெரிஞ்சா சொல்லுங்க.

சத்ரியன் said...

//போன வருடத்தில் ஏதோ புத்தகத்தில் படித்து நானே சிரித்துக்கொண்டது.//

ஹேமா,
இதையெல்லாமா வெளியில சொல்லறது? தனக்குத்தானே சிரிச்சிக்கிறதுன்னா ஒருமாதிரின்னு நெனைக்கமாட்டாங்களா?..ம்ம்ம்...இதுக்கும் சிரிக்கதீங்க!

("பாய்ஸ்" படத்தோட கதையே இதுதானே.)

ஹேமா said...

//சத்ரியன் ...ஹேமா,
இதையெல்லாமா வெளியில சொல்லறது? தனக்குத்தானே சிரிச்சிக்கிறதுன்னா ஒருமாதிரின்னு நெனைக்கமாட்டாங்களா?..ம்ம்ம்...
இதுக்கும் சிரிக்கதீங்க!//

சத்ரியன் யாரும் நினைக்காட்டிலும் நீங்க நினச்சிட்டீங்கபோல.சரி...சரி.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP