Saturday, August 22, 2009

மன அழுத்தம் தொலைக்கலாம்.

மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும் நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டிய ஒன்று.அதுவும் இன்றைய நம் நாட்டுச் சூழலில் நிலத்திலும் புலத்திலும் அநேகம் பேர் இதன் பிடிக்குள் அகப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர்.எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள்.அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது.ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும் கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம்,பயம்,நிராகரிப்பு,எரிச்சல்,அதிக வேலை,அதிக சிரத்தை,குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள்.சிலருக்கு அதிக வெளிச்சம்,அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்பு,இறப்பு,போர்கள்,திருமணங்கள்,விவாக ரத்துகள்,நோய்கள்,பதவி இழப்பு,
பெயர் இழத்தல்,கடன்,வறுமை,தேர்வு,போக்குவரத்து நெரிசல்,வேலை அழுத்தம்,கோபம், நட்பு முறிவு,உறவு விரிசல்,என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

எனவே எம் மன அழுத்தம் குறைக்கப் பத்து வழிமுறைகள்.இவைகள் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எங்களுக்காக அதவது ஈழத்தமிழரின் பிரச்சனையால் நாங்கள் வேலை செய்யும் இடங்களில்கூட பாதிப்போடு இருக்கிறோம் என்று எங்களுக்கு ஒரு நாள் வகுப்பே நடத்தினார்கள்.ஜேர்மன் மொழியில் தந்ததை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

1)இது கொஞ்சம் ஆபத்தான விடயம்தான்.என்றாலும் இது போன்ற சந்தர்ப்பங்களை முன்னர் சமாளித்தது போல இப்போதும் சமாளித்துக் கொள்வேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

2)எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.எல்லாரும் எங்களைப் பாராட்ட வேண்டும் என்று முக்கியம் இல்லை.அந்த எண்ணமும் மன உளைச்சலைத் தரும்.

3)இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மை நாம் அலட்டிக்கொள்ளாது நிம்மதியாக மூச்சு விட்டு அமைதியாய் இருக்க முயற்சிக்க வேண்டும்.சிலர் யோகாசனமும் செய்கிறார்கள்.மெல்லிய இசை மனதை இதமாக்கும்.பசுமையான புல் தரையில் வெறும் கால் பதித்து நடந்து பாருங்கள்.பூக்களோடு பேசுங்கள்.

4)யார் யார், என்னென்ன சந்தர்ப்பங்கள் எங்கள் மனதைக் குழப்பின என்பதைத் தெரிந்துகொண்டு அப்படியான விடயங்கள் நபர்களை எதிர்கொண்டாலும் எம்மை நாமே தயார்படுத்தி வைத்திருத்தல் நல்லது.எந்த அதிர்ச்சியையும் எதிர்பார்த்து இருந்தால் மனதைத் தாக்காது.

5)என்னவிதமான சூழ்நிலையிலும் துணிவோடு முகம் கொடுத்து எங்கள் முயற்சிகளில் முன்னேற முயற்சித்தலும் சிறந்தது.

6)சொந்தக் கற்பனைக்கு வழிவிட்டு கண்களை மூடி ஒரு நிமிடம் மௌனமாய் இருங்கள்.சுய சிந்தனைக்கு அந்த நேரம் ஒதுக்கப் படலாம்.தெளிவு பிறக்கும்.

7)பிரச்சனைகளை மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டு குமைந்து கொண்டிருக்காமல் நண்பர்களோடு அல்லது குடும்ப உறுப்பினர்களோடு மனம் திறந்து பேசி ஆராயவது மிக நல்லது.

8)மனம்விட்டுச் சிரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வாய்விட்டுச் சிரித்து மகிழ்தல் வேண்டும்.கட்டுப்படுத்த வேண்டாம்.

9)எச்சரிக்கையாக ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகளைப் பற்றி விழிப்பாயிருத்தல் நல்லது.அவற்றை அலட்சியம் செய்ய வேண்டாம்.

10)தடைகள் தாமதங்களில் தோல்விகள் ஏற்பட்டால் அவை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம்.ஆனால் அவற்றுள் பல நீண்ட கால நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில உதவியாகக்கூட அமையலாம்.

நான் இவற்றோடு போராடுகிறேன்.
சிலசமயங்களில் கை கொடுக்கவும்தான் செய்கிறது.
முயற்சி செய்துதான் பாருங்களேன் நீங்களூம்.

எம் நல்ல அனுபவங்கள் பரவசம்.கெட்ட அனுபவங்கள் பக்குவம்.

ஹேமா(சுவிஸ்)

38 comments:

மேவி... said...

nalla vishyam hema...

ஆயில்யன் said...

//எல்லாரும் எங்களைப் பாராட்ட வேண்டும் என்று முக்கியம் இல்லை.அந்த எண்ணமும் மன உளைச்சலைத் தரும்.//

கண்டிப்பாக!
மனித மனம் எப்பொழுதும் இது போன்ற சின்ன விசயங்களையே அதிகம் எதிர்பார்க்கிறது :(

ஆயில்யன் said...

//புல் தரையில் வெறும் கால் பதித்து நடந்து பாருங்கள்.பூக்களோடு பேசுங்கள்.//

நிச்சயமாக இது போன்ற செயல்கள் மனிதனிடத்தில் பல நல்ல நினைவுகளை எண்ணங்களை தோற்றுவிக்கும்! நடந்துக்கொண்டிருக்கின்றோம் பூக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு செய்வதே பல மடங்கு புத்துணர்ச்சியினை நமக்கு தரும்! :)

ஆயில்யன் said...

அருமையானதொரு பகிர்வுக்கு நன்றிகளுடன்....! :)

துபாய் ராஜா said...

//குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள்.அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது.ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும் கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
//

உண்மைதான்.எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொண்டால் ஏமாற்றங்களும் குறையும்.மனக்கவலையும் குறையும்.

//நான் இவற்றோடு போராடுகிறேன்.
சிலசமயங்களில் கை கொடுக்கவும்தான் செய்கிறது.முயற்சி செய்துதான் பாருங்களேன் நீங்களூம்.//

நிச்சயம் முயற்சிக்கிறோம் தோழி.

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

nice post hema

சத்ரியன் said...

//மனம்விட்டுச் சிரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வாய்விட்டுச் சிரித்து மகிழ்தல்...//

ஹேமா,

உங்களின் பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சில செயல்களை நான் செய்துக்கொண்டுதானிருக்கிறேன். ஆனால், அவையாவும் இப்படிப்பட்டதொரு சிறந்த மருத்துவமுறை என்று நான் அறிந்திருக்கவில்லை.

உங்களின் பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நான் said...

அதிகமானோருக்கு பயனுள்ள் பதிவுங்க ஹேமா. நன்றி.

Anonymous said...

நல்லபதிவு. இது பதிவாக மட்டும் நான் பார்க்கவில்லை. நல்ல அறிவுரையாகவும் எடுத்துக்கொள்கிறேன்.

எல்லோருக்குமே எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போகும் போது மன அழுத்தம் ஏற்படுவது இயல்வு. எனக்கும் நிறைய தடவை ஏற்பட்டு இருக்கிறது.

மனதை இயல்வு நிலைக்கு கொண்டு செல்ல கொஞ்சம் முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது.
//

வேலை அழுத்தம்,கோபம், நட்பு முறிவு,உறவு விரிசல்,என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.
//

உண்மை தான்.
//

யார் யார், என்னென்ன சந்தர்ப்பங்கள் எங்கள் மனதைக் குழப்பின என்பதைத் தெரிந்துகொண்டு அப்படியான விடயங்கள் நபர்களை எதிர்கொண்டாலும் எம்மை நாமே தயார்படுத்தி வைத்திருத்தல் நல்லது.எந்த அதிர்ச்சியையும் எதிர்பார்த்து இருந்தால் மனதைத் தாக்காது.
//

உண்மை தான்.
//


நான் இவற்றோடு போராடுகிறேன்.
சிலசமயங்களில் கை கொடுக்கவும்தான் செய்கிறது.
முயற்சி செய்துதான் பாருங்களேன் நீங்களூம்.
//

கண்டிப்பாக... உங்கள் வழிப்படியே... முயற்சி செய்வோம். நல்ல கருத்துக்கள் வரவேற்க கூடிய பதிவு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல கருத்துகள்!
நல்ல பதிவு!

Raveendran said...

நல்ல பதிவு ஹேமா.

//எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் //
உண்மையிலும் உண்மை ...

//இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மை நாம் அலட்டிக்கொள்ளாது நிம்மதியாக மூச்சு விட்டு அமைதியாய் இருக்க முயற்சிக்க வேண்டும்//

//எந்த அதிர்ச்சியையும் எதிர்பார்த்து இருந்தால் மனதைத் தாக்காது.//

தானாகவே பெருமூச்சு ....

நல்ல நல்ல விஷயங்களை இப்படி பகிர்தல் கூட 'மன அழுத்தம் பெருமளவில் குறைய வழி வகுக்கும்'.

ரொம்ப உபயோகமான பதிவு.

மிக்க நன்றி ஹேமா.

Raveendran said...

ஒரு சின்ன சந்தேகம்: நீங்க வெறும் ஹேமாவா இல்ல லாடு சே.. லாட் "டாக்டர் ஹேமாவா"?.

நல்ல பதிவுல இப்படி கலாய்ச்சா உங்களுக்கு மன அழுத்தம் வருமா ?

பா.ராஜாராம் said...

நல்ல,உபயோகமான பதிவு ஹேமா.

வித்யாஷ‌ங்கர் said...

very useful,thank u-duraibharathy

கோமதி அரசு said...

//மனஅழத்தம் குறைக்கப் பத்து வழி முறைகள்.//


மிக நன்று, பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு..பூங்கொத்து!

pudugaithendral said...

அவசியமான பகிர்தலுக்கு நன்றி தோழி

நட்புடன் ஜமால் said...

எதிர்ப்பார்புகளே அதிகம்

ரணத்திற்கு

காரணம்.

கும்மாச்சி said...

நல்லப் பதிவு ஹேமா.

ஆ.ஞானசேகரன் said...

//நான் இவற்றோடு போராடுகிறேன்.
சிலசமயங்களில் கை கொடுக்கவும்தான் செய்கிறது.
முயற்சி செய்துதான் பாருங்களேன் நீங்களூம்.//


நல்ல பதிவு ஹேமா,.. மனஅழுத்தம் இல்லாதவர்களே இல்லை என்று சூழலுக்கும் இந்த உலகம் தள்ளப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். இந்த மன அழுத்தம்தான் மற்ற நோய்களை வரவேற்க்கும் காரணி. நீங்கள் சொல்வதைபோல கண்டிப்பாக கழைய வேண்டிய ஒன்று.... பாராட்டுகள் ஹேமா

ப்ரியமுடன் வசந்த் said...

//8)மனம்விட்டுச் சிரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வாய்விட்டுச் சிரித்து மகிழ்தல் வேண்டும்.கட்டுப்படுத்த வேண்டாம்//

சரியான வாதம் ஹேமா

sakthi said...

உபயோகமான பதிவு சகோ

Admin said...

நல்லதொரு பதிவு.... பகிர்வுக்கு நன்றிகள்...

thamizhparavai said...

இங்கு புதிய ஹேமாவைப் பார்க்கிறேன்..
வெகுநாட்கழித்து இங்கு வருகிறேனல்லவா...?!
நல்ல சிந்தனைத் துளிகள்... ஆனால் பயன்படுத்த நினைத்தால்...??
உள்ளே நுழைப்பதற்கு இடமில்லை மன அழுத்தம் நிரந்தரமாகக் குடியேறிய வீட்டில்...:-(

ஹேமா said...

நன்றி மேவீ முதலான வருகைக்கு.
நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்கள் மனசை இலேசாக வையுங்கன்னு.
ஏன் இத்தனை இறுக்கம் !

********************************

//ஆயில்யன் ...
//புல் தரையில் வெறும் கால் பதித்து நடந்து பாருங்கள்.பூக்களோடு பேசுங்கள்.//

நிச்சயமாக இது போன்ற செயல்கள் மனிதனிடத்தில் பல நல்ல நினைவுகளை எண்ணங்களை தோற்றுவிக்கும்! நடந்துக்கொண்டிருக்கின்றோம் பூக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு செய்வதே பல மடங்கு புத்துணர்ச்சியினை நமக்கு தரும்! //

ஆயில்யன் உங்கள் வருகைக்கும் நன்றி.உண்மையாய் மேல் சொல்லப்பட விடயங்கள் எனக்கு அடிக்கடி கை கொடுப்பவை.

********************************
//துபாய் ராஜா...உண்மைதான்.எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொண்டால் ஏமாற்றங்களும் குறையும்.மனக்கவலையும் குறையும்.//

ராஜா புலம் பெயர்ந்து இருப்பவர்கள் எங்களுக்குள் எப்போதுமே ஒரு மன உளைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது.பிரிவுகளின் வேதனையே அதிகம்.

ஹேமா said...

வாங்கோ மகா.நன்றி உங்களுக்கும்.ஓரளவு ஊரோடும் உறவோடும் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே நான் நினைத்துக்கொள்வேன்.

*********************************

வாங்க கருணாகரசு.இந்தப்பதிவு பலருக்குப் பயன்பட்டால் சந்தோஷமே.

**********************************

//கடையம் ஆனந்த் ...
நல்லபதிவு. இது பதிவாக மட்டும் நான் பார்க்கவில்லை. நல்ல அறிவுரையாகவும் எடுத்துக்கொள்கிறேன்.

எல்லோருக்குமே எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போகும் போது மன அழுத்தம் ஏற்படுவது இயல்வு. எனக்கும் நிறைய தடவை ஏற்பட்டு இருக்கிறது.

மனதை இயல்வு நிலைக்கு கொண்டு செல்ல கொஞ்சம் முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது.//

நன்றி ஆனந்த் உங்கள் நிறைவான கருத்துக்கு.மனம் விட்டுப் பேசி எம்மை நாம் தெளிவாக்கிக் கொண்டாலே மன அழுத்தம் குறைய நிறையச் சந்தர்ப்பம்.

**********************************

நன்றி ஜோதி பாரதி.நிறைவாக எழுத்துக்களுக்குள் வாழ்பவர் நீங்கள்.அதுகூட மன அழுத்தம் குறைய வைக்கக்கூடிய ஒரு விடயம்தான்.

ஹேமா said...

//இரவீ...
நல்ல நல்ல விஷயங்களை இப்படி பகிர்தல் கூட 'மன அழுத்தம் பெருமளவில் குறைய வழி வகுக்கும்'.

ரொம்ப உபயோகமான பதிவு.

ஒரு சின்ன சந்தேகம்: நீங்க வெறும் ஹேமாவா இல்ல லாடு சே.. லாட் "டாக்டர் ஹேமாவா"?.

நல்ல பதிவுல இப்படி கலாய்ச்சா உங்களுக்கு மன அழுத்தம் வருமா ?//

வாங்கோ ரவி.இப்பிடி கலாய்க்கிறவங்கள் பக்கம் மன அழுத்தம் பக்கத்துக்கும் வராது.

ரவி,இதுக்கு முன்னம் ஒரு பதிவு பாத்தீங்களா?"கொழுப்புக் கரைக்கும் கொள்ளு" என்று.அந்தப்பதிவு உங்களுக்கு மிக மிக உதவும் என்று நினைக்கிறேன்.

*********************************

நன்றி ராஜா அண்ணா.பலருக்கும் எனக்குமே பதிவு பிரயோசனம்.

***********************************

நன்றி வித்யாஷங்கர்.கருத்துக்கும் சந்தோஷமான உங்கள் வருகைக்கும்.

******************************

கோமதி அரசு உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்கூட மிக்க நன்றி.

*******************************

நன்றி அருணா.இந்தப் பதிவில் உங்களைப்போல பல புதியவர்களைக் காண்கின்றேன்.சந்தோஷமாய் இருக்கிறது.

ஹேமா said...

வாங்க சத்ரியன்.நிறையக் காதல் கவிதை எழுதினாலும் மன அழுத்தம் வராதாம்.தெரியுமோ !

*********************************

ஜமால்,உண்மை நிறைய எதிர்பார்த்துக் கிடைக்காமல் போகையில் அதைவிட ரணம்
வேறில்லை.

***********************************
வாங்க கும்மாச்சி.உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.உங்கள் பக்கம் மன அழுதம் வரவே வராது.

**********************************

நன்றி ஞானம்.மன அழுத்தத்தோடு போராடும் எனக்கும் தெரியும் அதன் வலி.அதனாலே இந்தப் பதிவு.ஆனால் ஓரளவு பழகியிருக்கிறேன்.எதையும் துன்பமோ இன்பமோ வரலாம் எதிர் பார்ப்பேன்.மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இல்லாவிட்டால் எப்போதோ பைத்தியம் பிடித்கிருக்கும்.அதோடு எழுதுவதும் எனக்கு ஒரு வடிகால்.

சத்ரியன் said...

//வாங்க சத்ரியன்.நிறையக் காதல் கவிதை எழுதினாலும் மன அழுத்தம் வராதாம்.தெரியுமோ ! //

ஹேமா,
அப்போ நிறைய காதலித்தால்...(மனவலி வரும்னு சொல்லாதிங்க)! இன்றைக்கே ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ஐயோ, என் காதல் வாகனம் சைக்கிள காணோமே.அதில்லாம, நடந்து போனா நல்லாயிருக்காதே.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பயனுள்ள பதிவு......

மே. இசக்கிமுத்து said...

ஈசியா சொல்லீட்டீங்க, ஆனா பாருங்க இதை கடைபிடிக்க வேண்டுமானால் நிறைய சிரமம் இருக்கு பாருங்க, நானும் நிறைய முறை இதையெல்லாம் கடைபிடிக்க முயன்றிருக்கிறேன், பல நேரம் தோற்றுருக்கிறேன், இருந்தாலும் மன கட்டுப்பாடு இருந்தால் நிச்சயம் முடியும்!!

- இரவீ - said...

//ரவி,இதுக்கு முன்னம் ஒரு பதிவு பாத்தீங்களா?"கொழுப்புக் கரைக்கும் கொள்ளு" என்று.அந்தப்பதிவு உங்களுக்கு மிக மிக உதவும் என்று நினைக்கிறேன்//
கொள்ளு மன அழுத்தத்தை குறைக்கும்னு தகவல் தந்ததுக்கு நன்றி ஹேமா.

ஹேமா said...

நன்றி வசந்த்.உங்கள் பதிவுக்கு வந்தாலே மனம் இலேசாகிறதே !
***********************************

சக்தி மன அழுத்தம் குறைவாய் இருக்கீங்க போல.
***********************************

சந்ரு,எங்கள் நாட்டைப் பொறுத்தமட்டில் எங்கே மன அமைதி !
*******************************

தமிழ்ப்பறவை அண்ணா,முயற்சி செய்யுங்கள்.எனக்கு உதவுகிறது இக்குறிப்புக்கள்.ஓரளவு பயனடைகிறேன்.

ஹேமா said...

சத்ரியன் உங்க காதல் வாகனம் கவனம்.பிறகு அதுகூட மன அழுத்தம்தான்.
******************************
//முனைவர் சே.கல்பனா ...
பயனுள்ள பதிவு...//

உங்களின் கருத்து மிகவும் சந்தோஷமாய் இருக்கு.உங்களின் பக்கம் வந்தேன்.தமிழால் நிரம்பிக்கிடக்கு.
தலைசுற்றித் திரும்பி வந்தேன்.
***********************************

இசக்கிமுத்து உண்மையில் முயற்சியுங்கள்.பலனளிக்கிறது.ஒன்று மட்டும் சொல்கிறேன்.தோல்வியோ வெற்றியோ-இன்பமோ துன்பமோ மிகுந்த கற்பனை தவிர்த்து எதையும் எதிர்கொள்ளுவேன் என்று மனதைப் பக்குவப்படுத்துங்கள்.அதுவே போதும்.

ஹேமா said...

//இரவீ ...
//ரவி,இதுக்கு முன்னம் ஒரு பதிவு பாத்தீங்களா?"கொழுப்புக் கரைக்கும் கொள்ளு" என்று.அந்தப்பதிவு உங்களுக்கு மிக மிக உதவும் என்று நினைக்கிறேன்//
கொள்ளு மன அழுத்தத்தை குறைக்கும்னு தகவல் தந்ததுக்கு நன்றி ஹேமா.//

ரவி தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களே.
கொள்ளு பதிவு கொழுப்புக் கரைக்க.மன அழுத்தம் குறைக்க மட்டுமே இந்தப் பதிவு.

இப்போதைக்கு உங்களுக்கு அந்தப் பதிவு பிரயோசனமாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

- இரவீ - said...

//ரவி தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களே.//

அப்படியா ?

//கொள்ளு பதிவு கொழுப்புக் கரைக்க.மன அழுத்தம் குறைக்க மட்டுமே//

அப்ப நான் புரிஞ்சுகிட்டது சரிதான் ...

//இந்தப் பதிவு. இப்போதைக்கு உங்களுக்கு //

நன்றி ஹேமா.

//அந்தப் பதிவு பிரயோசனமாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.//

நிச்சயமா - மிக உபயோகமா.

ஹேமா said...

ரவி தெளிவாக் குழப்புறீங்க.

சீ...ஒரே குழப்பம்.

இதுதான் மன அழுத்தமோ.

- இரவீ - said...

இப்படி தெளிவா குழப்பாம
குழப்பத்த தெளிவா சொல்லிஇருந்தா
உங்களுக்கு இருந்த குழப்பம் தெளியலாம் ...
ஆனா எங்களுக்கு குழப்பம் தெளிவா புரியுமா ?
இல்ல குழப்பமான உங்களால தெளியவைக்க தான் முடியுமா?
இதுக்காவது ...
குழம்பாம தெளிவா பதில் சொல்லுங்க.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP